அண்ணாமலை அண்ணல் அடி சரணம்


திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திரு அண்ணாமலை பண் : நட்டபாடை முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் விளவார் கனி பட நூறிய கடல்வண்ணனும் வேதக் கிளர் தாமரை மலர் மேல் உறை கேடில் புகழோனும் அளவா வணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல் தளரா முலை முறுவல் உமை தலைவன் அடி சரணே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : thiruvaNNAmalai paN : naTTapADai First thirumuRai thirucciRRambalam viLavAr kani paDa n^URiya kaDal vaNNanum vEdhak kiLar thAmarai malar mEl uRai kEDil pukazOnum aLavA vaNam azalAkiya aNNAmalai aNNal thaLarA mulai muRuval umai thalaivan aDi caraNE. thirucciRRambalam Meaning: The Superior of thiruvaNNAmalai, Who became the Flame immeasurable by the sea-colored one who smashed falling the wood-apple fruits (viShNu) and the flawless famous one residing on the rising vedic lotus (brahma), that Lord of unslackening breasts and smiling umA, His Feet is the refuge!! பொருளுரை: விளாம்பழங்கள் வீழ எறிந்த கடல்வண்ணனும் (திருமால்), வேதமாகிய எழு தாமரையின் மேல் இருக்கின்ற கேடில்லாப் புகழுடையவனும் (பிரம்மா) அளக்க இயலாத வண்ணம் தீப்பிழம்பாய்த் தோன்றிய திருவண்ணாமலை அண்ணலாம், தளராத மார்பகங்களும், முறுவலும் உடைய உமையம்மையாரின் தலைவனாரின் திருவடிகள் (நமக்கு) அடைக்கலம். Notes: 1. விளவார் கனி பட நூறிய கடல்வண்ணன் - மகாபாரதக் குறிப்பு. கண்ணனார் கன்றின் வடிவமாக வந்த அசுரனை எறிந்து விளாமர உருவில் நின்ற அசுரனையும் சேர்த்துக் கொன்றமை. கன்றால் விளவெறிந்தான் - திருவாசகம் விளவைத் தளர்வித்த விண்டுவும் - நம்பியாண்டார் நம்பி 2. கேடில் புகழோனும் - ஞானசம்பந்தப் பெருமான், மிக உயர்ந்த பிரமனுக்கும் மாலுக்கும் இறைவனாகச் சிவபெருமான் விளங்குதலைக் கூறுகின்றாரே அன்றி, அவர்களை இகழவில்லை என்பது இது போன்ற பல இடங்களில் புலப்படும். (மற்றோர் சான்று: ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரம்) 3. நூறுதல் - எறிதல்/அழித்தல்;

< PREV <
யானைத்தோல் உரித்தல் எளிதா?
Table of Contents > NEXT >
திருஞானசம்பந்தர் தமிழ் வல்லவர்
அடி பேணுதல் தவம்

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page