thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

6 வம்பறா வரிவண்டுச் சருக்கம் (தொடர்ச்சி) - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் முதல்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.


திருச்சிற்றம்பலம் 
 

6 வம்பறா வரிவண்டுச் சருக்கம் (தொடர்ச்சி) 


29  ஏயர் கோன் கலிக் காம நாயனார் புராணம்
 1. நீடு வண் புகழ்ச் சோழர் நீர் நாட்டு இடை நிலவும் 	3155-1
 மாடு பொன் கொழி காவிரி வடகரைக் கீழ்பால் 	3155-2
 ஆடு பூங்கொடி மாடம் நீடிய அணி நகர் தான் 	3155-3
 பீடு தங்கிய திரு மங்கலப் பெயர்த்தால் 	3155-4

 2. இஞ்சி சூழ்வன எந்திரப் பந்தி சூழ் ஞாயில் 	3156-1
 மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம் 	3156-2
 நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல்லடிச் செம் 	3156-3
 பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு 	3156-4

 3. விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடுவீதி 	3157-1
 முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம் 	3157-2
 மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில் 	3157-3
 உழவு அறாத நல் வளத்தன ஓங்கிருங் குடிகள் 	3157-4

 4. நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்துக் 	3158-1
 காரினில் திகழ் கண்டர் தம் காதலோர் குழுமி 	3158-2
 பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர்தாள் பரவும் 	3158-3
 சீரின் மிக்கது சிவபுரி எனத் தகும் சிறப்பால் 	3158-4

 5. இன்ன வாழ் பதி அதன் இடை ஏயர் கோக் குடிதான் 	3159-1
 மன்னிய நீடிய வளவர் சேனாபதிக் குடியாம் 	3159-2
 தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய 	3159-3
 பொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினதால் 	3159-4

 6. அங்கண் மிக்க அக் குடியினில் அவதரித்து உள்ளார் 	3160-1
 கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார் 	3160-2
 தங்கள் நாயகர் அடி பணிவார் அடிச்சாந்து 	3160-3
 பொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார் 	3160-4

 7. புதிய நாள் மதிச் சடைமுடியார் திருப் புன் கூர்க் 	3161-1
 அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து 	3161-2
 நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று 	3161-3
 துதியினால் பரவித் தொழுது இன்புறு கின்றார் 	3161-4

 8. நாவலூர் மன்னர் நாதனைத் தூது விட்டு அதனுக்கு 	3162-1
 இயாவர் இச் செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்பத் 	3162-2
 தேவர் தம் பிரான் அவர் திறம் திருத்திய அதற்கு 	3162-3
 மேய வந்த அச் செயலினை விளம்புவான் உற்றேன் 	3162-4

 9. திருத் தொண்டத் தொகை அருளித் திருநாவலுர் ஆளி 	3163-1
 கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர் 	3163-2
 ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து 	3163-3
 பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள் 	3163-4

 10. தாள் ஆண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த 	3164-1
 வேளாளர் குண்டையூரக் கிழார் எனும் மே தக்கோர் 	3164-2
 வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று 	3164-3
 ஆளாகக் கொண்டவர்தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார் 	3164-4

 11. செந் நெல்லும் பொன்னன்ன செழும் பருப்பும் தீம்கரும் பின் 	3165-1
 இன்னல்ல அமுதும் முதல் எண்ணில் பெரும் வளங்கள் 	3165-2
 மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுதாக வழுவாமல் 	3165-3
 பன்னெடு நாள் பரவையார் மாளிகைக்குப் படி சமைத்தார் 	3165-4

 12.  ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற 	3166-1
 வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்கப் 	3166-2
 போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்குப் போ தாமை 	3166-3
 மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார் 	3166-4

 13.  வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க 	3167-1
 இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து 	3167-2
 துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே 	3167-3
 அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள் புரிவார் 	3167-4

 14.  ஆரூரன் தனக்கு உன்பால் நெல் தந்தோம் என்று அருளி 	3168-1
 நீரூரும் சடை முடியார் நிதிக் கோமான் தனை ஏவப் 	3168-2
 பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலைப் பிறங்கல் 	3168-3
 காரூரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது ஆல் 	3168-4

 15. அவ்விரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே 	3169-1
 எவ்வுலகின் நெல் மலைதான் இது என்றே அதிசயித்து 	3169-2
 செவ்விய பொன் மலை வளத்தார் திரு அருளின் செயல் போற்றிக் 	3169-3
 கொவ்வை வாய்ப் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார் 	3169-4

 16. நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு 	3170-1
 யாவரால் எடுக்கல் ஆகும் இச்செயல் அவர்க்குச் சொல்லப் 	3170-2
 போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளிச் செய்து 	3170-3
 தேவர் தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார் 	3170-4

 17. குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர் கொண்டு கோதில் வாய்மைத் 	3171-1
 தொண்டனார் பாதம் தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று 	3171-2
 பண்டெலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட 	3171-3
 அண்டர் தம் பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று 	3171-4

 18.  மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம் 	3172-1
 இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்னக் கேட்டு 	3172-2
 பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று 	3172-3
 இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார் 	3172-4

 19. விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி 	3173-1
 அண்ணலைத் தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி 	3173-2
 எண்ணில் சீர்ப் பரவை இல்லத்து இந் நெல்லை எடுக்க ஆளும் 	3173-3
 தண்ண்¢லவு அணிந்தார் தமே தரில் அன்றி ஒண்ணாது என்று 	3173-4

 20.  ஆளிட வேண்டிக் கொள்வார் அருகு திருப்பதியான 	3174-1
 கோளிலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி 	3174-2
 வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம் 	3174-3
 மூள வரும் காதல் உடன் முன் தொழுது பாடுதலும் 	3174-4

 21. பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி 	3175-1
 மிகப் பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறையப் 	3175-2
 புகப் பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில் 	3175-3
 நிகர்ப்பு அரியது ஒருவாக்கு நிகழ்ந்தது நின் மலன் அருளால் 	3175-4

 22. தம் பிரான் அருள் போற்றித் தரையின் மிசை விழுந்து எழுந்தே 	3176-1
 உம்பரால் உணர்வு அரிய திருப் பாதம் தொழுது ஏத்திச் 	3176-2
 செம் பொன் நேர் சடையாரைப் பிறபதியும் தொழுது போய் 	3176-3
 நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலன் ஆர் 	3176-4

 23. பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரைப் புக்கு இறைஞ்சி 	3177-1
 நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்திப் புறம் போந்து 	3177-2
 பாங்கு ஆனார் புடை சூழ்ந்து போற்றி இசைக்க பரவையார் 	3177-3
 ஓங்கு திரு மாளிகையினுள் அணைந்தார் ஆரூரர் 	3177-4

 24. கோவை வாய்ப் பரவையார் தாம் மகிழும் படி கூறி 	3178-1
 மேவி அவர் தம் மோடு மிக இன்புற்று இருந்து அதன்பின் 	3178-2
 சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திரு அருளின் 	3178-3
 ஏவலினால் அவ்விரவு பூதங்கள் மிக்கு எழுந்து 	3178-4

 25. குண்டையூர் நெல் மலையைக் குறள் பூதப் படை கவர்ந்து 	3179-1
 வண்டுலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே 	3179-2
 அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி 	3179-3
 கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன ஆல் 	3179-4

 26. அவ்விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு 	3180-1
 எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து 	3180-2
 நவ்வி மதர்த் திருநோக்கின் நங்கை புகழ்ப் பரவையார்க்கு 	3180-3
 இவ் உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார் 	3180-4

 27. நீக்க அரிய நெல் குன்று தனை நோக்கி நெறி பலவும் 	3181-1
 போக்க அரிது ஆயிடக் கண்டு மீண்டும் தம் இல் புகுவார் 	3181-2
 பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இந் நெல்லுப் 	3181-3
 போக்கும் இடம் அரிதாகும் எனப் பலவும் புகல்கின்றார் 	3181-4

 28. வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் 	3182-1
 இன்று உங்கள் மனை எல்லைக்கு உள்படும் நெல் குன்று எல்லாம் 	3182-2
 பொன் தங்கு மாளிகையில் புகப் பெய்து கொள்க என 	3182-3
 வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார் 	3182-4

 29. அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்குப் பறை அறைந்த 	3183-1
 பணியாலே மனை நிறைத்துப் பாங்கு எங்கும் நெல் கூடு 	3183-2
 அணியாமல் கட்டி நகர் களி கூரப் பரவையார் 	3183-3
 மணியாரம் புனை மார்பின் வன் தொண்டர் தமைப் பணிந்தார் 	3183-4

 30. நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறைநாள் 	3184-1
 செம் பொன் புற்று இடம் கொண்டு வீற்று இருந்த செழும் தேனைக் 	3184-2
 தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி 	3184-3
 இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார் 	3184-4

 31. குலவு புகழ்க் கோட்டிலியார் குறை யிரந்து தம் பதிக்கண் 	3185-1
 அலகில் புகழ் ஆரூரர் எழுந்து அருள அடி வணங்கி 	3185-2
 நிலவிய வன் தொண்டர் அ·து இசைந்து அதன்பின் நேர் இறைஞ்சி 	3185-3
 பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார் 	3185-4

 32. தேவர் ஒதுங்க திருத்தொண்டர் மிடையும் செல்வத் திருவாரூர் 	3186-1
 காவல் கொண்டு தனியாளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி 	3186-2
 நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணிப் 	3186-3
 பாவை பாகர் தமைப் பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார் 	3186-4

 33. மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி 	3187-1
 ஞாலம் நிகழ் கோட் புலியார் தம் நாட்டியத்தான் குடி நண்ண 	3187-2
 ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சிக் 	3187-3
 கோல மணி மாளிகையின் கண் ஆர்வம் பெருகக்கொடு புக்கார் 	3187-4

 34. தூய மணிப் பொன் தவிகில் எழுந்து அருளி இருக்கத் தூ நீரால் 	3188-1
 சேய மலர்ச் சேவடி விளக்கித் தெளித்துக் கொண்ட செழும் புனலால் 	3188-2
 மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப 	3188-3
 ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் 	3188-4

 35. பூந்தண் பனிநீர் கொடு சமைத்த பொருவு இல் விரைச்சந்தனக் கலவை 	3189-1
 வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறைமான் மதச் சேறு 	3189-2
 தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன் 	3189-3
 ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்ணில் மணிப் பாசனத்து ஏந்தி 	3189-4

 36. வேறு வேறு திருப் பள்ளித் தாமப் பணிகள் மிக எடுத்து 	3190-1
 மாறிலாத மணித்திரு ஆபரண வருக்கம் பல தாங்கி 	3190-2
 ஈறில்விதத்துப் பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி 	3190-3
 ஆறு புணைந்தார் அடித் தொண்டர் அளவு இல் பூசை கொள அளித்தார் 	3190-4

 37. செங்கோல் அரசன் அருள் உரிமைச் சேனாபதி ஆம் கோட்புலியார் 	3191-1
 நங்கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால் 	3191-2
 தங்கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சித்தலை சிறந்த 	3191-3
 பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவா 	3191-4

 38.  ஆன விருப்பின் மற்று அவர் தாம் அருமையால் பெற்று எடுத்த 	3192-1
 தேனார் கோதைச் சிங்கடியார் தமையும் அவர்பின் திரு உயிர்த்த 	3192-2
 மானார் நோக்கின் வனப்பகையார் தமையும் கொணர்ந்து வன் தொண்டர் 	3192-3
 தூ நாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமும் தொழுது சொல்லுவார் 	3192-4

 39. அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆகக் கொண்டு அருளிக் 	3193-1
 கடிசேர் மலர்த் தாள் தொழுது உய்யக் கருணை அளிக்க வேண்டும் எனத் 	3193-2
 தொடி சேர் தளிக்கை இவர் எனக்குத் தூய மக்கள் எனக் கொண்டப் 	3193-3
 படியே மகண்மை யாக் கொண்டார் பரவையார் தம் கொழு நனார் 	3193-4

 40. கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் வைத்து கொண்டு இருந்து 	3194-1
 காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உட்கசிவால் அணைத்து உச்சி 	3194-2
 மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி 	3194-3
 நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பிதம்பிரான் தோழர் 	3194-4

 41. வென்றி வெள்ளேறு உயர்த்து அருளும் விமலர் திருக்கோபுரம் இறைஞ்சி 	3195-1
 ஒன்றும் உள்ளத் தொடும் அன்பால் உச்சிகுவித்த கரத்தொடும் 	3195-2
 சென்று புக்குப் பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்துக் 	3195-3
 கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை 	3195-4

 42. சிறப்பித்து அருளும் திருக்கடைக் காப்பு அதன் இடைச் சிங்கடியாரைப் 	3196-1
 பிறப்பித்து எடுத்த பிதாவாகத் தம்மை நினைத்த பெற்றியினால் 	3196-2
 மறப்பில் வகைச் சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி 	3196-3
 நிறப் பொற்பு உடைய இசைபாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார் 	3196-4

 43. அங்கு நின்றும் எழுந்து அருளி அளவில் அன்பின் உள் மகிழச் 	3197-1
 செங்கண் நுதலார் மேவு திருவலிவலத்தைச் சேர்ந்து இறைஞ்சி 	3197-2
 மங்கை பாகர் தம்மைப் பதிகம் வலிவலத்துக் கண்டேன் என்று 	3197-3
 எங்கும் நிகழ்ந்த தமிழ் மாலை எடுத்துத் தொடுத்த இசைபுனைவார் 	3197-4

 44.  நன்று மகிழும் சம்பந்தர் நாவுக் கரசர் பாட்டு உகந்தீர் 	3198-1
 என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்து அருளி 	3198-2
 மன்றின் இடையே நடம் புரிவார் மருவு பெருமைத் திருவாரூர் 	3198-3
 சென்று குறுகிப் பூங்கோயில் பெருமான் செம் பொன் கழல் பணிந்து 	3198-4

 45. இறைஞ்சிப் போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்து அருளி 	3199-1
 நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வத் திருவாரூர்ப் 	3199-2
 புறம்பு நணிய கோயில் களும் பணிந்து போற்றிப் புற்று இடமாய் 	3199-3
 உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார் 	3199-4

 46. செறி புன் சடையார் திருவாரூர்ப் திருப் பங்குனி உத்தரத் திருநாள் 	3200-1
 குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவறுக்க 	3200-2
 நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர் 	3200-3
 இறைவர் பாதம் பணிய எழுந்து அருளிச் சென்று அங்கு எய்தினார் 	3200-4

 47. சென்று விரும்பித் திருப்புகலூர் தேவர் பெருமான் கோயில் மணி 	3201-1
 முன்றில் பணிந்து வலம் கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சித் 	3201-2
 தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து 	3201-3
 நின்று பதிக இசைபாடி நினைந்த கருத்து நிகழ் விப்பார் 	3201-4

 48. சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்னம் அங்கு ஒழிய 	3202-1
 வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர் 	3202-2
 அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப 	3202-3
 மறி வண்கையார் அருளேயோ மலர்கண் துயில் வந்து எய்தியதால் 	3202-4

 49. துயில் வந்து எய்தத் தம்பிரான் தோழர் அங்குத் திருப்பணிக்குப் 	3203-1
 பயிலும் சுடுமண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணித் தேன் 	3203-2
 அயிலும் சுரும்பார் மலர்ச் சிகழி முடிமேல் அணியா உத்தரிய 	3203-3
 வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்துப் பள்ளி மேவினார் 	3203-4

 50. சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர்க் கண் 	3204-1
 பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் 	3204-2
 வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்வே விரிசுடர்ச் செம் 	3204-3
 பொற்றிண் கல்லாயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி 	3204-4

 51. தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணைக் கைக் கமல முகை தலை மேல் 	3205-1
 கொண்டு கோயில் உள் புக்குக் குறிப்பில் அடங்காப் பேர் அன்பு 	3205-2
 மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழிமாலை 	3205-3
 பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து 	3205-4

 52. பதிகம் பாடித் திருக் கடைக் காப் பணிந்து பரவிப் புறம் போந்தே 	3206-1
 எதிரில் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்து அருளி 	3206-2
 நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும் 	3206-3
 பொதியும் சடையார் திருப் பனையூர் புகுவார் புரிநூல் மணி மார்பர் 	3206-4

 53. செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக் கூத்தொடும் காட்சி 	3207-1
 எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி 	3207-2
 ஐயர் தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று 	3207-3
 உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார் 	3207-4

 54. வளம் மல்கிய சீர்ப் பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்து அருளி 	3208-1
 அளவில் செம்பொன் இட்டிகைகள் ஆள்மேல் நெருங்கி அணி ஆரூர்த் 	3208-2
 தளவ முறுவல் பரவையார் தம் மாளிகையில் புகத் தாமும் 	3208-3
 உளமன்னிய தம் பெருமானார் தம்மை வணங்கி உவந்து அணைந்தார் 	3208-4

 55. வந்து பரவைப் பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள் 	3209-1
 அந்தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சிச் 	3209-2
 சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வப் பெருமாள் திருவாரூர் 	3209-3
 முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப் பாடியார் தம் காவலனார் 	3209-4

 56. பல நாள் அமர்வார் பரமர் திரு அருளால் அங்கு நின்றும் போய்ச் 	3210-1
 சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்துச் சென்று எய்தி 	3210-2
 வலம் மாக வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார் 	3210-3
 தலமார்கின்ற தண் இயல் வெம்மை யினான் என்னும் தமிழ் மாலை 	3210-4

 57. பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழி மிழலையினில் 	3211-1
 நீடு மறையால் மேம் பட்ட அந்தண் ஆளர் நிறைந்து ஈண்டி 	3211-2
 நாடு மகிழ அவ் அளவு நடைக் காவணம் பாவாடைஉடன் 	3211-3
 மாடு கதலி பூகம் நிரை மல்க மணித் தோரணம் நிரைத்து 	3211-4

 58. வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு புக்கார் மற்றவரும் 	3212-1
 சிந்தை மலர்ந்து திரு வீழி மிழலை இறைஞ்சிச் சேண் விசும்பின் 	3212-2
 முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில் தன்னை முன் வணங்கி 	3212-3
 பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார் 	3212-4

 59. படங்கொள் அரவில் துயில் வோனும் பதுமத்தோனும் பரவிய 	3213-1
 விடங்கன் விண்ணேர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி 	3213-2
 அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் எனத் 	3213-3
 தடம்கொள் செஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்குச் சாரும் நாள் 	3213-4

 60. வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்பால் 	3214-1
 தேசு மிக்க திருஅருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள் 	3214-2
 பாசம் அறுத்து ஆள் கொள்ளும் தாள் பணிந்து பொருவனார் என்னும் 	3214-3
 மாசில் பதிகம் பாடி அமர்ந்து அரிசில் கரைப் புத்தூர் அணைந்தார் 	3214-4

 61. செழு நீர் நறையூர் நிலவு திருச் சித்தீச் சரமும் பணிந்து ஏத்தி 	3215-1
 விழுநீர் மையினில் பெரும் தொண்டர் விருப்பின் ஓடும் எதிர்கொள்ள 	3215-2
 மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திருப் புத்தூர் வணங்கி 	3215-3
 தொழு நீர் மையினில் துதித்து ஏத்தித் தொண்டர் சூழ உறையும் நாள் 	3215-4

 62. புனிதனார் முன் புகழ்த் துணையார்க்கு அருளும் திறமும் போற்றிசைத்து 	3216-1
 முனிவர் போற்ற எழுந்து அருளி மூரி வெள்ளக் கங்கையினில் 	3216-2
 பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து 	3216-3
 இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவா வடு துறையில் 	3216-4

 63. விளங்கும் திருவாவடு துறையில் மேயார் கோயில் புடைவலம் கொண்டு 	3217-1
 உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள்புக்கு இறைஞ்சி ஏத்துவார் 	3217-2
 வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து செம்கணான் 	3217-3
 தளம் கொள் பிறப்பும் சிறப்பித்துத் தமிழ் சொல் மாலை சாத்தினார் 	3217-4

 64. சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பருடன் கூடப் 	3218-1
 பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்ணோர் பாகத்து அண்ணலார் 	3218-2
 தீர்தப் பொன்னித் தென் கரைமேல் திகழும் பதிகள் பல பணிந்து 	3218-3
 மூர்த்தியார் தம் இடை மருதை அடைந்தார் முனைப் பாடித் தலைவர் 	3218-4

 65. மன்னு மருதின் அமர்ந்த வரை வணங்கி மதுரச் சொல் மலர்கள் 	3219-1
 பன்னிப் புனைந்து பணிந்து ஏத்திப் பரவிப் போந்து தொண்டர் உடன் 	3219-2
 அந் நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை 	3219-3
 முன்னி புக்கு வலம் கொண்டு முதல்வர் திருத்தாள் வணங்கினார் 	3219-4

 66. பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடிப் பெயர்ந்து நிறை 	3220-1
 திருவின் மலியும் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல் வணங்கி 	3220-2
 உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து 	3220-3
 மருவும் பதிகள் பிற பணிந்து கலைய நல்லூர் மருங்கு அணைந்தார் 	3220-4

 67. செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் இறைவர் சேவடிக்கீழ் 	3221-1
 மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவித் தொழுது எழுவார் 	3221-2
 கொம்மை மருவு குரும்பைமுலை உமையாள் என்னும் திருப்பதிகம் 	3221-3
 மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச் சிறப்பித்து இசையின் விளம்பினார் 	3221-4

 68. அங்கு நின்று திருக் குடமூக்கு அணைந்து பணிந்து பாடிப்போய் 	3222-1
 மங்கைப் பாகர் வலம் சுழியை மருவிப் பெருகும் அன்பு உருகத் 	3222-2
 தங்கு காதல் உடன் வணங்கித் தமிழால் பரசி அரசினுக்குத் 	3222-3
 திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரைச் சென்று அணைந்தார் 	3222-4

 69. நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி 	3223-1
 எல்லாம் இறைஞ்சி ஏத்திப் போந்து இசையால் பரவும் தம் உடைய 	3223-2
 சொல்லூத்¢யமா அணிந்தவர் தம் சோற்றுத் துறையின் மருங்கு எய்தி 	3223-3
 அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம் கொண்டு அடி பணிவார் 	3223-4

 70.  அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளிக் 	3224-1
 கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூரப் பரவிய பின் 	3224-2
 கெழு நீர்மையினில் அருள் பெற்றுப் போந்து பரவையார் கேள்வர் 	3224-3
 முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார் 	3224-4

 71. தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை 	3225-1
 மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சிச் 	3225-2
 சேவில் வருவார் திரு ஆலம் பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு 	3225-3
 பாவு சயனத்து அமர்ந் அருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண் 	3225-4

 72.  மழபாடி இனில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று 	3226-1
 குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருளக் குறித்து உணர்ந்து 	3226-2
 நிழலார் சோலைக் கரைப் பொன்னி வடபால் ஏறி நெடுமாடம் 	3226-3
 அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர் 	3226-4

 73. அணைந்து திருக் கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து 	3227-1
 பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணைக் 	3227-2
 குணம் கொள் அருளின் திறம் போற்றிக் கொண்ட புளகத்துடன் உருகிப் 	3227-3
 புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து 	3227-4

 74.  அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி 	3228-1
 தன்னேர் இல்லாப் பதிக மலர் சாத்தித் தொழுது புறம்பு அணைந்து 	3228-2
 மன்னும் பதியில் சில நாள் கள் வைகித் தொண்டர் உடன் மகிழ்ந்து 	3228-3
 பொன்னிக் கரையின் இருமருங்கும் பணிந்து மேல்பால் போதுவார் 	3228-4

 75. செய்ய சடையார் திரு ஆனைக் காவில் அணைந்து திருத் தொண்டர் 	3229-1
 எய்த முன் வந்து எதிர் கொள்ள இறைஞ்சிக் கோயில் உள் புகுந்தே 	3229-2
 ஐயர் கமலச் சேவடிக் கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து 	3229-3
 மெய்யும் முகிழ்ப்பக் கண் பொழிநீர் வெள்ளம் பரப்ப விம்முவார் 	3229-4

 76.  மறைகளாய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம் 	3230-1
 நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர் தமை நோக்கி 	3230-2
 இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் 	3230-3
 உறையூர்ச் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி 	3230-4

 77. வளவர் பெருமான் மணியாரம் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக் 	3231-1
 கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவிப் போக ஏதம் உற 	3231-2
 அளவில் திருமஞ்சனக் குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளித் 	3231-3
 தளரும் அவனுக்கு அருள் புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார் 	3231-4

 78. சாற்றி அங்குத் தங்கு நாள் தயங்கும் பவளத் திருமேனி 	3232-1
 நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால் 	3232-2
 போற்றி அங்கு நின்றும் போய்ப் பொருவில் அன்பர் மருவிய தொண்டு 	3232-3
 ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார் 	3232-4

 79. சென்று திருக் கோபுரம் இறைஞ்சித் தேவர் மலிந்த திருந்து மணி 	3233-1
 முன்றில் வலம் கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி 	3233-2
 நன்று பெருகும் பொருள் காதல் நயப்புப் பெருக நாதர் எதிர் 	3233-3
 நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று 	3233-4

 80. அன்பு நீங்கா அச்சம் உடன் திருத் தோழமைப் பணியால் 	3234-1
 பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கிப் புறம்பு ஒருபால் 	3234-2
 முன்பு நின்ற திருத் தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார்போல் 	3234-3
 என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார் 	3234-4

 81. நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்து இடைப் புலம் கெழும் பிறப்பால் 	3235-1
 உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி 3235-2
 எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார் 	3235-3
 வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர் 	3235-4

 82. இவ் வகை பரவித் திருக்கடைக் காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப 	3236-1
 மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழுநிதிக் குவை அளித்து அருள 	3236-2
 மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அப்பதி இடை வைகி 	3236-3
 எவ் வகை மருங்கும் இறைவர் தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள் 	3236-4

 83. அப்பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும் 	3237-1
 எப்பெயர்ப் பதியும் இருமருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்திப் 	3237-2
 பைப் பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப் பாங்கு அமர் புடை வலம் கொண்டு 	3237-3
 துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரைக் கண்டார் 	3237-4

 84. கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக் கை குவித்து இறைஞ்சி 	3238-1
 வண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள் 	3238-2
 கொண்டது ஓர் மயலல் வினவு கூற்று ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று 	3238-3
 அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார் 	3238-4

 85. பரவி அப் பதிகத் திருக் கடைக் கப்புச் சாத்தி முன் பணிந்து அருள் பெற்றுக் 	3239-1
 கரவில் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி 3239-2
 விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கிக் 	3239-3
 குரவலர் சோலை அணி திருப் பாண்டிக் கொடு முடி அணைந்தனர் கொங்கில் 	3239-4

 86. கொங்கினில் பொன்னித் தென் கரைக்கறையூர்க் கொடு முடிக் கோயில் முன் குறுகிச் 3240-1
 சங்க வெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து 	3240-2
 பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி 	3240-3
 இங்கு இவர் தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய்க் குறிப்பினில் எடுப்ப 	3240-4

 87.  அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு எழுத்து அறிய எப் பொழுதும் 	3241-1
 எண்ணிய நாவே இன் சுவை பெருக இடை அறாது இயம்பும் என்றும் இதனைத் 	3241-2
 திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப் பற்றுஇலேன் எனச் செழும் தமிழால் 	3241-3
 நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாயத் திருப் பதிகம் 	3241-4

 88. உலகு எலாம் உய்ய உறுதி ஆம்பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை 	3242-1
 நிலவிய சிந்தை உடன் திரு அருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள் 	3242-2
 பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றிப் போந்து தண் பனி மலர்ப் படப்பைக் 	3242-3
 குலவும் அக் கொங்கில் காஞ்சிவாய்ப் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால் 	3242-4

 89. அத் திருப்பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து 	3243-1
 மெய்த்தவர் சூழ வலம் கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க 	3243-2
 நித்தனார் தில்லை மன்றுள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்டக் 	3243-3
 கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக் கலுழி நீர் பொழிதரக் கண்டார் 	3243-4

 90. காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை இல் அன்பு என்பினை உருக்கப் 3244-1
 பூண்ட ஐம் புலனில் புலப் படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்கத் 	3244-2
 தாண்டவம் புரியும் தம் பிரானாரைத் தலைப்படக் கிடைத்த பின் சைவ 	3244-3
 ஆண் தகை யாருக்கு அடுத்த அந் நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார் 3244-4

 91. அந் நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற அன்பு அனார் இன்ப வெள்ளத்து 	3245-1
 மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதன் இடை மருவி 	3245-2
 பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிடப் பெற்றால் 	3245-3
 என் இனிப் புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்து அருளுவதற்கு எழுவார் 	3245-4

 92.  ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அருவரைச் சுரங்களும் பிறவும் 	3246-1
 பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதிபல பணிந்து 	3246-2
 மேய வண் தமிழால் விருப் பொடும் பரவி வெஞ்சமாக் கூடலும் பணிந்து 	3246-3
 சேயிடை கழியப் போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடிமலையில் 	3246-4

 93. வீடு தரும் இக் கல் குடியில் விழுமியாரைப் பணிந்து இறைஞ்சி 	3247-1
 நீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தை உடன் பாடிப் 	3247-2
 பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சி 	3247-3
 தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை மேல் சென்று அணைந்தார் 	3247-4

 94. செம் பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில் 	3248-1
 நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ் வார்க்கு அருள் கூட 	3248-2
 உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார் 	3248-3
 இம்பர் வாழ இன்னம்பர் நகரைச் சேர எய்தினார் 	3248-4

 95.  ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி 	3249-1
 ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார் 	3249-2
 போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்றச் 	3249-3
 சேரும் உள்ளம் மிக்குஎழ மெய்ப் பதிகம் பாடிச் சென்றார் 	3249-4

 96.  அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில் 	3250-1
 பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழப் போதும் என்று 	3250-2
 எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புணைந்து உடன் எய்தினார் 	3250-3
 திங்கள் சூடிய செல்வர் மேவும் திருப் புறம் பயம் சேரவே 	3250-4

 97. அப் பதிக் கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய் நல் ஊரினில் 	3251-1
 ஒப்பரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர் 	3251-2
 இப்பதிக் கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர் கொள்ளவே 	3251-3
 முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார் 	3251-4

 98. நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடுள்ளணைந்து 	3252-1
 ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று 	3252-2
 ஏடு உலாம் மலர் தூவி எட்டினெடு ஐந்தும் ஆகும் உறுப்பினால் 	3252-3
 பீடு நீடு நிலத்தின் மேல் பெருகப் பணிந்து வணங்கினார் 	3252-4

 99. அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிகப் பொழிந்து எழும் அன்பினால் 	3253-1
 பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து 	3253-2
 எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில் 	3253-3
 தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் அன்பரோடு எய்தினார் 	3253-4

 100. வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை 	3254-1
 தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னித் 	3254-2
 தம்பிரான் அமர்ந்த தானம் பல பல சார்ந்து தாழ்ந்து 	3254-3
 கொம்பனார் ஆடல் நீடு கூடலை யாற்றூர் சார 	3254-4

 101. செப்பரும் பதியில் சேரார் திருமுது குன்றை நோக்கி 	3255-1
 ஒப்பரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு 	3255-2
 மெய்ப் பரம் பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார் 	3255-3
 முப்புரி நூலும் தாங்கி நம்பி ஆரூரர் முன்பு 	3255-4

 102. நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய்த் தாழ்வார் 	3256-1
 இன்றி யாம் முது குன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன 	3256-2
 குன்ற வில்லாளி யாரும் கூடலை யாற்றூர் ஏறச் 	3256-3
 சென்றது இவ் வழிதான் என்று செல்வழித் துணையாய்ச் செல்ல 	3256-4

 103. கண்டவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார் 	3257-1
 வண்டலர் கொன்றையாரை வடிவுடை மழு என்று ஏத்தி 	3257-2
 அண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று 	3257-3
 கொண்டு எழும் விருப்பினேடும் கூடலை யாற்றூர் புக்கார் 	3257-4

 104. கூடலை ஆற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்தம் 	3258-1
 பீடுயர் கோயில் புக்குப் பெருகிய ஆர்வம் பொங்க 	3258-2
 ஆடகப் பொதுவில் ஆடும் அறைகழல் வணங்கிப் போற்றி 	3258-3
 நீடு அருள் பெற்றுப் போந்து திரு முது குன்றில் நேர்ந்தார் 	3258-4

 105. தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில் 	3259-1
 புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து 	3259-2
 நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்மாலைத் 	3259-3
 தொடை நிகழ் பதிகம் பாடித் தொழுது கை சுமந்து நின்று 	3259-4

 106. நாதர் பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம் 	3260-1
 கோதறு மனத்துள் கொண்ட குறிப் பொடும் பரவும் போது 	3260-2
 தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ 	3260-3
 வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண் பொடியும் பாட 	3260-4

 107. பனி மதிச் சடையார் தாமும் பன்னிரண்டாயிரம் பொன் 	3261-1
 நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி 	3261-2
 தனி வரும் மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று 	3261-3
 கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார் 	3261-4

 108.  அருளும் இக் கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் 	3262-1
 மருளுற வியப்ப அங்கே வரப் பெற வேண்டும் என்னத் 	3262-2
 தெருளுற எழுந்த வாக்கால் செழு மணி முத்தாற்றில் இட்டிப் 	3262-3
 பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில் போய்க் கொள்க என்றார்3262-4

 109. என்று தம் பிரானார் இன் அருள் பெற்ற பின்னர் 	3263-1
 வன் தொண்டர் மச்சம் வெட்டிக் கைக் கொண்டு மணி முத்து ஆற்றில் 	3263-2
 பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டுப் போது கின்றார் 	3263-3
 அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று 	3263-4

 110. மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார் 	3264-1
 ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில் 	3264-2
 காவியங் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று 	3264-3
 வாவி சூழ் தில்லை மூதூர் வழிக் கொள்வான் வணங்கிப் போந்தார் 	3264-4

 111. மாடுள பதிகள் சென்று வணங்கிப் போய் மங்கை பாகர் 	3265-1
 நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்தக் கூத்தர் 	3265-2
 ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்குச் 	3265-3
 சேடுயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார் 	3265-4

 112. பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும் 	3266-1
 நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர் 	3266-2
 மற்றதன் முன்பு மண்மேல் வணங்கி உள் புகுந்து பைம் பொன் 	3266-3
 சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலைமேல் கொள்வார் 	3266-4

 113.  ஆடிய திருமுன்பான அம் பொனின் கோபுரத்தின் 	3267-1
 ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில் 	3267-2
 நாடகம் செய்யதாளை நண்ணுற உள் நிறைந்து 	3267-3
 நீடும் ஆனந்த வெள்ளக் கண்கள் நீர் நிறைந்து பாய 	3267-4

 114. பரவுவாய் குளறிக் காதில் படி திருப் படியைத் தாழ்ந்து 	3268-1
 விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை 	3268-2
 உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தரப் பெருகி நெஞ்சில் 	3268-3
 கரவு இலாத அவரைக் கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள 	3268-4

 115.  மடித்து ஆடும் அடிமைக்கண் என்று எடுத்து மன் உயிர் கட்கு அருளும் ஆற்றல் 3269-1
 அடுத்து ஆற்று நல் நெறிக்கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம் 	3269-2
 தடுப்பானைப் பேரூரில் கண்ட நிலை சிறப்பித்துத் தனிக் கூத்து என்றும் 	3269-3
 நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி 	3269-4

 116. மீளாத அருள் பெற்றுப் புறம் போந்து திரு வீதி மேவித் தாழ்ந்தே 	3270-1
 ஆளான வன் தொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகி 	3270-2
 மாளாத பேர் அன்பால் பொன்பதியை வணங்கிப் போய் மறலி வீழத் 	3270-3
 தாள் ஆண்மை கொண்டவர் தம் கருப்பறியலூர் வணங்கிச் சென்று சார்ந்தார் 	3270-4

 117. கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் நண்ணிக் கோபுரத்தைத் தொழுது புகுந்து அன்பர் சூழ3271-1
 ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலாப் பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்தப் 3271-2
 போற்றிசைத்துப் புறத்து அணைந்தப் பதியில் வைகிப் புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி 	3271-3
 சாற்றிய மெய்த் திருப் பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ் மாலை புனைந்து ஆங்குச் சாரும் நாளில் 3271-4

 118. கண் நுதலார் விரும்பு கருப் பறியலூரைக் கை தொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும் 3272-1
 மண்ணி வளம் படிக் கரையை நண்ணி அங்கு மாது ஒரு பாகத்தவர் தாள் வணங்கிப் போற்றி 3272-2
 எண்ணில் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ் கொளி புத்தூர் எய்தாது 3272-3
 புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்துப் போற்றி 	3272-4

 119. திருப் பதிகம் பாடியே சென்று அங்கு எய்தித் தேவர் பெருமானார் தம் கோயில் வாயில் 3273-1
 உருப் பொலியும் மயிர்ப் புளகம் விரவத் தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் 	3273-2
 பொருப்பரையன் மடப் பாவை இடப் பாலானைப் போற்றி இசைத்துப் புறம் போந்து தங்கிப் பூ மென் 	3273-3
 கருப்பு வயல் வாழ் கொளி புத்தூரை நீங்கிக் கான் நாட்டு முள்ளூரில் கலந்த போது 	3273-4

 120. கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது கண் நுதலார் எதிர் காட்சி கொடுப்பக் கண்டு 3274-1
 தூ நாண் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்ய துணைப் பாத மலர் கண்டு தொழுதேன் என்று 	3274-2
 வான் ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித் 3274-3
 தேன் ஆரும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த திருஎதிர் கொள் பாடியினை எய்தச் செல்வார் 3274-4

 121. எத்திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர் கொள் பாடியினை அடைவோம் என்னும் 	3275-1
 சித்த நிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி 3275-2
 அத்தர் தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்றுத் திரு வேள்விக் குடியில் எய்தி 3275-3
 முத்தி தரும் பெருமானைத் துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் 3275-4

 122. காட்டு நல் வேள் விக் கோலம் கருத்துற வணங்கிக் காதல் 	3276-1
 நாட்டிய உள்ளத்தோடு நம்பி ஆரூரர் போற்றி 	3276-2
 ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு நின்று ஏகி அன்பு 	3276-3
 பூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சிப் போந்து 	3276-4

 123. எஞ்சாத பேர் அன்பில் திருத் தொண்டர் உடன் எய்தி 	3277-1
 நஞ்சாரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி 	3277-2
 மஞ்சாரும் பொழில் உடுத்த மலர்த் தடங்கள் புடை சூழும் 	3277-3
 செஞ்சாலி வயல் மருதத் திருவாரூர் சென்று அடைந்தார் 	3277-4

 124. செல்வமலி திருவாரூர்த் தேவரொது முனிவர்களும் 	3278-1
 மல்கு திருக் கோபுரத்து வந்து இறைஞ்சி உள்புக்கு அங்கு 	3278-2
 எல்லை இலாக் காதல் மிக எடுத்த மலர்க் கை குவித்துப் 	3278-3
 பல்கு திருத் தொண்டர் உடன் பரமர் திருமுன் அணைந்தார் 	3278-4

 125. மூவாத முதல் ஆகி நடுவாகி முடியாத 	3279-1
 சேவாரும் கொடியாரைத் திரு மூலட்டானத்துள் 	3279-2
 ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சிப் புறம் போந்து 	3279-3
 தாவாத புகழ்ப் பரவையார் திரு மாளிகை சார்ந்தார் 	3279-4

 126. பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்றப் 	3280-1
 பங்கயக் கண் செங்கனிவாய்ப் பரவையார் அடி வணங்கி 	3280-2
 எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து 	3280-3
 மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள் 	3280-4

 127. நாயனார் முது குன்றர் நமக்கு அளித்த நல் நிதியம் 	3281-1
 தூய மணி முத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர் 	3281-2
 கோயிலின் மாளிகை மேல் பாற்குளத்தில் அவர் அருளாலே 	3281-3
 போய் எடுத்துக்கொடு போதப் போதுவாய் எனப்புகல 	3281-4

 128.  என்ன அதிசயம் இது தான் என் சொன்னவாறு என்று 	3282-1
 மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார் 	3282-2
 நன் நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில் 	3282-3
 பொன் அடைய எடுத்து உனக்குத் தருவது பொய்யாது என்று 	3282-4

 129.  ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன் 	3283-1
 பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரைப் புக்கு இறைஞ்சி 	3283-2
 ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலைப் 	3283-3
 பாங்கு திருக் குளத்து அணைந்தார் பரவையார் தனித்துணைவர் 	3283-4

 130. மற்றதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி 	3284-1
 முற்று இழையார் தமை நிறுத்தி முனைப் பாடித் திருநாடர் 	3284-2
 கற்றை வார் சடையாரைக் கை தொழுது குளத்தில் இழிந்து 	3284-3
 அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்குத் தடவுதலும் 	3284-4

 131. நீற்றழகர் பாட்டு உவந்து திரு விளையாட்டினில் நின்று 	3285-1
 மாற்றுறு செம் பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள 	3285-2
 ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ 	3285-3
 சாற்றும் எனக் கோல் தொடியார் மொழிந்து அருளத் தனித் தொண்டர் 	3285-4

 132.  முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூங்குழல் பரவை 	3286-1
 தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என 	3286-2
 மின் செய்த நூல் மார்பின் வேதியர் தாம் முது குன்றில் 	3286-3
 பொன் செய்த மேனி இனீர் எனப் பதிகம் போற்றிசைத்து 	3286-4

 133.  முட்ட இமை யோர் அறிய முது குன்றில் தந்த பொருள் 	3287-1
 சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம் 	3287-2
 இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு 	3287-3
 எட்டளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார் 	3287-4

 134.  ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும் 	3288-1
 காத்தாடும் அம்பலத்துக் கண்ணுளனாம் கண் நுதலைக் 	3288-2
 கூத்தாதந்து அருள்வாய் இக் கோமளத்தின் முன் என்று 	3288-3
 நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும் 	3288-4

 135. கொந்து அவிழ் பூங்கொன்றை முடிக் கூத்தனார் திரு அருளால் 	3289-1
 வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற 	3289-2
 அந்தரத்து மலர் மாரி பொழிந்து இழிந்தது அவனியுளோர் 	3289-3
 இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் எனத் தொழுவார் 	3289-4

 136. ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து 	3290-1
 மூலம் எனக் கொடு போந்த ஆணியின் முன் உரைப் பிக்க 	3290-2
 நீல மிடற்றவர் அருளால் உரை தாழப் பின்னும் நெடு 	3290-3
 மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன்தொண்டர் 	3290-4

 137. மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும் 	3291-1
 பாட்டுவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும் 	3291-2
 ஓட்டறு செம் பொன் ஓக்க ஒரு மாவும் குறையாமல் 	3291-3
 காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார் 	3291-4

 138. கரை ஏறிப் பரவையார் உடன் கனக ஆனது எலாம் 	3292-1
 நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கித் 	3292-2
 திரை யேறும் புனல் சடிலத்திரு மூலத் தானத்தார் 	3292-3
 விரை யேறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில் 	3292-4

 139. வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து 	3293-1
 அந்தமிலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்பச் 	3293-2
 சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சேயிழையாருடன் அமர்ந்தார் 	3293-3
 கந்த மலி மலர்ச் சோலை நவலர் தம் காவலனார் 	3293-4

 140. அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்தருளும் பரம் பொருளைப் 	3294-1
 பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப் பதிகம் 	3294-2
 தணியாத ஆனந்தம் தலை சிறப்பத் தொண்டர் உடன் 	3294-3
 துணிவு ஆய பொருள் வினவித் தொழுது ஆடிப் பாடுவார் 	3294-4

 141. பண்ணிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி 	3295-1
 உண்ணிறையும் மனக் களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப 	3295-2
 கண்ணிறையும் புனல் பொழியக் கரை இகந்த ஆனந்தம் 	3295-3
 எண்ணிறைந்த படி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார் 	3295-4

 142. இன்புற்று அங்கு அமர்நாளில் ஈறில் அரு மறை பரவும் 	3296-1
 வன்புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே 	3296-2
 அன்புற்ற காதல் உடன் அளவு இறந்த பிறபதியும் 	3296-3
 பொன்புற்கு என்றிட ஒளிரும் சடையாரைத் தொழப் போவார் 	3296-4

 143. பரிசனமும் உடன் போதப் பாங்கு அமைந்த பதிகள் தொறும் 	3297-1
 கரியுரிவை புனைந்தார் தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தித் 	3297-2
 துரிசறு நல் பெரும் தொண்டர் நள்ளாறு தொழுவதற்குப் 	3297-3
 புரிவுறு மெய்த் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு அணைந்தார் 	3297-4

 144. விண் தடவு கோபுரத்தைப் பணிந்து கரம் மேல் குவித்துக் 	3298-1
 கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து 	3298-2
 மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர் 	3298-3
 புண்டரிகச் சேவடிக் கீழ் பொருந்த நிலம் மிசைப் பணிந்தார் 	3298-4

 145. அங்கண்ணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய் 	3299-1
 மங்குல் அணி மணி மாடத் திருக் கடவூர் வந்து எய்தித் 	3299-2
 திங்கள் வளர் முடியார் தம் திருமயானமும் பணிந்து 	3299-3
 பொங்கும் இசைப் பதிகம் மருவார் கொன்றை எனப் போற்றி 	3299-4

 146. திரு வீரட்டானத்துத் தேவர் பிரான் சினக் கூற்றின் 	3300-1
 பொரு வீரந்தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி 	3300-2
 மருஈரத் தமிழ் மலை புனைந்து ஏத்தி மலை வளத்த 	3300-3
 பெரு வீரர் வலம் புரத்துப் பெருகு ஆர்வத் தொடும் சென்றார் 	3300-4

 147. வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி 	3301-1
 உரை ஓசைப் பதிகம் எனக்கு இனி ஓதிப் போய்ச் சங்கம் 	3301-2
 நிரையோடு துமித் தூப மணித் தீபம் நித்திலப் பூம் 	3301-3
 திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார் 	3301-4

 148. தேவர் பெருமான் தன்னைத் திருச்சாய்க்காட்டினில் பணிந்து 	3302-1
 பாவலர் செம் தமிழ் மாலைத் திருப் பதிகம் பாடிப்போய் 	3302-2
 மேவலர் தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி 	3302-3
 நாவலர் காவலர் அடைந்தார் நனி பள்ளித் திரு நகரில் 	3302-4

 149. நனிபள்ளி அமர்ந்தபிரான் கழல் வணங்கி நல் தமிழின் 	3303-1
 புனித நறும் தொடை புணைந்து திருச் செம்பொன் பள்ளி முதல் 	3303-2
 பனி மதி சேர் சடையார் தம் பதிபலவும் பணிந்து போய்த் 	3303-3
 தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார் 	3303-4

 150. நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி 	3304-1
 ஒன்றிய அன்பு உள் உருகப் பாடுவார் உடைய அரசு 	3304-2
 என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழ் எழுநூறும் 	3304-3
 அன்று சிறப்பித்து அம் சொல் திருப் பதிகம் அருள் செய்தார் 	3304-4

 151. அப்பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில் 	3305-1
 செப்ப அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில் 	3305-2
 ஒப்ப அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார் 	3305-3
 மெய்ப் பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார் 	3305-4

 152.  மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது 	3306-1
 விடல் ஆமே எனும் காதல் விருப்பு உறும் அத்திருப்பதிகம் 	3306-2
 அடல் ஆர் சூலப் படையார் தமைப் பாடி அடிவணங்கி 	3306-3
 உடல் ஆரும் மயிர்ப் புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார் 	3306-4

 153. அம் கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன் கூர் அணைந்து இறைஞ்சிக் 	3307-1
 கொங்கு அலரும் மலர்ச் சோலைத் திருக் கோலக்கா அணையக் 	3307-2
 கங்கை சடைக் கரந்தவர் தாம் எதிர் காட்சி கொடுத்து அருளப் 	3307-3
 பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார் 	3307-4

 154. திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப் 	3308-1
 பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி 	3308-2
 அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப் 	3308-3
 பொருள் மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார் 	3308-4

 155. மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று 	3309-1
 தாவாத புகழ் சண்பை வலம் கொண்டு தாழ்ந்து இறைஞ்சி 	3309-2
 நாவார் முத்தமிழ் விரகர் நற்பதங்கள் பரவிப் போய் 	3309-3
 மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார் 	3309-4

 156. உண் நீரின் வேட்கை உடன் உறுபசியால் மிக வருந்தி 	3310-1
 பண் நீர்மை மொழிப் பரவையார் கொழுநர் வரும் பாங்கர்க் 	3310-2
 கண் நீடு திரு நுதலார் காதல் வரக் கருத்து அறிந்து 	3310-3
 தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழிச் சார் கின்றார் 	3310-4

 157. வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரைக் குளிர் மென் 	3311-1
 பான் நல் மலர்த் தடம் போலும் பந்தர் ஒரு பால் அமைத்தே 	3311-2
 ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார் 	3311-3
 மான் அமரும் திருக் கரத்தார் வன் தொண்டர் தமைப் பார்த்து 	3311-4

 158. குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த் திருப்பத் 	3312-1
 திருவாரூர்த் தம்பிரான் தோழர் திருத் தொண்டர் உடன் 	3312-2
 வருவார் அப்பந்தர் இடைப்புகுந்து திரு மறைவர் பால் 	3312-3
 பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம எனப் பேசி 	3312-4

 159.  ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கிச் 	3313-1
 சால மிகப் பசித்தீர் இப் பொதி சோறு தருகின்றேன் 	3313-2
 காலம் இனித் தாழாமே கைக் கொண்டு இங்கு இனிது அருந்தி 	3313-3
 ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இனைப்பு தீரும் என 	3313-4

 160. வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு 	3314-1
 இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளிப் 	3314-2
 பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கிச் 	3314-3
 சென்று திருத் தொண்டருடன் திரு அமுது செய்து அருளி 	3314-4


 161. எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்தப் 	3315-1
 பண்ணியபின் அம் மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த 	3315-2
 உண்ணிறைந்த ஆரமுதாய் ஒருகாலும் உலவாதே 	3315-3
 புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்ததால் 	3315-4

 162. சங்கரனார் திரு அருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து 	3316-1
 பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி 	3316-2
 அங்கு அயர் வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார் களும் துயிலக் 	3316-3
 கங்கை சடைக் கரந்தார் அப் பந்தரொடும் தாம் கரந்தார் 	3316-4

 163. சித்த நிலை திரியாத திரு நாவலுர் மன்னர் 	3317-1
 அத்தகுதி யினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை 	3317-2
 இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து 	3317-3
 மெய்த் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார் 	3317-4

 164. குருகவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு 	3318-1
 அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள்புக்கு 	3318-2
 வருகாதல் கூர வலம் கொண்டு திரு முன் வணங்கிப் 	3318-3
 பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகினார் 	3318-4

 165. கண்ணார்ந்த இன் அமுதை கை ஆரத் தொழுது இறைஞ்சிப் 	3319-1
 பண்ணார்ந்த திருப் பதிகம் பாடியே பணிந்து ஏத்தி 	3319-2
 உண்ணாடும் பெரும் காதல் உடையவர்தாம் புறத்து எய்தி 	3319-3
 நண்ணும் ஆர்வத் தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார் 	3319-4

 166. அந் நாளில் தம் பெருமான் அருள் கூடப் பணிந்து அகன்று 	3320-1
 மின்னார் செஞ்சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கிக் 	3320-2
 கன்னாடும் எயில் புடை சூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி 	3320-3
 தென்னாவலூர் மன்னர் திருத்தில்லை வந்து அடைந்தார் 	3320-4

 167. சீர் வளரும் திருத்தில்லைத் திரு வீதி பணிந்து புகுந்து 	3321-1
 ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சிப் 	3321-2
 பார் வளர மறை வளர்க்கும் பதி அதனில் பணிந்து உறைவார் 	3321-3
 போர் வளர் மேருச்சிலையார் திருத்தினை மா நகர் புகுந்தார் 	3321-4

 168. திருத்தினை மா நகர் மேவும் சிவக் கொழுந்தைப் பணிந்து போய் 	3322-1
 நிருத்தினார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கிப் 	3322-2
 பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திரு நாவலூர் 	3322-3
 கருத்தில் வரும் ஆதரவால் கை தொழச் சென்று எய்தினார் 	3322-4

 169.  திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் எனக் கேட்டுப் 	3323-1
 பெரு நாமப் பதியோரும் தொண்டர்களும் பெருவாழ்வு 	3323-2
 வருநாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணையச் 	3323-3
 செரு நாகத்து உரிபுனைந்தார் செழுங்கோயில் உள் அணைந்தார் 	3323-4

 170. மேவிய அத் தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை 	3324-1
 மூவுலகும் போய் ஒலிப்ப முதல் வனார் முன்பு எய்தி 	3324-2
 ஆவியினும் அடைவுடையார் அடிக் கமலத்து அருள் போற்றிக் 	3324-3
 கோவலன் நான்முகன் எடுத்துப் பாடியே கும்பிட்டார் 	3324-4

 171. நலம் பெருகும் அப்பதியில் நாடி அன்பொடு நயந்து 	3325-1
 குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து 	3325-2
 சலம் பெருகும் சடைமுடியார் தாள் வணங்கி அருள் பெற்றுப் 	3325-3
 பொலம் புரிநூல் மணிமார்பர் பிறபதியும் தொழப் போவார் 	3325-4

 172. தண்டகமாந் திரு நாட்டுத் தனி விடையார் மகிழ் இடங்கள் 	3326-1
 தொண்டர் எதிர் கொண்டு அணையத் தொழுது போய்த் தூய நதி 	3326-2
 வண்டறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே 	3326-3
 எண் திசை யோர் பரவு திருக் கழுக் குன்றை எய்தினார் 	3326-4

 173. தேன் ஆர்ந்த மலர்ச் சோலை திருக்கழுக் குன்றத்து அடியார் 	3327-1
 ஆனாத விருப்பினொடும் எதிர் கொள்ள அடைந்து அருளித் 	3327-2
 தூ நாள் வெண் மதி அணிந்த சுடர்க் கொழுந்தைத் தொழுது இறைஞ்சி 	3327-3
 பா நாடும் இன் இசையின் திருப்பதிகம் பாடினார் 	3327-4

 174. பாடிய அப் பதியின் கண் இனிது அமர்ந்து பணிந்து போய் 	3328-1
 நாடிய நல்லுணர்வின் ஒடும் திருக் கச்சூர் தனை நண்ணி 	3328-2
 ஆடக மா மதில் புடை சூழ் ஆலக்கோயிலின் அமுதைக் 	3328-3
 கூடிய மெய் அன்பு உருகக் கும்பிட்டுப் புறத்து அணைந்தார் 	3328-4

 175. அணைந்து அருளும் அவ்வேலை அமுது செயும் பொழுதாகக் 	3329-1
 கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை 	3329-2
 தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திருவாயில் 	3329-3
 புணர்ந்த மதில் புறத்துஇருந்தார் முனைப்பாடி புரவலனார் 	3329-4

 176. வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் 	3330-1
 மின் தங்கு வெண் தலையோடு ஒழிந்து ஒரு வெற்றோடு ஏந்தி 	3330-2
 அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய்ப் புறப்பட்டுச் 	3330-3
 சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூறச் செப்புவார் 	3330-4

 177. மெய்ப் பசியால் மிக வருந்தி இனைத்து இருந்தீர் வேட்கைவிட 	3331-1
 இப்பொழுதே சோறிரந்து இங்கு யான் உமக்குக் கொணர்கின்றேன் 	3331-2
 அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் எனச் 	3331-3
 செப்பி அவர் கச்சூர் மனை தோறும் சென்றிரப்பார் 	3331-4

 178. வெண் திரு நீறு அணி திகழ விளங்குநூல் ஒளி துளங்கக் 	3332-1
 கண்டவர்கள் மனம் உருகக் கடும் பகல் போது இடும் பலிக்குப் 	3332-2
 புண்டரிகக் கழல் புவிமேல் பொருந்த மனை தொறும் புக்குக் 	3332-3
 கொண்டுதாம் விரும்பி ஆட் கொண்டவர் முன் கொடுவந்தார் 	3332-4

 179. இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும் 	3333-1
 அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப 	3333-2
 பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேணி 	3333-3
 நிரந்த பெரும் காதலினால் நேர் தொழுது வாங்கினார் 	3333-4

 180. வாங்கிய அத்திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த 	3334-1
 ஓங்கு தவத் தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப 	3334-2
 ஆங்கு அருகு நின்றார் அவர் தம்மை அறியாமே 	3334-3
 நீங்கினார் எப் பொருளும் நீங்காத நிலைமையினார் 	3334-4

 181. திருநாவலூராளி சிவ யோகியார் நீங்க 	3335-1
 வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே 	3335-2
 பெரு நாதச் சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண் 	3335-3
 உருநாடி எழுந்து அருளிற்று என் பொருட்டாம் என உருகி 	3335-4

 182.  முதுவாயோரி என்று எடுத்து முதல்வனார் தம் பெரும் கருணை 	3336-1
 அதுவாம் என்றுஅதிசயம் வந்து எய்தக் கண்ணீர் மழை அருவி 	3336-2
 புதுவார் புனலின் மயிர் புளகம் புதையப் பதிகம் போற்றி இசைத்து 	3336-3
 மதுவார் இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார் 	3336-4

 183. வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம் 	3337-1
 முந்தித் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு முக் கண் பெருமானைச் 	3337-2
 சிந்தித்திட வந்து அருள் செய் கழல் பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தே 	3337-3
 அந்திச் செக்கர்ப் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார் 	3337-4

 184.  அன்று வெண்ணெய் நல்லூரில் அரியும் அயனும் தொடர் அரிய 	3338-1
 வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து 	3338-2
 நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர் தாம் 	3338-3
 இன்று இங்கு எய்தப் பெற்றோம் என்று எயில் சூழ்காஞ்சி நகர் வாழ்வார் 	3338-4

 185. மல்கு மகிழ்ச்சி மிகப் பெருக மறுகு மணித் தோரணம் நாட்டி 	3339-1
 அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்துச் 	3339-2
 செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிரப் 	3339-3
 பல்கு தொண்டருடன் கூடிப் பதியின் புறம் போய் எதிர் கொண்டார் 	3339-4

 186.  ஆண்ட நம்பி எதிர் கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி 	3340-1
 நீண்ட மதில்கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்து 	3340-2
 பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப 	3340-3
 ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார் 	3340-4

 187.  ஆழி நெடுமால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன் 	3341-1
 பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கிப் புகுந்து அருளிச் 	3341-2
 சூழுமணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம் கொண்டு 	3341-3
 வாழி மணிப் பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர் 	3341-4

 188. கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகிவர 	3342-1
 ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆரத் தழுவிக் கொண்டு இருந்த 	3342-2
 மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடுபூஞ் 	3342-3
 செய்ய கமலச் சேவடிக் கீழ்த் திருந்து காதலுடன் வீழ்ந்தார் 	3342-4

 189. வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி எழுந்து மெய்யன்பால் 	3343-1
 வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து 	3343-2
 சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லைக் காஞ்சி நகர்த் 	3343-3
 தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார் 	3343-4

 190. சீரார் காஞ்சி மன்னும் திருக் காமக் கோட்டம் சென்று இறைஞ்சி 	3344-1
 நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திரு மேற்றளி மேவி 	3344-2
 ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண்சுடராம் 	3344-3
 பாரார் பெருமைத் திருப் பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார் 	3344-4

 191.  ஓணகாந்தன் தளி மேவும் ஒருவர் தம்மை உரிமையுடன் 	3345-1
 பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் திறம் பேசிக் 	3345-2
 காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும் 	3345-3
 யாணர்ப் பதிகம் எடுத்து ஏத்தி எண்ணில் நிதி பெற்று இனிது இருந்தார் 	3345-4

 192. அங்கண் அமர்வார் அனே கதங்கா பதத்தை எய்தி உள்ளணைந்து 	3346-1
 செங்கண் விடையார் தமைப் பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்ததமிழ் 	3346-2
 தங்கும் இடமாம் எனப்பாடித் தாழ்ந்து பிறவும் தானங்கள் 	3346-3
 பொங்கு காதலுடன் போற்றிப் புரிந்த பதியில் பொருந்தும் நாள் 	3346-4

 193. பாடல் இசையும் பாணியினால் பாவைத் தழுவக் குழைக் கம்பர் 	3347-1
 ஆடல் மருவும் சே அடிகள் பரவிப் பிரியாது அமர்கின்றார் 	3347-2
 நீட மூதூர்ப் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழவிருப்பால் 	3347-3
 மாடம் நெருங்கு வன் பார்த்தான் பனம் காட்டூரில் வந்து அடைந்தார் 	3347-4

 194. செல்வம் மல்கு திருப் பனங் காட்டூரில் செம் பொன் செழும் சுடரை 	3348-1
 அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்புபொழி கண்ணீர் 	3348-2
 மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழப் பதிகம் 	3348-3
 நல்ல இசையின் உடன் பாடிப் போந்து புறம்பு நண்ணுவார் 	3348-4

 195. மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கிப் பரவித் திருவல்லம் 	3349-1
 தன்னுள் எய்தி இறைஞ்சிப் போய்ச்சாரும் மேல்பால் கற்றைப் 	3349-2
 பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வனங்கிப் பெரும் தொண்டர் 	3349-3
 சென்னி முகில் தோய் தடம் குவட்டுத் திருக் திருக்காளத்தி மலைசேர்ந்தார் 	3349-4

 196. தடுக்கலாகாப் பெருங்காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர் 	3350-1
 இடுக்கண் களைந்து ஆட் கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி 	3350-2
 அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பாறும் 	3350-3
 அடுப்பத் திருமுன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார் 	3350-4

 197. வணங்கி உள்ளம் களி கூர மகிழ்ந்து போற்றி மதுர இசை 	3351-1
 அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர் 	3351-2
 மணம் கொள் மலர்ச் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி 	3351-3
 இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில் 	3351-4

 198. வட மாதிரத்துப் பருப்பதம் திருக் கேதார மலையும் முதல் 	3352-1
 இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி 	3352-2
 நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்து 	3352-3
 திரு மாம் கருத்தில் திருப் பதிகம் பாடிக் காதல் சிறந்து இருந்தார் 	3352-4

 199. அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார் 	3353-1
 தங்கும் இடங்கள் எனைப் பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப் 	3353-2
 பொங்கு புணிரிக் கரை மருங்கு புவியுள் சிவலோகம் போலத் 	3353-3
 திங்கள் முடியார் அமர்ந்த திரு ஒற்றியூரைச் சென்று அடைந்தார் 	3353-4

 200. அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்டநம்பி எழுந்து அருள 	3354-1
 எண்ணில் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர் கொள்வார் 	3354-2
 வண்ண வீதி வாயில் தொறும் வாழை கமுகு தோரணங்கள் 	3354-3
 சுண்ண நிறை பொன் குடம் தீபம் எடுத்துத் தொழ எழுங்கால் 	3354-4

 201. வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில் 	3355-1
 புர மங்கையர்கள் நடம் ஆடப் பொழியும் வெள்ளப் பூ மாரி 	3355-2
 அர மங்கையரும் அமரர்களும் வீச அன்பர் உடன் புகுந்தார் 	3355-3
 பிரமன் தலையில் பலியுவந்த பிரானார் விரும்பும் தொண்டர் 	3355-4

 202. ஒற்றி ஊரின் உமையோடும் கூட நின்றார் உயர்தவத்தின் 	3356-1
 பற்று மிக்க திருத் தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டிச் 	3356-2
 சுற்றம் அணைந்து துதி செய்யத் தொழுது தம்பிரான் அன்பர் 	3356-3
 கொற்ற மழவேறு உடையவர் தம் கோயில் வாயில் எய்தினார் 	3356-4

 203. வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர் 	3357-1
 கூனல் இளம் வெண் பிறைச் சடையார் கோயில் வலம் கொண்டு எதிர் குறுகி 	3357-2
 ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையின் உடன் 	3357-3
 ஆன காதல் உடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர் 	3357-4

 204.  ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும் 	3358-1
 நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமலச் சேவடியில் 	3358-2
 கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோதில் இசை கூடப் 	3358-3
 பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்துப் பாடினார் 	3358-4

 205. பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்றப் புறம் போந்து 	3359-1
 நீடு விருப்பில் பெரும் காதல் நிறைந்த அன்பர் பலர் போற்றத் 	3359-2
 தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திருப்பாதம் 	3359-3
 கூடும் காலங்களில் அணைந்து பரவிக் கும்பிட்டு இனிது இருந்தார் 	3359-4

 206. இந்த நிலமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்காக 	3360-1
 அந்தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநித்திதையார் 	3360-2
 வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர் 	3360-3
 சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரியச் சாற்றுவாம் 	3360-4

 207. நாலாம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின் 	3361-1
 மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர் 	3361-2
 பாலாதரவு தரும் மகளர் ஆகிப் பார் மேல் அவதரித்தார் 	3361-3
 ஆலாலஞ் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார் 	3361-4

 208. மலையான் மடந்தை மலர்ப் பாதம் மறவா அன்பால் வந்த நெறி 	3362-1
 தலையாம் உணர்வு வந்து அணையத் தாமே அரிந்த சங்கிலியார் 	3362-2
 அலையார் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு 	3362-3
 நிலையாயின அப் பருவங்கள் தோறும் நிகழ நிரம்புவார் 	3362-4

 209. சீர் கொள் மரபில் வரும் செயலே அன்றித் தெய்வ நிகழ் தன்மை 	3363-1
 பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைந்தொடியார் 	3363-2
 வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்தச் 	3363-3
 சாரும் பதத்தில் தந்தையார் தம் கண் மனைவியார்க்கு உரைப்பார் 	3363-4

 210.  வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள்ளோர்க்கு இசையும் 	3364-1
 படிவம் அன்றி மேல் பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம் 	3364-2
 கடிசேர் மணமும் இனி நிகழும் காலம் என்னக் கற்புவளர் 	3364-3
 கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றாக் கொடும் என்றார் 	3364-4

 211. தாயாரோடு தந்தையார் பேசக் கேட்ட சங்கிலியார் 	3365-1
 ஏயு மாற்றம் அன்றி எம் பெருமான் திரு அருளே 	3365-2
 மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்(று) 	3365-3
 ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார் 	3365-4

 212. பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்துப் பரிந்து எடுத்தே 	3366-1
 ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னே உற்றது எனத் 	3366-2
 தாங்கிச் சீத விரைப் பனி நீர் தெளித்து தை வந்தது நீங்க 	3366-3
 வாங்கு சிலை நன்னுதலாரை வந்தது உனக்கு இங்கு என்? என்றார் 	3366-4

 213. என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார் 	3367-1
 இன்று என்திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது 	3367-2
 வென்றி விடையார் அருள் செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல் 	3367-3
 சென்று திரு ஒற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என 	3367-4

 214. அந்த மாற்றம் கேட்டவர் தாம் அயர்வும் பயமும் அதிசயமும் 	3368-1
 வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற மாற்றம் மறைத்து ஒழுகப் 	3368-2
 பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான் 	3368-3
 சிந்தை விரும்பி மகள் பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார் 	3368-4

 215. தாதையாரும் அது கேட்டுத் தன்மை விளம்பத் தகாமையினால் 	3369-1
 ஏதம் எய்தாவகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன் 	3369-2
 தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான் 	3369-3
 மாதராரைப் பெற்றார் மற்று அதனைக் கேட்டு மனம் மருண்டார் 	3369-4

 216.  தையலார் சங்கிலியார் தம் திறத்துப் பேசத் தகா வார்த்தை 	3370-1
 உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறியச் 	3370-2
 செய்த விதிபோல் இது நிகழச் சிறந்தார்க்கு உள்ள படி செப்பி 	3370-3
 நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன் படுவார் 	3370-4

 217.  அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவரால் 	3371-1
 வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்று ஒன்றும் 	3371-2
 குணங்கள் இவையாம் இனி இவள் தான் குறித்த படியே ஒற்றி நகர்ப் 	3371-3
 பணம் கொள் அரவச் சடையார் சடையார்தம் பால் கொண்டு அணைவோம் எனப் பகர்வார் 3371-4

 218. பண்ணார் மொழிச் சங்கிலியாரை நோக்கிப் பயந்தாரொடும் கிளைஞர் 	3372-1
 தெண்ணீர் முடியார் திருவொற்றியூரில் சேர்ந்து செல்கதியும் 	3372-2
 கண்ணார் நுதலார் திரு அருளால் ஆகிக் கன்னி மாடத்துத் 	3372-3
 தண்ணார் தடம் சூழ் அந்நகரில் தங்கிப் புரிவீர் தவம் என்று 	3372-4

 219. பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலே 	3373-1
 மற்றுச் செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார் தாம் 	3373-2
 சொற்ற வண்ணம் செயத் துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள் 	3373-3
 செற்ற சிலையார் திருவொற்றியூரில் கொண்டு சென்று அணைந்தார் 	3373-4

 220. சென்னி வளர் வெண் பிறை அணிந்த சிவனார் கோயிலுள் புகுந்து 	3374-1
 துன்னும் சுற்றத் தொடும் பணிந்து தொல்லைப் பதியோர் இசைவினால் 	3374-2
 கன்னி மாடம் மருங்கு அமைத்துக் கடி சேர் முறைமை காப்பு இயற்றி 	3374-3
 மன்னும் செல்வம் தக வகுத்துத் தந்தையார் வந்து அடி வணங்கி 	3374-4

 221.  யாங்கள் உமக்குப் பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி 	3375-1
 ஓங்கு கன்னி மாடத்தில் உறைகின்றீர் என்று உரைக்கின்றார் 	3375-2
 தாங்கற்கு அரிய கண்கள் நீர்த் தாரை ஒழுகத் தரியாதே 	3375-3
 ஏங்கு சுற்றத் தொடும் இறைஞ்சிப் போனார் எயில் சூழ் தம்பதியில் 	3375-4

 222. காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார் 	3376-1
 பூத நாதர் கோயிலினில் காலம் தோறும் புக்கு இறைஞ்சி 	3376-2
 நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்யச் 	3376-3
 சீத மலர்ப் பூ மண்டபத்து திரை சூழ் ஒரு பால் சென்று இருந்து 	3376-4

 223. பண்டு கயிலைத் திருமலையில் செய்யும் பணியின் பான்மை மனம் 	3377-1
 கொண்ட உணர்வு தலை நிற்பக் குலவு மென் கொடி அனையார் 	3377-2
 வண்டுமருவும் திரு மலர் மெல் மாலை காலங்களுக்கு ஏற்ப 	3377-3
 அண்டர் பெருமான் முடிச் சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள் 	3377-4

 224. அந்தி வண்ணத்து ஒருவர் திரு அருளால் வந்த ஆரூரர் 	3378-1
 கந்த மாலைச் சங்கிலியார் தம்மைக் காதல் மணம் புணர 	3378-2
 வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத 	3378-3
 முந்தை விதியால் வந்து ஒருநாள் முதல்வர் கோயிலுள் புகுந்தார் 	3378-4

 225. அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அங்கணரைப் 	3379-1
 பண்டை முறைமை யால் பணிந்து பாடிப் பரவிப் புறம் போந்து 	3379-2
 தொண்டு செய்வார் திருத் தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார் 	3379-3
 புண்டரீகத் தடம் நிகழ் பூந்திருமண்டபத் தின் உள் புகுந்தார் 	3379-4

 226. அன்பு நாரா அஞ்சு எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே 	3380-1
 என்பு உள் உருக்கும் அடியாரைத் தொழுது நீங்கி வேறு இடத்து 	3380-2
 முன்பு போல திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்து 	3380-3
 மின் போல் மறையும் சங்கிலியார் தம்மை விதியால் கண் உற்றார் 	3380-4

 227. கோவா முத்தும் சுரும்பு ஏறாக் கொழு மென் முகையும் அனையாரைச் 	3381-1
 சேவார் கொடியார் திருத் தொண்டர் கண்டபோது சிந்தை நிறை 	3381-2
 காவாதவர் பால் போய் விழத் தம் பால் காமனார் துரந்த 	3381-3
 பூ வாளிகள் வந்துற வீழத் தரியார் புறமே போந்து உரைப்பார் 	3381-4

 228.  இன்ன பரிசு என்று அறி அரிதால் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால் 	3382-1
 பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவிப்புதியமதி 	3382-2
 தன்னுள் நீர்மையால் குழைத்துச் சமைத்த மின்னுக் கொடிபோல்வாள் 	3382-3
 என்னை உள்ளம் திரிவித்தாள் யார் கொல் என்று அங்கு இயம்புதலும் 	3382-4

 229. அங்கு நின்றார் விளம்புவார் அவர்தாம் நங்கை சங்கிலியார் 	3383-1
 பெருகும் தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார் என்ன 	3383-2
 இருவரால் இப்பிறவியை எம் பெருமான் அருளால் எய்துவித்தார் 	3383-3
 மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவளாம் என மருண்டார் 	3383-4

 230.  மின்னார் சடையார் தமக்காளாம் விதியால் வாழும் எனை வருத்தித் 	3384-1
 தன்னார் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே 	3384-2
 என்னாருயிரும் எழில் மலரும் கூடப் பிணைக்கும் இவள் தன்னைப் 	3384-3
 பொன்னார் இதழி முடியார் முடியார்பால் பெறுவேன் என்று போய்ப் புக்கார் 	3384-4

 231. மலர்மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்து அறியா 	3385-1
 நிலவு மலரும் திரு முடியும் நீடும் கழலும் உடையாரை 	3385-2
 உலகம் எலாம் தாம் உடையாராயும் ஓற்றியூர் அமர்ந்த 	3385-3
 இலகு சோதி பரம் பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார் 	3385-4

 232.  மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீள் முடியின் கண் 	3386-1
 கங்கை தன்னைக் கரந்து அருளும் காதல் உடையீர் அடியேனுக்(கு) 	3386-2
 இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்து என் உள்ளத்து தொடை அவிழ்ந்த 3386-3
 திங்கள் வதனச் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும் என 	3386-4

 233. அண்ணாலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்திப்புறத்து அணைந்தே 	3387-1
 எண்ணம் எல்லாம் உமக்கு அடிமையாமாறு எண்ணும் என் நெஞ்சில் 	3387-2
 திண்ணம் எல்லாம் உடைவித்தாள் செய்வது ஒன்றும் அறியேன்யான் 	3387-3
 தண்ணிலா மின் ஒளிர் பவளச் சடையீர் அருளும் எனத் தளர்வார் 	3387-4

 234. மதிவாண் முடியார் மகிழ் கோயில் புறத்தோர் மருங்கு வந்து இருப்பக் 	3388-1
 கதிரோன் மேலைக் கடல் காண மாலைக் கடலைக் கண்டு அயர்வார் 	3388-2
 முதிரா முலையார் தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரிவளை 	3388-3
 நிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்து நினைந்து அழிய 	3388-4

 235. உம்பர் உய்ய உலகு உய்ய ஓல வேலை விடம் உண்ட 	3389-1
 தம்பிரான் ஆனார் வன் தொண்டர் தம்பால் எய்திச் சங்கிலியை 	3389-2
 இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும் தவத்துக் 	3389-3
 கொம்பை உனக்குத் தருகின்றோம் கொண்டகவலை ஒழிக என்ன 	3389-4

 236.  அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய ஆண்டு கொண்டு அருளி 	3390-1
 ஒன்றும் அறியா நாயேனுக்குக் உறுதி அளித்தீர் உயிர் காக்க 	3390-2
 இன்றும் இவளை மணம் புணர்க்க என்று நின்றீர் எனப் போற்றி 	3390-3
 மன்றல் மலர்ச் சேவடி இணைக்கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர் 	3390-4

 237.  ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு அருளிக் கருணையினால் 	3391-1
 நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறை மதியம் 	3391-2
 தீண்டு கன்னி மாடத்துச் சென்று திகழ் சங்கிலியாராம் 	3391-3
 தூண்டு சோதி விளக்கு அனையார் தம்பால் கனவில் தோன்றினார் 	3391-4

 238. தோன்றும் பொழுதில் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய் 	3392-1
 ஆற்ற அன்பு பொங்கி எழுந்(து) அடியேன் உய்ய எழுந்து அருளும் 	3392-2
 பேற்றுக்கு என் யான் செய்வது எனப் பெரிய கருணை பொழிந்து அனைய 	3392-3
 நீற்றுக் கோல வேதியரும் நேர் நின்று அருளிச் செய்கின்றார் 	3392-4

 239. சாரும் தவத்துச் சங்கிலி! கேள்; சால என்பால் அன்புடையான் 	3393-1
 மேரு வரையின் மேம் பட்ட தவத்தான் வெண்ணெய் நல்லூரில் 	3393-2
 யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை இரந்தான் 	3393-3
 வார் கொள் முலையாய்! நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார் 	3393-4

 240.ஆதி தேவர் முன் நின்று அங்கு அருளிச் செய்த பொழுதின் கண் 	3394-1
 மாதரார் சங்கிலியாரும் மாலும் அயனும் அறிவு அரிய 	3394-2
 சீத மலர் தாமரை அடிக்கீழ் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று 	3394-3
 வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தித் தொழுது விளம்புவார் 	3394-4

 241.  எம் பிரானே! நீர் அருளிச் செய்தார்க்கு உரியேன் யான் இமையோர் 	3395-1
 தம் பிரானே அருள் தலைமேல் கொண்டேன் தக்க விதி மணத்தால் 	3395-2
 நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமயக் 	3395-3
 கொம்பின் ஆகங்கொண்டீர்க்குக் கூறும் திறம் ஒன்று உளது என்பார் 	3395-4

 242. பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணித் தொழுது உரைப்பார் 	3396-1
 மன்னும் திருவாரூரின் கண் அவர் தாம் மகிழ்து உறைவது 	3396-2
 என்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திரு முலை தோய் 	3396-3
 மின்னும் புரிநூல் அணி மார் பீர் என்றார் குன்றா விளக்கு அனையார் 	3396-4

 243. மற்றவர் தம் உரைகொண்டு வன்தொண்டர் நிலைமையினை 	3397-1
 ஒற்றி நகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார் 	3397-2
 பொன் தொடியாய்! உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம் 	3397-3
 அற்றமுறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி 	3397-4

 244. வேய் அனைய தோளியார் பால் நின்று மீண்டு அருளித் 	3398-1
 தூய மனம் மகிழ்து இருந்த தோழனார் பால் அணைந்து 	3398-2
 நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள் பால் 	3398-3
 ஆயதொரு குறை உன்னால் அமைப்பதுள என்று அருள 	3398-4

 245. வன் தொண்டர் மனம் களித்து வணங்கி அடியேன் செய்ய 	3399-1
 நின்ற குறையாது என்ன நீ அவளை மணம் புணர்தற்(கு) 	3399-2
 ஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்பு 	3399-3
 சென்று கிடைத்து இவ்விரவே செய்த என அருள் செய்தார் 	3399-4

 246.  என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு 	3400-1
 மின் செய்த புரி சடையீர் அருள் பெறுதல் வேண்டும் என 	3400-2
 முன் செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கி 	3400-3
 உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள 	3400-4

 247. வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர் 	3401-1
 நம்பர் இவர் பிற பதியும் நயந்த கோலம் சென்று 	3401-2
 கும்பிடவே கடவேனுக்கு இது விலக்காம் எனக் குறிப்பால் 	3401-3
 தம் பெருமான் திருமுன்பு தாம் வேண்டும் குறை இரப்பார் 	3401-4

 248. சங்கரர் தாள் பணிந்து இருந்து தமிழ் வேந்தர் மொழிகின்றார் 	3402-1
 மங்கை அவள் தனைப் பிரியா வகை சபதம் செய்வதனுக்(கு) 	3402-2
 அங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுது கோயில்விடத் 	3402-3
 தங்கும் இடம் திரு மகிழ்க் கீழ்க் கொள வேண்டும் எனத்தாழ்ந்தார் 	3402-4

 249. தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டிக் கொண்டு அருள 	3403-1
 உமபர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய் 	3403-2
 நம்பி! நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள 	3403-3
 எம்பிரானே! அரியது இனி எனக்கு என்? என ஏத்தி 	3403-4

 250. அஞ்சலி சென்னியில் மன்ன அருள் பெற்றுப் புறம் போதச் 	3404-1
 செஞ்சடையார் அவர் மாட்டுத் திரு விளையாட்டினை மகிழ்ந்தோ 	3404-2
 வஞ்சி இடைச் சங்கிலியார் வழி அடிமைப் பெருமையோ? 	3404-3
 துஞ்சிருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார் 	3404-4

 251. சங்கிலியார் தம் மருங்கு முன்பு போல் சார்ந்து அருளி 	3405-1
 நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூள் உறக் கடவன் 	3405-2
 அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே 	3405-3
 கொங்கலர் பூ மகிழின் கீழ்க் கொள்க எனக் குறித்து அருள 	3405-4

 252. மற்றவரும் கை குவித்து மால் அயனுக்கு அறிய அரியீர் 	3406-1
 அற்றம் எனக்கு அருள் புரிந்த அதனில் அடியேன் ஆகப் 	3406-2
 பெற்றது யான் எனக் கண்கள் பெரும் தாரை பொழிந்து இழிய 	3406-3
 வெற்றி மழ விடையார் தம் சேவடிக் கீழ் வீழ்ந்து எழுந்தார் 	3406-4

 253. தையலார் தமக்கு அருளிச் சடா மகுடர் எழுந்து அருள 	3407-1
 எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அவ்விரவின் கண் 	3407-2
 செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தே கண் துயிலார் 	3407-3
 ஐயம் உடன் அருகு துயில் சேடியாரை அணைந்து எழுப்பி 	3407-4

 254. நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர் 	3408-1
 தாம் கனவில் எழுந்து அருளித் தமக்கு அருளிச் செய்தது எலாம் 	3408-2
 பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும் 	3408-3
 தாங்கு மகிழ்ச்சியும் எய்தச் சங்கிலியார் தமைப் பணிந்தார் 	3408-4

 255. சேயிழையார் திருப் பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் 	3409-1
 தூய பணிப் பொழுது ஆகத் தொழில் புரிவார் உடன் போதக் 	3409-2
 கோயிலின் முன் காலம் அது ஆகவே குரித்து அணைந்தார் 	3409-3
 ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூரர் 	3409-4

 256. நின்றவர் அங்கு எதிர் வந்த நேர் இழையார் தம் மருங்கு 	3410-1
 சென்று அணைந்து தம் பெருமான் திரு அருளின் திறம் கூற 	3410-2
 மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார் 	3410-3
 ஒன்றிய நாண் ஒடு மடவாருடன் ஒதுங்கி உட்புகுந்தார் 	3410-4

 257. அங்கு அவர் தம் பின்சென்ற ஆரூரர் ஆயிழையீர்! 	3411-1
 இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும் படி இயம்பத் 	3411-2
 திங்கள் முடியார் திருமுன் போதுவீர் எனச் செப்பச் 	3411-3
 சங்கிலியார் கனவு உரைப்பக் கேட்ட தாதியர் மொழிவார் 	3411-4

 258.  எம் பெருமான் இதற்காக எழுந்து அருளி இமயவர்கள் 	3412-1
 தம் பெருமான் திருமுன்பு சாற்றுவது தகாது என்ன 	3412-2
 நம் பெருமான் வன் தொண்டர் நாதர் செயல் அறியாதே 	3412-3
 கொம்பு அனையீர் யான் செய்வது எங்கு என்று கூறுதலும் 	3412-4

 259. மாதர் அவர் மகிழ்க் கீழே அமையும் என மனமருள்வார் 	3413-1
 ஈதலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்ன படி மறுக்கில் 	3413-2
 ஆதலினால் உடன் படவே அமையும் எனத் துணிந்து ஆகில் 	3413-3
 போதுவீர் என மகிழ்க் கீழ் அவர் போதப் போய் அணைந்தார் 	3413-4

 260. தாவாத பெருந் தவத்துச் சங்கிலியாரும் காண 	3414-1
 மூவாத திரு மகிழை முக்காலும் வலம் வந்து 	3414-2
 மேவாது இங்கு யான் அகலேன் என நின்று விளம்பினார் 	3414-3
 பூவார் தண் புனல் பொய்கை முனைப்பாடிப் புரவலனார் 	3414-4

 261. மேவிய சீர் ஆரூரர் மெய்ச் சபதம் வினை முடிப்பக் 	3415-1
 காவியினேர் கண்ணாரும் கண்டு மிக மனம் கலங்கிப் 	3415-2
 பாவியேன் இது கண்டேன் தம் பிரான் பணியால் என்று 	3415-3
 ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார் 	3415-4

 262. திருநாவலூராளி தம் உடைய செயல் முற்றிப் 	3416-1
 பொரு நாகத்து உரி புனைந்தார் கோயிலின் உள்புகுந்து இறைஞ்சி 	3416-2
 அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது எனப் 	3416-3
 பெரு நாமம் எடுத்து ஏத்திப் பெரு மகிழ்ச்சி உடன் போந்தார் 	3416-4

 263. வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின் 	3417-1
 தார் புனையும் மண்டபத்துத் தம் உடைய பணி செய்து 	3417-2
 கார் புனையும் மணி கண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி 	3417-3
 ஏர் புனையும் கன்னி மாடம் புகுந்தார் இருள் புலர 	3417-4

 264. அன்று இரவே ஆதி புரி ஒற்றி கொண்டார் ஆட்கொண்ட 	3418-1
 பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள 	3418-2
 நின்ற புகழ்த் திரு ஒற்றியூர் நிலவு தொண்டர்க்கு 	3418-3
 மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார் 	3418-4

 265.  நம்பியாரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னை 	3419-1
 இம்பர் ஞாலத்து இடை நம் ஏவலினால் மணவினை செய்து 	3419-2
 உம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும் 	3419-3
 தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலைமேல் கொண்டு எழுவார் 	3419-4

 266. மண்ணிறைந்த பெரும் செல்வத்து திரு ஒற்றியூர் மன்னும் 	3420-1
 எண்ணிறைந்த திருத் தொண்டர் எழில் பதியோர் உடன் ஈண்டி 	3420-2
 உண்ணிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூ மழை பொழியக் 	3420-3
 கண்ணிறைந்த பெரும் சிறப்பில் கலியாணம் செய்து அளித்தார் 	3420-4

 267. பண்டு நிகழ் பான்மையினால் பசுபதி தன் அருளாலே 	3421-1
 வண்டமர் பூங்குழலாரை மணம் புணர்ந்த வன்தொண்டர் 	3421-2
 புண்டரிகத்து அவள் வனப்பைப் புறம் கண்ட தூ நலத்தைக் 	3421-3
 கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால் 	3421-4

 268. யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும் 	3422-1
 மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து 	3422-2
 வீழும் அவர்க்கு இடைதோன்றி மிகும் புலவி புணர்ச்சிக் கண் 	3422-3
 ஊழியாம் ஒரு கணம் தான் அவ் வூழி ஒரு கணம் ஆம் 	3422-4

 269. இந் நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும் 	3423-1
 மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் மகிழ் சிறப்பினால் 	3423-2
 சென்னி மதி புனைவார் தம் திருப் பாதம் தொழுது இருந்தார் 	3423-3
 முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல 	3423-4

 270. பொங்கு தமிழ்ப் பொதிய மலைப் பிறந்து பூஞ்சந்தனத்தின் 	3424-1
 கொங்கு அணைந்து குளிர் சாரல் இடை வளர்ந்த கொழும் தென்றல் 	3424-2
 அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர் 	3424-3
 மங்கல நாள் வசந்தம் எதிர் கொண்டு அருளும் வகை நினைந்தார் 	3424-4

 271. வெண் மதியின் கொழுந்து அணிந்த வீதி விடங்கப் பெருமான் 	3425-1
 ஒண்ணுதலார் புடை பரந்த ஒலக்கம் அதன் இடையே 	3425-2
 பண்ணமரும் மொழிப் பரவையார் பாடல் ஆடல் தனைக் 	3425-3
 கண்ணுற முன் கண்டு கேட்டார் போலக் கருதினார் 	3425-4

 272. பூங்கோயில் அமர்ந்தாரை புற்றிடங்கொண்டு இருந்தாரை 	3426-1
 நீங்காத காலினால் நினைந்தாரை நினைவாரைப் 	3426-2
 பாங்காகத் தாம் முன்பு பணிய வரும் பயன் உணர்வார் 	3426-3
 ஈங்கு நான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார் 	3426-4

 273. மின்னொளிர் செஞ்சடையானை வேத முதல் ஆனானை 	3427-1
 மன்னு புகழ்த் திருவாரூர் மகிழ்தானை மிக நினைந்து 	3427-2
 பன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் 	3427-3
 என்னும் இசைத் திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார் 	3427-4

 274. பின் ஒரு நாள் திருவாரூர் தனைப் பெருக நினைந்து அருளி 	3428-1
 உன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றி நகர் 	3428-2
 தன்னை அகலப் புக்கார் தாம் செய்த சபதத்தால் 	3428-3
 முன் அடிகள் தோன்றாது கண் மறைய மூர்ச்சித்தார் 	3428-4

 275. செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார் 	3429-1
 மை விரவு கண்ணார் பால் சூல் உறவு மறுத்த அதனால் 	3429-2
 இவ்வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம் பெருமானை 	3429-3
 எய்திய இத் துயர் நீங்கப் பாடுவேன் என நினைந்து 	3429-4

 276.  அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி 3430-1
 வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாதோர் பாகனார் மலர்பதம் உன்னி 3430-2
 இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர்க் கையற வினுக்கும் 	3430-3
 பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பல பல நனைவார் 	3430-4

 277. அங்கு நாதர் செய் அருளது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே 	3431-1
 பொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து 	3431-2
 திங்கள் வேணியார் திரு முல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம் 	3431-3
 சங்கிலிக்காக என் கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி 	3431-4

 278. தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும் தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக் 3432-1
 கொண்ட வெந்துயர் களை எனப் பரவிக் குறித்த காதலின் நெறிக் கொள வருவார் 3432-2
 வண்டுலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம் 	3432-3
 கண்ட தொண்டர்கள் எதிர் கொள வணங்கிக் காயும் நாகத்தார் கோயிலை அடைந்தார் 3432-4

 279. அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண் நாயகர் கோயில் முன் எய்திக் 3433-1
 குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைத்தலை மேற்கொண்டு நின்று 	3433-2
 வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே என்ற வன் தொண்டர்க்கு ஊன்று கோல் அருளி 3433-3
 இணங்கிலா மொழியால் உளோம் போகீர் என்று இயம்பினார் ஏதிலார் போல 3433-4

 280.  பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்துப் பெண் பாகம் 	3434-1
 விழைவடிவில் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை 	3434-2
 இழை என மாசுணம் அணிந்த இறையானைப் பாடினார் 	3434-3
 மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார் 	3434-4

 281. முன் நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழிமாலைப் 	3435-1
 பன்னும் இசைத் திருப் பதிகம் பாடியபின் பற்றாய 	3435-2
 என்னுடையபிரான் அருள் இங்கு இத்தனை கொலாம் என்று 	3435-3
 மன்னு பெரும் தொண்டர் உடன் வணங்கியே வழிக் கொள்வார் 	3435-4

 282. அங்கணர் தம் பதி அதனை அகன்று போய் அன்பர் உடன் 	3436-1
 பங்கயப் பூந்தடம் பணை சூழ் பழையனூர் உழை எய்தித் 	3436-2
 தங்குவார் அம்மைத் திரு தலையாலே வலம் கொள்ளும் 	3436-3
 திங்கள் முடியார் ஆடும் திருவாலங் காட்டின் அயல் 	3436-4

 283. முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளிப் 	3437-1
 பன்னும் இசைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார் 	3437-2
 அந் நின்று வணங்கிப் போய்த் திருவூறல் அமர்ந்து இறைஞ்சிக் 	3437-3
 கன்னி மதில் மணி மாடக் காஞ்சி மா நகர் அணைந்தார் 	3437-4

 284. தேன் நிலவு பொழில் கச்சிக் காமக் கோட்டத்தில் 	3438-1
 ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் ஒழியாத கருணையினால் 	3438-2
 ஆன திரு அறம் புரக்கும் அம்மை திருக் கோயிலின் முன் 	3438-3
 வானில் வளர் திருவாயில் வணங்கினார் வன் தொண்டர் 	3438-4

 285. தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்துப் போய் தொல் உலகம் 	3439-1
 முழுதும் அளித்து அழிக்கும் முதல்வர் திரு ஏகம்பம் 	3439-2
 பழுதில் அடியார் முன்பு புகப் புக்குப் பணிகின்றார் 	3439-3
 இழுதையேன் திருமுன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி 	3439-4

 286.  விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெரும் விடம் உண்ட 	3440-1
 கண்ணாளா கச்சி ஏகம்பனே கடையானேன் 	3440-2
 எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள 	3440-3
 வண்ணா கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார் 	3440-4

 287. பங்கயச் செங்கைத் தளிரால் பனிமலர் கொண்டு அருச்சித்துச் 	3441-1
 செங்கயற் கண் மலைவல்லி பணிந்த சேவடி நினைந்து 	3441-2
 பொங்கிய அன்பொடு பரவிப் போற்றிய ஆரூரருக்கு 	3441-3
 மங்கைத் தழுவக் குழைந்தார் மறைந்த இடக் கண் கொடுத்தார் 	3441-4

 288. ஞாலந்தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும் 	3442-1
 மூலந்தான் அறிய அரியார் கண் அளித்து முலைச்சுவட்டுக் 	3442-2
 கோலந்தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து 	3442-3
 ஆலந்தான் உகந்தவன் என்று எடுத்து ஆடிப் பாடினார் 	3442-4

 289. பாடி மிகப் பரவசமாய்ப் பணிவார்க்குப் பாவை உடன் 	3443-1
 நீடிய கோலம் காட்ட நிறைந்த விருப்புடன் இறைஞ்சிச் 	3443-2
 சூடிய அஞ்சலியினராய்த் தொழுது புறம் போந்து அன்பு 	3443-3
 கூடிய மெய்த்தொண்டர் உடன் கும்பிட்டு இனிது அமர்வார் 	3443-4

 290. மா மலையாள் முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணிந்த மதிப் 	3444-1
 பூ மலிவார் சடையாரைப் போற்றி அருளது ஆகத் 	3444-2
 தே மலர்வார் பொழில் காஞ்சித் திருநகரம் கடந்து அகல்வார் 	3444-3
 பாமலர் மாலைப் பதிகம் திருவாரூர் மேல் பரவி 	3444-4

 291.  அந்தியும் நண் பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால் 	3445-1
 எந்தை பிரான் திருவாரூர் என்று கொல் எய்துவது என்று 	3445-2
 சந்த இசை பாடிப் போய்த் தாங்க அரிய ஆதரவு 	3445-3
 வந்து அணைய அன்பர் உடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார் 	3445-4

 292. மன்னு திருப் பதிகள் தொறும் வன்னியொடு கூவிளமும் 	3446-1
 சென்னி மிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சிப் 	3446-2
 பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவியே போந்து அணைந்தார் 	3446-3
 அன்னமலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர் 	3446-4

 293. அங்கணரை ஆமாத்தூர் அழகர் தமை அடி வணங்கித் 	3447-1
 தங்கும் இசைத் திருப் பதிகம் பாடிப் போய்த் தாரணிக்கு 	3447-2
 மங்கலமாம் பெரும் தொண்டை வள நாடு கடந்து அணைந்தார் 	3447-3
 செங்கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு 	3447-4

 294. அந் நாட்டின் மருங்கு திரு அரத் துறையைச் சென்று எய்தி 	3448-1
 மின்னாரும் படை மழுவார் விரை மலர்த்தாள் பணிந்து எழுந்து 	3448-2
 சொன்மாலை மலர்க் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி 	3448-3
 மன்னார்வத்து திருத்தொண்டர் உடன் மகிழ்ந்து வைகினார் 	3448-4

 295. பரமர் திரு அரத் துறையைப் பணிந்து போய்ப் பலபதிகள் 	3449-1
 விரவி மழ விடை உயர்த்தார் விரைமலர்த்தாள் தொழுது ஏத்தி 	3449-2
 உரவு நீர்த் தடம் பொன்னி அடைந்து அன்பருடன் ஆடி 	3449-3
 அரவு அணிந்தார் அமர்ந்த திருவா வடு தண் துறை அணைந்தார் 	3449-4

 296. அங்கணைவார் தமை அடியார் எதிர் கொள்ளப் புக்கு அருளிப் 	3450-1
 பொங்கு திருக் கோயிலினைப் புடைவலம் கொண்டுள்ளணைந்து 	3450-2
 கங்கை வாழ் சடையாய்  ஓர் கண்ணிலேன் எனக் கவல்வார் 	3450-3
 இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார் 	3450-4

 297. திருப்பதிகம் கொடு பரவிப் பணிந்து திரு அருளால் போய் 	3451-1
 விருப்பினொடும் திருத்துருத்தி தனை மேவி விமலர் கழல் 	3451-2
 அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் மேல் உற்ற பிணி 	3451-3
 வருத்தம் எனை ஒழித்து அருளவேண்டும் என வணங்குவார் 	3451-4

 298. பரவியே பணிந்தவர்க்குப் பரமர் திரு அருள் புரிவார் 	3452-1
 விரவிய இப் பிணி அடையத் தவிப்பதற்கு வேறு ஆக 	3452-2
 வரமலர் வண்டறை தீர்த்த வட குளித்துக் குளி என்னக் 	3452-3
 கரவில் திருத்தொண்டர் தாம் கை தொழுது புறப்பட்டார் 	3452-4

 299. மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து வேதம் எலாம் 	3453-1
 தொக்க வடிவாய் இருந்த துருத்தியார் தமைத் தொழுது 	3453-2
 புக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கி 	3453-3
 அக்கணமே மணி ஒளிசேர் திருமேனி ஆயினார் 	3453-4

 300. கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து 	3454-1
 மண்டு பெரும் கதலினால் கோயிலினை வந்து அடைந்து 	3454-2
 தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம் 	3454-3
 எண்திசையும் அறிந்துய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார் 	3454-4

 301. பண்ணிறைந்த தமிழ் பாடிப் பரமர் திரு அருள் மறவாது 	3455-1
 எண்ணிறைந்த தொண்டர் உடன் பணிந்து அங்கண் உறைந்தேகி	3455-2
 உண்ணிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கிப்போய் 	3455-3
 கண்ணிறைந்த திருவாரூர் முன்தோன்றக் காண்கின்றார் 	3455-4

 302. அன்று திரு நோக்கு ஒன்றால் ஆரக்கண்டு இன்பு உறார் 	3456-1
 நின்று நிலமிசை வீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சி 	3456-2
 வன் தொண்டர் திருவா ரூர் மயங்கு மாலையில் புகுந்து 	3456-3
 துன்று சடைத் தூவாயர் தமை முன்னம் தொழ அணைந்தார் 	3456-4

 303. பொங்கு திருத்தொண்டருடன் உள்ளணைந்து புக்கு இறைஞ்சி 	3457-1
 துங்க இசைத் திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே 	3457-2
 இங்கு எமது துயர் களைந்து கண் காணக் காட்டாய் என்று 	3457-3
 அம் கணர் தம் முன் நின்று பாடி அருந்தமிழ் புணைந்தார் 	3457-4

 304.  ஆறணியுஞ் சடையாரைத் தொழுது புறம் போந்து அங்கண் 	3458-1
 வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடி 	3458-2
 ஏறுயர்த்தார் திருமூலட்டாத்து உள் இடை தெரிந்து 	3458-3
 மாறில் திரு அத்தயா மத்து இறைஞ்ச வந்து அணைந்தார் 	3458-4

 305.  ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கிக் 	3459-1
 கோதில் இசையால் குருகுபாய எனக் கோத்து எடுத்தே 	3459-2
 ஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம் 	3459-3
 காதல் புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார் 	3459-4

 306. சீர் பெருகும் திருத் தேவாசிரியன் முன் சென்று இறைஞ்சிக் 	3460-1
 கார் விரவு கோபுரத்தைக் கை தொழுதே உள் புகுந்து 	3460-2
 தார் பெருகு பூங்கோயில் தனை வணங்கி சார்ந்து அணைவார் 	3460-3
 ஆர்வம் மிகு பெரும் காதலால் அவனி மேல் வீழ்ந்தார் 	3460-4

 307. வீழ்ந்து எழுந்து கை தொழுது முன் நின்று விம்மியே 	3461-1
 வாழ்ந்த மலர்க் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார் 	3461-2
 ஆழ்ந்த துயர்க் கடல் இடை நின்று அடியேனை எடுத்து அருளித் 	3461-3
 தாழ்ந்த கருத்தினை நிரப்பிக் கண்தாரும் எனத் தாழ்ந்தார் 	3461-4

 308. திரு நாவலூர் மன்னர் திருவாரூர் வீற்று இருந்த 	3462-1
 பெருமானைத் திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனைப் 	3462-2
 பருகா இன் அமுதைக் கண்களால் பருகுதற்கு 	3462-3
 மருவார்வத்துடன் மற்றைகண் தாரீர் என வணங்கி 	3462-4

 309.  மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம் 	3463-1
 மாளமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானைத் 	3463-2
 தாளா தரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று 	3463-3
 ஆளாம் திருத் தோழமைத் திறத்தால் அஞ்சொல் பதிகம் பாடினார் 	3463-4

 310. பூத முதல்வர் புற்றிடங்கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர் 	3464-1
 காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணைத் திரு நோக்கு அளித்து அருளிச் 	3464-2
 சீத மலர்க் கண் கொடுத்து அருளச் செவ்வே விழித்து முகம் மலர்ந்து 	3464-3
 பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பர வசமாய் 	3464-4

 311. விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவிப் பணிந்து மிகப் பரவி 	3465-1
 எழுந்த களிப்பினால் ஆடிப் பாடி இன்ப வெள்ளத்தில் 	3465-2
 அழுந்தி இரண்டு கண்ணாலும் அம் பொன் புற்றின் இடை எழுந்த 	3465-3
 செந்தண் பவளச் சிவக் கொழுந்தின் அருளைப் பருகித் திளைக்கின்றார் 	3465-4

 312. காலம் நிரம்பத் தொழுது ஏத்திக் கனக மணி மாளிகை கோயில் 	3466-1
 ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம் கொண்டு 	3466-2
 மாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழியப் புறம் போந்து 	3466-3
 சீலம் உடைய அன்பர் உடன் தேவாசிரியன் மருங்கு அணைந்தார் 	3466-4

 313. நங்கை பரவையார் தம்மை நம்பி பிரிந்து போன அதன் பின் 	3467-1
 தங்கு மணி மாளிகையின் கண் தனிமை கூரத் தளர்வார்க்குக் 	3467-2
 கங்குல் பகலாய்ப் பகல் கங்குலாகிக் கழியா நாள் எல்லாம் 	3467-3
 பொங்கு காதல் மீதூரப் புல்வார் சில நாள் போன அதன்பின் 	3467-4

 314. செம்மை நெறி சேர் திரு நாவலூர் ஒற்றியூர் சேர்ந்து 	3468-1
 கொம்மை முலையார் சங்கிலியார் தம்மைக் குலவு மணம் புணர்ந்த 	3468-2
 மெய்ம்மை வார்த்தை தாம் அவர்பால் விட்டார் வந்து கட்டு உரைப்ப 	3468-3
 தம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சினொடும் தளர்வார் 	3468-4

 315. மென் பூஞ்சயனத்து இடைத்துயிலும் மேவார் விழித்தும் இனிது அமரார் 	3469-1
 பொன் பூந்தவிசின் மிசை இனி இரார் நில்லார் செல்லார் புறம்பு ஒழியார் 	3469-2
 மன் பூ வாளி மழை கழியார் மறவார் நினையார் வாய் விள்ளார் 	3469-3
 என்பூடுருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப் பட்டார் 	3469-4

 316.  ஆன கவலைக் கை அறவால் அழியும் நாளில் ஆரூரர் 	3470-1
 கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் கோயில் முன் குறுகப் 	3470-2
 பால் நல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால் 	3470-3
 போன பெருமைப் பரிசனங்கள் புகுதப் பெறாது புறம் நின்றார் 	3470-4

 317. நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திருவாரூரர் எதிர் 	3471-1
 சென்று மொழிவார் திரு ஒற்றியூரில் நிகழ்ந்த செய்கை எலாம் 	3471-2
 ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில் 	3471-3
 இன்று புறமும் சென்று எய்தப் பெற்றிலோம் என்று இறைஞ்சினார் 	3471-4

 318. மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன் தொண்டர் 	3472-1
 உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு 	3472-2
 கற்ற மாந்தர் சிலர் தம்மைக் காதல் பரவையார் கொண்ட 	3472-3
 செற்ற நிலைமை அறிந்தவர்க்கு தீர்வு சொல்லச் செல விட்டார் 	3472-4

 319. நம்பி அருளால் சென்ற அவரும் நங்கை பரவையார் தமது 	3473-1
 பைம் பொன் மணி மாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால் 	3473-2
 வெம்பு புலவிக் கடல் அழுந்தும் மின்னேரிடையார் முன் எய்தி 	3473-3
 எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்துரைப்பார் 	3473-4

 320. பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர் முன் 	3474-1
 மாதர் அவரும் மறுத்துமனம் கொண்ட செற்றம் மாற்றாராய் 	3474-2
 ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர் 	3474-3
 போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சிப்புறம் போந்தார் 	3474-4

 321. போந்து புகுந்த படி எல்லாம் பூந்தண் பழன முனைப்பாடி 	3475-1
 வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற்று அயர்வார் துயர்வேலை 	3475-2
 நீந்தும் புணையாம் துணை காணார் நிகழ்த சிந்தை ஆகுலம் நெஞ்சில் 	3475-3
 காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடையாமகக் கடலுள் 	3475-4

 322. அருகு சூழ்ந்தார் துயின்று திருஅந்தயாமம் பணி மடங்கிப் 	3476-1
 பெருகு புவனம் சலிப்பு இன்றிப் பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய் 	3476-2
 முருகு விரியும் மலர்க் கொன்றை முடிமேல் அரவும் இளமதியும் 	3476-3
 செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார் 	3476-4

 323.  முன்னை வினையால் இவ்வினைக்கு மூலம் ஆனாள்பால் அணைய 	3477-1
 என்னை உடையாய் நினைந்த அருளாய் இந்த யாமத்து எழுந்து அருளி 	3477-2
 அன்னம் அனையாள் புலவியினை அகற்றில் உய்யலாம் அன்றிப் 	3477-3
 பின்னை இல்லைச் செயல் என்று பெருமான் அடிகள் தமை நினைந்தார் 	3477-4

 324. அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறை 	3478-1
 முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொற்றளிர்க் கைத் 	3478-2
 தொடியார் தழும்பும் முலைச் சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும் 	3478-3
 படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படி தோய 	3478-4

 325. தம் பிரானார் எழுந்து அருளத் தாங்கற்கு அரிய மகிழ்ச்சியினால் 	3479-1
 கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்ப 	3479-2
 நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர்க்கை தலைக் குவிய 	3479-3
 அம்பிகா வல்லவர் செய்ய அடித் தாமரையின் கீழ் விழுந்தார் 	3479-4

 326. விழுந்து பரவி மிக்க பெரும் விருப்பினேடும் எதிர் போற்றி 	3480-1
 எழுந்த நண்பர் தமை நோக்கி என் நீ உற்றது என்று அருள 	3480-2
 தொழுது தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசி இடைப்பட்டு 	3480-3
 அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று 	3480-4

 327. அடியேன் அங்குத் திருவொற்றியூரில் நீரே அருள் செய்ய 	3481-1
 வடிவேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்ததிறம் எல்லாம் 	3481-2
 கொடியேர் இடையாள் பரவை தான் அறிந்து தன்பால் யான் குறுகில் 	3481-3
 முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது என மொழிந்து 	3481-4

 328.  நாயன் நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்குத் 	3482-1
 தாயின் நல்ல தோழருமாம் தம்பிரனாரே ஆகில் 	3482-2
 ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும் 	3482-3
 போய் இவ்விரவே பரவையுறு புலவி தீர்த்துத் தாரும் என 	3482-4

 329. அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி 	3483-1
 முன்பு நின்று விண்ணப்பம் செய்தநம்பி முகம் நோக்கித் 	3483-2
 துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே 	3483-3
 பொன் செய் மணிப்பூண் பரவைபால் போகின்றோம் என்று அருள் செய்தார் 	3483-4

 330. எல்லை இல்லாக் களிப்பினராய் இறைவர் தாளில் விழுந்து எழுந்து 	3484-1
 வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர் 	3484-2
 முல்லை முகை வெண்ணகைப் பரவை முகில் சேர் மாடத்து இடை செல்ல 	3484-3
 நில்லாது ஈண்ட எழுந்து அருளி நீக்கும் புலவி எனத் தொழுதார் 	3484-4

 331. அண்டர் வாழக் கருணையினால் ஆல காலம் அமுதாக 	3485-1
 உண்ட நீலக் கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவரியர் 	3485-2
 வண்டு வாழும் மலர்க் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கி 	3485-3
 தொண்டனார் தம் துயர் நீக்க தூதனாராய் எழுந்து அருள 	3485-4

 332. தேவாசிரியன் முறை இருக்கும் தேவர் எலாம் சேவித்துப் 	3486-1
 போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழிய 	3486-2
 ஓவா அணுக்கச் சேவகத்தில் உள்ளோர் பூத கண நாதர் 	3486-3
 மூவா முனிவர் யோகிகளின் முதல் ஆனார்கள் முன்போக 	3486-4

 333. அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும் அவ்விருடிகளும் 	3487-1
 மருவு நண்பின் நிதிக் கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்த 	3487-2
 தெருவும் விசும்பும் நிறைந்து விரைச் செழும் பூமாரி பொழிந்து அலையப் 	3487-3
 பொருவில் அன்பர் விடும்தூதர் புனித வீதியினில் போத 	3487-4

 334.  மாலும் அயனும் காணாதார் மலர்த்தாள் பூண்டு வந்து இறைஞ்சும் 	3488-1
 காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்னக் கடல் விளைத்த 	3488-2
 ஆலம் இருண்ட கண்டத்தான் அடித்தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப 	3488-3
 நீல மலர்க்கண் பரவையார் திருமாளிகையை நேர் நோக்கி 	3488-4

 335. இறைவர் விரைவின் எழுந்து அருள எய்தும் அவர்கள் பின்தொடர 	3489-1
 அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம் 	3489-2
 பிறை கொள் அருகு நறை இதழிப் பிணையல் சுரும்பு தொடர உடன் 	3489-3
 மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது 	3489-4

 336. பெரு வீரையினும் மிக முழங்கிப்பிறங்கு மத குஞ்சரம் உரித்து 	3490-1
 மருவீர் உரிவை புனைந்தவர் தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால் 	3490-2
 திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வத் திருவாரூர் 	3490-3
 ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளதாமால் 	3490-4

 337. ஞாலம் உய்ய எழுந்து அருளும் நம்பி தூதர் பரவையார் 	3491-1
 கோல மணி மாளிகை வாயில் குறுகுவர் முன் கூடத்தம் 	3491-2
 பாலங்கு அணைந்தார் புறம் நிற்பப் பண்டே தம்மை அர்ச்சிக்கும் 	3491-3
 சீலம் உடைய மறை முனிவர் ஆகித் தனியே சென்று அணைந்தார் 	3491-4

 338. சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்பு 	3492-1
 நின்று பாவாய் திறவாய் என்று அழைப்ப நெறி மென் குழலாகும் 	3492-2
 ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய் 	3492-3
 துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் எனத் துணிந்து 	3492-4

 339.  பாதி மதி வாழ் முடியாரைப் பயில் பூசனையின் பணி புரிவார் 	3493-1
 பாதி இரவில் இங்கு அணைந்தது என்னே என்று பயம் எய்திப் 	3493-2
 பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதே 	3493-3
 பாதி மதி வாண் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார் 	3493-4

 340. மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயில் இடை 	3494-1
 முன் நின்றாரைக் கண்டு இறைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின் கண் 	3494-2
 என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன 	3494-3
 மின்னும் மணி நூல் அணிமார்பீர் எய்த வேண்டிற்று என் என்றார் 	3494-4

 341. கங்கை நீர் கரந்த வேணி கரந்தவர் அருளிச் செய்வார் 	3495-1
 நங்கை நீ மாறாது செய்யின் நான் வந்து உரைப்பது என்ன 	3495-2
 அங்கயல் விழியினாரும் அதனை நீர் அருளிச் செய்தால் 	3495-3
 இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையவாம் என்று சொல்லி 	3495-4

 342.  என் நினைந்து அணைந்து என்பால் இன்னது என்று அருளிச் செய்தால் 	3496-1
 பின்னை அதியலும் ஆகில் ஆம் எனப் பிரானார் தாமும் 	3496-2
 மின்னிடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்ன 	3496-3
 நன் நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார் 	3496-4

 343.  பங்குனி திரு நாளுக்குப் பண்டுபோல் வருவார் ஆகி 	3497-1
 இங்கு எனைப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே 	3497-2
 சங்கிலித் தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ நீர் 	3497-3
 கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகிது என்றார் 	3497-4

 344. நாதரும் அதனைக் கேட்டு நங்கை நீ நம்பி செய்த 	3498-1
 ஏதங்கள் மனத்துக் கொள்ளாது எய்திய வெகுளி நீக்கி 	3498-2
 நோதக ஒழித்தற்கு அன்றே நுன்னையான் வேண்டிக் கொண்டது 	3498-3
 ஆதலின் மறுத்தல் செய்யல் அடாது என அருளிச் செய்தார் 	3498-4

 345. அரு மறை முனிவரான ஐயரைத் தையலார் தாம் 	3499-1
 கருமம் ஈதாக நீர் இக் கடைத் தலை வருகை மற்(று)உம் 	3499-2
 பெருமைக்குத் தகுவது அன்றால் ஒற்றியூர் உறுதி பெற்றார் 	3499-3
 வருவதற்கு இசையேன் நீரும் போம் என மறுத்துச் சொன்னார் 	3499-4

 346. நம்பர் தாம் அதனைக் கேட்டு நகையும் உட்கொண்டு மெய்ம்மைத் 	3500-1
 தம் பரிசு அறியக் காட்டார் தனிப் பெரும் தோழனார் தம் 	3500-2
 வெம்புறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி 	3500-3
 வம்பலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார் 	3500-4

 347. தூதரைப் போக விட்டு வரவு பார்த்திருந்த தொண்டர் 	3501-1
 நாதரை அறிவிலாதே நன்நுதல் புலவி நீக்கிப் 	3501-2
 போதரத் தொழுதேன் என்று புலம்புவார் பரவை யாரைக் 	3501-3
 காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்து உட் கொள்வார் 	3501-4

 348.  போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ 	3502-1
 நாயனார் தம்மைக் கண்டால் நன் நுதல் மறுக்குமோ தான் 	3502-2
 ஆய என் அயர்வு தன்னை அறிந்து எழுந்து அருளினார் தாம் 	3502-3
 சேயிழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று 	3502-4

 349. வழி எதிர் கொள்ளச் செல்வர் வரவு காணாது மீள்வர் 	3503-1
 அழிவுற மயங்கி நிற்பர் அசைவுடன் இருப்பர் நெற்றி 	3503-2
 விழியவர் தாழ்ந்தார் என்று மீளவும் எழுவர் மாரன் 	3503-3
 பொழி மலர் மாரி வீழ ஒதுங்குவார் புன்கண் உற்றார் 	3503-4

 350. பரவையார் தம்பால் நம்பி தூதராம் பாங்கில் போன 	3504-1
 அரவணி சடையார் மீண்டே அறியும் மாறு அணையும் போதில் 	3504-2
 இரவும்தான் பகலாய் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட 	3504-3
 உரவுநீர் வெள்ளம் போல ஓங்கிய களிப்பில் சென்றார் 	3504-4

 351. சென்று தம் பிரானைத் தாழ்ந்து திருமுகம் முறுவல் செய்ய 	3505-1
 ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றே 	3505-2
 அன்று நீர் ஆட்கொண்ட அதனுக்குத் தகவே செய்தீர் 	3505-3
 இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்து அருளி என்றார் 	3505-4

 352. அம் மொழி விளம்பும் நம்பிக்கையர் தாம் அருளிச் செய்வார் 	3506-1
 நம்மை நீ சொல்ல நாம் போய்ப் பரவை தம் இல்லம் நண்ணிக் 	3506-2
 கொம்மை வெம் முலையினாள்க்கு உன் திறம் எலாம் கூறக் கொள்ளாள் 	3506-3
 வெம்மை தான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார் 	3506-4

 353. அண்ணலார் அருளிச் செய்யக் கேட்ட ஆரூரர் தாமும் 	3507-1
 துண்ணென நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளிச் செய்த 	3507-2
 வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள் நாங்கள் 	3507-3
 எண்ண ஆர் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர் என்று 	3507-4

 354. வானவர் உய்ய வேண்டி மறிகடல் நஞ்சை உண்டீர் 	3508-1
 தானவர் புரங்கள் வேவ மூவரைத் தவிர்த்து ஆட்கொண்டீர் 	3508-2
 நான் மறைச் சிறுவர்க்காக காலனைக் காய்ந்து நட்டீர் 	3508-3
 யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார் 	3508-4

 355.  ஆவதே செய்தீர் இன்று என் அடிமை வேண்டா விட்டால் 	3509-1
 பாவியேன் தன்னை அன்றுவலிய ஆள் கொண்டபற்று என் 	3509-2
 நேவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள் பால் இன்று 	3509-3
 மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார் 	3509-4

 356. தம்பிரான் அதனைக் கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த 	3510-1
 நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள் பால் போய் அக் 	3510-2
 கொம்பினை இப்பொழுதே நீ குறுகுமா கூறுகின்றோம் 	3510-3
 வெம்புறு துயர் நீங்கு என்றார் வினை எல்லாம் விளைக்க வல்லார் 	3510-4

 357. மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை 	3511-1
 நயம் கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர்தாமும் 	3511-2
 முயங்கிய கலக்கம் நீங்கி உம் அடித் தொழும்பன் ஏனைப் 	3511-3
 பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற 	3511-4

 358. அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்லப் 	3512-1
 பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார் 	3512-2
 முன்பு உடன் போதா தாரும் முறைமையில் சேவித்து ஏகப் 	3512-3
 பொன்புரி சடையார் மாதர் புனித மாளிகையில் சென்றார் 	3512-4

 359. மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போனபின்பு 	3513-1
 முதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதவர் ஆகும் 	3513-2
 அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன் 	3513-3
 எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார் 	3513-4

 360. கண் துயில் எய்தார் வெய்யகை யறவு எய்தி ஈங்கு இன்று 	3514-1
 அண்டர் தம்பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம் 	3514-2
 கொண்டு அணைந்த வரை யான் உட்கெண்டிலேன் பாவியேன் என்று 	3514-3
 ஒண் சுடர் வாயிலே பார்த்து உழைய ரோடு அழியும் போதில் 	3514-4

 361. வெறியுறு கொன்றை வேணி விமலரும் தாமாம் தன்மை 	3515-1
 அறிவுறு கோலத் தோடும் அளவில் பல் பூத நாதர் 	3515-2
 செறிவுறு தேவர் யோக முனிவர்கள் சூழ்ந்து செல்ல 	3515-3
 மறுவில் சீர் பரவையார் தம் மாளிகை புகுந்தார் வந்து 	3515-4

 362. பாரிடத் தலைவர் முன்னம் பல் கண நாதர் தேவர் 	3516-1
 நேர்வுறு முனிவர் சித்தர் இயக்கர்கள் நிறைதலாலே 	3516-2
 பேரருளாளர் எய்தப் பெற்ற மாளிகைதான் தென்பால் 	3516-3
 சீர் வளர் கயிலை வெள்ளித் திருமலை போன்றது அன்றே 	3516-4

 363. ஐயர் அங்கு அணைந்த போதில் அகில லோகத்து உள்ளாரும் 	3517-1
 எய்தியே செறிந்து சூழ எதிர் கொண்ட பரவையார் தாம் 	3517-2
 மெய்யுறு நடுக்கத் தோடு மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்கச் 	3517-3
 செய்யதாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார் 	3517-4

 364. அரி அயற்கு அரியர் தாமுமாய் இழையாரை நோக்கி 	3518-1
 உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன் பால் வந்தோம் 	3518-2
 முருகலர் குழலாய் இன்னம் முன் போல் மாறாதே நின்பால் 	3518-3
 பிரிவுற வருந்து கின்றான் வரப் பெற வேண்டும் என்றார் 	3518-4

 365. பெரும் தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி 	3519-1
 வருந்திய உள்ளத்தோடு மலர்க்கரம் குழல் மேல் கொண்டே 	3519-2
 அரும் திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்த 	3519-3
 இரும் தவப் பயனாம் என்ன எய்திய நீரோ என்பார் 	3519-4

 366. துளிவளர் கண்ணீர் வாரத் தொழுது விண்ணப்பம் செய்வார் 	3520-1
 ஒளிவளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது 	3520-2
 அளிவரும் அன்பர்க்காக அங்கு ஒடிங்கி உழல் வீராகி 	3520-3
 எளி வருவீரும் ஆனால் என் செய் கேன் இசையாது என்றார் 	3520-4

 367. நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று 	3521-1
 மங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போக 	3521-2
 திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார் 	3521-3
 எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார் 	3521-4

 368.  ஆதியும் மேலும் மாலயன் நாடற்கு அருளாதார் 	3522-1
 தூதினில் ஏகித் தொண்டரை ஆளும் தொழில் கண்டே 	3522-2
 வீதியில் ஆடிப் பாடி மகிழ்ந்தே மிடை கின்றார் 	3522-3
 பூதியில் நீடும் பல் கண நாதப் புகழ் வீரர் 	3522-4

 369. அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த 	3523-1
 மின் இடையார் பால் அன்பரை உய்க்கும் விரைவோடும் 	3523-2
 சென்னியில் நீடும் கங்கை ததும்ப திருவாரூர் 	3523-3
 மன்னவனார் அம்மறையவனார் பால் வந்துற்றார் 	3523-4

 370. அன்பரும் என்பால் ஆவி அளிக்கும் படி போனார் 	3524-1
 என் செய்து மீள்வார் இன்னமும் என்றே இடர் கூரப் 	3524-2
 பொன் புரி முந்நூல் மார்பினர் செல்லப் பொலிவீதி 	3524-3
 முன்புற நேரும் கண் இணை தானும் முகிழாரால் 	3524-4

 371. அந் நிலைமைக் கண் மன்மதன் வாளிக்கு அழிவார் தம் 	3525-1
 மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்த 	3525-2
 முன் எதிர் சென்றே மூவுலகும் சென்று அடையும் தாள் 	3525-3
 சென்னியில் வைத்து என் சொல்லுவார் என்றே தெளியாதார் 	3525-4

 372. எம் பெருமான் நீர் என் உயிர் காவாது இடர் செய்யும் 	3526-1
 கொம்பு அனையாள் பால் என் கொடுவந்தீர் குறை என்னத் 	3526-2
 தம் பெருமானும் தாழ் குழல் செற்றம் தணி வித்தோம் 	3526-3
 நம்பி இனப் போய் மற்று அவள் தன்பால் நணுகு என்ன 	3526-4

 373. நந்தி பிரானார் வந்து அருள் செய்ய நலம் எய்தும் 	3527-1
 சிந்தையுள் ஆர்வம் கூர் களி எய்தித் திகழ்கின்றார் 	3527-2
 பந்தமும் வீடும் நீர் அருள் செய்யும் படி செய்தீர் 	3527-3
 எந்தை பிரானே என் இனி என் பால் இடர் என்றார் 	3527-4

 374. என்று அடி வீழும் நண்பர் தம் அன்புக்கு எளிவந்தார் 	3528-1
 சென்று அணை நீ அச் சே இழை பால் என்று அருள் செய்து 	3528-2
 வென்று உயர் சே மேல் வீதி விடங்கப் பெருமாள் தம் 	3528-3
 பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ 	3528-4

 375. தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார் 	3529-1
 எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சி யோடும் 	3529-2
 வம்பலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி 	3529-3
 நம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்து அருளும் போது 	3529-4

 376. முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப 	3530-1
 மின் திகழ் பொலம் பூ மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த 	3530-2
 மன்றல் செய் மதுர சீதம் சிகரம் கொண்டு மந்தத் 	3530-3
 தென்றலும் எதிர் கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட 	3530-4

 377. மாலை தண் கலவைச் சேறு மான் மதச் சாந்து பொங்கும் 	3531-1
 கோல நல் பசும் கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ள 	3531-2
 சாலும் மெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண் ஆடைவர்க்கம் 	3531-3
 பாலனம் பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல 	3531-4

 378. இவ்வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினேடும் 	3532-1
 மை வளர் நெடுங்கணாரும் மாளிகை அடைய மன்னும் 	3532-2
 செய்வினை அலங்கரத்துச் சிறப்பு அணி பலவும் செய்து 	3532-3
 நெய்வளர் விளக்குத் தூபம் நிறை குடம் நிரைத்துப் பின்னும் 	3532-4

 379. பூ மலி நறும் பொன் தாமம் புனை மணிக் கோவை நாற்றிக் 	3533-1
 காமர் பொன் சுண்ணம் வீசிக் கமழ் நறும் சாந்து நீவித் 	3533-2
 தூ மலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்தத்தாமும் 	3533-3
 மா மணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார் 	3533-4

 380. வண்டுலாம் குழலார் முன்பு வன்தொண்டர் வந்து கூடக் 	3534-1
 கண்ட போது உள்ளம் காதல் வெள்ளத்தின் கரை காணாது 	3534-2
 கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அக் குரிசிலாரும் 	3534-3
 தண் தளிர் செங்கை பற்றிக் கொண்டு மாளிகையுள் சாந்தார் 	3534-4

 381. இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடிச் செய்த 	3535-1
 திரு அருள் கருணை வெள்ளத் திறத்தினைப் போற்றி சிந்தை 	3535-2
 மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சிவாய்ப்ப 	3535-3
 ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார் 	3535-4

 382.  ஆரணக் கமலக் கோயில் மேவிப் புற்றிடங்கொண்டு ஆண்ட 	3536-1
 நீரணி வேணியாரை நிரந்தரம் பணிந்து போற்றி 	3536-2
 பாரணி விளக்கும் செஞ்சொல்பதிக மாலைகளும் சாத்தி 	3536-3
 தாரணி மணிப்பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில் 	3536-4

 383.  நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுகம் ஒன்று இன்றி நின்று 	3537-1
 தம் பிரானாரைத் தூது தையல் பால் விட்டார் என்னும் 	3537-2
 இம்பரின் மிக்க வார்த்தை ஏயர் கோனார்தாம் கேட்டு 	3537-3
 வெம்பினார் அதிசயித்தார் வெருவினார் விளம்பல் உற்றார் 	3537-4

 384. நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று சால 	3538-1
 ஏயும் என்று இதனைச் செய்வான் தொண்டனாம் என்னே பாவம் 	3538-2
 பேயனேன் பொறுக்க ஒண்ணாப் பிழையினைச் செவியால் கேட்பது 	3538-3
 ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார் 	3538-4

 385.  காரிகை தன்பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவப் 	3539-1
 பாரிடை நடந்து செய்ய பாததாமரைகள் நோவத் 	3539-2
 தேரணி வீதியூடு செல்வது வருவது ஆகி 	3539-3
 ஓரிரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று 	3539-4

 386. நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல் 	3540-1
 உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா 	3540-2
 எம்பிரான் இசைந்தால் ஏவப் பெறுவதே இதனுக்கு உள்ளம் 	3540-3
 கம்பியாது அவனை யான் முன் காணும் நாள் எந் நாள் என்று 	3540-4

 387.  அரிவை காரணத்தினாலே ஆளுடைப் பரமர் தம்மை 	3541-1
 இரவினில் தூது போக ஏவி அங்குஇருந்தான் தன்னை 	3541-2
 வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம் கொல் என்று 	3541-3
 விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி 	3541-4

 388.  ஈறிலாப் புகழின் ஓங்கும் ஏயர் கோன் ஆர் தாம் எண்ணிப் 	3542-1
 பேறிது பெற்றார் கேட்டுப் பிழை உடன்படுவர் ஆகி 	3542-2
 வேறினி இதற்குத் தீர்வு வேண்டுவார் விரிபூங்கொன்றை 	3542-3
 ஆறிடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து 	3542-4

 389. நாள் தொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கி 	3543-1
 நீடிய தொண்டர் தம்முள் இருவரும் மேவும் நீர்மை 	3543-2
 கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார் தம்பால் மேனி 	3543-3
 வாடுறும் சூலை தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால் 	3543-4

 390.  ஏதமில் பெருமைச் செய்கை ஏயர்தம் பெருமான் பக்கல் 	3544-1
 ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன 	3544-2
 வேதனை மேல் மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து 	3544-3
 பூத நாயகர் தம் பொன் தாள் பற்றியே போற்றுகின்றார் 	3544-4

 391. சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி பேற்றி செய்ய 	3545-1
 எந்தமையாளும் ஏயர் காவலர் தம்பால் ஈசர் 	3545-2
 வந்துனை வருத்தும் சூலைவன் தொண்டன் தீர்கில் அன்றி 	3545-3
 முந்துற ஒழியாது என்று மொழிந்து அருள் செய்யக் கேட்டு 	3545-4

 392. எம்பிரான் எந்தை தந்தை தந்தை எங்கூட்டம் எல்லாம் 	3546-1
 தம் பிரான் நீரே என்று வழி வழி சார்ந்து வாழும் 	3546-2
 இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை 	3546-3
 வம்பு என ஆண்டுக் கொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து 	3546-4

 393. மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்றால் 	3547-1
 பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே 	3547-2
 உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்னக் 	3547-3
 கற்றைவார் சடையார்தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே 	3547-4

 394. வன் தொண்டர் தம்பால் சென்று வள்ளலார் அருளிச் செய்வார் 	3548-1
 இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை 	3548-2
 சென்று நீ தீர்ப்பாய் ஆக என்று அருள் செயச் சிந்தையோடு 	3548-3
 நன்று மெய்ம் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவல் ஊரர் 	3548-4

 395. அண்ணலார் அருளிச் செய்து நீங்க ஆரூரர் தாமும் 	3549-1
 விண்ணவர் தம்பிரான் ஆர் ஏவலால் விரைந்து செல்வார் 	3549-2
 கண்ணிய மனத்தின் மேவும் காதலால் கலிக்காமர்க்குத் 	3549-3
 திண்ணிய சூலை தீர்க்க வரும்தி செப்பி விட்டார் 	3549-4

 396. நாதர் தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்பால் கேட்ட 	3550-1
 கேதமும் வருத்த மீண்டும் வன்தொண்டர் வரவும் கேட்டு 	3550-2
 தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை தீர்க்கும் 	3550-3
 ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் என்பார் 	3550-4

 397.  மற்றவன் இங்கு வந்து தீர்பதன் முன் நான் மாயப் 	3551-1
 பற்றி நின்று என்னை நீங்காப் பாதகச் சூலை தன்னை 	3551-2
 உற்ற இவ் வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள் தன்னால் 	3551-3
 செற்றிட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது அன்றே 	3551-4

 398. கருதரும் பெருமை நீர்மைக் கலிக்காமர் தேவியாரும் 	3552-1
 பொருவரும் கணவரோடு போவது புரியும் காலை 	3552-2
 மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன்வந்தார் கூற 	3552-3
 ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்துப் பின்னும் 	3552-4

 399. கணவர் தம் செய்கை தன்னைக் கரந்து காவலரை நம்பி 	3553-1
 அணைவுறும் பொழுது சால அலங்கரித்து எதிர் போம் என்னப் 	3553-2
 புணர் நிலை வாயில் தீபம் பூரண கும்பம் வைத்துத் 	3553-3
 துணர் மலர் மாலை தூக்கித் தொழுது எதிர் கொள்ளச் சென்றார் 	3553-4

 400. செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று எதிர் கொண்டு போற்ற 	3554-1
 நம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி 	3554-2
 மெய்மையாம் விருப்பின்னோடும் மேவி உள் புகுந்து மிக்க 	3554-3
 மொய்ம் மலர்த் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்தபோது 	3554-4

 401. பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்த 	3555-1
 நான் மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு 	3555-2
 யான் மிக வருந்து கின்றேன் ஏயர் கோனார் தாம் உற்ற 	3555-3
 ஊன வெஞ்சூலை நீங்கி உடன் இருப்பதனுக்கு என்றார் 	3555-4

 402. மாதர் தம் ஏவலாலே மனைத் தொழில் மாக்கள் மற்று இங்கு 	3556-1
 ஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளி கொள்கின்றார் என்னத் 	3556-2
 தீது அணை வில்லை ஏறும் என் மனம் தெருளாது இன்னம் 	3556-3
 ஆதலால் அவரைக் காண வேண்டும் என்று அருளிச் செய்தார் 	3556-4

 403. வன் தொண்டர் பின்னும் கூற மற்றவர் தம்மைக் காட்டத் 	3557-1
 துன்றிய குருதி சோரத் தொடர் குடர் சொரிந்து உள்ளாவி 	3557-2
 பொன்றியே கிடந்தார் தம்மைக் கண்டபின் புகுந்தவாறு 	3557-3
 நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார் 	3557-4

 404. கோளுறு மனத்தர் ஆகிக் குற்று உடைவாளைப் பற்ற 	3558-1
 ஆளுடைத் தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து 	3558-2
 கேளிரே ஆகிக் கெட்டேன் என விரைந்து எழுந்து கையில் 	3558-3
 வாளினைப் பிடித்துக் கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார் 	3558-4

 405. மற்றவர் வணங்கி வீழ வாளினை மாற்றி ஏயர் 	3559-1
 கொற்றவனாரும் நம்பி குரைகழல் பணிந்து வீழ்ந்தார் 	3559-2
 அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர் 	3559-3
 பொன் தட மலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற 	3559-4

 406. இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே 	3560-1
 பொருவரும் மகிழ்சி பொங்கத் திருபுன் கூர் புனிதர் பாதம் 	3560-2
 மருவினர் போற்றி நின்று வன் தொண்டர் தம்பிரானார் 	3560-3
 அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்து பாடி 	3560-4

 407. சில பகல் கழிந்த பின்பு திருமுனைப் பாடி நாடர் 	3561-1
 மலர் புகழ்த் திருவாரூரில் மகிழ்ந்துடன் வந்த ஏயர் 	3561-2
 குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில் 	3561-3
 நிலவினார் தம்மைக் கும்பிட்டு உறைந்தனர் நிறைந்த அன்பால் 	3561-4

 408. அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து 	3562-1
 பொங்கிய திருவின் மிக்க தம்பதி புகுந்து பொற்பில் 	3562-2
 தங்கு நாள் ஏயர் கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தே 	3562-3
 செங்கண் மால் விடையார் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பினேடும் 	3562-4

 409. நள்ளிருள் நாயனாரைத் தூது விட்டு அவர்க்கே நண்பாம் 	3563-1
 வள்ளலார் ஏயர் கோனார் மலர் அடி வணங்கிப்புக்கேன் 	3563-2
 உள்ளுணர்வான ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை 	3563-3
 தெள்ளு தீந்தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப 	3563-4


30 திரு மூல நாயனார் புராணம்
 1. அந்தி இளம் பிறைக் கண்ணி அண்ணலார் கயிலையினில் 	3564-1
 முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி 	3564-2
 இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும் 	3564-3
 நந்தி திருவருள் பெற்ற நான் மறை யோகிகள் ஒருவர் 	3564-4

 2. மற்றவர் தாம் அணி மாதி வரும் சித்தி பெற்று உடையார் 	3565-1
 கொற்றவனார் திருக் கயிலை மலை நின்றும் குறு முனிபால் 	3565-2
 உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு 	3565-3
 நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார் 	3565-4

 3. மன்னு திருக் கேதாரம் வழி பட்டு மா முனிவர் 	3566-1
 பன்னு புகழ்ப் பசுபதி நேபாளத்தைப் பணிந்து ஏத்தித் 	3566-2
 துன்னு சடைச் சங்கரனார் ஏற்ற தூ நீர்க் கங்கை 	3566-3
 அன்ன மலி அகன் துறை நீர் அருங்கரையின் மருங்கு அணைந்தார் 	3566-4

 4. கங்கை நீர்த் துறை ஆடிக் கருத்துறை நீள் கடல் ஏற்றும் 	3567-1
 அங்கணர் தாம் மகிழ்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி 	3567-2
 மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி 	3567-3
 திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார் 	3567-4

 5. நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி 	3568-1
 ஆடு திரு அரங்கான ஆலவனம் தொழுது ஏத்தித் 	3568-2
 தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து 	3568-3
 மாடுயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார் 	3568-4

 6. நற்பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய்க் 	3569-1
 கற்புரிசைத் திருவதிகை கலந்து இறைஞ்சிக் கறை கண்டர் 	3569-2
 அற்புதக் கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திருவீதிப் 	3569-3
 பொற்பதியாம் பெரும் பற்ற புலியூர் வந்து அணைந்தார் 	3569-4

 7. எவ்வுலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரைச் 	3570-1
 செவ்விய அன்புற வணங்கிச் சிந்தை களிவரத் திளைத்து 	3570-2
 வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்தக் கூத்தை 	3570-3
 அவ்வியல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார் 	3570-4

 8. தட நிலை மாளிகைப் புலியூர் தன்னில் உறைந்து இறைஞ்சிப் போய் 	3571-1
 அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே 	3571-2
 விடம் அளித்தது எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே 	3571-3
 கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார் 	3571-4

 9. காவிரி நீர்ப் பெரும் தீர்த்தம் கலந்து ஆடிக் கடந்து ஏறி 	3572-1
 ஆவின் அரும் கன்று உறையும் ஆவடு தண் துறை அணைந்து 	3572-2
 சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து 	3572-3
 மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார் 	3572-4

 10. அந்நிலைமைத் தானத்தை அகலாத ஒருகருத்து 	3573-1
 முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்தப் 	3573-2
 பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோக்குலங்கள் 	3573-3
 பொன்னி நதிக் கரைப் புறவில் புலம்புவன எதிர் கண்டார் 	3573-4

 11. அந்தணர்தம் சாத்தனூர் ஆமேய்பார் குடித் தோன்றி 	3574-1
 முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயருடையான் 	3574-2
 வந்து தனி மேய் கின்றான் வினைமாள வாழ்நாளை 	3574-3
 வெந்தொழில் கூற்றுவன் கூற்று உண்ண வீடி நிலத்து இடை வீழ்ந்தான் 	3574-4

 12. மற்றவன் தன் உடம்பினை அக்கோக் குலங்கள் வந்து அணைந்து 	3575-1
 சுற்றி மிகக் கதறுன சுழல்வன மோப்பனவாக 	3575-2
 நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ 	3575-3
 உற்றதுயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார் 	3575-4

 13.  இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று 	3576-1
 அவன் உடலில் தம் உயிரை அடை விக்க அருள் புரியும் 	3576-2
 தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற 	3576-3
 பவன வழி அவன் உடலில் தம் உயிரைப் பாய்த்தினார் 	3576-4

 14. பாய்த்திய பின் திரு மூலராய் எழலும் பசுக்கள் எலாம் 	3577-1
 நாத் தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப் பொடு நயந்து 	3577-2
 வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்துத் துள்ளிப்பின் 	3577-3
 நீத்த துயரினவாகி நிரைந்து போய் மேந்தனவால் 	3577-4

 15.  ஆவின் நிரை மகிழ்வுறக் கண்ட அளிகூர்ந்த அருளினராய் 	3578-1
 மேவியவை மேய் விடத்துப் பின் சென்று மேய்ந்தவை தாம் 	3578-2
 காவிரி முன் துறைத் தண்ணீர் கலந்து உண்டு கரை ஏறப் 	3578-3
 பூவிரி தண் புறவின் நிழல் இனிதாகப் புறங்காத்தார் 	3578-4

 16. வெய்ய சுடர்க் கதிரவனும் மேல் பாலை மலை அணையச் 	3579-1
 சைவ நெறி மெய் உணந்தோர் ஆன் இனங்கள் தாமே முன் 	3579-2
 பைய நடப்பன கன்றை நினைந்து படர் வன வாகி 	3579-3
 வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்தப் பின் போனார் 	3579-4

 17. போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை தோறும் புகநின்றார் 	3580-1
 மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று 	3580-2
 ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள் 	3580-3
 ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய்தீண்ட அதற்கு இசையார் 	3580-4

 18. அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள் 	3581-1
 தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் எனத்தளர 	3581-2
 இங்கு உனக்கு என்னுடன் அணை ஒன்று இல்லை என எதிர்மறுத்துப் 	3581-3
 பொங்கு தவத்தோர் ஆங்கோர் பொது மடத்தின் உட்புகுந்தார் 	3581-4

 19. இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம் 	3582-1
 சொல் ஆடாது இருந்தவர் பால் அணையாது துயிலாதாள் 	3582-2
 பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப 	3582-3
 நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார் 	3582-4

 20.  பித்து உற்ற மயல் அன்று பிறிது ஒரு சார்பு உளது அன்று 	3583-1
 சித்த விகற்பம் களைந்து தெளிந்த சிவ யோகத்தில் 	3583-2
 வைத்த கருத்தினர் ஆகி வரம்பில் பெருமையில் இருந்தார் 	3583-3
 இத்தகைமை அளப்பு அரிதால் யாராலும் என உரைப்பார் 	3583-4

 21. பற்று அறுத்த உபதேசப் பரமர் பதம் பெற்றார் போல் 	3584-1
 முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள் 	3584-2
 சுற்றம் இயல் பினுக்கு எய்தார் என்று உரைப்பத் துயர் எய்தி 	3584-3
 மற்றவளும் மையலுற மருங்குள்ளார் கொண்டு அகன்றார் 	3584-4

 22. இந் நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள் 	3585-1
 வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த 	3585-2
 முந்தை உடல் பொறைகாணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞானச் 	3585-3
 சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார் 	3585-4

 23. தண்ணிலவார் சடையார் தாம் தந்த ஆகமப் பொருளை 	3586-1
 மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக் 	3586-2
 கண்ணிய அத்திரு அருளால் அவ்வுடலைக் கரப்பிக்க 	3586-3
 எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார் 	3586-4

 24. சுற்றிய அக் குலத்துள்ளார் தொடர்ந்தார்கு தொடர்வு இன்மை 	3587-1
 முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின் 	3587-2
 பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்துப் பெருகு ஆர்வச் 	3587-3
 செற்றம் முதல் கடிந்தவர்தாம் ஆவடுதண் துறை சேர்ந்தார் 	3587-4

 25.  ஆவடு தண் துறை அணைந்து அங்கு அரும் பொருளை உறவணங்கி 	3588-1
 மேவுவார் புறக் குடபால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ்த் 	3588-2
 தேவிருக்கை அமர்ந்து அருளிச் சிவயோகம் தலை நின்று 	3588-3
 பூவலரும் இதயத்துப் பொருளோடும் உணர்ந்து இருந்தார் 	3588-4

 26.  ஊன் உடம்பில் பிறவிவிடம் தீர்ந்து உலகத்தோய் உய்ய 	3589-1
 ஞானம் முதல் நான்கு மலர் நல் திரு மந்திர மாலை 	3589-2
 பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாக பரம் பொருளாம் 	3589-3
 ஏன எயிறு அணிந்தாரை ஒன்றவன்தான் என எடுத்து 	3589-4

 27. முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி 	3590-1
 மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து 	3590-2
 சென்னி மதி அணிந்தார் தம் திரு அருளால் திருக் கயிலை 	3590-3
 தன்னில் அணைந்து ஒரு காலும் பிரியாமைத் தாள் அடைந்தார் 	3590-4

 28. நலம் சிறந்த ஞான யோகக் கிரியா சரியை யெலாம் 	3591-1
 மலர்ந்த மொழித் திருமூலத் தேவர் மலர்க் கழல் வணங்கி 	3591-2
 அலர்ந்த புகழ்த் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட 	3591-3
 தலம் குலவு விறல் தண்டி அடிகள் திறம் சாற்றுவாம் 	3591-4


31 தண்டியடிகள் புராணம்
 1. தண்டி அடிகள் திரு ஆரூர் பிறக்கும் பெருமைத் தவம் உடையார் 	3592-1
 அண்ட வாணர் மறை பாட ஆடும் செம் பொன் கழல் மனத்துக் 	3592-2
 கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றிப் புற நோக்கும் 	3592-3
 கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார் 	3592-4

 2. காணும் கண்ணால் காண்பது மெய்த் தொண்டே ஆன கருத்து உடையார் 	3593-1
 பேணும் செல்வத் திருவாரூர்ப் பெருமான் அடிகள் திரு அடிக்கே 	3593-2
 பூணும் அன்பினால் பரவிப் போற்றும் நிலைமை புரிந்து அமரர் 	3593-3
 சேணும் அறிய அரியதிருத் தொண்டில் செறியச் சிறந்து உள்ளார் 	3593-4

 3. பூவார் சடிலத் திருமுடியார் மகிழ்ந்த செல்வப் பூங்கோயில் 	3594-1
 தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாரய் செம்மை புரி 	3594-2
 நாவால் இன்பம் உறும் காதல் நமச்சிவாய நற்பதமே 	3594-3
 ஓவா அன்பில் எடுத்து ஓதி ஒரு நாள் போல வரும் நாளில் 	3594-4

 4. செம் கண் விடையார் திருக்கோயில் குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு 	3595-1
 எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால் 	3595-2
 அங்கு அந்நிலைமை தனைத் தண்டி அடிகள் அறிந்தே ஆதரவால் 	3595-3
 இங்கு நான் இக் குளம் பெருகக் கல்ல வேண்டும் என்று எழுந்தார் 	3595-4

 5. குழி வாய் அதனில் குறி நட்டுக் கட்டும் கயிறு குளக் குலையின் 	3596-1
 இழிவாய்ப் புறத்து நடுத் தறியோடு இசையக் கட்டி இடை தடவி 	3596-2
 வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவிப் போய் 	3596-3
 ஒழியா முயற்சியால் உய்த்தார் ஓதும் எழுத்தஞ்சுடன் உய்ப்பார் 	3596-4

 6. நண்ணிநாளும் நல்தொண்டர் நயந்த விருப்பால் மிகப் பெருகி 	3597-1
 அண்ணல் தீர்த்தக் குளம் கல்லக்கண்ட அமணர் பொறார் ஆகி 	3597-2
 எண்ணித் தண்டி அடிகள் பால் எய்தி முன் நின்று இயம்புவார் 	3597-3
 மண்ணைக் கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார் 	3597-4

 7. மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம் 	3598-1
 தேசு பெருகும் திருத் தொண்டர் செப்புகின்றார் திரு இலிகாள் 	3598-2
 பூசு நீறு சாந்தம் எனப் புனைந்த பிரானுக்கு ஆன பணி 	3598-3
 ஆசிலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார் 	3598-4

 8. அந்தம் இல்லா அறிவு உடையார் உரைப்பக் கேட்ட அறிவு இல்லார் 	3599-1
 சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ என்ன 	3599-2
 மந்த உணர்வும் விழிக்குருடும் கேளாச் செவியும் மற்று உமக்கே 	3599-3
 இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார் 	3599-4

 9. வில்லால் எயில் மூன்று எரித்தபிரான் விரையார் கமலச் சேவடிகள் 	3600-1
 அல்லால் வேறுகாணேன் யான் அதுநீர் அறிதற்கார் என்பார் 	3600-2
 நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு 	3600-3
 எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார் 	3600-4

 10. அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல் 	3601-1
 பெருகும் இவ்வூரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று 	3601-2
 கருகு முருட்டு கைகளால் கொட்டை வாங்கிக் கருத்தின் வழித் 	3601-3
 தருகைக்கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார் 	3601-4

 11. வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட தண்டி அடிகள்தாம் 	3602-1
 மைகொள் கண்டர் பூங்கோயில் மணிவாயிலின் முன் வந்து இறைஞ்சி 	3602-2
 ஐயனே இன்று அமணர்கள் தாம் என்னை அவமானம் செய்ய 	3602-3
 நைவது ஆனேன் இது தீர நல்கும் அடியேற்கு எனவீழ்ந்தார் 	3602-4

 12. பழுது தீர்ப்பார் திருத் தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து 	3603-1
 தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப் பெறாது 	3603-2
 அழுது கங்குல் அவர் துயிலக் கனவில் அகில லோகங்கள் 	3603-3
 முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளிச் செய்கின்றார் 	3603-4

 13.  நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழித் தந்த 	3604-1
 வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய் 	3604-2
 அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர் பால் நீங்கி அவ்விரவே 	3604-3
 துஞ்சும் இருளில் அரசன் பால் தோன்றிக் கனவில் அருள் புரிவார் 	3604-4

 14.  தண்டி நமக்குக் குளம் கல்லக் கண்ட அமணர் தரியாராய் 	3605-1
 மிண்டு செய்து பணிவிலக்க வெகுண்டான் அவன்பால் நீ மேவிக் 	3605-2
 கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளித் 	3605-3
 தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்து அருளினார் அத்தொழில் உவப்பார் 	3605-4

 15. வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்பப் 	3606-1
 பூந்தண் கொன்றை வேய்ந்தவரைப் போற்றிப் புலரத் தொண்டர்பால் 	3606-2
 சார்ந்து புகுந்த படி விளம்பத்தம் பிரானார் அருள் நினைந்தே 	3606-3
 ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார் 	3606-4

 16.  மன்ன! கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்த குளம் கல்லத் 	3607-1
 துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லிப் 	3607-2
 பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்ததறிகள் அவை வாங்கி 	3607-3
 என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டைப் பறித்தார் என்று இயம்பி 	3607-4

 17.  அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு 	3608-1
 எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன 	3608-2
 இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இதுமேல் 	3608-3
 வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார் 	3608-4

 18. அருகர் தம்மை அரசனும் அங்கு அழைத்துக் கேட்க அதற்கு இசைந்தார் 	3609-1
 மருவும் தொண்டர் முன்போக மன்னன் பின்போய் மலர்வாவி 	3609-2
 அருகு நின்று விறல் தண்டி அடிகள் தம்மை முகம் நோக்கிப் 	3609-3
 பெருகுந் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் எனப் பெரியோர் 	3609-4

 19.  ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று 	3610-1
 வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார் 	3610-2
 ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்செழுத்தை 	3610-3
 வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணிநீர் மூழ்கினார் 	3610-4

 20. தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர்க்கண் பெற்று எழுந்தார் 	3611-1
 பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண்பூமாரி 	3611-2
 இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாறக் கண்டு 	3611-3
 பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான் 	3611-4

 21. தண்டி யடிகள் தம்முடனே ஒட்டிக் கெட்ட சமண் குண்டர் 	3612-1
 அண்டர் போற்றும் திருவாரூர் நின்றும் அகன்று போய்க் கழியக் 	3612-2
 கண்ட அமணர் தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என 	3612-3
 மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி 	3612-4

 22. குழியில் விழுவார் நிலை தளர்வார் கோலும் இல்லை- என உரைப்பார் 	3613-1
 வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோம் என்பாமதி-கெட்டீர் 	3613-2
 அழியும் பொருளை வட்டித்து இங்கு கழிந்தோம் என்பார்-அரசனுக்கு 	3613-3
 பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர்-பறிதலையார் 	3613-4

 23. பீலி தடவிக் காணாது பெயர்வார் நின்று பேதுறுவார் 	3614-1
 காலினோடு கை முறியக் கல் மேல் இடறி வீழ்வார்கள் 	3614-2
 சால நெருங்கி எதிர் எதிரே தம்மில் தாமே முட்டிடுவார் 	3614-3
 மாலும் மனமும் அழிந்து ஓடி வழிகள் அறியார் மயங்குவார் 	3614-4

 24. அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர் தாம் 	3615-1
 சொன்ன வண்ணமே அவரை ஓடத் தொடர்ந்து துரந்து அதன்பின் 	3615-2
 பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளம் சூழ் கரைபடுத்து 	3615-3
 மன்னவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடிபணிந்தான் 	3615-4

 25. மன்னன் வணங்கிப் போயின பின் மாலும் அயனும் அறியாத 	3616-1
 பொன் அம் கழல்கள் போற்றி இசைத்து புரிந்த பணியும் குறை முடித்தே 	3616-2
 உன்னும் மனத்தால் அஞ்சு எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே 	3616-3
 மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார் 	3616-4

 26. கண்ணின் மணிகள் அவை இன்றிக் கயிறு தடவி குளம்தொட்ட 	3617-1
 எணில் பெருமைத் திருத் தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி 	3617-2
 விண்ணில் வாழ்வார் தாம் வேண்டப் புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர் 	3617-3
 உள் நிலாவும் புகழ்த் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம் 	3617-4


32 மூர்க்க நாயனார் புராணம்
 1. மன்னிப் பெருகும் பெரும் தொண்டை வளநாடு அதனில் வயல் பரப்பும் 	3618-1
 நல் நித்திலம் வெண் திரைப்பாலி நதியின் வடபால் நலம் கொள் பதி 	3618-2
 அன்னப் பெடைகள் குடை வாவி அலர் புக்காட அரங்கின் இடை 	3618-3
 மின்னுக் கொடிகள் துகில் கொடிகள் விழவில் காடு வேற்காடு 	3618-4

 2. செம் பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடைக் கற்றை 	3619-1
 நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு 	3619-2
 இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும் 	3619-3
 தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார் 	3619-4

 3. கோதில் மரபில் பிறந்துவளர்ந்து அறிவு கொண்ட நாள்தொடங்கி 	3620-1
 ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார் 	3620-2
 காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்யக்கண்டு உண்ணும் 	3620-3
 நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார் 	3620-4

 4. தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவைஅமைத்து 	3621-1
 மேய அடியார் தமைப் போற்றி விருப்பால் அமுது செய்வித்தே 	3621-2
 ஆய பொருளும் அவர் வேண்டும் படியால் உதவி அன்பு மிக 	3621-3
 ஏயுமாறு நாள் தோறும் இனைய பணி செய்து இன்புற்றார் 	3621-4

 5. இன்ன செயலின் ஒழுகுநாள் அடியார் மிகவும் எழுந்து அருள 	3622-1
 முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன் 	3622-2
 மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே 	3622-3
 அன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார் 	3622-4

 6. அங்கண் அவ்வூர் தமக்கு ஒருபால் அடியார் தங்கட்கு அமுத ஆக்க 	3623-1
 எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்துஅயர்வார் 	3623-2
 தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நற்சூதால் 	3623-3
 பொங்கும் பொருள் ஆக்கவும் அங்குப் பொருவார் இன்மை இனில் போவார் 	3623-4

 7. பெற்றம் ஏறிப் பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள் 	3624-1
 உற்ற அன்பால் ¦ச்ன்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து 	3624-2
 கற்ற சூதால் நியதியாம் கருமம் முடித்தே கருதாரூர் 	3624-3
 செற்ற சிலையார் திருக் குடந்தை அடைந்தார் வந்து சில நாளில் 	3624-4

 8. இருளாரும் மணிகண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்கப் 	3625-1
 பொருளாயம் எய்துதற்குப் புகழ்க் குடந்தை அம்பலத்தே 	3625-2
 உருளாயச் சூது ஆடி உறுபொருள் வென்றன நம்பர் 	3625-3
 அருளாகவே கொண்டு அமுது செய்வித்து இன்புறுவார் 	3625-4

 9. முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ளப் 	3626-1
 பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கிச் 	3626-2
 சொல் சூதால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்தி 	3626-3
 நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால் நிலத்தில் 	3626-4

 10. சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில் 	3627-1
 தீது அகல அமுது ஆக்குவார் கொள்ளத் தாம் தீண்டார் 	3627-2
 காதல் உடன் அடியார்கள் அமுது செயக் கடைப் பந்தி 	3627-3
 ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள் 	3627-4

 11. நாதன் தன் அடியார்க்கு நல் அடிசில் நாள்தோறும் 	3628-1
 ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே 	3628-2
 ஏதங்கள் போய் அகல இவ் உலகைவிட்டு அதன்பின் 	3628-3
 பூதங்கள் இசைபாட ஆடுவார் புரம் புக்கார் 	3628-4

 12. வல்லார்கள் தமைவென்று சூதினால் வந்த பொருள் 	3629-1
 அல்லாரும் கறைக் கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும் 	3629-2
 நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கிச் 	3629-3
 சொல்லார் சீர்ச் சோமாசி மாறர் திறம் சொல்லுவாம் 	3629-4


33 சோமாசி மாற நாயனார் புராணம்
 1. சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை 	3630-1
 வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர் 	3630-2
 ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால் 	3630-3
 பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார் 	3630-4

 2. யாழின் மொழியாள் தனிப் பாகரைப் போற்றும் யாகம் 	3631-1
 ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன 	3631-2
 ஏழும் உவப்பப் புரிந்து இன்புறச் செய்த பேற்றால் 	3631-3
 வாழும் திறம் ஈசர் மலர்க் கழல் வாழ்த்தல் என்பார் 	3631-4

 3. எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால் 	3632-1
 அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார் 	3632-2
 சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மை 	3632-3
 நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார் 	3632-4

 4. சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி 	3633-1
 ஆரம் திகழ் மார்பின் அணுக்கவன் தொண்டர்க்கு அன்பால் 	3633-2
 சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கிப் 	3633-3
 பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார் 	3633-4

 5. துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம் 	3634-1
 வென்று இங்கு இது நல்நெறி சேரும் விளக்கம் என்றே 	3634-2
 வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப 	3634-3
 என்றும் நிலவும் சிவலோ கத்தில் இன்பம் உற்றார் 	3634-4


சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
 1. பணையும் தடமும் புடை சூழும் ஒற்றியூரில் பாகத்தோர் 	3635-1
 துணையும் தாமும் பிரியாதார் தோழத்தம் பிரானாரை 	3635-2
 இணையும் கொங்கைச் சங்கிலியார் எழில் மென்பணை தோள் எய்துவிக்க 	3635-3
 அணையும் ஒருவர் சரணமே அரணமாக அடைந்தோமே 	3635-4


திருச்சிற்றம்பலம் 


வம்பறா வரிவண்டு சருக்கம் முற்றிற்று.


This webpage was last updated on 13 July 2004

See Also:
1. Stories of the nAyanmAr in English with Pictures

Back to periya purANam Page
Back to thirumuRai Page
Back to Shaiva Sidhdhantha Home Page