மரணத்தின் திறம் போக்கிய திருவடிகள்

 

திருஞான சம்பந்தர் தேவாரம்

தலம் : திருவண்ணாமலை பண் : நட்டபாடை முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் பீலிம்மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம் சூலிம்மணி தரை மேல் நிறை பொழியும் விரி சாரல் ஆலிம் மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல் காலன் வலி தொலை சேவடி நினைவார் வினையிலரே. திருச்சிற்றம்பலம்

thirunyAnacamban^thar thEvAram

thalam : thiruvaNNAmalai paN : naTTapADai First thirumuRai thirucciRRambalam pIlim mayil peDaiyODu uRai pozil cUz kazai muththam cUlimmmaNi tharai mEl n^iRai poziyum viri cAral Alim mazai thavazum pozil aNNAmalai aNNal kAlan vali tholai cEvaDi n^inaivAr vinaiyilarE. thirucciRRambalam

Meaning of Thevaram

The forests where the feathered peacocks reside with their females; The wide foothill where the bamboos shower on the ground the pearls from their embryo; The forest where clouds dense with droplets crawl; One who thinks of the Perfect feet of the Reverend of such thiruvaNNAmalai, that removed the power of the divine of death, they are free from vinai.

பொருளுரை

பீலியுடைய ஆண்மயில்கள் தங்கள் பெண்மயில்களோடு வாழும் பொழில்களும், மூங்கில்கள் தங்கள் சூலிலிருந்து முத்துக்களை நிலமெங்கும் பொழிகின்ற விரிந்த சாரலும், நீர்த்துளிகள் நிறைந்த மேகங்கள் தவழ்கின்ற (உயர்ந்த) காடுகளும் உடைய திருவண்ணாமலையில் உறைகின்ற அண்ணலாரின் காலனுடைய வலிமையை நீக்கிய சேவடிகளை யார் நினைக்கின்றார்களோ அவர்கள் வினை நீங்கப்பெற்றவர்கள்.

Notes

1. பெடை - பெண் (மயில்); கழை - மூங்கில்; ஆலி - நீர்த்துளி; வலி - வலிமை.
< PREV <
திருவண்ணாமலையின் இயற்கை அழகு
Table of Contents > NEXT >
அண்ணாமலையார் செயல்கள்

Back to Thirumurai Series Page
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page