சம்பந்தர் செய்யும் நகை


திருஞான சம்பந்தர் தேவாரம் தலம் : திருவண்ணாமலை பண் : நட்டபாடை முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் மரவஞ் சிலை தரளம் மிகு மணியுந்து வெள்ளருவி அரவஞ் செய முரவம் படும் அண்ணாமலை அண்ணல் உரவஞ் சடை உலவும் புனல் உடனாவதும் ஓரார் குரவங் கமழ் நறுமென்குழல் உமை புல்குதல் குணமே. திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : thiruvaNNAmalai paN : naTTapADai First thirumuRai thirucciRRambalam mara any cilai tharaLam miku maNiyun^thu veLLaruvi aravam ceya muravam paDum aNNAmalai aNNal uravam caDai ulavum punal uDanAvathum OrAr kuravam kamaz n^aRu men kuzal umai pulguthal guNamE. thirucciRRambalam Meaning: The Ancient of thiruvaNNAmalai, where the white water fall over the tree grown rocks pushing the pearls and many gems roar like the beating drums, does not recognize the snake getting into the river in the twined hair. Is it fair to embrace the uma of kurA fragrant nice soft hair? பொருளுரை: மரங்கள் நிறைந்த பாறைகள் மீதிருந்து, முத்துக்களையும் பல மணிகளையும் உந்தி வருவதான வெள்ளருவி பறையின் முழக்கம் போலச் சத்தம் செய்யும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணலார், தம் சடைமுடியில் உள்ள பாம்பு கங்கையாற்றின் அருகே (அதனை அச்சுறுத்துமாறு) இருப்பதையும் நினைக்கவில்லை. குரவம் கமழ்கின்ற நல்ல மென்மையான கூந்தலை உடைய உமையம்மையாரைத் தழுவி இருத்தல் குணமாகுமோ? Notes: 1. இறைவனை நகைபடச் சொல்கின்றார் இப்பாடலிற் காழிப் பிள்ளையார். 2. சிலை - பாறை; தரளம் - முத்து; அரவம் - ஓசை; முரவம் - பறை; உரவம் - பாம்பு; புனல் - நீர் (கங்கை); புல்குதல் - தழுவுதல்.

< PREV <
அண்ணாமலையார் செயல்கள்
Table of Contents > NEXT >
பிறவி நோய்க்குத் திருஞானசம்பந்தர்
கூறும் மருந்து

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page