thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, TSCII format)

சேக்கிழார் அருளிய்

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

6 வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.


திருச்சிற்றம்பலம் 
 

6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்

28 திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்
 1. வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் 	1899-1
 பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத 	1899-2
 சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர் 	1899-3
 பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம் 	1899-4

 2. சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார் தம் 	1900-1
 மன்னிய சைவத் துறையின் வழி வந்த குடி வளவர் 	1900-2
 பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால் 	1900-3
 கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர் 	1900-4

 3. அப் பதி தான் அந்தணர் தம் கிடைகள் அரு மறை முறையே 	1901-1
 செப்பும் ஒலி வளர் பூகச் செழும் சோலை புறம் சூழ 	1901-2
 ஒப்பில் நகர் ஓங்குதலால் உகக் கடை நாள் அன்றியே 	1901-3
 எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளதால் 	1901-4

 4. அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள் 	1902-1
 விரி சுடர் மா மணிப் பதணம் மீது எறிந்த திரை வரைகள் 	1902-2
 புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில் 	1902-3
 வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்குமால் 	1902-4

 5. வளம் பயிலும் புறம் பணைப் பால் வாசப் பாசடை மிடைந்த 	1903-1
 தளம் பொலியும் புனல் செந்தாமரைச் செவ்வித தட மலரால் 	1903-2
 களம் பயில் நீர்க் கடல் மலர்வது ஒரு பரிதி எனக் கருதி 	1903-3
 இளம் பரிதி பல மலர்ந்தாற் போல்ப உள இலஞ்சி பல 	1903-4

 6. உளம் கொள் மறை வேதியர் தம் ஓமத் தூமத்து இரவும் 	1904-1
 கிளர்ந்த திரு நீற்று ஒளியில் கெழுமிய நண் பகலும் அலர்ந்து 	1904-2
 அளந்து அறியாப் பலூழி ஆற்றுதலால் அகல் இடத்து 	1904-3
 விளங்கிய அம்மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை 	1904-4

 7. பரந்த விளைவயல் செய்ய பங்கயமாம் பொங்கு எரியில் 	1905-1
 வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய் 	1905-2
 நிரந்தரம் நீள் இலைக் கடையால் ஒழுகுதலால் நெடிது அவ்வூர் 	1905-3
 மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளதால் 	1905-4

 8. வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண்மதியம் 	1906-1
 சோலை தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்ப் 	1906-2
 பால் அணைந்து மதுத் தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி 	1906-3
 மாலை எழும் செவ்வொளிய மதியம் போல் வதியுமால் 	1906-4

 9. காமர் திருப்பதி அதன் கண் வேதியர் போல் கடி கமழும் 	1907-1
 தாமரையும் புல்லிதமும் தயங்கிய நூலும் தாங்கித் 	1907-2
 தூமரு நுண் துகள் அணிந்து துளி வருகண்ணீர் ததும்பித் 	1907-3
 தேமரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடுமால் 	1907-4

 10. புனைவார் பொன் குழை அசையப் பூந்தானை பின் போக்கி 	1908-1
 வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குற வெண் சுதை ஒழுக்கும் 	1908-2
 கனை வானமுகில் கூந்தல் கதிர் செய் வடமீன் கற்பின் 	1908-3
 மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம் பொலிவ மாடங்கள் 	1908-4

 11. வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப் பண்ணை தொறும் 	1909-1
 பூழியுற வகுத்து அமைத்துப் பொன் புனை கிண்கிணி ஒலிப்ப 	1909-2
 ஆழி மணிச் சிறு தேர் ஊர்ந்த அவ்விரதப் பொடியாடும் 	1909-3
 வாழி வளர் மறைச் சிறார் நெருங்கியுள மணி மறுகு 	1909-4

 12. விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம் 	1910-1
 தொடு குடுமி நாசி தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல் 	1910-2
 உடுஎனு நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால் 	1910-3
 நெடு விசும்பு தளிப்பது என நெருங்கியுள மருங்கு எல்லாம் 	1910-4

 13. மடை எங்கும் மணிக்குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம் 	1911-1
 புடை எங்கும் மலர்ப் பிறங்கல் புறம் எங்கும் மகப் பொலிவு 	1911-2
 கிடை எங்கும் கலைச் சூழல் கிளர் எங்கும் முரல் அளிகள் 	1911-3
 இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி 	1911-4

 14. பிரமபுரம் வேணுபுரம் புகலி பெருவெம் குரு நீர்ப் 	1912-1
 பொருவில் திருத் தோணிபுரம் பூம்தராய் சிரபுரம் முன் 	1912-2
 வருபுறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சை வயம் 	1912-3
 பரவு திருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால் 	1912-4

 15. அப்பதியின் அந்தணர் தம் குடி முதல்வர் ஆசில் மறை 	1913-1
 கைப்படுத்த சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச் 	1913-2
 செப்பும் நெறி வழிவந்தார் சீவபாத இருதயர் என்று 	1913-3
 இப் புவி வாழத் தவம் செய் இயல்பினார் உளர் ஆனார் 	1913-4

 16. மற்றவர் தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு 	1914-1
 பெற்றியினார் எவ்வுலகும் பெறற்கு அரிய பெருமையினார் 	1914-2
 பொற்புடைய பகவதியார் எனப் போற்றும் பெயர் உடையார் 	1914-3
 கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார் 	1914-4

 17. மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார் 	1915-1
 அரவு அணிந்த சடை முடியார் அடியலால் அறியாது 	1915-2
 பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய் 	1915-3
 விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள் 	1915-4

 18. மேதினி மேல் சமண் கையர் சாக்கியர் தம் பொய்ம்மிகுந்த 	1916-1
 ஆதி அருமறை வழக்கம் அருகி அரன் அடியார் பால் 	1916-2
 பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழியக் கண்டு 	1916-3
 ஏதமில் சீர் சிவ பாத இருதயர் தாம் இடர் உழந்தார் 	1916-4

 19. மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார் 	1917-1
 அனையநிலை தலை நின்றே ஆய சேவடிக் கமலம் 	1917-2
 நினைவுற முன் பர சமயம் நிராகரித்து நீர் ஆக்கும் 	1917-3
 புனை மணிப்பூண் காதலனைப் பெறப் போற்றும் தவம் புரிந்தார் 	1917-4

 20. பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலித் 	1918-1
 திருத்தோணி வீற்று இருந்தார் சேவடிக் கீழ் வழிபட்டுக் 	1918-2
 கருத்து முடிந்திடம் பரவும் காதலியார் மணி வயிற்றில் 	1918-3
 உருத் தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளதாக 	1918-4

 21.  ஆள் உடையாளுடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி 	1919-1
 மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறைநூல் முறைச் சடங்கு 	1919-2
 நாள் உடைய ஈரைந்து திங்களினும் நலம் சிறப்பக் 	1919-3
 கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வ்வுறுநாள் 	1919-4

 22. அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே 	1920-1
 பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழத் 	1920-2
 திருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத் 	1920-3
 தருக்கொழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க 	1920-4

 23. தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறி 	1921-1
 எண் திசையும் தனி நடப்ப ஏழ் உலகும் குளிர் தூங்க 	1921-2
 அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக 	1921-3
 வண் தமிழ் செய்தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப 	1921-4

 24. திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற 	1922-1
 மிசை உலகும் பிறவுலகும் மேதினியே தனி வெல்ல 	1922-2
 அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல 	1922-3
 இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக 	1922-4

 25. தாளுடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற 	1923-1
 நாளுடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க 	1923-2
 வாளுடைய மணிவீதி வளர்காழிப் பதிவாழ 	1923-3
 ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக 	1923-4

 26. அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமயப் 	1924-1
 பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி தொறும் 	1924-2
 தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சராசரங்கள் எலாம் 	1924-3
 சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார் 	1924-4

 27. அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர் 	1925-1
 எப்பெயரினோரும் அயல் எய்தும் இடையின்றி 	1925-2
 மெய்ப்படு மயிர்ப் புளகம் மேவி அறியாமே 	1925-3
 ஓப்பில் களி கூர்வதோர் உவப்புற உரைப்பார் 	1925-4

 28. சிவன் அருள் எனப் பெருகும் சித்தம் மகிழ் தன்மை 	1926-1
 இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார் 	1926-2
 கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான் 	1926-3
 அவன் வருநிமித்தம் இது என்று அதிசயித்தார் 	1926-4

 29. பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும் 	1927-1
 தே மருவு தாதோடு துதைந்த திசை எல்லாம் 	1927-2
 தூ மருவு சோதி விரியத் துகள் அடக்கி 	1927-3
 மா மலய மாருதமும் வந்து அசையும் அன்றே 	1927-4

 30. மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பில் 	1928-1
 சோலை மலர் போல மலர் மா மழை சொரிந்தே 	1928-2
 ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும் 	1928-3
 சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார் 	1928-4

 31. பூத கண நாதர் புவி வாழ அருள் செய்த 	1929-1
 நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார் 	1929-2
 ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவா 	1929-3
 வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும் 	1929-4

 32. பயன் தருவ ப·றருவும் வல்லிகளும் மல்கித் 	1930-1
 தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும் 	1930-2
 வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா 	1930-3
 நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம் 	1930-4

 33. அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச் 	1931-1
 சங்கம் படகம் கருவி தாரை முதலான 	1931-2
 எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் 	1931-3
 மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம் 	1931-4

 34. இரும் புவனம் இத்தகைமை எய்த அவர் தம்மைத் 	1932-1
 தரும் குல மறைத் தலைவர் தம் பவன முன்றில் 	1932-2
 பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே 	1932-3
 அரும் திரு மகப் பெற அணைந்த அணி செய்வார் 	1932-4

 35. காதல் புரி சிந்தை மகிழக் களி சிறப்பார் 	1933-1
 மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார் 	1933-2
 சூத நிகழ் மங்கல வினைத் துழனி பொங்கச் 	1933-3
 சாதக முறைப் பல சடங்கு வினை செய்வார் 	1933-4

 36. மா மறை விழுக்குல மடந்தையர்கள் தமில் 	1934-1
 தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல் மயில் என்னத் 	1934-2
 தூ மணி விளக்கொடு சுடர்க் குழைகள் மின்னக் 	1934-3
 காமர் திரு மாளிகை கவின் பொலிவு செய்வார் 	1934-4

 37. சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி 	1935-1
 உண்ணிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார் 	1935-2
 வெண் முளைய பாலிகைகள் வேதி தொறும் வைப்பார் 	1935-3
 புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார் 	1935-4

 38. செம் பொன் முதலான பல தான வினை செய்வார் 	1936-1
 நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார் 	1936-2
 வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர் 	1936-3
 நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார் 	1936-4

 39. ஐயவி உடன் பல அமைத்த புகையாலும் 	1937-1
 நெய் அகில் நறுங்குறை நிறைத்த புகையாலும் 	1937-2
 வெய்ய தழல் ஆகுதி விழுப் புகையினாலும் 	1937-3
 தெய்வ மணம் நாறவரு செய் தொழில் விளைப்பார் 	1937-4

 40.  ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர் 	1938-1
 நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த 	1938-2
 தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின் 	1938-3
 மேய விதி ஐயிரு தினத்தினும் விளைத்தார் 	1938-4

 41. நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்திச் 	1939-1
 சேம உதயப் பரிதியில் திகழ் பிரானைத் 	1939-2
 தாமரை மிசைத் தனி முதல் குழவி என்னத் 	1939-3
 தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார் 	1939-4

 42. பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால் 	1940-1
 அரு மறை குழைத்த அமுது செய்து அருளுவாரைத் 	1940-2
 தருமிறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே 	1940-3
 திருமுலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார் 	1940-4

 43.  ஆறுலவு செய்ய சடை ஐயர் அருளாலே 	1941-1
 பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு 	1941-2
 வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார் 	1941-3
 நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார் 	1941-4

 44. தாயர் திரு மடித்தலத்தும் தயங்கு மணித் தவிசினிலும் 	1942-1
 தூய சுடர்த் தொட்டிலினும் தூங்கு மலர்ச் சயனத்தும் 	1942-2
 சேய பொருள் திருமறையும் தீம் தமிழும் சிறக்க வரு 	1942-3
 நாயகனைத் தாலாட்டும் நலம் பல பாராட்டினார் 	1942-4

 45. வரும் முறைமைப் பருவத்தில் வளர் புகலிப் பிள்ளையார் 	1943-1
 அரு மறைகள் தலை எடுப்ப ஆண்ட திருமுடி எடுத்துப் 	1943-2
 பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல் 	1943-3
 திருமுக மண்டலம் அசையச் செங்கீரை ஆடினார் 	1943-4

 46.  நாம் அறியோம் பர சமயம் உலகிர் எதிர் நாடாது 	1944-1
 போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன் பால் 	1944-2
 காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல் 	1944-3
 தாமரைச் செங்கை களினால் சப்பாணி கொட்டினார் 	1944-4

 47. விதி தவறுபடும் வேற்றுச் சமயங்கள் இடை விழுந்து 	1945-1
 கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை 	1945-2
 நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார் 	1945-3
 மதி தவழ் மாளிகை முன்றின் மருங்கு தவழ்ந்து அருளினார் 	1945-4

 48. சூழ வரும் பெருஞ்சுற்றத்துத் தோகையரும் தாதியரும் 	1946-1
 காழியர் தம் சீர் ஆட்டே கவுணியர் கற்பகமே என்று 	1946-2
 ஏழ் இசையும் எவ் உலகும் தனித் தனியே 	1946-3
 வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப 	1946-4

 49. திரு நகையால் அழைத்து அவர் தம் செழு முகங்கள் மலர்வித்தும் 	1947-1
 வருமகிழ்வு தலை சிறப்ப மற்றவர் மேல் செலவுகைத்தும் 	1947-2
 உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன் 	1947-3
 பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலிப் பிள்ளையார் 	1947-4

 50. வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரிவண்டு 	1948-1
 உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலையச் செந்நின்று 	1948-2
 கிளர் ஒலி கிண்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள் 	1948-3
 தளர் நடை இட்டு அறத் தாமும் தளர் நடை இட்டு அருளினார் 	1948-4

 51. தாதியர் தங்கைப் பற்றித் தளர் நடையின் அசைவு ஒழிந்து 	1949-1
 சோதி அணி மணிச் சதங்கை தொடுத்த வடம் புடை சூழ்ந்த 	1949-2
 பாத மலர் நிலம் பொருந்தப் பருவ முறை ஆண்டு ஒன்றின் 	1949-3
 மீது அணைய நடந்து அருளி விளையாடத் தொடங்கினார் 	1949-4

 52. சிறு மணித்தேர் தொடர்ந்து உருட்டிச் செழுமணல் சிற்றில்கள் இழை 	1950-1
 நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் 	1950-2
 குறு வியர்ப்புத் துளி அரும்பக் கொழும்பொடி ஆடிய கோல 	1950-3
 மறுகு இடைப் பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார் 	1950-4

 53. மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்று இருந்த 	1951-1
 திங்கள் சேர் சடையார் தம் திரு அருட்குச் செய் தவத்தின் 	1951-2
 அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு மறையோடு உலகு உய்ய 	1951-3
 எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்து தலும் 	1951-4

 54. நாவாண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்பப் 	1952-1
 பூவாண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்த 	1952-2
 சேவாண்ட கொடியவர் தம் சிரபுரத்துச் சிறுவருக்கு 	1952-3
 மூவாண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன் 	1952-4

 55. பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர் 	1953-1
 மண்டு தவ மறைக் குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருளத் 	1953-2
 தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால் 	1953-3
 கொண்டு எழலும் வெருக் கொண்டாற் போல் அழுவார் குறிப்பு அயலாய் 	1953-4

 56. மேதகைய இந் நாளில் வேறு ஒரு நாள் வேத விதி 	1954-1
 நீதி முறைச் சடங்கு நெறி முடிப்பதற்கு நீர் ஆடத் 	1954-2
 தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூடச் 	1954-3
 சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார் 	1954-4

 57. பின் சென்ற பிள்ளையார் தமை நோக்கிப் பெருந்தவத்தோர் 	1955-1
 முன்செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும் 	1955-2
 மின் செய் பொலங் கிண் கிணிக் கால் கொட்டி அவர் மீளாமை 	1955-3
 உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார் 	1955-4

 58. கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல் 	1956-1
 இடை அறாப் பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பு இடமாய் 	1956-2
 விடை உயர்த்தார் திருத் தோணிப் பற்று விடா மேன்மை அதாம் 	1956-3
 தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார் 	1956-4

 59. பிள்ளையார்தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித் 	1957-1
 தெள்ளு நீர்ப் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி 	1957-2
 வள்ளலார் இருந்தாரை எதிர் வணங்கி மணி வாவி 	1957-3
 உள்ளிழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மகப் பெற்றார் 	1957-4

 60. நீர் ஆடித் தருப் பிடித்து நியமங்கள் பல செய்வார் 	1958-1
 நீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன்பின் 	1958-2
 ஆராத விருப்பினால் அகமர் உடம்படிய நீர் 	1958-3
 பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய் 	1958-4

 61. மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மைக் காணாது 	1959-1
 இறை தெரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல் 	1959-2
 முறை புரிந்த முன் உணர்வு மூள அழத் தொடங்கினார் 	1959-3
 நிறை புனல் வாவிக் கரையில் நின்று அருளும் பிள்ளையார் 	1959-4

 62. கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்து 	1960-1
 வண்ண மலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்ப 	1960-2
 எண்ணில் மறை ஒலி பெருக எவ் உயிரும் குதுகலிப்ப 	1960-3
 புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார் 	1960-4

 63. மெய்ம் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார் 	1961-1
 தம் மேலைச் சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளை மைதானோ 	1961-2
 செம் மேனி வெண் நீற்றார் திருத் தோணி சிகரம் பார்த்து 	1961-3
 அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள 	1961-4

 64. அந்நிலையில் திருத்தோணி வீற்று இருந்தார் அருள் நோக்கால் 	1962-1
 முன் நிலைமைத் திருத் தொண்டு முன்னி அவர்க்கு அருள் புரிவான் 	1962-2
 பொன் மலை வல்லியும் தாமும் பொருவிடை மேல் எழுந்து அருளிச் 	1962-3
 சென்னி இளம் பிறை திகழச் செழும் பொய்கை மருங்கு அணைந்தார் 	1962-4

 65. திரு மறைநூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த 	1963-1
 பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும் 	1963-2
 ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த 	1963-3
 அரு மறையாள் உடையவளை அளித்து அருள அருள் செய்வார் 	1963-4

 66. அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருள் கருணை 	1964-1
 எழுகின்ற திரு உள்ளத்து இறையவர் தாம் எவ்வுலகும் 	1964-2
 தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்து அருளித் துணை முலைகள் 	1964-3
 பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன 	1964-4

 67.  ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும் 	1965-1
 காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவான 	1965-2
 சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து 	1965-3
 வார் இணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்து அருளி 	1965-4

 68. எண்ணரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி 	1966-1
 உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர் நோக்கும் 	1966-2
 கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொன் கிண்ணம் அளித்து 	1966-3
 அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள் புரிந்தார் 	1966-4

 69. யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார் 	1967-1
 ஆவதனால் ஆளுடையப் பிள்ளையாராய் அகில 	1967-2
 தேவருக்கும் முனிவர்க்கும் தெரிஅரிய பொருளாகும் 	1967-3
 தாவில் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார் 	1967-4

 70. சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் 	1968-1
 பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் 	1968-2
 உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம் 	1968-3
 தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் 	1968-4

 71.  எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும் 	1969-1
 அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் 	1969-2
 இப்படியால் இது அன்றித் தம் இசைவு கொண்டு இயலும் 	1969-3
 துப்புரவில்லார் துணிவு துகளாகச் சூழ்ந்து எழுந்தார் 	1969-4

 72. சீர் மறையோர் சிவபாத இருதயரும் சிறு பொழுதில் 	1970-1
 நீர் மருவித் தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறி 	1970-2
 பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்தமை நோக்கி 	1970-3
 யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா 	1970-4

 73. எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு என்று 	1971-1
 கைச் சிறியது ஒருமாறு கொண்டோச்சக் கால் எடுத்தே 	1971-2
 அச் சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண் துளி பெய்து 	1971-3
 உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திருக்கை விரல் சுட்டி 	1971-4

 74. விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடைமேல் 	1972-1
 பண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப் பாவை உடன் 	1972-2
 எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி 	1972-3
 உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞானத் திருமொழியால் 	1972-4

 75. எல்லை இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை 	1973-1
 மல்லல் நெடும் தமிழால் இம் மா நிலத்தோர்க்கு உரை சிறப்ப 	1973-2
 பல் உயிரும் களிகூரத் தம் பாடல் பரமர் பால் 	1973-3
 செல்லு முறை பெறுவதற்குத் திருசெவியைச் சிறப்பித்து 	1973-4

 76. செம்மை பெற எடுத்த திருத் தோடுடைய செவியன் எனும் 	1974-1
 மெய்ம்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார் 	1974-2
 தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு 	1974-3
 எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார் 	1974-4

 77. மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் 	1975-1
 கண் நுதலான் பெரும் கருணை கைக் கொள்ளும் எனக்காட்ட 	1975-2
 எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசைபாட 	1975-3
 அண்ணல் அவற்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார் 	1975-4

 78. தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார் 	1976-1
 வழுவான மனத்தாலே மாலாய மால் அயனும் 	1976-2
 இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை 	1976-3
 விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார் 	1976-4

 79. வேத காரணராய வெண் பிறை சேர் செய்ய சடை 	1977-1
 நாதன் நெறி அறிந்து உய்யார் தம்மிலே நலம் கொள்ளும் 	1977-2
 போதம் இலாச் சமண் கையர் புத்தர் வழியாக்கும் 	1977-3
 ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர் 	1977-4

 80. திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக் காப்புச் சாத்தி 	1978-1
 இருக்கு மொழிப் பிள்ளையார் எதிர் தொழுது நின்று அருள 	1978-2
 அருள் கருணைத் திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம் 	1978-3
 பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரசமலர் மழை பொழிந்தார் 	1978-4

 81. வந்து எழும் மங்கலமான வான் அகத் துந்துபி முழக்கும் 	1979-1
 கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும் 	1979-2
 இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசைமுழக்கும் 	1979-3
 அந்தம் இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க 	1979-4

 82. மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர் தம் 	1980-1
 நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து 	1980-2
 உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவாமெய்ப் 	1980-3
 பொறை பெருகும் தவமுனிவர் எனும் கடல் புடை சூழ 	1980-4

 83. அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார் பால் 	1981-1
 இணை இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின் 	1981-2
 புணை அருள் அங்கணர் பொருவிடை தங்கிய புணர் பாகத்து 	1981-3
 துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெரும் தோணி 	1981-4

 84. அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே 	1982-1
 மண்மிசை நின்ற மறைச் சிறு போதகம் அன்னாரும் 	1982-2
 கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏகப் 	1982-3
 புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார் 	1982-4

 85.  ஈறில் பெரும் தவம் முன் செய்து தாதை எனப் பெற்றார் 	1983-1
 மாறு விழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்து ஆடி 	1983-2
 வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும் 	1983-3
 கூறும் அரும் தமிழின் பொருளான குறிப் போவார் 	1983-4

 86. தாணுவினைத் தனிகண்டு தொடர்ந்தவர் தம்மைப் போல் 	1984-1
 காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார் 	1984-2
 தோணி புரத்திறை தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம் 	1984-3
 பேணும் மனத்தொடு முன்புகு காதலர் பின் சென்றார் 	1984-4

 87. அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டவர் அல்லாதார் 	1985-1
 முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி 	1985-2
 இப்படி ஒப்பதோர் அற்புதம் எங்கு உளது என்று என்றே 	1985-3
 துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ 	1985-4

 88. பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி 	1986-1
 தங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டே 	1986-2
 இங்கு எனை ஆளும் உடையான் உமையோடும் இருந்தான் என்று 	1986-3
 அங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார் 	1986-4

 89. இன் இசை ஏழும் இசைந்த செழும் தமிழ் ஈசற்கே 	1987-1
 சொன்முறை பாடும் தொழும்பர் அருள் பெற்ற தொடக்கோடும் 	1987-2
 பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும் 	1987-3
 பொன்மணி வாயினர் கோயிலின் நின்று புறப்பட்டார் 	1987-4

 90. பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே 	1988-1
 நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி 	1988-2
 வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும் 	1988-3
 தோணி புரத்தவர் தாம் எதிர் கொண்டு துதிக்கின்றார் 	1988-4

 91.  காழியர் தவமே கவுணியர் தனமே கலை ஞானத்து 	1989-1
 ஆழிய கடலே அதன் இடை அமுதே அடியார் முன் 	1989-2
 வாழிய வந்து இம்மண் மிசை வானோர் தனி நாதன் 	1989-3
 ஏழ் இசை மொழியாள் தன் திரு அருள் பெற்று அனை என்பார் 	1989-4

 92.  மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞானப் 	1990-1
 பொறை அணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித் 	1990-2
 துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்து 	1990-3
 இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார் 	1990-4

 93.  புண்ணிய முதலே புனை மணி அரை ஞாணொடு போதும் 	1991-1
 கண் நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும் 	1991-2
 பண் இயல் கதியே பருவமது ஒரு மூவருடத்தே 	1991-3
 எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார் 	1991-4

 94. என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும் 	1992-1
 நின்று துதி செய்து அவர்தாள் நீள் முடிக்கண் மேல் ஏந்தி நிரந்த போது 	1992-2
 சென்று அணைந்த தாதையர் சிவபாத இருதயர் தாம் தெய்வ ஞானக் 	1992-3
 கன்றினை முன் புக்கு எடுத்துப் பியலின் மேல் கொண்டு களி கூர்ந்து செல்ல 	1992-4

 95. மா மறையோர் குழத்தின் உடன் மல்கு திருத் தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து 1993-1
 தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே 	1993-2
 பூ மறுகு சிவானந்தப் பெருக்காறு போத அதன் மீது பொங்கும் 	1993-3
 காமர் நுரைக் குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்தாக 	1993-4

 96. நீடு திருக் கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல் நெருங்கி அங்கண் 	1994-1
 மாடு நிறை மடவார்கள் மங்கலமாம் மொழிகளால் வாழ்த்தி வாசத் 	1994-2
 தோடு மலி நறுமலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவிநிற்பர் 	1994-3
 கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்தாக 	1994-4

 97. மங்கல தூர் இயந்து வைப்பர் மறைச் சாமம் பாடுவார் மருங்கு வேதிப் 	1995-1
 பொங்கு மணி விளக்கு எடுத்து பூரண கும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார் 	1995-2
 அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பொங்கத் 	1995-3
 தங்கு திரு மலி வீதிச் சண்பை நகர் வலம் செய்து சாரும் காலை 	1995-4

 98. தம் திரு மாளிகையின் கண் எழுந்து அருளிப் புகும் பொழுது சங்க நாதம் 	1996-1
 அந்தர துந்துபி முதலா அளவில் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் 	1996-2
 சுந்தரப் பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும் 	1996-3
 பைந்தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழிப் பவள வாயார் 	1996-4

 99. தூ மணி மாளிகையின் கண் அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாத 	1997-1
 மா மறைகள் திரண்ட பெரும் திருத் தோணி மன்னி வீற்று இருந்தார் செய்ய 	1997-2
 கா மரு சேவடிக் கமலம் கருத்திலுற இடையறாக் காதல் கொண்டு 	1997-3
 நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத் தோணி நம்பர் கோயில் 	1997-4

 100. காதல் உடன் அணைந்து திருக் கழுமலத்துக் கலந்து வீற்று இருந்த தங்கள் 	1998-1
 தாதை யாரையும் வெளியே தாங்க அரிய மெய்ஞ்ஞானம் தம்பால் வந்து 	1998-2
 போதம் முலை சுரந்து அளித்த புண்ணியத் தாயாரையும் முன் வணங்கிப் போற்றி 	1998-3
 மே தகைய அருள் பெற்றுத் திருக்கோலக் கா இறைஞ்ச விருப்பில் சென்றார் 	1998-4

 101. பெருக் கோல் இட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த 	1999-1
 வரிக் கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி 	1999-2
 திருக் கோலக்கா எய்திதித் தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்று 	1999-3
 இருக்கோல் இட்டு அறிவு அரிய திருப்பாதம் ஏத்துவதற்கு எடுத்துக் கொள்வார் 	1999-4

 102. மெய்ந் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழுப் பொருளை வேணி மீது 	2000-1
 பைந் நிறைந்த அரவுடனே பசுங்குழவித் திங்கள் பரித்து அருளுவானை 	2000-2
 மைந் நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால் 	2000-3
 கைந் நிறைந்த ஒத்து அறுத்துக் கலைப் பதிகம் கவுணியர் கோன் பாடும் காலை 	2000-4

 103. கை அதனால் ஒத்து அறுத்துப் பாடுதலும் கண்டு அருளி கருணை கூர்ந்த 	2001-1
 செய்ய சடை வானவர் தம் அஞ்செழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் 	2001-2
 ஐயர் அவர் திரு அருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த 	2001-3
 வையம் எல்லாம் உய்ய வரு மறைச் சிறுவர் கைத் தலத்து வந்தது அன்றே 	2001-4

 104. காழி வரும் பெரும் தகையார் கையில் வரும் திருத் தாளக் கருவி கண்டு 	2002-1
 வாழிய தம் திருமுடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயில் 	2002-2
 ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித் 	2002-3
 தாழும் மணிக் குழையார் முன் தக்க திருக் கடைக் காப்புச் சாத்தி நின்றார் 	2002-4

 105. உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கித் 	2003-1
 தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசைத் துறை உள்ளோர் துதித்து மண் மேல் 	2003-2
 வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும் 	2003-3
 தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளிச் சண்பை நகர் சாரச் செல்வார் 	2003-4

 106. செங்கமல மலர்க் கரத்துத் திருத் தாளத்துடன் நடந்து செல்லும் போது 	2004-1
 தங்கள் குலத் தாதையார் தரியாது தோளின் மேல் தரித்துக் கொள்ள 	2004-2
 அங்கு அவர் தம் தோளின் மிசை எழுந்து அருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும் 2004-3
 திங்கள் அணிமணி மாடத் திருத் தோணி புரத் தோணிச் சிகரக் கோயில் 	2004-4

 107. திருப் பெருகு பெரும் கோயில் சூழ வலம் கொண்டு அருளித் திருமுன் நின்றே 2005-1
 அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று 	2005-2
 விருப்புறு பொன் திருத்தோணி வீற்று இருந்தார் தமைப் பாட மேவும் காதல் 	2005-3
 பொருத்தமுற அருள் பெற்றுப் போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை 	2005-4

 108. எடுத்த திருப் பதிகத்தின் இசை திருத் தாளத்தினால் இசைய ஒத்தி 	2006-1
 அடுத்த நடை பெறப் பாடி ஆர்வமுற வணங்கிப் போந்து அலைநீர்ப் பொன்னி 	2006-2
 மடுத்த வயல் பூந் தராய் அவர் வாழ மழ விளங் கோலத்துக் காட்சி 	2006-3
 கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞானக் கொண்டலார் தாம் 	2006-4

 109. அந் நிலையில் ஆளுடைய பிள்ளையார் தமை முன்னம் அளித்த தாயார் 	2007-1
 முன் உதிக்க முயன்ற தவத் திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் 	2007-2
 மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதிக் 	2007-3
 கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார் 	2007-4

 110. மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்ப பெற்ற பெரு வார்த்தையாலே 	2008-1
 எங்கணும் நீள் பதி மருங்கில் இரு பிறப்பாளரும் அல்லா ஏனையோரும் 	2008-2
 பொங்கு திருத் தொண்டர்களும் அதிசயித்துக் குழாங் கொண்டு புகலியார் தம் 	2008-3
 சிங்க இளஏற்றின் பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார் 	2008-4

 111. வந்த திருத் தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உளோர்க்கும் 	2009-1
 சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை 	2009-2
 தம் தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர் 	2009-3
 எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எவ் உலகும் ஏத்தும் நாளில் 	2009-4

 112. செழும் தரளப் பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள் 	2010-1
 கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே 	2010-2
 எழுந்து அருள வேண்டும் என இசைந்து அருளித் தோணி வீற்று இருந்தார் 	2010-3
 பாதம் தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்றுப் பிறபதியும் தொழமுன் செல்வார் 2010-4

 113. தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது 	2011-1
 போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொறா அன்பு புரிந்த சிந்தை 	2011-2
 மாதவம் செய் தாதையார் வந்து எடுத்துத் தோளின்மேல் வைத்துக் கொள்ள 	2011-3
 நாதர் கழல் தம் முடிமேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார் 	2011-4

 114. தேன் அலரும் கொண்றையினார் திரு நன்னி பள்ளியினைச் சாரச் செல்வார் 	2012-1
 வான் அணையும் மலர்ச் சோலை தோன்றுவது எப் பதி என்ன மகிழ்ச்சி எய்திப் 	2012-2
 பானல் வயல் திரு நன்னி பள்ளி எனத் தாதையர் பணிப்பக் கேட்டு 	2012-3
 ஞான போனகர் தொழுது நல் தமிழ்ச் சொல் தொடை மாலை நவிலல் உற்றார் 	2012-4

 115.  காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மைச் 	2013-1
 சீர் இயல் பதிகம் பாடித் திருக் கடைக் காப்புத்தன்னில் 	2013-2
 நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார் தம் 	2013-3
 பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார் 	2013-4

 116.  ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர 	2014-1
 நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்றுப் 	2014-2
 போதுவார் தம்மைச் சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும் 	2014-3
 காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார் தாம் 	2014-4

 117. அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட 	2015-1
 நம் பெரும் தகையார் தம்மை எதிர் கொண்டு நண்ண வேண்டி 	2015-2
 உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவத் தொண்டரோடு 	2015-3
 தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம் 	2015-4

 118. காவணம் எங்கும் இட்டுக் கமுகொடு கதலி நாட்டி 	2016-1
 பூவணை தாமம் தூக்கிப் பூரண கும்பம் ஏந்தி 	2016-2
 ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை 	2016-3
 மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார் 	2016-4

 119. திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப் 	2017-1
 பெரு மறை ஓசை மல்கப் பெரும் திருக் கோயில் எய்தி 	2017-2
 அரு மறைப் பொருள் ஆனாரைப் பணிந்து அணிநல் சங்கத்தின் 	2017-3
 தரு முறை நெறி அக் கோயில் சார்ந்தமை அருளிச் செய்தார் 	2017-4

 120. கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி போந்து 	2018-1
 மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும் 	2018-2
 இறைவரைத் தொழுது பாடும் கொடியுடை ஏந்தி 	2018-3
 நிறைபுனல் திருச் சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார் 	2018-4

 121. பன்னகப் பூணினாரைப் பல்லவ னீச்சரத்துச் 	2019-1
 சென்னியால் வணங்கி ஏத்தித் திருந்து இசைப்பதிகம் பாடி 	2019-2
 பொன்னி சூழ் புகாரில் நீடு புனிர்தம் திருச்சாய்க் காட்டு 	2019-3
 மன்னுசீர்த் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர் கொள்ளப் புக்கார் 	2019-4

 122. வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம் கொண்டு புக்குத் 	2020-1
 தேன் அலர் கொன்றையார் தம் திருமுன்பு சென்று தாழ்ந்து 	2020-2
 மானிடம் தரித்தார் தம்மைப் போற்றுவார் மண்புகார் என்று 	2020-3
 ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செங்கை 	2020-4

 123. சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக் கடைக் காப்புப் போற்றிப் 	2021-1
 பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிடப் பயில்வார் பின்னும் 	2021-2
 ஏர் இசைப் பதிகம் பாடி ஏத்திப் போந்து இறைவர் வெண்காடு 	2021-3
 ஆரு மெய்க் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே 	2021-4

 124. பொன்னிதழ்க் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு 	2022-1
 சென்னியர் திருவெண் காட்டுத் திருத் தொண்டர் எதிரே சென்று 	2022-2
 இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க 	2022-3
 மன்னுசீர் சண்பை ஆளும் மன்னரைக் கொண்டு புக்கார் 	2022-4

 125. முத்தமிழ் விரகர் தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர்ச் 	2023-1
 சித்த நீடு உவகை யோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்குப் 	2023-2
 பத்தராம் அடியார் சூழப் பரமர் கோயிலைச் சூழ் வந்து 	2023-3
 நித்தனார் தம் முன்பு எய்தி நிலம் உறத் தொழுது வீழ்ந்தார் 	2023-4

 126. மெய்ப் பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரைச் 	2024-1
 செப்பரும்பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி 	2024-2
 முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி 	2024-3
 ஒப்பரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் 	2024-4

 127. அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில் 	2025-1
 திருமுல்லை வாயில் எய்திச் செந்தமிழ் மாலை சாத்தி 	2025-2
 மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத் 	2025-3
 தருமலி புகலி வந்து ஞானசம்பர் சார்ந்தார் 	2025-4

 128. தோணி வீற்று இருந்தார் தம்மைத் தொழுது முன் நின்று தூய 	2026-1
 ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூரச் 	2026-2
 சேண் உயர் மாடம் ஓங்கும் திருப்பதி அதனில் செய்ய 	2026-3
 வேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார் 	2026-4

 129. வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திரப் பள்ளி வாசம் 	2027-1
 செய் பொழில் குருகா வூரும் திருமுல்லை வாயில் உள்ளிட்டு 	2027-2
 எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித் 	2027-3
 தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச் சொல் மாலை 	2027-4

 130. அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன் தாள் 	2028-1
 மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவிப் போற்றி 	2028-2
 உய் வகை மண் உளோருக்கு உதவிய பதிகம் பாடி 	2028-3
 எவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்தும் நாளில் 	2028-4

 131. திரு நீல கண்டத்துப் பெரும் பாணர் தெள் அமுதின் 	2029-1
 வருநீர்மை இசைப்பாட்டு மதங்க சூளா மணியார் 	2029-2
 ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்கத் 	2029-3
 தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார் 	2029-4

 132. பெரும் பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர் கொள்ளச் 	2030-1
 சுரும்பு ஆர் கமல மலர்த் துணைப் பாதம் தொழுது எழுந்து 	2030-2
 விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய்ம் மொழிகளால் துதித்து 	2030-3
 வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார் 	2030-4

 133. அளவு இலா மகிழ்ச்சியினார் தமை நோக்கி ஐயா நீர் 	2031-1
 உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே 	2031-2
 இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு 	2031-3
 கள நிலவு நஞ்சு அணிந்தார் பால் அணையும் கவுணியனார் 	2031-4

 134. கோயிலினில் புற முன்றில் கொடு புக்குக் கும்பிடுவித்து 	2032-1
 ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என 	2032-2
 ஆய புகழ்ப் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி 	2032-3
 மேய தொடைத் தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார் 	2032-4

 135. தான நிலைக் கோல் வடித்துப் படி முறைமைத் தகுதியினால் 	2033-1
 ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை 	2033-2
 மான முறைப் பாடினியார் உடன் பாடி வாசிக்க 	2033-3
 ஞான போனகர் மகிழ்ந்தார் நான் மறையோர் அதிசயித்தார் 	2033-4

 136. யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி 	2034-1
 வாழி திருத் தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினைத் 	2034-2
 தாழும் இரு சிறைப் பறவை படிந்த தனி விசும்பு இடை நின்று 	2034-3
 ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார் 	2034-4

 137. எண்ணரும் சீர் திருத்தோணி எம் பெருமான் கழல் பரவிப் 	2035-1
 பண் அமையாழ் இசை கூடப்பெரும் பாணர் பாடிய பின் 	2035-2
 கண் நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து 	2035-3
 நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப 	2035-4

 138. பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த 	2036-1
 வெள்ள நீர்ச் சடையாரை அவர் மொழிந்த மெய்ப் பதிகம் 	2036-2
 உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய்த் 	2036-3
 தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்பு உறத் தொழுதார் 	2036-4

 139. காழியர் தவப்பயனாம் கவுணியர் தம் தோன்றலார் 	2037-1
 ஆழி விடம் உண்டவர் தம் அடி போற்றும் பதிக இசை 	2037-2
 யாழின் முறைமையின் இட்டே எவ் உயிரும் மகிழ்வித்தார் 	2037-3
 ஏழ் இசையும் பணி கொண்ட நீல கண்ட யாழ்ப்பாணர் 	2037-4

 140. சிறிய மறைக் களிறு அளித்த திருப்பதிக இசை யாழின் 	2038-1
 நெறியில் இடும் பெரும் பாணர் பின்னும் நீர் அருள் செய்யும் 	2038-2
 அறிவரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன் 	2038-3
 பிறிவு இன்றிச் சேவிக்கப் பெற வேண்டும் எனத் தொழுதார் 	2038-4

 141. மற்றதற்குப் பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள 	2039-1
 பெற்றவர் தாம் தம்பிரான் அருள் இதுவே எனப் பேணிச் 	2039-2
 சொல் தமிழ் மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே 	2039-3
 அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார் 	2039-4

 142. சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞான சம்பந்தர் 	2040-1
 பரவு திருத் தில்லை நடம் பயில்வாரைப் பணிந்து ஏத்த 	2040-2
 விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில் 	2040-3
 தர இசையும் குறிப்பு அறியத் தவ முனிவர்க்கு அருள் செய்தார் 	2040-4

 143. பிள்ளையார் அருள் செய்யப் பெரும் தவத்தால் பெற்று எடுத்த 	2041-1
 வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப 	2041-2
 வெள்ளி மால் வரை என்னத் திருத் தோணி வீற்று இருந்த 	2041-3
 புள்ளி மான் உரியாரைத் தொழுது அருளால் புறப்பட்டார் 	2041-4

 144. தாழ்வில் யாழ்ப் பாணரொடும் தாதையார் தம்மோடும் 	2042-1
 மேவிய சீர் அடியார்கன் புடை வர வெம் குரு வேந்தர் 	2042-2
 பூவின் மேல் அயன் போற்றும் புகலியினைக் கடந்து போய்த் 	2042-3
 தேவர்கள் தம் பெரும் தேவர் திருத் தில்லை வழிச் செல்வார் 	2042-4

 145. நள்ளிருட்கண் நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றி 	2043-1
 முள்ளிடைப் புற வெள் இதழ்க் கோதை முகிழ் விரி மணம் சூழப் 	2043-2
 புள்ளிடைத் தடம் பழனமும் படு கரும்பு உடை கழிந்திடப் போந்து 	2043-3
 கொள்ளிடத் திரு நதிக்கரை அணைந்தார் கவுணியர் குல தீபர் 	2043-4

 146. வண்டிரைத்து எழு செழு மலர்ப் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தித் 	2044-1
 தண் தலைப் பல வளத்தொடும் வருபுனல் தாழ்ந்து சேவடித்தாழ 	2044-2
 தெண் திரைக் கடல் பவழமும் பணிலமும் செழு மணித் திரள் முத்தும் 	2044-3
 கொண்டிரட்டி வந்தோதமங்கெதிர் கொளக் கொள்ளிடம் கடந்து ஏறி 	2044-4

 147. பல்கு தொண்டர் தம் குழாத் தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழச் 	2045-1
 செல் கதிப் பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தரக் கண்டு 	2045-2
 மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம் 	2045-3
 நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆரமுது உண்டார் 	2045-4

 148. செங்கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இத் திருந்து உலகினிற்கு எல்லாம் 	2046-1
 மங்கலம் தரு மழவிளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும் 	2046-2
 தங்கு புள்ளலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாசப் 	2046-3
 பொங்கு செம்முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை 	2046-4

 149. கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திடக் கடி மணக் குளிர் கால் வந்து 	2047-1
 உலவி முன் பணிந்து எதிர் கொளக் கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப 	2047-2
 இலகு செந்தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட 	2047-3
 மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர்ச் சோலை 	2047-4

 150. இழைத் தடம் கொங்கை இமய மாமலைக் கொடி இன் அமுது என ஞானம் 	2048-1
 குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வரக் கண்டு 	2048-2
 மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவித் 	2048-3
 தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி 	2048-4

 151. ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்து அருளும் அந் நலம் கண்டு 	2049-1
 சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீசச் 	2049-2
 சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களி கூர்வ 	2049-3
 போல் அசைந்து இரு புடைமிடைந்து ஆடின புறம்பு அணை நறும் பூகம் 	2049-4

 152. பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்விச் 	2050-1
 சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகை பரப்பாலே 	2050-2
 தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னே 	2050-3
 நிவந்த நீல நுண் துகில் விதானத்தது போன்றது நெடுவானம் 	2050-4

 153. கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி 	2051-1
 அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அணைத்தின் ஆகரம் ஆன 	2051-2
 மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி 	2051-3
 நெருங்கு தில்லை சூழ் நெடுமதில் தென் திரு வாயில் நேர் அணித்தாக 	2051-4

 154. பொங்கு கொங்கையில் கறந்த மெய் ஞானமாம் போனகம் பொன் குன்றம் 	2052-1
 மங்கை செங்கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று 	2052-2
 அங்கண் வாழ் பெரும் திருத்தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி 	2052-3
 எங்கும் மங்கல அணிமிக அலங்கரித்து எதிர் கொள அணைவார்கள் 	2052-4

 155. வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பு இடை நிறைந்து ஓங்க 	2053-1
 சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆரச் 	2053-2
 சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லிக் 	2053-3
 கோதிலாதவர் ஞானசம்பந்தரை எதிர் கொண்டு புக்கார் 	2053-4

 156. செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசைத் திருவாயில் 	2054-1
 எல்லை நீங்கி உள் புகும் திருமருங்கு நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ 	2054-2
 மல்லல் ஆவண மறுகிடைக் கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கைத் 	2054-3
 தொல்லை மாளிகை நிரைத் திரு வீதியைத் தொழுது அணைந்தனர் தூயோர் 	2054-4

 157. மலர்ந்த பேர் ஒளி குளிர் தரச் சிவமணம் கமழ்ந்து வான் துகள் மாறிச் 	2055-1
 சிலம்பு அலம்பு சேவடியவர் பயில் உறும் செம்மையால் திருத்தொண்டு 	2055-2
 கலந்த அன்பர் தம் சிந்தையில் திகழ் திருவீதி கண் களி செய்யப் 	2055-3
 பலன் கொள் மைந்தனார் எழுநிலைக் கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி 	2055-4

 158. நீடுநீள் நிலைக் கோபுரத்துள் புக்கு நிலவிய திரு முன்றின் 	2056-1
 மாடு செம் பொனின் மாளிகை வலம் கொண்டு வானுற வளர் திங்கள் 	2056-2
 சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அருமறை தொடர்ந்து ஏத்த 	2056-3
 ஆடுகின்றவர் முன்புற அணைந்தனர் அணிகிளர் மணிவாயில் 	2056-4

 159. நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட 	2057-1
 அந்தம் இல்லவர் அணுகி முன் தொழுதிரு அணுக்கனாம் திருவாயில் 	2057-2
 சிந்தை ஆர்வமும் பெருகிடச் சென்னியில் சிறிய செங்கை யேற 	2057-3
 உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார் 	2057-4

 160. அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ் ஞானமே ஆன அம்பல முந்தம் 	2058-1
 உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனிக் கூத்தும் 	2058-2
 கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழிப் 	2058-3
 புண்ணியக் கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு 	2058-4

 161. உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின் கண் 	2059-1
 அணையும் ஐம் பொறி அளவினும் எளிவர அருளினை எனப் போற்றி 	2059-2
 இணை இல் வண் பெருங் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில் 	2059-3
 புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி 	2059-4

 162.  ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில் சிறப்பால் 	2060-1
 வாழி திருத் தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே 	2060-2
 ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும் 	2060-3
 காழியர் தம் காவலனார் கற்றாங் கெரியோம்பி 	2060-4

 163. பண்ணார் பதிகத் திருக் கடை காப்புப் பரவி 	2061-1
 உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருகும் 	2061-2
 விண் நாயகன் கூத்து வெட்ட வெளியே திளைத்துக் 	2061-3
 கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார் 	2061-4

 164. முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்று 	2062-1
 சொல் மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சி 	2062-2
 பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற 	2062-3
 பொன் மாளிகையை வலம் கொண்டு புறம் போந்தார் 	2062-4

 165. செல்வத் திருமுன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம் 	2063-1
 மல்கும் திருவாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள் 	2063-2
 நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண் 	2063-3
 அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்டகையார் 	2063-4

 166. செய்ய சடையார் திருவேட்களம் சென்று 	2064-1
 கை தொழுது சொல் பதிகம் பாடிக் கழுமலக் கோன் 	2064-2
 வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்றாடும் 	2064-3
 ஐயன் திருக் கூத்துக் கும்பிட்டு அணை உறும் நாள் 	2064-4

 167. கைம் மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்து 	2065-1
 மெய்ம் மாலைச் சொல் பதிகம் பாடி விரைக் கொன்றைச் 	2065-2
 செம்மாலை வேணித் திரு உச்சி மேவியுறை 	2065-3
 அம்மானைக் கும்பிட்டு அரும் தமிழும் பாடினார் 	2065-4

 168. பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி 	2066-1
 நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார் 	2066-2
 நீடும் திருத்தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள் 	2066-3
 ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார் 	2066-4

 169.  ஆங்கு அவர் தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தே 	2067-1
 ஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார் 	2067-2
 தேன் கமழும் சோலைத் திருவேட்களம் கடந்து 	2067-3
 பூங்கிடங்கு சூழ் புலியூர் புக்கு அணையும் போழ்தின்கண் 	2067-4

 170. அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை 	2068-1
 முண்டத் திருநீற்று மூவாயிரவர்களும் 	2068-2
 தொண்டத் தகைமைக் கண நாதராய்த் தோன்றக் 	2068-3
 கண்ட அப் பரிசு பெரும் பாணர்க்கும் காட்டினார் 	2068-4

 171. செல்வம் பிரிவு அறியாத் தில்லை வாழ் அந்தணரும் 2069-1
 எல்லையில் சீர்ச் சண்பை இளவேறு எழுந்து அருளி 	2069-2
 ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி 	2069-3
 மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள் 	2069-4

 172. பொங்கி எழும் காதல் புலன் ஆகப் பூசுரர் தம் 	2070-1
 சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்த 	2070-2
 பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும் 	2070-3
 செங்கையொடும் சென்று திருவாயில் உட்புக்கார் 	2070-4

 173. ஒன்றிய சிந்தை உருக உயர் மேருக் 	2071-1
 குன்று அனைய பேர் அம்பலம் மருங்கு கும்பிட்டு 	2071-2
 மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்கக் கூத்தர் எதிர் 	2071-3
 சென்று அணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப் படிக் கீழ் 	2071-4

 174.  ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால் 	2072-1
 பாடினார் பின்னும் அப்பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில் 	2072-2
 நீடு வாழ் தில்லை நான் மறையோர் தமைக் கண்ட அந் நிலை எல்லாம் 	2072-3
 கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்துச் சிற்றம் பலம் எனக் கூறி 	2072-4

 175. இன்ன தன்மையில் இன் இசைப் பதிகமும் திருக்கடைக் காப்பு ஏத்தி 	2073-1
 மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும் 	2073-2
 பின்னுவார் சடைக் கூத்தர் பேர் அருள் பெறப் பிரியாத விடைபெற்றுப் 	2073-3
 பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்து அணைந்தனர் புறமுன்றில் 	2073-4

 176. அப் புறத்து இடை வணங்கி அங்கு அருளுடன் அணிமணித் திருவாயில் 	2074-1
 பொற்புறத் தொழுது எழுந்து உடன் போதரப் போற்றிய புகழ்ப் பாணர் 	2074-2
 நற்பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவாக்கரை மேய 	2074-3
 ஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் 	2074-4

 177. பொங்கு தெண்திரைப் புனித நீர் நிவாக்கரைக் குடதிசை மிசைப் போந்து 	2075-1
 தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்லச் 	2075-2
 செங்கை யாழ்த் திரு நீலக் கண்டப் பெரும் பாணருடன் சேர 	2075-3
 மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வரவந்தார் 	2075-4

 178. இரும் தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம் புலியூரின் 	2076-1
 மருங்கு சென்றுற நீல கண்டப் பெரும்பாணர் வணங்கிக் கார் 	2076-2
 நெருங்கு சோலை சூழ் இப்பதி அடியேன்பதி என நெடிது இன்புற்று 	2076-3
 அருங்கலைச் சிறு மழ இளங்களிறனார் அங்கணைந்து அருள் செய்வார் 	2076-4

 179.  ஐயர் நீர் அவதரித்திட இப்பதி அளவில் மாதவம் முன்பு 	2077-1
 செய்வாறு எனச் சிறப்பு உரைத்து அருளி அச் செழும்பதி இடம் கொண்ட 	2077-2
 மை கொள் கண்டர் தம் கோயில் உட்புக்கு வலம் கொண்டு வணங்கி பார் 	2077-3
 உய்ய வந்தவர் செழும் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார் 	2077-4

 180. அங்கு நின்று எழுந்து அருளி மற்றவருடன் அம்பொன்மா மலை வல்லி 	2078-1
 பங்கர் தாம் இனிது உறையும் நற் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தித் 	2078-2
 துங்க வண்தமிழ்த் தொடை மலர் பாடிப் போய்த் தொல்லை வெங்குரு வேந்தர் 	2078-3
 செங்கண் ஏற்றவர் திரு முது குன்றினைத் தொழுது சென்று அணைகின்றார் 	2078-4

 181. மொய் கொள் மா மணிக் கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று 2079-1
 எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி 	2079-2
 செய் தவத் திரு முனிவரும் தேவரும் திசையெலாம் நெருங்கப் புக்கு 	2079-3
 ஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில் ஆதரவுடன் சென்றார் 	2079-4

 182. வான நாயகர் திருமுது குன்றினை வழிபட வலம் கொள்வார் 	2080-1
 தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக் குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி 	2080-2
 ஞான போதகர் நம்பர் தம் கோயிலை நண்ணி அங்கு உள்புக்கு 	2080-3
 தேன் அலம்பு தண் கொன்றை யார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார் 	2080-4

 183. தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ் தொடை சாத்தி 	2081-1
 வாழ்ந்து போந்து அங்கண் வளம்பதி அதன் இடை வைகுவார் மணி வெற்புச் 	2081-2
 சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை 	2081-3
 வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள் 	2081-4

 184.  ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம் அணைந்து அருமறை ஓசை 	2082-1
 ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒரு தனிப் பரஞ்சோதிப் 	2082-2
 பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு பணிவுற்றுப் பரவு சொல் தமிழ் மாலை 	2082-3
 தீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும் இசைப் பதிகமும் தெரிவித்தார் 	2082-4

 185. கருவரைப்பில் புகாதவர் கை தொழும் 	2083-1
 ஒருவரைத் தொழுது உள்ளம் உவந்து போய்ப் 	2083-2
 பெருவரத்தினில் பெற்றவர் தம் உடன் 	2083-3
 திரு அரத்துறை சேர்தும் என்று ஏகுவார் 	2083-4

 186. முந்தை நாள்கள் ஒரோ ஒரு கால் முது 	2084-1
 தந்தையார்பியல் மேல் இருப்பார் தவிர்ந்து 	2084-2
 அந்தணாளர் அவர் அருகே செலச் 	2084-3
 சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர் 	2084-4

 187.  ஆதியார் தம் அரத்துறை நோக்கியே 	2085-1
 காதலால் அணைவார் கடிது ஏகிட 	2085-2
 தாதையாரும் பரிவுறச் சம்பந்தர் 	2085-3
 பாத தாமரை நொந்தன பைப்பய 	2085-4

 188. மறை அனைத்தும் ஒரு வடிவாம் என 	2086-1
 நிறை மதிப் பிள்ளை நீள் நிலம் சேர்ந்து எனத் 	2086-2
 துறை அலைக் கங்கை சூடும் அரத்துறை 	2086-3
 இறைவரைத் தொழுவான் விரைந்து ஏகினார் 	2086-4

 189. பாசம் அற்றிலர் ஆயினும் பார் மிசை 	2087-1
 ஆசை சங்கரர்கு ஆயின தன்மையால் 	2087-2
 தேசு மிக்க திருவுரு ஆனவர் 	2087-3
 ஈசனைத் தொழுதே தொழுது ஏகினார் 	2087-4

 190. இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட 	2088-1
 வந்த வைதிக மாமணி ஆனவர் 	2088-2
 சிந்தை ஆரமுதாகிய செம் சடைத் 	2088-3
 தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார் 	2088-4

 191. மாறன் பாடி எனும் பதி வந்துற 	2089-1
 ஆறு செல் வருத்தத்தின் அசைவினால் 	2089-2
 வேறு செல்பவர் வெய் துறப் பிள்ளையார் 	2089-3
 ஏறும் அஞ்செழுத்து ஓதி அங்கு எய்திட 	2089-4

 192. உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு 	2090-1
 எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போலக் 	2090-2
 கைகள் ஆயிரம் வாங்கிக் கரந்து போய் 	2090-3
 வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன் 	2090-4

 193. அற்றை நாள் இரவு அப்பதியின் இடைச் 	2091-1
 சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப் 	2091-2
 பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார் 	2091-3
 வெற்றி மாதவத்தோருடன் மேவினார் 	2091-4

 194. இந்நிலைக் கண் எழில் வளர் பூந்தராய் 	2092-1
 மன்னனார் தம் வழி வருத்தத் தினை 	2092-2
 அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறைச் 	2092-3
 சென்னியாற்றர் திருவுளம் செய்தனர் 	2092-4

 195.  ஏறுதற்குச் சிவிகை இடக்குடை 	2093-1
 கூறி ஊதக் குலவு பொன் சின்னங்கள் 	2093-2
 மாறில் முத்தின் படியினால் மன்னிய 	2093-3
 நீறு வந்த நிமலர் அருளுவார் 	2093-4

 196. நீடு வாழ் பதி யாகும் நெல் வயலின் 	2094-1
 மாட மாமணை தோறும் மறையோர்க்குக் 	2094-2
 கூடு கங்குல் கனவில் குலமறை 	2094-3
 தேடு சேவடி தோன்ற முன் சென்று பின் 	2094-4

 197.  ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான் 	2095-1
 மான முகத்தின் சிவிகை மணிக் குடை 	2095-2
 ஆன சின்னம் நம் பால் கொண்டு அருங்கலைக் 	2095-3
 கோன் அவன் பால் அணைந்து கொடும் என 	2095-4

 198. அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில் 	2096-1
 வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும் 	2096-2
 சிந்தையோடும் செழுநீர் அரத்துறை 	2096-3
 இந்து சேகரர் கோயில் வந்து எய்தினர் 	2096-4

 199.  ஆங்கு மற்ற அருள் அடியாருடன் 	2097-1
 ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயின 	2097-2
 ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர் 	2097-3
 தாங்கள் அம்மறையோர்கள் முன் சாற்றினார் 	2097-4

 200. சால மிக்க வியப்புறு தன்மையின் 	2098-1
 பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின் 	2098-2
 காலம் எய்திடக் காதல் வழிப்படும் 	2098-3
 சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார் 	2098-4

 201. திங்கள் நீர்மைச் செழுந் திரள் முத்தினால் 	2099-1
 துங்க வெண் குடை தூய சிவிகையும் 	2099-2
 பொங்க ஊதும் பொருவரும் சின்னமும் 	2099-3
 அங்கண் நாதர் அருளினால் கண்டனர் 	2099-4

 202. கண்டபின் அவர் கை தலை மேல் குவித்து 	2100-1
 எண்திசைக்கும் விளக்கி இவையாம் எனத் 	2100-2
 தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து 	2100-3
 அண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர் 	2100-4

 203. சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல் 	2101-1
 பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ 	2101-2
 அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் 	2101-3
 பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார் 	2101-4

 204. மாசில் வாய்மை நெல் வாயின் மறையவர் 	2102-1
 ஆசில் சீர்ச் சண்பை ஆண் தகையார்க்கு எதிர் 	2102-2
 தேசுடைச் சிவிகை முதலாயின 	2102-3
 ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார் 	2102-4

 205. இத்தலை இவர் இன்னணம் ஏகினார் 	2103-1
 அத்தலைச் சண்பை நாதர்க்கும் அவ் இரா 	2103-2
 முத்த நற் சிவிகை முதல் ஆயின 	2103-3
 உய்த்து அளிக்கும் படி முன் உணர்த்துவார் 	2103-4

 206. அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை 	2104-1
 வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை 	2104-2
 கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என 	2104-3
 உள்ளவாறு அருள் செய்ய உணர்ந்த பின் 	2104-4

 207. சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள் 	2105-1
 பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர் 	2105-2
 தொண்டருக்கு அருள் செய்து தொழா முனம் 	2105-3
 விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும் 	2105-4

 208. மாலை யாமம் புலர் உறும் வைகறை 	2106-1
 வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி 	2106-2
 கோல மேனியர் ஆய்க் கைம் மலர் குவித்து 	2106-3
 ஏல அஞ்செழுத்து ஓதி எழுந்தனர் 	2106-4

 209. போத ஞானப் புகலிப் புனிதரைச் 	2107-1
 சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிடக் 	2107-2
 காதல் செய்பவன் போலக் கருங்கடல் 	2107-3
 மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன் 	2107-4

 210.  ஆய போழ்தின் அரவு எனும் ஆர்ப்புடன் 	2108-1
 தூய முத்தின் சிவிகை சுடர்க் குடை 	2108-2
 மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்ப ரோடு 	2108-3
 ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார் 	2108-4

 211. வந்து தோன்றிய அந்தணர் மாதவர் 	2109-1
 கந்த வார் பொழில் காழி நல்ன்னாடர் முன் 	2109-2
 அந்தமில் சீர் அரத்துறை ஆதியார் 	2109-3
 தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர் 	2109-4

 212. என்று தங்களுக்கு ஈசர் அருள் செய்தது 	2110-1
 ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன் 	2110-2
 நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது 	2110-3
 மன்று உளரர் அருள் என்று வணங்கினார் 	2110-4

 213. மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால் 	2111-1
 தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர் 	2111-2
 செம்மை நித்தில ஆனச் சிறப்பு அருள் 	2111-3
 எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே 	2111-4

 214.  எந்தை ஈசன் என எடுத்து இவ்வருள் 	2112-1
 வந்தவாறு மற்று எவ் வணமோ என்று 	2112-2
 சிந்தை செய்யும் திருப் பதிகத்து இசை 	2112-3
 புந்தியார் அப் புகன்று எதிர் போற்றுவார் 	2112-4

 215. பொடி அணிந்த புராணன் அரத்துறை 	2113-1
 அடிகள் தம் அருளே இதுவாம் எனப் 	2113-2
 படி இலாத சொல் மாலைகள் பாடியே 	2113-3
 நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார் 	2113-4

 216. சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார் 	2114-1
 மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்று 	2114-2
 ஆதியார் அருள் ஆதலின் அஞ்செஎழுத்து 	2114-3
 ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம் 	2114-4

 217. தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை 	2115-1
 அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்தக் 	2115-2
 கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி 	2115-3
 வண்டு அறாப் பொலி மலர் மழை ஆர்த்தது வானம் 	2115-4

 218. விளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின் 	2116-1
 கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவும் 	2116-2
 களைகண் ஆர்த்ததொர் கருணையின் ஆர்த்தன முத்து 	2116-3
 விளையும் மா கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே 	2116-4

 219. பல்கு வெண்கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப் 	2117-1
 புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார் 	2117-2
 அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரைத் தரங்கம் 	2117-3
 மல்கு பால் கடல் வளர்மதி உதித்தது என வந்தார் 	2117-4

 220. நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி 	2118-1
 மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர்க்கை மேல் குவித்தே 	2118-2
 ஆடு கின்றனர் அயர்ந்தனர் அளவில் ஆனந்தம் 	2118-3
 கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார் 	2118-4

 221. செய்ய பொன் புனை வெண்டரளத்து அணிசிறக்க 	2119-1
 சைவ மா மறைத் தலைவர் பால் பெறும் தனிக் காளம் 	2119-2
 வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும் 	2119-3
 உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத 	2119-4

 222. சுற்று மாமறைச் சுருதியின் பெருகு ஒலி நடுவே 	2120-1
 தெற்றினார் புரம் எரித்தவர் தரு திருச்சின்னம் 	2120-2
 முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட 	2120-3
 பெற்ற பாலறா வாயன் வந்தான் எனப் பிடிக்க 	2120-4

 223. புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னே 	2121-1
 இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலங்கிளர் தாரை 	2121-2
 அணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது 	2121-3
 உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத 	2121-4

 224. தெருளும் மெய்க்கலை விளங்கவும் பார் உளோர் சிந்தை 	2122-1
 இருளும் நீங்கவும் எழுது சொன் மறை அளிப்பவர் தாம் 	2122-2
 பொருளும் ஞானமும் போகமும் போற்றி என்பாருக்கு 	2122-3
 அருளும் அங்கணர் திரு அரத் துறையை வந்து அணைந்தார் 	2122-4

 225. வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆகச் 	2123-1
 சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து எழுந்து 	2123-2
 சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல 	2123-3
 அந்தி நாண்மதி அணிந்தவர் கோயிலுள் அடைந்தார் 	2123-4

 226. மன்னு கோயிலை வலம் கொண்டு திரு முன்பு வந்து 	2124-1
 சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார் 	2124-2
 என்னையும் பொருளாக இன் அருள் புரிந்து அருளும் 	2124-3
 பொன் அடித்தலத் தாமரை போற்றி என்று எழுந்தார் 	2124-4

 227. சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர் 	2125-1
 ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி 	2125-2
 நீடினார் திரு அருள் பெரும் கருணையே நிகழப் 	2125-3
 பாடினார் திருப் பதிகம் ஏழ் இசையொடும் பயில 	2125-4

 228. இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்தி 	2126-1
 மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு 	2126-2
 திசை விளங்கிடத் திரு அருள் பெற்றவர் சில நாள் 	2126-3
 அசைவில் சீர்த் தொண்டர் தம் உடன் அப்பதி அமர்ந்தார் 	2126-4

 229. தேவர் தம்பிரான் திரு அரத் துறையினில் இறைஞ்சி 	2127-1
 மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலாத் 	2127-2
 தாவில் அன்பர்கள் தம் உடன் தொழுது பின் சண்பைக் 	2127-3
 காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார் 	2127-4

 230. விளங்கு வேணு புரத்து திருத் தோணி வீற்று இருந்த 	2128-1
 களம் கொள் கண்டர் தம் காதலியார் உடன் கூட 	2128-2
 உளம் கொளப் புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி 	2128-3
 வளம் கொள் பூம் புனல் புகலிமேல் செல மனம் வைத்தார் 	2128-4

 231. அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி 	2129-1
 நண்ணு பேர் அருளால் விடை கொண்டு போய் நடம் கொண்டு 	2129-2
 உள் நிறைந