thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

7 வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.


திருச்சிற்றம்பலம் 
 

34 சாக்கிய நாயனார் புராணம்
 1. அறு சமயத் தலைவராய் நின்றவருக்கு அன்பராய் 	3636-1
 மறு சமயச் சாக்கியர்தம் வடிவினால் வரும் தொண்டர் 	3636-2
 உறுதிவரச் சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து 	3636-3
 மறுவில் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம் 	3636-4

 2. தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவுடைய 	3637-1
 வேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து 	3637-2
 கேளாகிப் பல் உயிர்க்கும் அருள் உடையார் ஆய்க் கெழுமி 	3637-3
 நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார் 	3637-4

 3. அந் நாளில் எயில் காஞ்சி அணிநகரம் சென்று அடைந்து 	3638-1
 நல்ஞானம் அடைவதற்குப் பலவழியும் நாடுவார் 	3638-2
 முன்னாகச் சாக்கியர் தாம் மொழி அறத்தின் வழி சார்ந்து 	3638-3
 மன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார் 	3638-4

 4. அந் நிலைமைச் சாக்கியர்தம் அரும் கலை நூல் ஓதி அது 	3639-1
 தன்னிலையும் புறச் சமயச் சார்வுகளும் பொருள் அல்ல 	3639-2
 என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறில் சிவ 	3639-3
 நன்னெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார் 	3639-4

 5. செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் 	3640-1
 மெய் வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே 	3640-2
 இவ்வியல்பு சைவநெறி அல்ல வற்றுக்கு இல்லை என 	3640-3
 உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார் 	3640-4

 6. எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் 	3641-1
 மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே 	3641-2
 துன்னிய வேடம் தன்னைத் துறவாதே தூய சிவம் 	3641-3
 தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார் 	3641-4

 7. எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன அறியாதார் 	3642-1
 பொல்லா வேடச் சாக்கியரே ஆகிப் புல்லர் ஆகுவார் 	3642-2
 அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன 	3642-3
 வல்லார் இவர் அவ் வேடத்தை மாற்றாது அன்பின் வழிநிற்பார் 	3642-4

 8. காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் 	3643-1
 நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம் 	3643-2
 நாணாது நேடியமால் நான் முகனும் காண நடுச் 	3643-3
 சேணாரும் தழல் பிழம்பாய்த் தோன்றிது தெளிந்தாராய் 	3643-4

 9. நாள் தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து 	3644-1
 மாடோர் வெள் இடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம் 	3644-2
 நீடோடு களியுவகை நிலைமை வரச் செயல் அறியார் 	3644-3
 பாடோர் கல் கண்டு அதனைப் பதைப்போடும் எடுத்து எறிந்தார் 	3644-4

 10. அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால் 	3645-1
 மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரிசெயலினால் 	3645-2
 இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமே 	3645-3
 நிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார் 	3645-4

 11. அன்றுபோய் பிற்றைநாள் அந்நியதிக்கு அனையுங்கால் 	3646-1
 கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்புஅதனை 	3646-2
 நின்றுணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே 	3646-3
 என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார் 	3646-4

 12. தொடங்கிய நாள் அருளிய அத்தொழில் ஒழியா வழிதொடரும் 	3647-1
 கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவராடைப் 	3647-2
 படம் புனை வேடம் தவிரார் பசுபதியார் தம் செயலே 	3647-3
 அடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மாதவர்தாம் 	3647-4

 13. இந் நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்ய 	3648-1
 முன்னும் திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில் 	3648-2
 துன்னிய மெய் அன்புடனே எழுந்தவினை தூயவர்க்கு 	3648-3
 மன்னு மிகு பூசனையாம் அன்பு நெறி வழக்கினால் 	3648-4

 14. கல்லாலே எறிந்த அதுவும் அன்பான படி காணில் 	3649-1
 வில்வேடர் செருப்பு அடியும் திருமுடியில் மேவிற்றால் 	3649-2
 நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை 	3649-3
 அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அ·து அலராமால் 	3649-4

 15. அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார் 	3650-1
 எங்கள் பிரான் தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து 	3650-2
 பொங்கியது ஓர் காதலுடன் மிகவிரைந்து புறப்பட்டு 	3650-3
 வெங்கர்¢யின் உரி புனைந்தார் திருமுன்பு மேவினார் 	3650-4

 16. கொண்டதொரு கல்எடுத்துக் குறிகூடும் வகை எறிய 	3651-1
 உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கை ஓடும் 	3651-2
 கண்டருளும் கண்நுதலார் கருணை பொழிதிருநோக்கால் 	3651-3
 தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவி ஓடும் தோன்றினார் 	3651-4

 17. மழ விடைமேல் எழுந்து அருளி வந்த ஒரு செயலாலே 	3652-1
 கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி 	3652-2
 விழ அருள் நோக்கு அளித்து அருளிமிக்க சிவலோகத்தில் 	3652-3
 பழ அடிமைப் பாங்கு அருளிப் பரமர் எழுந்து அருளினார் 	3652-4

 18.  ஆதியார் தம்மை நாளும் கல் எறிந்து அணுகப் பெற்ற 	3653-1
 கோதில் சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும் 	3653-2
 சோதியார் அறிதல் அன்றித் துணிவது என் அவர்தான் சூடித் 	3653-3
 தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரைச் செப்பி 	3653-4


35 சிறப்புலி நாயனார் புராணம்
 1. பொன்னி நீர் நாட்டின் நீடும் பொன் பதி புவனத்து உள்ளேர் 	3654-1
 இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும் 	3654-2
 தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரைச் சண்பை 	3654-3
 மன்னனார் அருளிச்செய்த மறைத் திரு ஆக்கூர் அவ்வூர் 	3654-4

 2. தூ மலர்ச் சோலை தோறும் சுடர் தொடுமாடம் தோறும் 	3655-1
 மா மழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும் 	3655-2
 பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ 	3655-3
 ஓம நல் வேள்விச் சாலை ஆகுதித் தூபம் ஓங்கும் 	3655-4

 3. ஆலை சூழ் பூக வேலி அத்திரு ஆக்கூர் தன்னில் 	3656-1
 ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான் மறைக் குலத்தில் உள்ளார் 	3656-2
 நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்தம் திருத்தொண்டு ஏற்ற 	3656-3
 சீலராய்ச் சாலும் ஈகைத் திறத்தினில் சிறந்த நீரார் 	3656-4

 4. ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து 	3657-1
 மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி 	3657-2
 நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி 	3657-3
 நீளும் இன்பத்து உள் தங்கி நிதிமழை மாரி போன்றார் 	3657-4

 5. அஞ்சு எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம் 	3658-1
 நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிடச் செய்து ஞாலத்து 	3658-2
 எஞ்சலில் அடியார்க்கு என்றும் இடை அறா அன்பால் வள்ளல் 	3658-3
 தஞ்செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே 	3658-4

 6. அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர் தன்னில் 	3659-1
 மறைப் பெரு வள்ளலார் வண் சிறப்புலி யார் தாள் வாழ்த்திச் 	3659-2
 சிறப்புடைத் திருச் செங்காட்டங் குடியினில் செம்மை வாய்ந்த 	3659-3
 வீரர் சிறுத் தொண்டர் செய்த திருத்தொழில் விளம்பல் உற்றேன் 	3659-4


36 சிறுத்தொண்ட நாயனார் புராணம்
 1. உரு நாட்டுஞ் செயல் காமன் ஒழிய விழிபொழி செந்தீ 	3660-1
 வரும் நாட்டத் திருநுதலார் மகிழ்து அருளும் பதிவயலில் 	3660-2
 கருநாட்டக் கடைசியர் தம் களி நாட்டும் காவேரித் 	3660-3
 திரு நாட்டு வளம் காட்டும் செங்காட்டக் குடி ஆகும் 	3660-4

 2. நிலவிய அத் திருப்பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால் 	3661-1
 உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு 	3661-2
 மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார் 	3661-3
 பலர் புகழும் திருநாமம் பரஞ்சோதியார் என்பார் 	3661-4

 3. ஆயுள் வேதக் கலையும் அலகில் வடநூல் கலையும் 	3662-1
 தூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயின்று அவற்றால் 	3662-2
 பாயும் மதக் குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு 	3662-3
 மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார் 	3662-4

 4. உள்ள நிறை கலைத்துறைகள் ஒழிவு இன்றி பயின்று அவற்றால் 	3663-1
 தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே 	3663-2
 கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு 	3663-3
 பள்ளமடையாய் என்றும் பயின்று வரும் பண்புடையார் 	3663-4

 5. ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி செய்தே 	3664-1
 ஆசில் புகழ் மன்னவன்பால் அணுக்கராய் அவற்கு ஆகப் 	3664-2
 பூசல் முனைக் களிறு உகைத்து போர் வென்று பொரும் அரசர் 	3664-3
 தேசங்கள் பல கொண்டு தேர்வேந்தன் பால் சிறந்தார் 	3664-4

 6. மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித் 	3665-1
 தொன் நகரம் துகள் ஆகத் துனைகெடும் கை வரை உகைத்துப் 	3665-2
 பல் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித் தொகையும் 	3665-3
 இன்னை எண்ணிலகவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார் 	3665-4

 7. கதிர் முடி மன்னனும் இவர் தம் களிற்று உரிமை ஆண்மையினை 	3666-1
 அதிசயித்துப் புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்களுக்கு உரைப்பார் 	3666-2
 மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்தலி உடைமையினால் 	3666-3
 எதிரி இவருக்கு இவ்வுலகில் இல்லை என எடுத்து உரைத்தார் 	3666-4

 8. தம் பெருமான் திருத்தொண்டர் எனக் கேட்ட தார் வேந்தன் 	3667-1
 உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன் 	3667-2
 வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் எனவெருவுற்று 	3667-3
 எம் பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான் 	3667-4

 9. இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி என் உரிமைத் தொழிற்கு அடுத்த 	3668-1
 திறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு 	3668-2
 நிறைந்த நிதிக்குவைகளுடன் நீடு விருத்திகள் அளித்தே 	3668-3
 அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான் 	3668-4

 10. உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர் 	3669-1
 எம்முடைய மனக் கருத்துக்கு இனிதாக இசைந்து உமது 	3669-2
 மெய்ம்மைபுரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்துச் 	3669-3
 செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடை கொடுத்தான் 	3669-4

 11. மன்னவனை விடை கொண்டு தம்பதியில் வந்து அடைந்து 	3670-1
 பன்னு புகழ் பரஞ் சோதியார் தாமும் பனி மதி வாழ் 	3670-2
 சென்னியரைக் கணபதி ஈச்சரத்து இறைஞ்சித் திருத்தொண்டு 	3670-3
 முன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார் 	3670-4

 12. வேத காரணர் அடியார் வேண்டிய மெய்ப் பணி செய்யத் 	3671-1
 தீதில் குடிப் பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும் 	3671-2
 காதல் மனைக் கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமை 	3671-3
 நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார் 	3671-4

 13. நறை இதழித் திரு முடியார் அடியாரை நாள் தோறும் 	3672-1
 முறைமையினில் திரு அமுது முன் ஊட்டிப் பின் உண்ணும் 	3672-2
 நிறையுடைய பெருவிருப்பில் நியதி ஆகக் கொள்ளும் 	3672-3
 துறைவழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார் 	3672-4

 14. தூய திரு அமுது கனி கன்னல் அறுசுவைக் கறிநெய் 	3673-1
 பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம் 	3673-2
 மேய படியால் அமுது செய்விக்க இசைந்து அடியார் 	3673-3
 மாயிரு ஞாலம் போற்ற வரும் இவர் பால் மனம் மகிழ்ந்தார் 	3673-4

 15. சீதமதி அரவின் உடன் செஞ்சடைமேல் செறிவித்த 	3674-1
 நாதன் அடியார் தம்மை நயப்பாட்டு வழி பாட்டால் 	3674-2
 மே தகையார் அவர் முன்புமிகச் சிறியராய் அடைந்தார் 	3674-3
 ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல் 	3674-4

 16. கண் நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர 	3675-1
 உண்ணிறை அன்பினில் பணி செய்து ஒழுவார் வழுவு இன்றி 	3675-2
 எண்ணில் பெரும் சீர் அடியார் இடை விடாது அமுதுசெய 	3675-3
 நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின் கண் 	3675-4

 17. நீராரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்துப் 	3676-1
 பேராளர் அவர் தமக்குப் பெருகுதிரு மனை அறத்தின் 	3676-2
 வேராகி விளங்கும் திரு வெண்காட்டு நங்கைபால் 	3676-3
 சீராளத் தேவர் எனும் திருமைந்தர் அவதரித்தார் 	3676-4

 18. அருமையினில் தனிப் புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்த 	3677-1
 பெருமையினில் கிளை களிப்பப் பெறற்கு அரிய மணிபெற்று 	3677-2
 வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்காவகை வளரத் 	3677-3
 திருமலி நெய் ஆடல் விழாச் செங்காட்டங்குடி எடுப்ப 	3677-4

 19. மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப 	3678-1
 அங்கணர் தம் சீர் அடியார்க்கு அளவு இறந்த நிதி அளித்துத் 	3678-2
 தங்கள் மரபினில் உரிமை சடங்கு தச தினத்தினிலும் 	3678-3
 பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணிபுணைந்தார் 	3678-4

 20.  ஆர்வம் நிறை பெரும் சுற்றம் அகமலர அளித்தவர் தாம் 	3679-1
 பார் பெருகும் மகிழ்ச்சி உடன் பருவ முறைப் பாராட்டுச் 	3679-2
 சீர் பெருகச் செய்ய வளர் திருமனார் சீறடியில் 	3679-3
 தார் வளர் கிண்கிணி அசையத் தளர் நடையின் பதம் சார்ந்தார் 	3679-4

 21. சுருளும் மயிர் நுதல் சுட்டி துணைக் காதின் மணிக் குதம்பை 	3680-1
 மருவு திருக்கண்ட நாண் மார்பினில் ஐம்படைக் கையில் 	3680-2
 பொருவில் வயிரச் சரிகள் பொன் அரைஞாண் புனை சதங்கை 	3680-3
 தெருவில் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார் 	3680-4

 22. வந்து வளர் மூவாண்டில் மயிர் வினை மங்கலம் செய்து 	3681-1
 தந்தையாரும் பயந்த தாயாரும் தனிச்சிறுவர் 	3681-2
 சிந்தை மலர் சொல் தெளிவித்தே செழும் கலைகள் பயிலத்தம் 	3681-3
 பந்தமற வந்து அவரைப் பள்ளியினில் இருத்தினார் 	3681-4

 23. அந் நாளில் சண்பை நகர் ஆண்தகையார் எழுந்து அருள 	3682-1
 முன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர் 	3682-2
 பொன் மார்பில் சிறுத் தொண்டர் புகலிகாவனார்தம் 	3682-3
 நன்னமச் சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார் 	3682-4

 24. சண்பையர் தம் பெருமானும் தாங்க அரிய பெரும் காதல் 	3683-1
 பண்புடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை 	3683-2
 மண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்துச் சிறப்பித்து 	3683-3
 நண்பருளி எழுந்து அருளத் தாம் இனிது நயப்பு உற்றார் 	3683-4

 25. இத்தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை 	3684-1
 அத்தர் திருவடி இணைக் கீழ்ச் சென்று அணைய அவர் உடைய 	3684-2
 மெய்த் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர் தாம் 	3684-3
 சித்தம் மகிழ் வயிரவராய்த் திருமலையின் நின்று அணைகின்றார் 	3684-4

 26. மடல் கொண்ட மலர் இதழி நெடும்சடையை வனப்பு எய்தக் 	3685-1
 கடல் மண்டி முகந்து எழுந்த காள மேகச் சுருள் போல் 	3685-2
 தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி 	3685-3
 படர் துஞ்சின் கரும் குஞ்சி கொந்தளம் ஆகப் பரப்பி 	3685-4

 27. அஞ்சனம் மஞ்சனம் செய்தது அனைய அணி கிளர் பம்பை 	3686-1
 மஞ்சின் இடைஎழுந்த வான மீன் பரப்பு என்னப் 	3686-2
 புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்பத் 	3686-3
 துஞ்சின் உனித்து தனிப் பரப்பும் தும்பை நறுமலர் தோன்ற 	3686-4

 28. அருகு திருமுடிச் செருகும் அந்தி இளம் பிறை தன்னைப் 	3687-1
 பெருகு சிறுமதியாக்கிப் பெயர்த்து சாத்தியது என்ன 	3687-2
 விரிசுடர் செம்பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர்த் 	3687-3
 திருநுதல் மேல் திருநீற்றுத் தனிப் பொட்டும் திகழ்ந்து இலங்க 	3687-4

 29. வெவ்வருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும் 	3688-1
 அவ்வனல் செம்மண்டலமும் உடன் அணைந்தது என அழகை 	3688-2
 வவ்வும் திருக்காதின் மணிக் குழைச் சங்கு வளைத்து அதனுள் 	3688-3
 செவ்வரத்த மலர் செறித்த திருத்தோடு புடை சிறக்க 	3688-4

 30. களம் கொள் விடம் மறைத்து அருளக் கடல் அமுத குமிழிநிரைத் 	3689-1
 துளங்கொளி வெண் திரட் கோவைத் தூய வடம் அணிந்தது என 	3689-2
 உளங்கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருகப் பெருக 	3689-3
 விளங்கும் திருக் கழுத்தின் இடைவெண் பளிங்கின் வடம் திகழ 	3689-4

 31. செம்பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்திப் 	3690-1
 பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது என 	3690-2
 தம்பழைய கரியுரிவை கொண்டுசமைத்தது சாத்தும்               3690-3
அம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணிவிளங்க              3690-4

 32. மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திருமேனி விளைந்தது என 	3691-1
 அக்குமணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும் 	3691-2
 கைக்கு அணி கொள்வளைச்சரியும் அரைக் கடி சூத்திரச் சரியும் 	3691-3
 தக்க திருக்கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க 	3691-4

 33. பொருவில் திருத் தொண்டர்க்குப் புவிமேல் வந்து அருள் புரியும் 	3692-1
 பெருகருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர் 	3692-2
 வரும் அன்பின் வழிநிற்பீர் என மறைபூண்டு அறைவனபோல் 	3692-3
 திருவடிமேல் திருச்சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப 	3692-4

 34. அயன் கபாலம் தரித்த இடத்திருக்கையால் அணைத்த 	3693-1
 வயங்கு ஒலி மூவிலைச்சூலம் மணித்திருத் தோள்மிசைப் பொலியத் 	3693-2
 தயங்கு சுடர் வலத்திருக்கை தமருகத்தின் ஒலிதழைப்பப் 	3693-3
 பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட 	3693-4

 35. அருள்பொழியும் திருமுகத்தில் அணி முறுவல் நிலவு எறிப்ப 	3694-1
 மருள் பொழியும் மலம் சிதைக்கும் வடிச்சூலம் வெயில் எறிப்பப் 	3694-2
 பொருள் பொழியும் பெருகு அன்பு தழைத்து ஓங்கிப்புவி ஏத்தத் 	3694-3
 தெருள் பொழிவண் தமிழ்நாட்டுச் செங்காட்டம் குடிசேர்ந்தார் 	3694-4

 36. தண்டாத ஒரு வேட்கைப் பசி உடையார் தமைப்போலக் 	3695-1
 கண்டாரைச் சிறுத் தொண்டர்மனை வினவிக் கடிது அணைந்து 	3695-2
 தொண்டனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர் 	3695-3
 வண்டார் பூந்தாரார் இம்மனைக்கு உள்ளாரோ என்ன 	3695-4

 37.  வந்து அணைந்து வினவுவார் மாதவரேயாம் என்று 	3696-1
 சந்தனம்மாம் தையலார் முன்வந்து தாள் வணங்கி 	3696-2
 அந்தமில் சீர் அடியாரைத் தேடி அவர் புறத்து அணைந்தார் 	3696-3
 எந்தமை ஆள் உடையீரே அகத்து எழுந்து அருளும் என 	3696-4

 38. மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம் இருந்த 	3697-1
 இடவகையில் தனிபுகுதோம் என்று அருள அதுகேட்டு 	3697-2
 விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனைக் 	3697-3
 கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடைத்தலை எய்தி 	3697-4

 39.  அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார் இற்றைக்கு 	3698-1
 எம் பெருமான் யாவரையும் கண்டிலர் தேடிப் போனார் 	3698-2
 வம்பென நீர் எழுந்து அருளி வரும் திருவேடம் கண்டால் 	3698-3
 தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார் இனித்தாழார் 	3698-4

 40.  இப்பொழுதே வந்து அணைவர் எழுந்து அருளி இரும் என்ன 	3699-1
 ஒப்பில் மனை அறம் புரப்பீர் உத்தரா பதி உள்ளோம் 	3699-2
 செப்பரும் சீர் சிறுத்தொண்டர் தமைக் காணச் சேர்ந்தனம் யாம் 	3699-3
 எப்பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி 	3699-4

 41. கண்ணுதலில் காட்டாதார் கணபதீச் சரத்தின் கண் 	3700-1
 வண்ணமலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்தாம் 	3700-2
 நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி 	3700-3
 அண்ணலார் திருவாத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார் 	3700-4

 42. நீரார் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாது 	3701-1
 சீரார் தவத்துச் சிறுத்தொண்டர் மீண்டும் செல்வமனை எய்தி 	3701-2
 ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும் 	3701-3
 பாரா தரிக்கும் திருவேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார் 	3701-4

 43.  அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார் 	3702-1
 வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண் 	3702-2
 துடிசேர் கரத்துப் பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய்க் 	3702-3
 கடிசேர் திரு ஆத்தியின் நிழல்கீழ் இருந்தார் கணபதீச் சரத்து 	3702-4

 44. என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்திச் 	3703-1
 சென்று கண்டு திருப்பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர் 	3703-2
 நின்ற தொண்டர் தமை நோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர் 	3703-3
 என்று திருவாய் மலர்ந்து அருள இறைவர் தம்மைத் தொழுது உரைப்பார் 	3703-4

 45. பூதி அணி சாதனத்தவர் முன் போற்றப் போதேன் ஆயிடினும் 	3704-1
 நாதன் அடியார் கருணையினால் அருளிச் செய்வார் நான் என்று 	3704-2
 கோதில் அன்பர் தமை அமுது செய்விப்பதற்குக் குலப்பதியில் 	3704-3
 காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமைக் கண்டேன் 	3704-4

 46.  அடியேன் மனையில் எழுந்து அருளி அமுது செய்ய வேண்டும் என 	3705-1
 நெடியோன் அறியா அடியார்தாம் நிகழும் தவத்தீர் உமைக் காணும் 	3705-2
 படியால் வந்தோம் உத்தர பதியோம் எம்மைப் பரிந்து ஊட்ட 	3705-3
 முடியா துமக்குச் செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள 	3705-4

 47.  எண்ணா அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு அதனைக் 	3706-1
 கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளிச் செய்யும் கடிது அமைக்க 	3706-2
 தண்ணார் இதழி முடியார் தம் அடியார் தலைப்பட்டால் தேட 	3706-3
 ஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார் 	3706-4

 48.  அரியது இல்லை எனக் கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற 	3707-1
 பெரிய பயிரவக் கோலப் பெருமான் அருளிச் செய்வார் யாம் 	3707-2
 பரியுந் தொண்டீர் மூவிருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது 	3707-3
 உரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார் 	3707-4

 49.  சால நன்று முந் நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லை 	3708-1
 ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசுத்தான் இன்னது என 	3708-2
 ஏல அருளிச் செயப் பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்துக் 	3708-3
 காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கை தொழுதார் 	3708-4

 50. பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும் 	3709-1
 நண்பு மிக்கீர் நாம் உண்ணப் படுக்கும் பசுவும் நரப்பசுவாம் 	3709-2
 உண்பதஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறுவின்றேல் இன்னம் 	3709-3
 புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார் 	3709-4

 51.  யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளிச் செய்யும் என 	3710-1
 நாதன் தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத் 	3710-2
 தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே 	3710-3
 ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார் 	3710-4

 52. அதுவும் முனைவர் மொழிந்து அருளக் கேட்ட தொண்டர் அடியேனுக்கு 	3711-1
 இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்யப் பெறில் என்று 	3711-2
 கதுமென் விரைவில் அவர் அவர் இசையப் பெற்றுக் களிப்பால் காதலொடு 	3711-3
 மதுமென் கமல மலர்ப் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார் 	3711-4

 53. அன்பு மிக்க பெரும் கற்பின் அணங்கு திரு வெண் காட்டு அம்மை 	3712-1
 முன்பு வந்து சிறுத் தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே 	3712-2
 இன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாதமிசை இறைஞ்சிப் 	3712-3
 பின்பு கணவர் முகம் நோக்கிப் பெருகும் தவத்தோர் செயல் வினவ 	3712-4

 54. வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர் தாம் 	3713-1
 உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கோர் சிறுவனுமாய் 	3713-2
 கொள்ளும் பிராயம் ஐந்துளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் 	3713-3
 பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப் பெறின் என்றார் 	3713-4

 55. அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார் 	3714-1
 பெரிய பயிரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு 	3714-2
 உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு 	3714-3
 வரும் அச்சிறுவன் தனைப் பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும் 	3714-4

 56. மனைவியார் தம் முகம் நோக்கி மற்று இத் திறத்து மைந்தர் தமை 	3715-1
 நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே? நேர் நின்று 	3715-2
 தனையன் தன்னைத் தந்தை தாய் அரிவார் இல்லைத் தாழாதே 	3715-3
 எனை இங்கு உய்ய நீ பயந்தான் தன்னை அழப்போம் யாம் என்றார் 	3715-4

 57. என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர் 	3716-1
 இன்று தாழாது அமுது செய்யப் பெற்று இங்கு அவர் தம் மலர்ந்த முகம் 	3716-2
 நன்று காண்பது என நயந்து நம்மைக் காக்க வரும் மணியை 	3716-3
 சென்று பள்ளியினில் கொண்டு வாரும் என்றார் திரு அனையார் 	3716-4

 58. காதல் மனையார் தாம் கூறக் கணவனாரும் காதலனை 	3717-1
 ஏதம் அகலப் பெற்ற பேறு எல்லாம் எய்தினால் போல 	3717-2
 நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழிப் புதல்வன் 	3717-3
 ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்தக் கடிது அகன்றார் 	3717-4

 59. பள்ளியினில் சென்று எய்துதலும் பாதச் சதங்கை மணி ஒலிப்ப 	3718-1
 பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல் 	3718-2
 கொள்ள அணைத்துக் கொண்டு மீண்டு இல்லம் புகுதக் குலமாதர் 	3718-3
 வள்ளலார் தம் முன் சென்று மைந்தன் தன்னை எதிர் வாங்கி 	3718-4

 60. குஞ்சி திருத்தி முகம் துடைத்துக் கொட்டை அரை ஞாண் துகன் நீக்கி 	3719-1
 மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கிப் 	3719-2
 பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திருமஞ்சனம் ஆட்டி 	3719-3
 எஞ்சல் இல்லாக் கோலம் செய்து எடுத்துக் கணவர் கைக் கொடுத்தார் 	3719-4

 61. அச்சம் எய்திக் கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன் 	3720-1
 உச்சி மோவார் மார்பின் கண் அணைத்தே முத்தம் தாமுண்ணார் 	3720-2
 பொச்சம் இல்லாத் திருத் தொண்டர் புனிதர் தமக்குக் கறி அமைக்க 	3720-3
 மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார் 	3720-4

 62. ஒன்றும் மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில் 	3721-1
 சென்று புக்குப் பிள்ளைதனைப் பெற்ற தாயார் செழுங்கலங்கள் 	3721-2
 நன்று கழுவிக் கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை 	3721-3
 வென்ற தாதையார் தலையைப் பிடிக்க விரைந்து மெய்த்தாயார் 	3721-4

 63. இனிய மழலைக் கிண்கிணிக் கால் இரண்டும் மடியின் புடை இடுக்கிக் 	3722-1
 கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்கக் காதலனும் 	3722-2
 நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்யத் 	3722-3
 தனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலை அரிவார் 	3722-4

 64. பொருவில் பெருமைப் புத்திரன் மெய்த் தன்மை அளித்தான் எனப் பொலிந்து 3723-1
 மருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார் 	3723-2
 அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர 	3723-3
 இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார் 	3723-4

 65.  அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்து 	3724-1
 மறைத்து நீக்கச் சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு 	3724-2
 இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டு 	3724-3
 கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்துக் கூட்டிக் கடிது அமைப்பார் 	3724-4

 66. மட்டு விரிபூங்குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே 	3725-1
 அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறோர் அரும்கலத்துப் 	3725-2
 பட்ட நறையால் தாளித்துப் பலவும் மற்றும் கறி சமைத்துச் 	3725-3
 சட்ட விரைந்து போனகமும் சமைத்துக் கணவர் தமக்கு உரைத்தார் 	3725-4

 67.  உடைய நாதர் அமுது செய உரைத்த படியே அமைவதற்கு 	3726-1
 அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகிக் களி கூர 	3726-2
 விடையில் வருவார் தொண்டர் தாம் விரைந்து சென்று மெல் மலரின் 	3726-3
 புடைவண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார் 	3726-4

 68. அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்பால் 	3727-1
 நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு 	3727-2
 பண்ணினேனாய்ப் பசித்து அருளத் தாழ்த்தது எனினும் பணி சமைத்தேன் 	3727-3
 எண்ணம் வாய்ப்ப எழுந்து அருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார் 	3727-4

 69.  இறையும் தாழாது எழுந்து அருளி அமுது செய்யும் என்று இறைஞ்ச 	3728-1
 கறையும் கண்டத்தினில் மறைத்துக் கண்ணும் நுதலில் காட்டாதார் 	3728-2
 நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர் போதும் என்ன நிதி இரண்டும் 	3728-3
 குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போலக் கொண்டு மனை புகுந்தார் 	3728-4

 70. வந்து புகுந்து திருமனையில் மனைவியார் தாம் மாதவரை 	3729-1
 முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனைச் 	3729-2
 சந்த மலர் மாலைகள் முத்தின் தாமம் நாற்றித் தவிசு அடுத்த 	3729-3
 கந்த மலர் ஆசனம் காட்டிக் கமழ் நீர்க் கரகம் எடுத்து ஏந்த 	3729-4

 71. தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார் தம் கழல் விளக்கி 	3730-1
 ஆய புனிதப் புனல் தங்கள் தலைமேல் ஆரத் தெளித்து இன்பம் 	3730-2
 மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென்மலர்ச் சாந்தம் 	3730-3
 ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார் 	3730-4

 72. பனி வெண் திங்கள் சடை விரித்த பயில் பூங்குஞ்சி பயிரவராம் 	3731-1
 புனிதர் தம்மைப் போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின் 	3731-2
 வனிதை யாரும் கணவரும் முன் வணங்கிக் கேட்ப மற்று அவர்தாம் 	3731-3
 இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்கப் படைக்க என 	3731-4

 73. பரிசு விளங்கப் பரிகலமும் திருத்தி பாவாடையில் ஏற்றித் 	3732-1
 தெரியும் வண்ணம் செஞ்சாலிச் செழும் போனகமும் கறி அமுதும் 	3732-2
 வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக் கான் மேல் 	3732-3
 விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள் செய்வார் 	3732-4

 74. சொன்ன முறையில் படுத்த பசுத் தொடர்ந்த உறுப்பு எலாம் கொண்டு 	3733-1
 மன்னு சுவையில் கறி ஆக்கிமாண அமைத்தீரே? என்ன 	3733-2
 அன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்காகாது எனக் கழித்தோம் என்ன 	3733-3
 அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார் 	3733-4

 75. சிந்தை கலங்கிச் சிறுத் தொண்டர் மனைவியாரோடும் திகைத்து அயரச் 	3734-1
 சந்தனத்தார் எனும் தாதியார்தாம் அந்தத் தலை இறைச்சி 	3734-2
 வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே 	3734-3
 முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்துக் கொடுக்க முகம் மலர்ந்தார் 	3734-4

 76. வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத் தொண்டரை நோக்கி 	3735-1
 ஈங்கு நமக்குத் தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இப் 	3735-2
 பாங்கு நின்றார் தமைக் கொணர்வீர் என்று பரமர் பணித்து அருள 	3735-3
 ஏங்கிக் கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார் 	3735-4

 77. அகத்தின் புறத்துப் போய் அருளால் எங்கும் காணார் அழிந்து அணைந்து 	3736-1
 முகத்தில் வாட்டம் மிகப் பெருகப் பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார் 	3736-2
 இகத்தும் பரத்தும் இனி யாரைக் காணேன் யானும் திருநீறு 	3736-3
 சகத்தில் இடுவார் தமைக் கண்டே இடுவேன் என்று தாழ்ந்து இறைஞ்ச 	3736-4

 78. உம்மைப் போல் நீறு இட்டார் உளரோ உண்பீர் நீர் என்று 	3737-1
 செம்மை கற்பில் திருவெண்காட்டு அம்மை தம்மைக் கலம் திருத்தி 	3737-2
 வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டுப் படையும் எனப் படைத்தார் 	3737-3
 தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ணப் புகலும் தடுத்து அருளி 	3737-4

 79.  ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது 	3738-1
 சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப 	3738-2
 மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன் தன்னை அழையும் என 	3738-3
 ஈறும் முதலும் இல்லாதாருக்கு இப்போது உதவான் அவன் என்றார் 	3738-4

 80.  நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர் 	3739-1
 தாம் அங்கு அருளிச் செய்யத் தரியார் தலைவர் அமுது செய்து அருள 	3739-2
 யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவு உற்று எழுந்து அருளால் 	3739-3
 பூ மென் குழலார் தம் மோடும் புறம் போய் அழைக்கப் புகும் போது 	3739-4

 81. வையம் நிகழும் சிறுத் தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார் 	3740-1
 தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய்த் தாம் அழைப்பார் 	3740-2
 செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம் 	3740-3
 உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட 	3740-4

 82. பரமர் அருளால் பள்ளியின் நின்று ஓடிவருவான் போல் வந்த 	3741-1
 தரமில் வனப்பின் தனிப் புதல்வன் தன்னை எடுத்து தழுவித் தம் 	3741-2
 கரம் முன் அணைத்துக் கணவனார் கையில் கெடுப்பக் களி கூர்ந்தார் 	3741-3
 புரமூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ணப் பெற்றோம் எனும் பொலிவால் 	3741-4

 83. வந்த மகனைக் கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார் 	3742-1
 முந்தவே அப் பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்து அருளச் 	3742-2
 சிந்தை கலங்கிக் காணாது திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார் 	3742-3
 வெந்த இறைச்சிக் கறி அமுதும் கலத்தில் காணார் வெருவுற்றார் 	3742-4

 84.  செய்ய மேனிக் கருங்குஞ்சிச் செழும் அஞ்சுகத்துப் பயிரவர் யாம் 	3743-1
 உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே எனத் தேடி 	3743-2
 மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த 	3743-3
 தைய லோடும் சரவணத்துத் தனயரோடும் தாம் அணைவார் 	3743-4

 85. தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர் 	3744-1
 முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய் உள்ளோர் போற்றி இசைப்ப 	3744-2
 இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்து அருளிப் 	3744-3
 பனி வெண் திங்கள் முடி துளங்க பரந்த கருணை நோக்கு அளித்தார் 	3744-4

 86. அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர் 	3745-1
 முன்பு தோன்றும் பெருவாழ்வை முழுதும் கண்டு பரவசமாய் 	3745-2
 என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார் 	3745-3
 பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள் புரிவார் 	3745-4

 87. கொன்றை வேணியார் தாமும் பாகம் கொண்ட குலக் கொடியும் 	3746-1
 வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப்பூங்கமலச் சேவடிக் கீழ் 	3746-2
 நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார் 	3746-3
 என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார் 	3746-4

 88.  ஆறு முடிமேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா 	3747-1
 ஊறு இலாத தனிப் புதல்வன் தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்டப் 	3747-2
 பேறு பெற்றார் சே அடிகள் தலைமேல் கொண்டு பிற உயிர்கள் 	3747-3
 வேறு கழறிற்று அறிவார் தம் பெருமையும் தொழுது விளம்புவார் 	3747-4


37 கழறிற் அ றிவார் நாயனார் புராணம்
 1. மாவீற்று இருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டுப் 	3748-1
 பா வீற்றிருந்த பல்புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி தான் 	3748-2
 சேவீற்று இருந்தார் திருவஞ்சைக் களமும் நிலவிச் சேரர் குலக் 	3748-3
 கோவீற்று இருந்து முறை புரியும் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர் 	3748-4

 2. காலை எழும் பல் கலையின் ஒலி களிற்றுக் கன்று வடிக்கும் ஒலி 	3749-1
 சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரகச் செருக்கால் சுலவும் ஒலி 	3749-2
 பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி 	3749-3
 வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினதால் 	3749-4

 3. மிக்க செல்வம் மனைகள் தொறும் விளையும் இன்பம் விளங்குவன 	3750-1
 பக்கம் நெருங்கும் சாலை தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன 	3750-2
 தக்க அணி கொள் மாடங்கள் தொறும் சைவ மேன்மை சாற்றுவன 	3750-3
 தொக்க வளங்கள் இடங்கள் தொறும் அடங்க நிதியம் துவன்றுவன 	3750-4

 4. வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற 	3751-1
 சாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடம் மதில் சூழ் 	3751-2
 சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான் 	3751-3
 கோதை அரசர் மகோதை எனக் குலவும் பெயரும் உடைத்துலகில். 	3751-4

 5. முருகு விரியும் மலர்ச் சோலை மூதூர் அதன் கண் முறை மரபின் 	3752-1
 அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவத் திறம் தழைப்பத் 	3752-2
 திருகு சின வெம் களியானைச் சேரர் குலமும் உலகும் செய் 	3752-3
 பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக் கோதையர் 	3752-4

 6. திருமா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால் 	3753-1
 வருமா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர் மாரி 	3753-2
 தருமா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்பப் 	3753-3
 பெருமா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால் 	3753-4

 7. மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால் 	3754-1
 கண் மேல் விளங்கு நெறியினார் கழலே பேணூம் கருத்தினராய் 	3754-2
 உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார் 	3754-3
 தெள் நீர் முடியார் திரு வஞ்சைக் களத்தில் திருத்தொண்டே புரிவார் 	3754-4

 8. உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார் 	3755-1
 புலரி எழுந்து புனல் மூழ்கிப் புனித வெண் நீற்றினும் மூழ்கி 	3755-2
 நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து 	3755-3
 மலரும் முகையும் கொணர்ந்து மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து 	3755-4

 9. திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு 	3756-1
 வரும் அன்புடன் இன்பு உறச் சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள் 	3756-2
 பெருமை பிறங்கச் செய்து அமைத்துப் பேணும் விருப்பில் திருப்பாட்டும் 	3756-3
 ஒருமை நெறியின் உணர்வு வர ஓதிப் பணிந்தே ஒழுகும் நாள் 	3756-4

 10. நீரின் மலிந்த கடல் அகழி நெடுமால் வரையின் கொடிமதில் சூழ் 	3757-1
 சீரின் மலிந்த திரு நகரம் அதனில் செங்கோல் பொறையன் எனும் 	3757-2
 காரின் மலிந்த கெடை நிழல் மேல் கவிக்கும் கொற்றக் குடை நிழல் கீழ்த் 	3757-3
 தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்துத் தவம் சார்ந்தான் 	3757-4

 11. வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின் 	3758-1
 சிந்தை மதி நூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி 	3758-2
 முந்தை மரபில் முதல்வர் திருத் தொண்டு முயல்வார் முதற்று ஆக 	3758-3
 இந்து முடியார் திருவஞ்சைக் களத்தில் அவர் பால் எய்தினார் 	3758-4

 12. எய்தி அவர் தம் எதிரில் இறைஞ்சி இருந்தண் சாரல் மலை நாட்டுச் 	3759-1
 செய்தி முறைமையால் உரிமைச் செங்கோல் அரசு புரிவதற்கு 	3759-2
 மைதீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது எனப் 	3759-3
 பொய்தீர் வாய்மை மந்திரிகள் போற்றிப் புகன்ற பொழுதின்கண் 	3759-4

 13.  இன்பம் பெருகும் திருத் தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார் 	3760-1
 அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல் 	3760-2
 என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் எனப் புக்கு 	3760-3
 முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால் 	3760-4

 14. மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும் 	3761-1
 யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு இல்லாத் 	3761-2
 தாவில் விறலும் தண்டாத கொடையும் படை வாகனமும் முதல் ஆம் 	3761-3
 காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்து உறப் பெற்றார் 	3761-4

 15.  ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சிப் புறம் போந்து அரசு அளித்தல் 3762-1
 ஊனம் ஆகும் திருத் தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே 	3762-2
 மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும் 	3762-3
 மான அமைச்சர் தாள் பணிந்து அவ் விணைமேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார் 	3762-4

 16. உரிமை நாளில் ஒரை நலன் எய்த மிக்க உபகரணம் 	3763-1
 பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து 	3763-2
 இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ் 	3763-3
 தரும நிலைமை அறிந்து புவி தாங்கும் கழறிற் அறிவார் தாம் 	3763-4

 17. தம்பிரானார் கோயில் வலம் கொண்டு திருமுன் தாழ்ந்து எழுந்து 	3764-1
 கும்ப யானை மேல் கொண்டு கொற்றக் குடையும் சாமரையும் 	3764-2
 நம்பும் உரிமை யவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம் கொள்வார் 	3764-3
 மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வரக் கண்டார் 	3764-4

 18. மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால் 	3765-1
 உழையில் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே 	3765-2
 இழையிற் சிறந்த ஓடை நுதல் யானைக் கழுத்தின் நின்று இழிந்து 	3765-3
 விழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கை தொழுதார் 	3765-4

 19. சேரர் பெருமான் தொழக் கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி 	3766-1
 யார் என்று அடியேனைக் கொண்டது அடி வண்ணான் எனச் 	3766-2
 சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின் 	3766-3
 வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார் 	3766-4

 20. மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம் 	3767-1
 சென்னி மிசை அஞ்சலி செய்து போற்றச் சினமால் களிறு ஏறி 	3767-2
 மின்னு மணிப் பூண் கொடி மாட வீதி மூதூர் வலம் கொண்டு 	3767-3
 பொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய 	3767-4

 21. யானை மிசை நின்று இழிந்து அருளி இலங்கும் மணி மண்டபத்தின் கண் 	3768-1
 மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக் குடை நிழற்றப் 	3768-2
 பானல் விழியார் சாமரை முன் பணி மாறப்பன் மலர் தூவி 	3768-3
 மான அரசர் போற்றிட வீற்று இருந்தார் மன்னர் பெருமானார் 	3768-4

 22. உலகு புரக்கும் கொடைவளவர் உரிமைச் செழியர் உடன் கூட 	3769-1
 நிலவு பெரு முக் கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி 	3769-2
 அலகில் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து 	3769-3
 மலரும் திரு நீற்று ஒளிவளர மறைகள் வளர மண் அளிப்பார் 	3769-4

 23. நீடும் உரிமைப் பேர் அரசால் நிகழும் பயனும் நிறை தவமும் 	3770-1
 தேடும் பொருளும் பெரும் துணையும் தில்லைச் திருச்சிற்றம் பலத்துள் 	3770-2
 ஆடும் கழலே எனத் தெளிந்த அறிவால் எடுத்த திருப்பாதம் 	3770-3
 கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குலப் பெருமாள் 	3770-4

 24. வாசத் திருமஞ்சனம் பள்ளித் தாமம் சாந்தம் மணித் தூபம் 	3771-1
 தேசில் பெருகும் செழும் தீபம் முதலாயினவும் திரு அமுதும் 	3771-2
 ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும் 	3771-3
 பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொன் பார் சிலம்பின் ஒலி அளித்தார் 	3771-4

 25. நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார் 	3772-1
 இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால் 	3772-2
 செம் பொன் மழையாம் எனப் பொழிந்து திருந்து வெற்றி உடன் பொருந்தி 	3772-3
 உம்பர் போற்றத் தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார் 	3772-4

 26. இன்ன வண்ணம் இவர் ஓழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு 	3773-1
 மன்னும் மதுரைத் திரு வால வாயில் இறைவர் வரும் அன்பால் 	3773-2
 பன்னும் இசைப் பாடலில் பரவும் பாணனார் பத்திரனார்க்கு 	3773-3
 நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள் புரிவார் 	3773-4

 27. இரவு கனவில் எழுந்து அருளி என்பால் அன்பால் எப்பொழுதும் 	3774-1
 பரவும் சேரன் தனக்கு உனக்குப் பைம் பொன் பட்டு ஆடை 	3774-2
 விரவு கதிர் செய் நவ மணிப் பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றித் 	3774-3
 தர நம் ஓலைத் தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று 	3774-4

 28. அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள் செய்த பெருமை யாலே 	3775-1
 எதிர் இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று 	3775-2
 மதிமலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மைக் 	3775-3
 கதிர் ஒளி விரிந்த தோட்டு திருமுகம் கொடுத்தார் காண 	3775-4

 29. சங்கப் புலவர் திருமுகத்தைத் தலைமேல் கொண்டு பத்திரனார் 	3776-1
 அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தித் 	3776-2
 துங்கப் பரிசை கொடுங் கோளூர் தன்னில் புகுந்து துன்னு கொடி 	3776-3
 மங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார் 	3776-4

 30. கேட்ட பொழுதே கை தலைமேல் கொண்டு கிளர்ந்த பேரன்பால் 	3777-1
 நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்தி 	3777-2
 ஓட்டத் தம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தை உடன் 	3777-3
 பாட்டின் தலைமைப் பணனார் பாதம் பலகால் பணிகின்றார் 	3777-4

 31. அடியேன் பொருளாத் திருமுகம் கொண்டு அணைந்தது என்ன அவர் தாமும் 	3778-1
 கொடிசேர் விடையார் திருமுகம் கைக்கொடுத்து வணங்கக் கொற்றவனார் 	3778-2
 முடிமேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறிப் பொழி கண்ணீர் 	3778-3
 பொடியார் மார்பில் பரந்து விழப் புவிமேல் பலகால் வீழ்ந்து எழுந்தார் 	3778-4

 32. பரிவில் போற்றித் திருமுகத்தைப் பலகால் தொழுது படி எடுக்க 	3779-1
 உரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றி 	3779-2
 விரிபொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமைச் சுற்றம் எலாம் 	3779-3
 பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள் செய்வார் 	3779-4

 33.  தங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதிக் குவையாய்ப் 	3780-1
 பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம் 	3780-2
 அம்கண் ஒன்றும் ஒழியாமை அடையக் கண்டு புறப்பட்டுத் 	3780-3
 தங்கும் பொதிசெய் தாளின்மேல் சமைய ஏற்றிக் கெணரும் என 	3780-4

 34. சேரர் பெருமான் அருள் செய்யத் திருந்து மதிநூல் மந்திரிகள் 	3781-1
 சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும் 	3781-2
 சீர் கொள் நிதியும் எண்ணிறந்த எல்லாம் பொதி செய்தாளின் மேல் 	3781-3
 பாரில் நெருங்க மிசை ஏற்றிக் கொண்டு வந்து பணிந்தார்கள் 	3781-4

 35. பரந்த நிதியின் பரப்பு எல்லாம் பாணனார் பத்திரனார்க்கு 	3782-1
 நிரந்த தனங்கள் வேறு வேறு நிரைத்துக் கட்டி மற்று இவையும் 	3782-2
 உரம் தங்கிய வெம் கரிபரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும் 	3782-3
 புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார் 	3782-4

 36. பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார் 	3783-1
 காணக் கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்துப் 	3783-2
 பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார் ஆணை 	3783-3
 அரசும் அரசு உறுப்பும் கைக் கொண்டு அருளும் என இறைஞ்ச 	3783-4

 37. இறைவர் ஆணை மறுப்ப அதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர் 	3784-1
 நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டே 	3784-2
 உறை மும்மதத்துக் களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோர் 	3784-3
 பிறை வெண் கோட்டுக் களிற்றுமேல் கொண்டு போந்தார் பெரும்பாணர் 	3784-4

 38. பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின் 	3785-1
 கண்கள் பொழிந்த காதல் நீர் வழியக் கையால் தொழுது அணைய 	3785-2
 நண்பு சிறக்கும் அவர் தம்மை நகரின் புறத்து விடை கொண்டு 	3785-3
 திண் பொன் புரிசைத் திரு மதுரை புக்கார் திருந்தும் இசைப் பாணர் 	3785-4

 39. வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகிக் 	3786-1
 கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும் 	3786-2
 பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்தி 	3786-3
 மேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்று இருந்தார் 	3786-4

 40. அளவில் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின் 	3787-1
 உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றிக் 	3787-2
 களவு கொலைகள் முதலான கடிந்து கழற்றிற்று அறிவார் தாம் 	3787-3
 வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் கலப்பில் மகிழும் நாள் 	3787-4

 41. வானக் கங்கை நதி பொதிந்த மல்கு கடையார் வழிபட்டுத் 	3788-1
 தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள் 	3788-2
 தேன் அக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல் 	3788-3
 மானப் பூசை முடிவின் கண் கேளாது ஒழிய மதிமயங்கி 	3788-4

 42. பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது எனப் பொரும் 	3789-1
 ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று 	3789-2
 தேகின் விளங்கும் உடைவாளை உருவித் திருமார்பினில் நாட்ட 	3789-3
 ஈசர் விரைந்து திருச்சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார் 	3789-4

 43.  ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கைமலர் 	3790-1
 கூடத் தலைமேல் குவித்து அருளிக் கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து 	3790-2
 நீடப் பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அருமறை முன் 	3790-3
 தேடற்கு அரியாய் திருஅருள் திரு அருள் முன் செய்யது ஒழிந்தது என் என்றார் 	3790-4

 44. என்ற பொழுதில் இறைவர் தாம் எதிர் நின்று அருளாது எழும் ஒலியால் 	3791-1
 மன்றின் இடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன் 	3791-2
 ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால் 	3791-3
 நின்று கேட்டு வரத் தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார் 	3791-4

 45.  என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று 	3792-1
 பொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன் அம்பலம் இறைஞ்சி 	3792-2
 தன் நேர் இல்லா வன் தொண்டர் தமையும் காண்பான் என விரும்பி 	3792-3
 நல் நீர் நாட்டுக் செல நயந்தார் நாமச் சேரர் கோமானார் 	3792-4

 46.  பொன்னார் மௌலிச் சேரலன் ஆர் போற்றும் அமைச்சர்க்கு அ·து இயம்பி 	3793-1
 நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற 	3793-2
 மின்னார் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர் 	3793-3
 அந் நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய் 	3793-4

 47. இட்ட நல்நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக் களத்து 	3794-1
 மட்டுவிரிபூம் கொன்றையினார் தம்மை வலம் கொண்டு இறைஞ்சிப் போய் 	3794-2
 பட்டநுதல் வெம் களியாணை பிடர்மேல் கொண்டு பனி மதியம் 	3794-3
 தொட்ட கொடிமாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார் 	3794-4

 48. யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன 	3795-1
 மான மலை நாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்ற 	3795-2
 சேனைவீரர் புடைபரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த 	3795-3
 கானம் அடைய உடன் படர்வன போலும் காட்சி மேவினதால் 	3795-4

 49. புரவித் திரள்கள் ஆ யோகப் பொலிவின் அசைவில் போதுவன 	3796-1
 அரவச் சேனைக் கடல் தரங்கம் மடுத்து மேல் மேல் அடர்வன போல் 	3796-2
 விரவிப் பரந்து சென்றனவால் மிசையும் அவலும் ஒன்றாக 	3796-3
 நிரவிப் பரந்த நெடும் சேனை நேமி நெளியச் சென்றனவால் 	3796-4

 50. அந் நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி 	3797-1
 மினார் மணிப்பூண் மன்னவன் ஆர் வேண்டுவாரை உடன்கொண்டு 	3797-2
 கொனார் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி 	3797-3
 பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர் நாட்டு இடைப் போவார் 	3797-4

 51. சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ளக் 	3798-1
 குன்றும் கானும் உடைக் குறும்பர் இடங்கள் தோறும் குறை அறுப்பத் 	3798-2
 துன்று முரம்பும் கான் ஆறும் உறும் கல் சுரமும் பல கடந்து 	3798-3
 வென்றி விடையார் இடம் பலவும் மேவிப் பணிந்து செல்கின்றார் 	3798-4

 52. பொருவில் பொன்னித் திருநதியின் கரை வந்து எய்திப் புனித நீர் 	3799-1
 மருவு தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வடபால் கரை ஏறித் 	3799-2
 திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் மன்றுள் நடம் போற்ற 	3799-3
 உருகும் மனத்தின் உடன் சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார் 	3799-4

 53. வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால் 	3800-1
 அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர் வணங்கிச் 	3800-2
 சந்த விரைப் பூந்திருவீதி இறைஞ்சித் தலைமேல் கரம் முகிழ்ப்பச் 	3800-3
 சிந்தை மகிழ எழு நிலை கோபுரத்தை அணைந்தார் சேரலனார் 	3800-4

 54. நிலவும் பெருமை எழுநிலைக் கோபுரத்தின் முன்னர் நிலத்து இறைஞ்சி 	3801-1
 மலரும் கண்ணீர்த் துளி ததும்பப் புகுந்து மாளிகை வலம் கொண்டு 	3801-2
 உலகு விளக்கும் திருப் பேர் அம்பலத்தை வணங்கி உள் அணைந்தார் 	3801-3
 அலகில் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன் 	3801-4

 55. அளவில் இன்பப் பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட 	3802-1
 உளமும் புலனும் ஒருவழிச் சென்று உருகப் போற்றி உய்கின்றார் 	3802-2
 களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து 	3802-3
 வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார் 	3802-4

 56.  ஆரா ஆசை ஆனந்தக் கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால் 	3803-1
 சீரார் வண்ணப் பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படிக்கீழ்ப் 	3803-2
 பாரா தரிக்க எடுத்து ஏத்திப் பணிந்தார் பருவ மழை பொழியும் 	3803-3
 காரால் நிகர்க்க அரிய கொடைக் கையார் கழற்றிவார் தாம் 	3803-4

 57. தம்பிரானார்க்கு எதிர் நின்று தமிழ் சொல் மாலை கேட்பிக்க 	3804-1
 உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்குப் பரிசில் எனச் 	3804-2
 செம்பொன் மணி மன்றில் எடுத்த செய்ய பாதத்து திருச்சிலம்பின் 	3804-3
 இம்பர் நீட எழுந்த ஒலிதாமும் எதிரே கேட்பித்தார் 	3804-4

 58.  ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவில் இன்ப ஆனந்தம் 	3805-1
 கூடப் பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார் 	3805-2
 நீடப் பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்து 	3805-3
 மாடத் திரு மாளிகை வீதி வணங்கிப் புறத்து வைகினார் 	3805-4

 59. பரவும் தில்லை வட்டத்துப் பயில்வார் பைம் பொன் அம்பலத்துள் 	3806-1
 அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை 	3806-2
 விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திருப்படிக்கீழ் 	3806-3
 இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அந் நாளில் 	3806-4

 60.  ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளித் தாழ்ந்த படி தமக்குக் 	3807-1
 கூடும் பரிசால் முன்பு அருளிச் செய்த நாவலூர்க் கோவை 	3807-2
 நீடும் பெரும் காதலில் காண நிறைந்த நினைவு நிரம்பாமல் 	3807-3
 தேடும் பாதர் அருளினால் திருவாரூர் மேல் செல எழுந்தார் 	3807-4

 61. அறிவின் எல்லை ஆய திருத்தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சிப் 	3808-1
 பிறவி இலாத திருவடியைப் பெருகும் உள்ளத்தினில் பெற்று 	3808-2
 செறியும் ஞானப் போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சி 	3808-3
 மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார் 	3808-4

 62. வழியில் குழியில் செழுவயலின் மதகின் மலர் வாவிகளின் மடுச் 	3809-1
 சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர்ப் பொன்னி கடந்து ஏறி 	3809-2
 வழியில் திகழும் திருநுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உகக் 	3809-3
 கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ளக் கழனி ஆரூர் கண் உற்றார் 	3809-4

 63. நம்பி தாமும் அந் நாள் போய் நாகைக் காரோணம் பாடி 	3810-1
 அம் பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா 	3810-2
 பைம் பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில் 	3810-3
 தம்பிரானைப் பணிந்து ஏத்தித் திருவாரூரில் சார்ந்து இருந்தார் 	3810-4

 64. வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவரூர் எய்த 	3811-1
 அந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்றுச் 	3811-2
 சிந்தை மகிழ எதிர் கொண்டு சென்று கிடந்தார் சேரலனார் 	3811-3
 சந்தம் விரைத்தார் வன்தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார் 	3811-4

 65. முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்து எடுத்தே 	3812-1
 அன்பு பெருகத் தழுவ விரைந்து ஆர்வத்தொடு தழுவ 	3812-2
 இன்ப வெள்ளத்து இடை நீந்தி ஏற மாட்டாதவர் போல் 	3812-3
 என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார் 	3812-4

 66.  ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவில் மகிழ்வு எய்த 	3813-1
 மானச் சேரர் பெருமானார் தாமும் வன்தொண்டரும் கலந்த 	3813-2
 பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார் பரவும் 	3813-3
 மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியதால் 	3813-4

 67. ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்து 	3814-1
 மருவ இனியார் பால் செய்வது என்னாம் என்னும் மகிழ்ச்சியினால் 	3814-2
 பருவ மழைச் செங்கை பற்றிக் கொண்டு பரமர் தாள் பணியத் 	3814-3
 தெருவு நீங்கிக் கோயிலினுள் புகுந்தார் சேரமான் தோழர் 	3814-4

 68. சென்று தேவ ஆசிரியனை முன் இறைஞ்சித் திருமாளிகை வலம் கொண்டு 	3815-1
 ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக 	3815-2
 நின்று தொழுது கண் அருவி வீழ நிலத்தின் மிசை வீழ்ந்தே 	3815-3
 என்றும் இனிய தம் பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார் 	3815-4

 69. தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வப் பெருமாள் கழல் வணங்கி 	3816-1
 மூவர் தமக்கு முதல் ஆகும் அவரைத் திருமும் மணிக் கோவை 	3816-2
 நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார் 	3816-3
 தாவில் பெருமைச் சேரல் அனார் தம்பிரானார் தாம் கொண்டார் 	3816-4

 70. அங்கண் அருள் பெற்று எழுவாரைக் கொண்டு புறம் போந்து ஆரூரர் 	3817-1
 நங்கை பரவையார் திருமாளிகையில் நண்ண நன்னுதலார் 	3817-2
 பொங்கும் விளக்கும் நிறை குடமும் பூ மாலைகளும் புகை அகிலும் 	3817-3
 எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர் கொண்டார் 	3817-4

 71. சோதி மணி மாளிகையின் கண் சுடரும் பசும் பொன் கால் அமளி 	3818-1
 மீது பெருமாள் தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்பக் 	3818-2
 கோதில் குணத்துப் பரவையார் கொழுநர்க்கும் தோழர்க்கும் 	3818-3
 நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறை அளித்தார் 	3818-4

 72. தாண்டும் புரவிச் சேரர் குலப் பெருமாள் தமக்குத் திரு அமுது 	3819-1
 தூண்டும் சோதி விளக்கு அனையார் அமைக்கத் துணைவர் சொல்லுதலும் 	3819-2
 வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்துக் கறியும் போனகமும் 	3819-3
 ஈண்டச் சமைப்பித்து உடன் வந்தார்க்கு எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார் 	3819-4

 73. அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும் படியாக 	3820-1
 விரவிப் பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன்பின் 	3820-2
 புரசைக் களிற்றுச் சேரலன் ஆர் புடை சூழ்ந்து அவரோடு அமுது செயப் 	3820-3
 பரவைப் பிறந்த திருவனைய பரவையார் வந்து அறிவித்தார் 	3820-4

 74.  சேரர் பெருமான் எழுந்து அருளி அமுத செய்யச் செய்தவத்தால் 	3821-1
 தாரின் மலிபூம் குழல் மடவாய் தாழாது அமுது செய்வி எனப் 	3821-2
 பாரின் மலிசீர் வன்தொண்டர் அருளிச் செய்யப் பரிகலங்கள் 	3821-3
 ஏரின் விளங்கத் திருத்திக்கால் இரண்டில் படியாய் ஏற்றுதலும் 	3821-4

 75.  ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள 	3822-1
 வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெரு உறலும் 	3822-2
 நீண்ட தடக்கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள 	3822-3
 ஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையார்க்கு இறையவனார் 	3822-4

 76. ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த தவத்துப் பரவையார் 	3823-1
 மிக்க விருப்பால் அமுது செய்வித்து அருளி மேவும் பரிசனங்கள் 	3823-2
 தக்க வகையால் அறுசுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்தத் 	3823-3
 ஒக்க மகிழ்ச்சி களி சிறப்பத் தூய விருந்தின் கடன் முடித்தார் 	3823-4

 77. பனிநீர் விரவு சந்தனத்தின் பசுங்கர்ப்பூர விரைக் கலவை 	3824-1
 வனிதை அவர்கள் சமைத்து எடுப்பக் கொடுத்து மகிழ்மான் மதச் சாந்தும் 	3824-2
 புனித நறும் பூ மாலைகளும் போற்றிக் கொடுத்துப் பொன்கொடியார் 	3824-3
 இனிய பஞ்ச வாசம் உடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார் 	3824-4

 78.  ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்து அருளித் 	3825-1
 தூய நீறு தங்கள் திருமுடியில் வாங்கித் தொழுது அணிந்து 	3825-2
 மேய விருப்பின் உடன் இருப்பக் கழறிற்றறிவார் மெய்த்தொண்டின் 	3825-3
 சேய நீர்மை அடைந்தார் ஆய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார் 	3825-4

 79. மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவிக் 	3826-1
 கலை நாள் பெருகு மதி முகத்துப் பரவையார் தம் கணவனார் 	3826-2
 சிலை நாட்டிய வெல் கொடியாரைச் சேரத் தந்தார் எனக் கங்கை 	3826-3
 அலை நாள் கொன்றை முடிச் சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார் 	3826-4

 80. செல்வத் திருவாரூர் மேவும் செம் புற்றில் இனிது அமர்ந்த 	3827-1
 வில் வெற்பு உடையார் கழல் வணங்கி வீதி விடங்கப் பெருமானை 	3827-2
 மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனம் மகிழ்ந்து 	3827-3
 சொல் வித்தகர் தாம் இருவர்களும் தொடர்ந்த காதலுடன் சிறந்தார் 	3827-4

 81. இவ்வாறு ஒழுகும் நாளின் கண் இலங்கு மணிப்பூண் வன்தொண்டர் 	3828-1
 மைவாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கிச் 	3828-2
 செய்வார் கன்னித் தமிழ் நாட்டுத் திருமா மதுரை முதலான 	3828-3
 மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார் 	3828-4

 82. சேரர் பிரானும் ஆரூரர் தம்மைப் பிரியாச் சிறப்பாலும் 	3829-1
 வாரம் பெருகத் தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த 	3829-2
 வீரர் அளித்த திருமுகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்குச் 	3829-3
 சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செலத் துணிந்தார் 	3829-4

 83. இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர் 	3830-1
 ஒருவர் மலர்த்தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி 	3830-2
 மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பில் பணிகள் வாகனங்கள் 	3830-3
 பொருவில் பண்டாரங் கொண்டு போதுவார்கள் உடன் போத 	3830-4

 84. சேவித்து அணையும் பரிசனங்கள் சூழத் திருவாரூர் இறைஞ்சிக் 	3831-1
 காவில் பயிலும் புறம்பு அணையைக் கடந்து போந்து கீழ்வேளூர் 	3831-2
 மேவிப் பரமர் கழல் வணங்கிப் போந்து வேலைக் கழிக் கானல் 	3831-3
 பூவில் திகழும் பொழில் நாகை புகுந்து காரோணம் பணிந்தார் 	3831-4

 85. திருக்காரோணச் சிவக் கொழுந்தைச் சென்று பணிந்து சிந்தையினை 	3832-1
 உருக்கார்வச் செம்தமிழ் மாலை சாத்திச் சில நாள் உறைந்து போய் 	3832-2
 பெருக்கார் உலவு சடைமுடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி 	3832-3
 அருள் காரணர் தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர் 	3832-4

 86. முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சி 	3833-1
 செந்நீர் வாய்மைத் திருநாவுக்கரசும் புகலிச் சிவக் கன்றும் 	3833-2
 அந்நேர் திறக்க அடைக்க எனப்பாடும் திருவாயிலை அணைந்து 	3833-3
 நன்னீர் பொழியும் விழியினர் ஆய் நாயன் மாரை நினைந்து இறைஞ்சி 	3833-4

 87. நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அருமணியை 	3834-1
 இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழைப் பழித்து என்னும் 	3834-2
 அறைந்த பதிகத் தமிழ் மாலை நம்பி சாத்த அருள் சேரர் 	3834-3
 சிறந்த அந்தாதியில் சிறப்பித்து அனவே ஓதித் திளைத்து எழுந்தார் 	3834-4

 88. எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெரும் தொண்டரும் சில நாள் 	3835-1
 செழுந்தண் பழனப் பதியதனுள் அமர்ந்து தென்பால் திரைக் கடல் நஞ்சு 	3835-2
 அழுந்து மிடற்றார் அகத்தியான் பள்ளி இறைஞ்சி அவிர் மதியக் 	3835-3
 கொழுந்து வளர் செம் கடைக் குழகர் கோடிக் கோயில் குறுகினார் 	3835-4

 89. கோடிக் குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும் 	3836-1
 நாடிக் காணாது உள்புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம் 	3836-2
 வாடிக் கடிதாய்க் கடல் காற்று என்று எடுத்து மலர்க் கண்ணீர் வாரப் 	3836-3
 பாடிக் காடு காள் புணர்ந்த பரிசும் பதிகத்து இடை வைத்தார் 	3836-4

 90. அங்கு வைகிப் பணிந்து அருளால் போவார் அகன் கோணாட்டு அரனார் 	3837-1
 தங்கும் இடங்கள் வணங்கிப் போய் பாண்டி நாடுதனைச் சார்ந்து 	3837-2
 திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி போந்து சேண் விளங்கும் 	3837-3
 மங்குல் தவழும் மணிமாட மதுரை மூதூர் வந்து அணைந்தார் 	3837-4

 91. சேரமான் தோழரும் அச் சேரர் பிரானும் பணிப்பூண் 	3838-1
 ஆரமார் மார்பரை ஆலவாயினில் வணங்க 	3838-2
 வாரமா வந்து அணைய வழுதியார் மனக்காதல் 	3838-3
 கூர மாநகர் கோடித்து எதிர் கொண்டு கொடு புக்கார் 	3838-4

 92. தென்னவர் கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே 	3839-1
 தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார் 	3839-2
 அன்னவர்கள் உடன் கூட அனைய அவரும் கூடி 	3839-3
 மன்னு திரு ஆலவாய் மணிக் கோயில் வந்து அணைந்தார் 	3839-4

 93. திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சடையார் கோயில் வலம் 	3840-1
 வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன்தொண்டர் வழித்தொண்டு 	3840-2
 தருவாரைப் போற்றி இசைத்துத் தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ் 	3840-3
 பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார் 	3840-4

 94. படியேறு புகழ்ச் சேரர் பெருமானும் பார் மிசை வீழ்ந்து 	3841-1
 அடியேனைப் பொருளாக அளித்த திருமுகக் கருணை 	3841-2
 முடிவேது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாறக் 	3841-3
 கடியேறு கொன்றையார் முன் பரவிக் களி கூர்ந்தார் 	3841-4

 95. செம்பியனார் உடன் செழியர் தாம் பணிந்து சேரர் உடன் 	3842-1
 நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால் 	3842-2
 உம்பர்பிரான் கோயிலின் இன்று உடன் கொண்டுபோய் இருவர்க்கும் 	3842-3
 பைம்பொன் மணி மாளிகையில் குறை அறுத்தார் பஞ்சவனார் 	3842-4

 96. உளம் மகிழக் கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன் 	3843-1
 கிளர் ஒளிப் பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமி 	3843-2
 வளவனார் மீனவனார் வளம் பெருக மற்றவரோடு 	3843-3
 அளவளாவிய விருப்பா