Five Deeds of Lord

திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு தலம் : திருப்பிரமபுரம் பண் : நட்டபாடை முதல் திருமுறை திருச்சிற்றம்பலம் தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.1 திருச்சிற்றம்பலம்

பொருளுரை:

சிறப்பு:

1. இப்பாடலே திருஞானசம்பந்தரின் அதிஅற்புதமான, அதிசய சக்தி நிறைந்த முதல் பாடலாகும்; தன் உதடுகளில் சொட்டும் பாலைக் கண்டு, கோபங்கொண்ட தன் தந்தையாருக்கு, தனக்கு விடைமேல் காட்சி தரும் இறைவனையும் இறைவியாரையும் காட்டுவிக்கும் முகமாக இத்திருப்பாடல் காழிப்பிள்ளையாரின் திருவாயினின்றும் மலர்ந்தது. 2. இப்பாடலின் முதல் எழுத்து "தோ" = த் + ஓ. வேதத்தின் முதல் உயிரெழுத்து ஓ (ஓம்); முதல் மெய்யெழுத்து "த்" (திருமுறையில் கடைசி எழுத்து "ம்" (உலகெலாம்). ஓம் என்னும் ப்ரணவமே இறைவனைத் தோத்தரிக்கும் முதல் மந்திரமாகும். திருமுறைகளும் "ஓ"-வில் (த்+ஓ = "தோ") தொடங்கி, "ம்"-ல் (உலகெலாம்) முடிவடைவது இறைவன் கருணையின் சிறப்பாகும்.
thirunyAna chambandhar thirukkaDaikkAppu paN n^aTTapADai mudhal thirumuRai thooDuDaiya cheviyan viDaiyeeRi Or thuuveN madhi chuuDi kaaDuDaiya chuDalaip poDipUchi en uLLam kavar kaLvan eeDuDaiya malaraan munain^aaL paNin^dheeththa aruLcheydha piiDuDaiya piramaapuram meeviya pemmaan ivananRee. Meaning: The One with ear-ring, Riding the bull, Wearing a chaste-white moon, Smearing the ash of the cemetry, Thief Who steals my mind, Blessed when the lotus one (brahma) worshiped in the past, the Lord of the majestic brahmapuram (chIrkAzi), isn't This He ? Speciality: 1. This is the first song of the prodigy sambandhar. He showed the God and Goddess to his furious father who enquired about the milk dripping from sambandhar's lips and sang this. (For details see http://www.shaivam.org/nachamba.html) 2. The first letter of this is "thO" = th + O. The first vowel of vedas is O (Om) and first consonant is th !! (The last letter in thirumuRai is m (ulagelAm). So thirumuRais start with O and end with m, praising the Lord symbolised by praNavam) 3. All the panycha kR^itya - five deeds of the Lord are indicated int his hymn beautifully. thODuDaiya cheviyan - creation, thUveNmadhi chUDi - protection, chuDalaippoDipUchi - reduction (destruction), uLLam kavar kaLvan (hiding), aruLcheydha (blessing). (The complete padhikam is available at siddhanta/sampan.htm)
Table of Contents > NEXT >
The glory of Arudra dharisanam

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page