அண்ணாமலையார் செயல்கள்


திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திருவண்ணாமலை பண் : நட்டபாடை முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் உதிரும் மயிர் இடுவெண்டலை கலனா உலகெல்லாம் எதிரும் பலி உணலாகவும் எருது ஏறுவது அல்லால் முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேற் கொள அடிமேல் அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலையதுவே. திருச்சிற்றம்பலம் thirunyAnacambanthar thEvAram thalam : thiruvaNNAmalai paN : naTTapADai First thirumuRai thirucciRRambalam uthirum mayir iDu veN thalai kalanA ulakellAm ethirum pali uNalAkavum eruthu ERuvathu allAl muthirum caDai iLaveNpiRai muDimER koLa aDimEl athiruN^ kazal aDikaTku iDam aNNAmalai athuvE. thirucciRRambalam Meaning: Apart from begging throughout the world with the hair-fallen white-skull bowl and riding the bull, One Who has the tender white crescent on the old matted hair and reverberating anklet on the foot - that Reverend's place is only that thiruvaNNAmalai. பொருளுரை: முடி உதிர்ந்த வெண் தலையை இடுகின்ற ஓடாகக் கொண்டு உலகெங்கும் எடுக்கும் பிச்சையை உணவாகவும், எருதினை வாகனமாகவும் உடையவராக இருப்பது மட்டுமல்லாமல் முதிர்ந்த சடைமேல் இளமையான வெண்பிறையை அணிந்து திருவடிகளில் அதிர்ந்து ஒலிக்கின்ற கழல்களை உடைய அடிகளாருடைய இடமே அந்தத் திருவண்ணாமலை. Notes: 1. கலன் - பாத்திரம்; பலி - பிச்சை.

< PREV <
மரணத்தின் திறம் போக்கிய திருவடிகள்
Table of Contents > NEXT >
சம்பந்தர் செய்யும் நகை

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page