உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
1.3 திருநகரச் சிறப்பு
திருச்சிற்றம்பலம் |
| 086 |
சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது மன்னு மாமலராள் வழி பட்டது வன்னியாறு மதி பொதி செஞ் சடைச் சென்னியார் திருவாரூர்த் திருநகர். | 1.3.1 | 087 | வேத ஓசையும் வீணையின் ஓசையும் சோதி வானவர் தோத்திர ஓசையும் மாதர் ஆடல் பாடல் மணி முழவோசையும் கீத ஓசையும் மாய்க் கிளர்உற்றவே. | 1.3.2 | 088 | பல்லியங்கள் பரந்த ஒலியுடன் செல்வ வீதிச் செழுமணித் தேரொலி மல்லல் யானை ஒலியுடன் மாவொலி எல்லை இன்றி எழுந்துள எங்கணும். | 1.3.3 | 089 | மாட மாளிகை சூளிகை மண்டபம் கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள் நீடு சாளர நீடரங்கு எங்கெணும் ஆடல் மாதர் அணி சிலம் பார்ப்பன . | 1.3.4 | 090 | அங்குரைக்கென்ன அளவப் பதியிலார் தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின் பங்கினாள் திருச் சேடி பரவையாம் மங்கையார் அவதாரஞ் செய் மாளிகை. | 1.3.5 | 091 | படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிதான் இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார் தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூது போய் நடந்த செந்தாமரை அடி நாறுமால். | 1.3.6 | 092 | செங்கண் மாதர் தெருவில் தெளித்த செங் குங்குமத்தின் குழம்பை அவர் குழல் பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன் அங்கண் மேவி அளறு புலர்த்துமால். | 1.3.7 | 093 | உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை வள்ளலார் திருவாரூர் மருங்கெலாம் தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங் கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள். | 1.3.8 | 094 | விளக்கம் மிக்க கலன்கள் விரவலால் துளக்கில் பேரொலியால் துன்னு பண்டங்கள் வளத் தொடும் பலவாறு மடுத்தலால் அளக்கர் போன்றன ஆவண வீதிகள். | 1.3.9 | 095 | ஆரணங்களே அல்ல மறுகிடை வாரணங்களும் மாறி முழங்குமால் சீரணங்கிய தேவர்களே அலால் தோரணங்களில் தாமமும் சூழுமால். | 1.3.10 | 096 | தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர் வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர் வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார் சூழ்ந்த பல்வேறு இடத்தத் தொல் நகர். | 1.3.11 | 097 | நில மகட்கு அழகார் திரு நீள் நுதல் திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி மலர் மகட்கு வண்தாமரை போல்மலர்ந்(து) அலகில் சீர்த்திருவாரூர் விளங்குமால். | 1.3.12 | 098 | அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான் துன்னு செங் கதிரோன் வழித் தோன்றினான் மன்னு சீர் அநபாயன் வழி முதல் மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே. | 1.3.13 | 099 | மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எல்லாம் கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான் விண்ணுளார் மகிழ்வு எய்திட வேள்விகள் எண்ணிலாதன் மாண இயற்றினான் . | 1.3.14 | 100 | கொற்ற ஆழிகுவலயஞ் சூழ்ந்திடச் சுற்று மன்னர் திறை கடை சூழ்ந்திடச் செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம் மனுப் பெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான். | 1.3.15 | 101 | பொங்கு மா மறைப் புற்றிடங் கொண்டவர் எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான் துங்க ஆகமம் சொன்ன முறைமையால். | 1.3.16 | 102 | அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமற் புல்லி மறங் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில் சிறந்த நல் தவத்தால் தேவி திருமணி வயிற்றின் மைந்தன் பிறந்தனன் உலகம் போற்றப் பேர் அரிக் குருளை அன்னான். | 1.3.17 | 103 | தவமுயன்று அரிதில் பெற்ற தனி இளங் குமரன் நாளும் சிவ முயன்றடையுந் தெய்வக் கலை பல திருந்த ஓதிக் கவனவாம் புரவி யானை தேர்ப் படைத் தொழில்கள் கற்றுப் பவமுயன்றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான். | 1.3.18 | 104 | அளவில் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க உளமகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி இளவரசு என்னும் தன்மை எய்துதற்கணியன் ஆகி வளரிளம் பரிதி போன்று வாழுநாள் ஒருநாள் மைந்தன். | 1.3.19 | 105 | திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில் நின்று மங்குல் தோய் மாட வீதி மன்னிளங் குமரர் சூழக் கொங்கலர் மாலை தாழ்ந்த குங்குமம் குலவு தோளான் பொங்கிய தானை சூழ்த் தேர்மிசைப் பொலிந்து போந்தான். | 1.3.20 | 106 | பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர் விரை நறுங் குழலார் சிந்தும் வெள் வளை ஒருபால் மிக்க முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி அரசிளங் குமரன் போதும் அணி மணி மாட வீதி. | 1.3.21 | 107 | தனிப்பெருந் தருமம் தானோர் தயாஇன்றித் தானை மன்னன் பனிப்பில் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன் புனிற்றிளங் கன்று துள்ளிப் போந்ததம் மறுகினூடே. | 1.3.22 | 108 | அம்புனிற்றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகிச் செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப் பட்டே உம்பரின் அடையக் கண்டங்கு உருகுதாய் அலமந்தோடி வெம்பிடும் அலறும் சோரும் மெய்ந் நடுக்குற்று வீழும். | 1.3.23 | 109 | மற்றுது கண்டு மைந்தன் "வந்ததிங்கு அபாயம்" என்று சொற்றடுமாறி நெஞ்சில் துயருழந்து அறிவு அழிந்து "பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாளச் செற்ற, என் செய்கேன்" என்று தேரினின் இன்று இழிந்து வீழ்ந்தான். | 1.3.4 | 110 | அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும் நிலமிசைக் கன்றை நோக்கி நெடிதுயிர்த்து இரங்கி நிற்கும் "மலர் தலை உலகங் காக்கும் மனுவெனும் என் கோமானுக்(கு) உலகில் இப் பழி வந்து எய்தப் பிறந்தவா ஒருவன்" என்பான். | 1.3.5 | 111 | "வந்த இப் பழியை மாற்றும் வகையினை மறை நூல் வாய்மை அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில் எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன்" என்று மைந்தன் சிந்தை வெந் துயரம் தீர்ப்பான்திரு மறையவர் முன் சென்றான். | 1.3.26 | 112 | தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாதாகி முன் நெருப்புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார மன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின் பொற் கோயில் வாயில் பொன்னணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே. | 1.3.27 | 113 | பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன் வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக் கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் சடைமுன் கோளாத் தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது. | 1.3.28 | 114 | ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து பூங்கொடி வாயில் நண்ணக் காவலர் எதிரே போற்றி "ஈங்கிதோர் பசுவந்தெய்தி இறைவ! நின் கொற்ற வாயில் தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கியது" என்று சொன்னார். | 1.3.29 | 115 | மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி "என் இதற்குற்றது" என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்க முன்னுற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வித் தொல் நெறி அமைச்சன் மன்னன் தாளிணை தொழுது சொல்வான். | 1.3.30 | 116 | "வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால் இளையஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாக தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை" என்றான். | 1.3.31 | 117 | அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயரம் எய்தி வெவ்விடந் தலைக் கொண்டாற் போல் வேதனை அகத்து மிக்"கிங்கு இவ் வினை விளைந்தவாறு" என்று இடருறும் இரங்கும் ஏங்கும் "செவ்விது என் செங்கோல்!" என்னும் தெருமரும் தெளியும் தேறான். | 1.3.32 | 118 | "மன்னுயிர் புரந்து வையம் பொதுக் கடிந்து அறத்தில் நீடும் என்னெறி நன்றால்" என்னும் "என்செய்தால் தீரும்" என்னும் தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரும் அந் நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்றால். | 1.3.33 | 119 | மந்திரிகள் அதுகண்டு மன்னவனை அடி வணங்கிச் "சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்றால் கொந்தலர்த்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு மறை அந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்தல் அறம்" என்றார். | 1.3.34 | 120 | "வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்றது தான் வலிப்பட்டு குழக்கன்றை இழந்தலறும் கோவுறு நோய் மருந்தாமோ? இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீருஞ் சொல்லிய இச் சழக்கு இன்று நான் இசைந்தால் தருமந் தான் சலியாதோ?" | 1.3.35 | 121 | மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலைத் தான தனக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால் ஊன மிகு பகைத் திறத்தால் கள்வரால் உயிர் தம்மால் ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ? | 1.3.36 | 122 | "என் மகன் செய் பாதகத்துக்கு இருந்தவங்கள் செய இசைந்தே அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனைக் கொல்வேன் ஆனால் தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை மன்னுலகில் பெற மொழிந்தீர்! மந்திரிகள்! வழக்கு" என்றான். | 1.3.37 | 123 | என்று அரசன் இகழ்து உரைப்ப எதிர் நின்ற மதி அமைச்சர் "நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்ததால் பொன்று வித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல் தொன்று தொடு நெறி யன்றோ? தொல் நிலங் காவல!" என்றார். | 1.3.38 | 124 | அவ் வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு வென்னும் விறல் வேந்தன் இவ் வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியின் இடைத் தோய்ந்த செவ் வண்ணக் கமலம் போல் முகம் புலந்து செயிர்த்துரைப்பான். | 1.3.39 | 125 | "அவ்வுரையில் வருநெறிகள் அவை நிற்க அறநெறியின் செவ்விய உண்மைத் திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர் எவ் உலகில் எப் பெற்றம் இப்பெற்றித் தாம் இடரால் வெவ்வுயிர்த்துக் கதறி மணி எறிந்து விழுந்தது?" விளம்பீர். | 1.3.40 | 126 | "போற்றிசைத்துப் புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த் தோற்றமுடை உயிர் கொன்றான் ஆதலினால் துணிபொருள் தான் ஆற்றவுமற்று அவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின்". | 1.3.41 | 127 | என மொழிந்து "மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இவ் ஆன் மனம் அழியுந் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது தனதுறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம்" என அனகன் அரும் பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார். | 1.3.42 | 128 | மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்தொரு மந்திரி தன்னை "முன்னிவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க" என அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்பத் தன்னுடைய குலமகனைத் தான் கொண்டு மறுங்கணைந்தான். | 1.3.43 | 129 | ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான் தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன் மருமம் தன் தேராழி உறஊர்ந்தான் மனு வேந்தன் அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ தான். | 1.3.44 | 130 | தண்ணளி வெண் குடை வேந்தன் செயல் கண்டு தரியாது மண்ணவர் கண்மழை பொழிந்தார் வானவர் பூ மழை சொரிந்தார் அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல் விண்ணவர்கள் தொழ நின்றான் வீதி விடங்கப் பெருமான். | 1.3.45 | 131 | சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்குந் திருநுதலும் இடம் மருங்கில் உமையாளும் எம் மருங்கும் பூதகணம் புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான். | 1.3.46 | 132 | அந் நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ் அரசன் மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன் எழலும் இன்ன பரிசானான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும் முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? | 1.3.47 | 133 | அடி பணிந்த திருமகனை ஆகமுற எடுத்து அணைத்து நெடிது மகிழ்ந்து அருந் துயரம் நீங்கினான் நிலவேந்தன் மடி சுரந்து பொழிதீம் பால் வருங் கன்று மகிழ்ந்துண்டு படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே. | 1.3.48 | 134 | பொன் தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான் வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்து சென்று அருளும் பெரும் கருணைத் திறம் கண்டு தன் அடியார்க்கு என்றும் எளிவரும் பெருமை ஏழ் உலகும் எடுத்தேத்தும். | 1.3.49 | 135 | இனைய வகை அற நெறியில் எண்ணிறந்தோர்க்கு அருள் புரிந்து முனைவர் அவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர் மேல் புனையும் உரை நம்மளவில் புகலலாந் தகைமையதோ? அனைய தனுக் ககமலராம் அறவனார் பூங்கோயில். | 1.3.50 |
| 136 |
பூத நாயகர் புற்று இடம் கொண்டவர் ஆதி தேவர் அமர்ந்த பூங் கோயிலிற் சோதி மாமணி நீள் சுடர் முன்றில் சூழ் மூதெயில் திரு வாயில் முன்னாயது. | 1.4.1 | 137 | பூவார் திசை முகன் இந்திரன் பூ மிசை மா வாழ் அகலத்து மால் முதல் வானவர் ஓவாது எவரும் நிறைந்து உள்ளது தேவா சிரியன் எனுந் திருக் காவணம். | 1.4.2 | 138 | அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல் நிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால் புரந்த அஞ்சு எழுத்து ஓசை பொலிதலால் பரந்த ஆயிரம் பாற் கடல் போல்வது. | 1.4.3 | 139 | அகில காரணர் தாள பணிவார்கள் தாம் அகில லோகமும் ஆளற்கு உரியர் என்று அகில லோகத்து உளார்கள் அடைதலின் அகில லோகமும் போல்வத தனிடை. | 1.4.4 | 140 | அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால் மெய்த் தழைந்து விதிர்ப்புறு சிந்தையார் கைத் திருத் தொண்டு செய்கடப் பாட்டினார் இத்திறத்தவர் அன்றியும் எண்ணிலார். | 1.4.5 | 141 | மாசிலாத மணி திகழ் மேனி மேல் பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள் தேசினால் எத் திசையும் விளங்கினார் பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார். | 1.4.6 | 142 | பூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும் மாதோர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார் ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார் கோதிலாத குணப் பெருங் குன்றனார். | 1.4.7 | 143 | கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார். | 1.4.8 | 144 | ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணி அலாது ஒன்று இலார் ஈர அன்பினர் யாதுங் குறைவு இலார் வீரம் என்னால் விளம்பும் தகையதோ? | 1.4.9 | 145 | வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர் தாண்டவப் பெருமான் தனித் தொண்டர்கள் நீண்ட தொல் புகழார் தம் நிலைமையை ஈண்டு வாழ்த்துகேன் என்னறிந்து ஏத்துகேன். | 1.4.10 | 146 | இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான் அந்தம் இல் புகழ் ஆலால சுந்தரன் சுந்தரத் திருத் தொண்டத் தொகைத் தமிழ் வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம். | 1.4.11 |
| 147 |
கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு மங்கையர் வதன சீத மதி இருமருங்கும் ஓடிச் செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு . | 1.5.1 | 148 | பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில் அரு மறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்த மருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத் திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூராம் அன்றே. | 1.5.2 | 149 | மாதொ ஒரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்(கு) ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால் தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார். | 1.5.3 | 150 | தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும், நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றிமிக்க ஐம் படை சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டிச் சாத்தி செம் பொன் நாண் அரையில் மின்னத் தெருவில் தேர் உருட்டு நாளில். | 1.5.4 | 151 | நர சிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு பரவருங் காதல்கூரப் பயந்தவர் தம்பால் சென்று விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத் தங்கள் அரசிளங் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார். | 1.5.5 | 152 | பெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள் வரு முறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து அரு மறை முந் நூல் சாத்தி அளவில் தொல் கலைகள் ஆய்ந்து திரு மலி சிறப்பின் ஓங்கிச் சீர் மணப் பருவஞ் சேர்ந்தார். | 1.5.6 | 153 | தந்தையார் சடையனார் தம் தனித் திரு மகற்குச் சைவ அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப வந்த தொல் சிறப்பிற் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால் செந் திரு அனைய கன்னி மணத் திறஞ் செப்பி விட்டார். | 1.5.7 | 154 | குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார் நல மிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை ஏற்று மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான் | 1.5.8 | 155 | மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப் பெற்றவர் தம்பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை உற்றதோர் மகிழ்ச்சி எய்தி மண வினை உவந்து சாற்றிக் கொற்றவர் திருவுக்கு ஏற்பக் குறித்து நாள் ஓலை விட்டார். | 1.5.9 | 156 | மங்கலம் பொலியச் செய்த மண வினை ஓலை ஏந்தி அங்கயற் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டிக் கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார். | 1.5.10 | 157 | மகிழ்ச்சி யால் மணம் மீக் கூறி மங்கல வினைகள் எல்லாம் புகழ்ச்சியால் பொலிந்து தோன்றப் போற்றிய தொழிலராகி இகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலைப் பந்தர் நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை சாத்தினார்கள். | 1.5.11 | 158 | மண வினைக்கு அமைந்த செய்கை மாதினைப் பயந்தார் செய்யத் துணர் மலர்க் கோதைத் தாமச் சுரும்பணை தோளினானைப் புணர் மணத் திருநாள் முன்னாட் பொருந்திய விதியினாலே பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம் பொன் நாண் காப்புச் சேர்த்தார். | 1.5.12 | 159 | மா மறை விதி வழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றித் தூ மறை மூதூர்க் கங்குல் மங்கலந் துன்றி ஆர்ப்பத் தேமரு தொடையல் மார்பன் திரு மணக் கோலம் காணக் காமுறு மனத்தான் போலக் கதிரவன் உதயம் செய்தான். | 1.5.13 | 160 | காலை செய் வினைகள் முற்றிக் கணித நூல் புலவர் சொன்ன வேலை வந்து அணையும் முன்னர் விதி மணக்கோலம் கொள்வான் நூல் அசைந்து இலங்கு மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன் மாலையுந் தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான். | 1.5.14 | 161 | வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர்ப் பாசனத்து அமைந்த பாங்கர்ப் பருமணி பைம்பொன் திண்கால் ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால் ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள் | 1.5.15 | 162 | அகில் விரைத் தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டாடை சாத்தி முகில் நுழை மதியம் போலக் கைவலான் முன் கை சூழ்ந்த துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித் தன் தூய செங்கை உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறுஞ்சிகழி ஆர்த்தான். | 1.5.16 | 163 | தூநறும் பசும் கர்ப்பூரச் சுண்ணத்தால் வண்ணப் போதில் ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தனச் சேறாட்டி மான்மதச் சாந்து தோய்ந்த மங்கலக் கலவை சாத்திப் பான் மறை முந்நூல் மின்னப் பவித்திரஞ் சிறந்த கையான். | 1.5.17 | 164 | தூமலர்ப் பிணையல் மாலை துணர் இணர்க் கண்ணிக் கோதை தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமையச் சாத்தி மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள்கால் சீக்கும் நாம நீள் கலன்கள் சாத்தி நன்மணக் கோலம் கொண்டான். | 1.5.18 | 165 | மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க நன்நகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன் தன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்திப் பொன் அணி மணியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார். | 1.5.19 | 166 | இயம் பல துவைப்ப எங்கும் ஏத்தொலி எடுப்ப மாதர் நயந்து பல்லாண்டு போற்ற நான்மறை ஒலியின் ஓங்க வியந்துபார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பஞ் செய்தே உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையரானார். | 1.5.20 | 167 | மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துன்றிச் சூதும் பங்கய முகையும் சாயத்துப் பணைத்து எழுந் தணியில் மிக்க குங்கும முலையினாரும் பரந்தெழு கொள்கைத் தாகி. | 1.5.21 | 168 | அருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்த வெள்வளை களாலும் இருங்குழை மகரத் தாலும் இலங்கொளி மணிகளாலும் நெருங்கிய பீலிச் சோலை நீல நீர்த் தரங்கத் தாலும் கருங்கடல் கிளர்ந்தது என்னக் காட்சியில் பொலிந்தது அன்றே. | 1.5.22 | 169 | நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்கப் பெருங்குடை மிடைந்து செல்லப் பிணங்கு பூங் கொடிகள் ஆட அருங் கடி மணம் வந்து எய்த அன்று தொட்டு என்றும் அன்பில் வருங்குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூராமால். | 1.5.23 | 170 | நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி உறைமலி கலவை சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர் கொள்ள வந்தார். | 1.5.24 | 171 | கண்கள் எண்ணிலாத வேண்டுன்ங் காளையைக் காண என்பார் பெண்களில் உயர நோன் தாள் சடங்கவி பேதை என்பார் மண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார் பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள். | 1.5.25 | 172 | "ஆண்டகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம்" என்பார் "தாண்டிய பரியும் நம்பால் தகுதியின் நடந்தது" என்பார் "பூண்டயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி" என்பார் ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்பச் சென்றார். | 1.5.26 | 173 | வருமணக் கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாசத் திருமணப் பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும் பெருமழைக் குலத்தின் ஆர்ப்பப் பரிமிசை இழிந்து பேணும் ஒரு மணத் திறத்தின் அங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன். | 1.5.27 | 174 | ஆலுமறை சூழ்கயிலையின் கண் அருள் செய்த சாலுமொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான் மேலுற எழுந்து மிகு கீழுற அகழ்ந்து மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார். | 1.5.28 | 175 | கண்ணிடை கரந்த கதிர் வெண்படம் எனச் சூழ் புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்தத் தண்மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க. | 1.5.29 | 176 | காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழச் சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின் மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க ஆதபம் மறைக் குடை அணிக்கரம் விளங்க. | 1.5.30 | 177 | பண்டிசரி கோவண உடைப் பழமை கூரக் கொண்டதோர் சழங்கலுடை ஆர்ந்து அழகு கொள்ள வெண் துகிலுடன் குசை முடிந்து விடு வேணுத் தண்டொருகை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள. | 1.5.31 | 178 | மொய்த்து வளர் பேரழகு மூத்தவடி வேயோ அத்தகைய மூப்பெனும் அதன் படிவ மேயோ மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதல்யோ இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி . | 1.5.32 | 179 | வந்துதிரு மாமறை மணத் தொழில் தொடங்கும் பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று "இந்த மொழி கேண்மின் எதிர் யாவர்களும்" என்றான் முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான். | 1.5.33 | 180 | என்றுரை செய் அந்தணனை எண்ணில் மறை யோரும் மன்றல் வினை மங்கல மடங்கல் அனை யானும் "நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்று ஏ நின்றது இவண் நீர் மொழிமின் நீர்மொழிவது" என்றார். | 1.5.34 | 181 | பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி என்னிடையும் நின்னிடையும் நின்ற இசை வால்யான் முன்னுடையது ஓர்பெரு வழக்கினை முடித்தே நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி என்றான். | 1.5.35 | 182 | நெற்றி விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான் " உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல் மற்றது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன் முற்ற இது சொல்லுக" என எல்லை முடிவு இல்லான். | 1.5.36 | 183 | " ஆவதிது கேண்மின் மறையோர்! என் அடியான் இந் நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது" என்றான் தேவரையும் மாலயன் முதன் திருவின் மிக்கோர் யாவரையும் வேறு அடிமை யாவுடைய எம்மான். | 1.5.37 | 184 | என்றான் இறையோன் அது கேட்டவர் எம் மருங்கும் நின்றார் இருந்தார் "இவன் என் நினைந்தான் கொல்" என்று சென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவல் ஊரான் "நன்றால் மறையோன் மொழி" என்று எதிர் நோக்கி நக்கான். | 1.5.38 | 185 | . நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும் மிக்கான் மிசையுத்தரியத் துகில் தாங்கி மேல் சென்று "அக் காலம் உன் தந்தை தன் தந்தை ஆள்ஓலை ஈதால் இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட" என்ன. | 1.5.39 | 186 | மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி "ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல் பேச இன்று உன்னைக் கேட்டோ ம் பித்தனோ மறையோன்" என்றார் | 1.5.40 | 187 | "பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன் அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும்" என்றார் | 1.5.41 | 188 | "கண்டதோர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும் கொண்டதோர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும் உண்டொராள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன்" என்று தொண்டனார் "ஓலை காட்டுக" என்றனர் துணைவனாரை. | 1.5.42 | 189 | "ஓலை காட்டு" என்று நம்பி உரைக்க "நீ ஓலை காணல் பாலையோ அவை முன் காட்டப் பணிசெயற் பாலை" என்ற வேலையில் நாவலூரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று மாலயன் தொடரா தானை வலிந்து பின்தொடரல் உற்றார். | 1.5.43 | 190 | ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்தணாளன் காவணத்து இடையே ஓடக் கடிது பின்தொடர்ந்து நம்பி பூவனத்து அவரை உற்றார் அவரலால் புரங்கள் செற்ற ஏவணச் சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார்? | 1.5.44 | 191 | மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்ற இறைவனைத் தொடர்ந்து பற்றி எழுதும்ஆள் ஓலை வாங்கி அறை கழல் அண்ணல் "ஆளாய் அந்தணர் செய்தல் என்ன முறை"S எனக் கீறியிட்டார் முறையிட்டான் முடிவிலாதான். | 1.5.45 | 192 | அருமறை முறையிட்டின்னும் அறிவதற்கு அறியான் பற்றி ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி "இந்தப் பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்கு கின்ற திரு மறை முனிவரே எங்குளீர் செப்பும்" என்றார். | 1.5.46 | 193 | என்றலும் நின்ற ஐயர் "இங்குளேன் இருப்புஞ் சேயது அன்றிந்த வெண்ணெய் நல்லூர் அதுநிற்க அறத்தாறு இன்றி வன்றிறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை" என்றான். | 1.5.47 | 194 | குழை மறை காதினானை கோல் ஆரூரர் நோக்கிப் பழைய மன்றாடி போலும் இவன் என்று பண்பின் மிக்க விழைவுறு மனமும் பொங்க "வெண்ணெய் நல்லூராயேல் உன் பிழை நெறி வாழ்க்கை ஆங்கே பேச நீ போதாய்" என்றார். | 1.5.48 | 195 | வேதியன் அதனைக் கேட்டு "வெண்ணெய் நல்லூரிலே நீ போதினும் நன்று மற்றப் புனித நான்மறையோர் முன்னர் ஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல் சாதிப்பன்" என்று முன்னே தண்டுமுன் தாங்கிச் சென்றான். | 1.5.49 | 196 | செல்லு நான் மறையோன் தன்பின் திரிமுகக் காந்தஞ் சேர்ந்த வல்லிரும்பணையு மா போல் வள்ளலும் கடிது சென்றான் எல்லையில் சுற்றத்தாரும் "இது என்னாம்" என்று செல்ல நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல்லூரை நண்ணி. | 1.5.50 | 197 | வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேர் அவை முன் சென்று நாதனாம் மறையோன் சொல்லும் "நாவலூர் ஆரூரன் தன் காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி மூதறிவீர் முன் போந்தானிது மற்றென் முறைபாடு" என்றான். | 1.5.51 | 198 | அந்தணர் அவையில் மிக்கார் "மறையவர் அடிமை ஆதல் இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயர்" என்றார் வந்தவாறிசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலை தந்தை தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான். | 1.5.52 | 199 | "இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி ஆமோ? தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சாரச் சொன்னான் அசைவில் ஆரூரர் எண்ணம் என்" என்றார் அவையில்மிக்கார். | 1.5.53 | 200 | "அனைத்து நூல் உணர்ந்தீர்! ஆதி சைவன் என்று அறிவீர்! என்னைத் தனக்கு வேறு அடிமை என்று இவ் அந்தணன் சாதித்தானேல் மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான் எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன்" எண்ணம் மிக்கான். | 1.5.54 | 201 | அவ்வுரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்லச் செவ்விய மறையோர் நின்ற திரு மறை முனியை நோக்கி "இவ்வுலகின் கண் நீ இன்று இவரை உன் அடிமை என்ற வெவ்வுரை எம்முன்பு ஏற்ற வேண்டும்" என்று உரைத்து மீண்டும். | 1.5.55 | 202 | ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன "முன்னே மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலை மாட்சியில் காட்ட வைத்தேன்" என்றனன் மாயை வல்லான். | 1.5.56 | 203 | வல்லையேல் காட்டிங்கு என்ன மறையவன் வலி செய்யாமல் சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்லச் செல்வ நான் மறையோய்! நாங்கள் தீங்குற ஒட்டோ ம் என்றார் அல்லல் தீர்த்து ஆள நின்றார் ஆவணம் கொண்டு சென்றார். | 1.5.57 | 204 | இருள் மறை மிடறு ஒன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ அருள் பெறு காரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கிச் சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கித் தெருள் பெறு சபையோர் கேட்ப வாசகம் செப்பு கின்றான். | 1.5.58 | 205 | அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானும் என்பால் வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து. | 1.5.59 | 206 | வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள் ஆசிலா எழுத்தை நோக்கி அவையொக்கும் என்ற பின்னர் மாசிலா மறையோர் "ஐயா! மற்றுங்கள் பேரனார் தம் தேசுடை எழுத்தே ஆகில் தெளியப் பார்த்து அறிமின்" என்றார். | 1.5.60 | 207 | அந்தணர் கூற "இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் தந்தை தன் தந்தை தான் வேறு எழுதுகைச் சாத்துண்டாகில் இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி வந்தது மொழிமின்" என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல். | 1.5.61 | 208 | திரண்ட மா மறையோர் தாமும் திரு நாவலூரர் கோ முன் மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி "இரண்டும் ஒத்திருந்தது என்னே! இனிச் செயல் இல்லை" என்றார் | 1.5.62 | 209 | "நான் மறை முனிவ னார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர் பான்மையின் ஏவல் செய்தல் கடன்" என்று பண்பில் மிக்க மேன்மையோர் விளம்ப நம்பி "விதி முறை இதுவே ஆகில் யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ" என்று நின்றார். | 1.5.63 | 210 | திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி "அருமுனி! நீமுன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் பெருமைசேர் பதியேயாகப் பேசியதுமக்கு இவ்வூரில் வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக" என்றார். | 1.5.64 | 211 | பெருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை ஒருவரும் அறியீராகில் 'போதும்' என்றுரைத்துச் சூழ்ந்த பெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத் திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார். | 1.5.65 | 212 | எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் "எங்கள் நம்பர் தங்கோயில் புக்கது என்கொலோ" என்று நம்பி தம்பெரு விருப்பினோடு தனித் தொடர்ந்து அழைப்ப மாதோ(டு) உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார். | 1.5.66 | 213 | "முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப் பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து நன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோ ம்" என்றார். | 1.5.67 | 214 | என்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட கன்று போல் கதறி நம்பி கரசரண் ஆதி அங்கம் துன்றிய புளகம் ஆகத் தொழுத கை தலை மேல் ஆக "மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது" என்றார். | 1.5.68 | 215 | எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும் விண்ணவர் பொழி பூ மாரி மேதினி நிறைந்து விம்ம மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளிச் செய்வார். | 1.5.69 | 216 | "மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மைச் சொற் தமிழ் பாடுக என்றார்" தூமறை பாடும் வாயார். | 1.5.70 | 217 | . தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து |