|
Home > Scriptures & Stotras > Tamil
tirunAvukkaracar tEvAram
tirumuRai 6 part 2
(verses (509-981)
(in tamil script, TSCII format)
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி
பாடல்கள் (509 - 981)
Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding.
Proof-reading and addition of brief comments: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding. To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view. .
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
ன Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி
பாடல்கள் (509 - 981)
உள்ளுறை
6.51 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
|
509 |
கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார்
- கந்தமா தனத்துளார் காளத் தியார்
மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்
- வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமுங் காபா லமும்
- அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
- வீழி மிழலையே மேவி னாரே.
| 6.51.1 | |
510 | பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்
- பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்
கேதிசர மேவினார் கேதா ரத்தார்
- கெடில வடவதிகை வீரட் டத்தார்
மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்
- மழபாடி மேய மழுவா ளனார்
வேதி குடியுளார் மீயச் சூரார்
- வீழி மிழலையே மேவி னாரே.
| 6.51.2
|
511 | அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்
- அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்
உண்ணாழி கையார் உமையா ளோடும்
- இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்
பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை
- மாடத்தார் கூடத்தார் பேரா வூரார்
விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த
- வீழி மிழலையே மேவி னாரே.
| 6.51.3
|
512 | வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி
- நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்
பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்
- பராய்த்துறையார் சிராப்பள்ளி யுள்ளார் பண்டோ ர்
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி
- உரித்துரிவை போர்த்த விடலை வேடம்
விண்காட்டும் பிறைநுதலி யஞ்சக் காட்டி
- வீழி மிழலையே மேவி னாரே.
| 6.51.4
|
513 | புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப்
- புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்
உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச் சிமேற்
- றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்
கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்
- கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும்
விடைசூழ்ந்த வெல்கொடியர் மல்கு செல்வ
- வீழி மிழலையே மேவி னாரே.
| 6.51.5
|
514 | பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழியார்
- பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்
இரும்புதலார் இரும்பூளை யுள்ளா ரேரார்
- இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்
கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்
- கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த
- வீழி மிழலையே மேவி னாரே.
| 6.51.6
|
515 | மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
- வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்
- கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப்
- பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோ ர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
- வீழி மிழலையே மேவி னாரே.
| 6.51.7
|
516 | அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்
- ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்
- சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்
நஞ்சைத் தமக்கமுதா உண்ட நம்பர்
- நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்
வெஞ்சொdr சமண்சிறையி லென்னை மீட்டார்
- வீழி மிழலையே மேவி னாரே.
| 6.51.8
|
517 | கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார்
- கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்
தண்டலையார் தலையாலங் காட்டி னுள்ளார்
- தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்
வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர்
- வலஞ்சுழியார் வைகலின்மேன் மாடத் துள்ளார்
வெண்டலைமான் கைக்கொண்ட விகிர்த வேடர்
- வீழி மிழலையே மேவி னாரே.
| 6.51.9
|
518 | அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார்
- அரிபிரமர் இந்திரர்க்கு மரிய ரானார்
புரிச்சந் திரத்துள்ளார் போகத் துள்ளார்
- பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி
எரிச்சந்தி வேட்கு மிடத்தா ரேமக்
- கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்
விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்
- வீழி மிழலையே மேவி னாரே.
| 6.51.10
|
519 | புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்
- பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க
தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான்
- தலைகளொடு மலைகளன தாளுந் தோளும்
பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்
- பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்
மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்
- வீழி மிழலையே மேவி னாரே.
| 6.51.11
| | | | | | | | | | |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.52 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
|
520 |
கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண்
- கந்திருவம் பாட்டிசையிற் காட்டு கின்ற
பண்ணவன்காண் பண்ணவற்றின் றிறலா னான்காண்
- பழமாகிச் சுவையாகிப் பயக்கின் றான்காண்
மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண்
- வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர்
விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்
- விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
| 6.52.1 | |
521 | ஆலைப் படுகரும்பின் சாறு போல
- அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண்
சீல முடையடியார் சிந்தை யான்காண்
- திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண்
பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண்
- பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்
வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்
- விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
| 6.52.2
|
522 | தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்
- சக்கரம் புட்பாகற் கருள்செய் தான்காண்
கண்ணுமொரு மூன்றுடைய காபா லிகாண்
- காமனுடல் வேவித்த கண்ணி னான்காண்
எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்
- இருவர்க் கெரியா யருளி னான்காண்
விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்
- விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
| 6.52.3
|
523 | காதிசைந்த சங்கக் குழையி னான்காண்
- கனக மலையனைய காட்சி யான்காண்
மாதிசைந்த மாதவமுஞ் சோதித் தான்காண்
- வல்லேன வெள்ளெயிற்றா பரணத் தான்காண்
ஆதியன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
- ஐந்தலைமா நாகம்நா ணாக்கி னான்காண்
வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண்
- விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
| 6.52.4
|
524 | நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண்
- நித்தமண வாளனென நிற்கின் றான்காண்
கையின்மழு வாளொடுமான் ஏந்தி னான்காண்
- காலனுயிர் காலாற் கழிவித் தான்காண்
செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்
- செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண்
வெய்ய கனல்விளையாட் டாடி னான்காண்
- விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
| 6.52.5
|
525 | கண்டுஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்
- கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண்
வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்
- வான்கங்கைச் சடைக்கரந்த மாதே வன்காண்
பண்டங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்
- பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்
வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்
- விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
| 6.52.6
|
526 | கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி
- கருமாலுக் கருள்செய்த கருணை யான்காண்
விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்
- வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்
தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண்
- சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண்
வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண்
- விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
| 6.52.7
|
527 | மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம்
- விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்
பொய்த்தவன்காண் புத்தன் மறவா தோடி
- எறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்
உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை
- உலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்
வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும்
- விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
| 6.52.8
|
528 | சந்திரனைத் திருவடியாற் தளர்வித் தான்காண்
- தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண் டான்காண்
இந்திரனைத் தோள்முறிவித் தருள்செய் தான்காண்
- ஈசன்காண் நேசன்காண் நினைவோர்க் கெல்லாம்
மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்
- மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரிசுடரா யோங்கி னான்காண்
- விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
| 6.52.9
|
529 | ஈங்கைப்பேர் ஈமவனத் திருக்கின் றான்காண்
- எம்மான்காண் கைம்மாவி னுரிபோர்த் தான்காண்
ஓங்குமலைக் கரையன்றன் பாவை யோடும்
- ஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்
கோங்குமலர்க் கொன்றையந்தார்க் கண்ணி யான்காண்
- கொல்லேறு வெல்கொடிமேற் கூட்டி னான்காண்
வேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண்
- விண்ணிழிதண்வீழி மிழலை யானே.
| 6.52.10
| | | | | | | | | |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.53 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
|
530 |
மானேறு கரமுடைய வரதர் போலும்
- மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்
கானேறு கரிகதற வுரித்தார் போலுங்
- கட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலுந்
தேனேறு திருஇதழித் தாரார் போலுந்
- திருவீழி மிழலையமர் செல்வர் போலும்
ஆனேற தேறும் அழகர் போலும்
- அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
| 6.53.1 | |
531 | சமரமிகு சலந்தரன்போர் வேண்டி னானைச்
- சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும்
நமனையொரு கால்குறைத்த நாதர் போலும்
- நாரணனை இடப்பாகத் தடைத்தார் போலுங்
குமரனையும் மகனாக வுடையார் போலுங்
- குளிர்வீழி மிழலையமர் குழகர் போலும்
அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும்
- அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
| 6.53.2
|
532 | நீறணிந்த திருமேனி நிமலர் போலும்
- நேமிநெடு மாற்கருளிச் செய்தார் போலும்
ஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும்
- எயில்மூன்று மெரிசரத்தா லெய்தார் போலும்
வேறணிந்த கோலமுடை வேடர் போலும்
- வியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும்
ஆறணிந்த சடாமகுடத் தழகர் போலும்
- அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
| 6.53.3
|
533 | கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
- கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலுஞ்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலுந்
- திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்
- வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்க மானார் போலும்
- அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
| 6.53.4
|
534 | துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுஞ்
- சுடர்மூன்றுஞ் சோதியுமாய்த் தூயார் போலும்
பொன்னொத்த திருமேனிப் புனிதர் போலும்
- பூதகணம் புடைசூழ வருவார் போலும்
மின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும்
- வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும்
அன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும்
- அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
| 6.53.5
|
535 | மாலாலும் அறிவரிய வரதர் போலும்
- மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும்
நாலாய மறைக்கிறைவ ரானார் போலும்
- நாமவெழுத் தஞ்சாய நம்பர் போலும்
வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்
- வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும்
- அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
| 6.53.6
|
536 | பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்
- பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்
மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்
- வடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ்
செஞ்சடைக்கண் வெண்பிறைகொண் டணிந்தார் போலுந்
- திருவீழி மிழலையமர் சிவனார் போலும்
அஞ்சடக்கும் அடியவர்கட் கணியார் போலும்
- அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
| 6.53.7
|
537 | குண்டரொடு பிரித்தெனையாட் கொண்டார் போலுங்
- குடமூக்கி லிடமாக்கிக் கொண்டார் போலும்
புண்டரிகப் புதுமலரா தனத்தார் போலும்
- புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும்
வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும்
- வியன்வீழி மிழலைநக ருடையார் போலும்
அண்டத்துப் புறத்தப்பா லானார் போலும்
- அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
| 6.53.8
|
538 | முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும்
- மொய்பவளக் கொடியனைய சடையார் போலும்
எத்தனையும் பத்திசெய்வார்க் கினியார் போலும்
- இருநான்கு மூர்த்திகளு மானார் போலும்
மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும்
- வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும்
- அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
| 6.53.9
|
539 | கரியுரிசெய் துமைவெருவக் கண்டார் போலுங்
- கங்கையையுஞ் செஞ்சடைமேற் கரந்தார் போலும்
எரியதொரு கைதரித்த இறைவர் போலும்
- ஏனத்தின் கூனெயிறு பூண்டார் போலும்
விரிகதிரோ ரிருவரைமுன் வெகுண்டார் போலும்
- வியன்வீழி மிழலையமர் விமலர் போலும்
அரிபிரமர் துதிசெயநின் றளித்தார் போலும்
- அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
| 6.53.10
|
540 | கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக்
- கால்விரலால் அடர்த்தருளிச் செய்தார் போலுங்
குயிலாய மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக்
- கூத்தாட வல்ல குழகர் போலும்
வெயிலாய சோதிவிளக் கானார் போலும்
- வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அயிலாய மூவிலைவேற் படையார் போலும்
- அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
| 6.53.11
| | | | | | | | | | |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.54 திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
|
541 |
ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
- அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை
- நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
- கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
- போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
| 6.54.1 | |
542 | சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே
- திகழ்ந்தானைச் சிவன்றன்னைத் தேவ தேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
- குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப்
- பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
- போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
| 6.54.2
|
543 | பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்
- பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவு மேத்தும் இறைவன் றன்னை
- எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
- அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
- போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
| 6.54.3
|
544 | இருளாய உள்ளத்தி னிருளை நீக்கி
- இடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்
- சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து ளானை
- ஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
- போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
| 6.54.4
|
545 | மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு
- வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்
- தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
- வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
- போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
| 6.54.5
|
546 | அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை
- அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
- கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா
- திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
- போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
| 6.54.6
|
547 | நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை
- நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை
- வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை இடைமருதோ டீங்கோய் நீங்கா
- இறையவனை எனையாலுங் கயிலை யென்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
- போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
| 6.54.7
|
548 | பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
- பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
- மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
- திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
- போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
| 6.54.8
|
549 | பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் றன்னைப்
- படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னை
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை
- நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
- காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
- போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
| 6.54.9
|
550 | இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்
- எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
- அலைகடலில் ஆலால முண்டு கண்டங்
கறுத்தானைக் கண்ணழலாற் காம னாகங்
- காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
- போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
| 6.54.10
| | | | | | | | | |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.55 திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
|
551 |
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
- மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
- ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
- ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.55.1 | |
552 | பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
- பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
- மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
- போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.55.2
|
553 | மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
- மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
- உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
- தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடு முகிலே போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.55.3
|
554 | வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
- வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கு முடலே போற்றி
- ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
- தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.55.4
|
555 | ஊராகி நின்ற உலகே போற்றி
- ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
- பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
- நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.55.5
|
556 | சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
- தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
- போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
- பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.55.6
|
557 | பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
- பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி
எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி
- என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
- மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.55.7
|
558 | இமையா துயிரா திருந்தாய் போற்றி
- என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
- ஊழியே ழான ஒருவா போற்றி
அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி
- ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.55.8
|
559 | மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
- முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
- சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
- அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.55.9
|
560 | நெடிய விசும்போடு கண்ணே போற்றி
- நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியும் இகலி போற்றி
- அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி
- கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.55.10
|
561 | உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
- ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி
- இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
- பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.55.11
| | | | | | | | | | |
இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கைலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.56 திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
|
562 |
பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி
- பூதப் படையாள் புனிதா போற்றி
நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி
- நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
- வானோர் வணங்கப் படுவாய் போற்றி
கறையுடைய கண்ட முடையாய் போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.56.1 | |
563 | முன்பாகி நின்ற முதலே போற்றி
- மூவாத மேனிமுக் கண்ணா போற்றி
அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி
- ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி
என்பாக வெங்கு மணிந்தாய் போற்றி
- என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
கண்பாவி நின்ற கனலே போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.56.2
|
564 | மாலை யெழுந்த மதியே போற்றி
- மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி
மேலை வினைக ளறுப்பாய் போற்றி
- மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
- அடியார்கட் காரமுத மானாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.56.3
|
565 | உடலின் வினைக ளறுப்பாய் போற்றி
- ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
- பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி
- தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கடலி லொளியாய முத்தே போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.56.4
|
566 | மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி
- மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி
- போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றி
- மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி
கைசேர் அனலேந்தி யாடீ போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.56.5
|
567 | ஆறேறு சென்னி முடியாய் போற்றி
- அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி
நீறேறு மேனி யுடையாய் போற்றி
- நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கூறேறு மங்கை மழுவா போற்றி
- கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி
காறேறு கண்ட மிடற்றாய் போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.56.6
|
568 | அண்டமே ழன்று கடந்தாய் போற்றி
- ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைக ளறுப்பாய் போற்றி
- பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி
தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி
- தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி
கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.56.7
|
569 | பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி
- பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
உருகி நினைவார்தம் முள்ளாய் போற்றி
- ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி
- ஆரு மிகழப் படாதாய் போற்றி
கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.56.8
|
570 | செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி
- தேடி யுணராமை நின்றாய் போற்றி
பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி
- பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி
மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி
- மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி
கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.56.9
|
571 | மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி
- மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி
- சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி
கோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்று
- கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி
காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.56.10
| | | | | | | | | |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.57 திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
|
572 |
பாட்டான நல்ல தொடையாய் போற்றி
- பரிசை யறியாமை நின்றாய் போற்றி
சூட்டான திங்கள் முடியாய் போற்றி
- தூமாலை மத்த மணிந்தாய் போற்றி
ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி
- அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.57.1 | |
573 | அதிரா வினைக ளறுப்பாய் போற்றி
- ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுரக் குழையாய் போற்றி
- சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி
எதிரா உலக மமைப்பாய் போற்றி
- என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.57.2
|
574 | செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
- செல்லாத செல்வ முடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
- ஆகாச வண்ண முடியாய் போற்றி
வெய்யாய் தணியா யணியாய் போற்றி
- வேளாத வேள்வி யுடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.57.3
|
575 | ஆட்சி யுலகை யுடையாய் போற்றி
- அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி
சூட்சி சிறிது மிலாதாய் போற்றி
- சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மாட்சி பெரிது முடையாய் போற்றி
- மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
காட்சி பெரிது மரியாய் போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.57.4
|
576 | முன்னியா நின்ற முதல்வா போற்றி
- மூவாத மேனி யுடையாய் போற்றி
என்னியா யெந்தை பிரானே போற்றி
- ஏழி னிசையே யுகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
- மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.57.5
|
577 | உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றி
- உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி
எரியாய தெய்வச் சுடரே போற்றி
- ஏசுமா முண்டி யுடையாய் போற்றி
அரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றி
- அறிவே அடக்க முடையாய் போற்றி
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.57.6
|
578 | எண்மேலும் எண்ண முடையாய் போற்றி
- ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
- பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி
விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி
- மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.57.7
|
579 | முடியார் சடையின் மதியாய் போற்றி
- முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி
- சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியா ரடிமை அறிவாய் போற்றி
- அமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.57.8
|
580 | போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி
- புண்ணியனே நண்ண லரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி
- எண்ணா யிரநூறு பேராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
- நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
- கயிலை மலையானே போற்றி போற்றி.
| 6.57.9
|
| இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 6.57.10
| | | | | | | | |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.58 திருவலம்புரம் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
|
581 |
மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை
- மறையவனும் வானவருஞ் சூழ நின்று
கண்மலிந்த திருநெற்றி யுடையா ரொற்றைக்
- கதநாகங் கையுடையார் காணீ ரன்றே
பண்மலிந்த மொழியவரு மியானு மெல்லாம்
- பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல
மண்மலிந்த வயல்புடைசூழ் மாட வீதி
- வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
| 6.58.1 | |
582 | சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த
- தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக்
கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்
- கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல
கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக்
- கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல்
மலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம்
- வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
| 6.58.2
|
583 | தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை
- யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல
- அருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்
நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந்
- துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி
வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி
- வலம்புரமே புக்கிங்கே மன்னி னாரே.
| 6.58.3
|
584 | மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி
- மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்
கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த
- குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே
போவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்
- புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ
வாவா வெனவுரைத்து மாயம் பேசி
- வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
| 6.58.4
|
585 | அனலொருகை யதுவேந்தி அதளி னோடே
- ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்
புனல்பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல் மேனிப்
- புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்
சினவிடையை மேற்கொண்டு திருவா ரூருஞ்
- சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல
மனமுருக வளைகழல மாயம் பேசி
- வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
| 6.58.5
|
586 | கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக்
- காலினாற் காய்ந்துகந்த காபா லியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
- முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்
- சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
- வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
| 6.58.6
|
587 | பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம்
- பசுஞ்சாந்தங் கொண்டணிந்து பாதம் நோவ
இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க்
- கெவ்வூரீர் எம்பெருமா னென்றேன் ஆவி
விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி
- வேறோர் பதிபுகப் போவார் போல
வட்டணைகள் படநடந்து மாயம் பேசி
- வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
| 6.58.7
|
588 | பல்லார் பயில்பழனப் பாசூ ரென்றும்
- பழனம் பதிபழமை சொல்லி நின்றார்
நல்லார் நனிபள்ளி யின்று வைகி
- நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்
சொல்லார் ஒருவிடமாத் தோள்கை வீசிச்
- சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கும்
மல்லார் வயல்புடைசூழ் மாடவீதி
- வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
| 6.58.8
|
589 | பொங்கா டரவொன்று கையிற் கொண்டு
- போர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர்
தங்கா ரொருவிடத்துந் தம்மேல் ஆர்வந்
- தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர்
எங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வா
- என்கண்ணில் நின்றகலா வேடங் காட்டி
மங்குல் மதிதவழும் மாட வீதி
- வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
| 6.58.9
|
590 | செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
- சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
- போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்கொருதன் றிருவிரலால் இறையே யூன்றி
- அடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி
- வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
| 6.58.10
| | | | | | | | | |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.59 திருவெண்ணி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
|
591 |
தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்
- தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்
புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம்
- பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்
வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்
- வானவர்க்காய் நஞ்சுண்ட மைந்த னாரும்
விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தாரும்
- வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
| 6.59.1 | |
592 | நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்
- நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லாரும்
- பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்
மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்
- வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்
விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்
- வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
| 6.59.2
|
593 | கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்
- கரிகாட்டி லெரியாடுங் கடவு ளாரும்
பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்
- பரவுவார் பாவங்கள் பாற்று வாருஞ்
செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
- திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்
மெய்யுலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்
- வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
| 6.59.3
|
594 | சடையேறு புனல்வைத்த சதுர னாருந்
- தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்
உடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி
- உண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும்
மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
- மயிலாடு துறையுறையும் மணாள னாரும்
விடையேறு வெல்கொடியெம் விமல னாரும்
- வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
| 6.59.4
|
595 | மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி
- மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்
பண்ணிலங்கு பாடலோ டாட லாரும்
- பருப்பதமும் பாசூரும் மன்னி னாருங்
கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக்
- கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்
விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்
- வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
| 6.59.5
|
596 | வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்
- வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாருங்
கூடலர்தம் மூவெயிலு மெரிசெய் தாருங்
- குரைகழலாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்
ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்
- ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்
வேடுவனாய் மேல்விசயற் கருள்செய் தாரும்
- வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
| 6.59.6
|
597 | மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி
- மடவா ளவளோடு மானொன் றேந்திச்
சிட்டிலங்கு வேடத்தா ராகி நாளுஞ்
- சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்
கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த
- காலன்றன் கால மறுப்பார் தாமும்
விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்
- வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
| 6.59.7
|
598 | செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்
- திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்
அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்
- ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
- மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்
வெஞ்சினத்த வேழமது வுரிசெய் தாரும்
- வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
| 6.59.8
|
599 | வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்
- வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்
களங்கொளவென் சிந்தையுள்ளே மன்னி னாருங்
- கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்
உளங்குளிர அமுதூறி அண்ணிப் பாரும்
- உத்தமராய் எத்திசையும் மன்னி னாரும்
விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்
- வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
| 6.59.9
|
600 | பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப்
- புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்
கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்
- குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்
தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்
- திருவிரலா லடர்த்தவனுக் கருள்செய் தாரும்
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்
- வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
| 6.59.10
| | | | | | | | | |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெண்ணிநாயகர்,
தேவியார் - அழகியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.60 திருக்கற்குடி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
|
601 |
மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி
- முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்
றார்த்தவனை அக்கரவம் ஆர மாக
- அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போ
டேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க்
- கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்
காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்
- கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
| 6.60.1 | |
602 | செய்யானை வெளியானைக் கரியான் றன்னைத்
- திசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் றன்னை
ஐயானை நொய்யானைச் சீரி யானை
- அணியானைச் சேயானை ஆனஞ் சாடும்
மெய்யானைப் பொய்யாது மில்லான் றன்னை
- விடையானைச் சடையானை வெறித்த மான்கொள்
கையானைக் கற்குடியில் விழுமி யானைக்
- கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
| 6.60.2
|
603 | மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை
- வயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை
விண்ணதனி லொன்றை விரிக திரைத்
- தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தையே ழிசையைக் காமன்
- எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
- கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
| 6.60.3
|
604 | நற்றவனைப் புற்றரவ நாணி னானை
- நாணாது நகுதலையூண் நயந்தான் றன்னை
முற்றவனை மூவாத மேனி யானை
- முந்நீரின் நஞ்சமுகந் துண்டான் றன்னைப்
பற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற
- படையானை அடைவார்தம் பாவம் போக்கக்
கற்றவனைக் கற்குடியில் விழுமி யானைக்
- கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
| 6.60.4
|
605 | சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் றன்னைச்
- சங்கரனைத் தழலுறுதாள் மழுவாள் தாங்கும்
அங்கையனை அங்கமணி ஆகத் தானை
- ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த
மங்கையனை மதியொடுமா சுணமுந் தம்மின்
- மருவவிரி சடைமுடிமேல் வைத்த வானீர்க்
கங்கையனைக் கற்குடியில் விழுமி யானைக்
- கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
| 6.60.5
|
606 | பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப்
- பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணி
விண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானை
- வேதியனை வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனைப் பண்ணில்வரு பயனா னானைப்
- பாரவனைப் பாரில்வாழ் உயிர்கட் கெல்லாங்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
- கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
| 6.60.6
|
607 | பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் றன்னைப்
- பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான் றன்னை
- ஒருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா
விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும்
- வெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக்
கண்டானைக் கற்குடியில் விழுமி யானைக்
- கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
| 6.60.7
|
608 | வானவனை வானவர்க்கு மேலா னானை
- வணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க
தேனவனைத் தேவர்தொழு கழலான் றன்னைச்
- செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்
கோனவனைக் கொல்லைவிடை யேற்றி னானைக்
- குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல
கானவனைக் கற்குடியில் விழுமி யானைக்
- கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
| 6.60.8
|
609 | கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக்
- கோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்த
சிலையானைச் செம்மைதரு பொருளான் றன்னைத்
- திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த
தலையானைத் தத்துவங்க ளானான் றன்னைத்
- தையலோர் பங்கினனைத் தன்கை யேந்து
கலையானைக் கற்குடியில் விழுமி யானைக்
- கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
| 6.60.9
|
610 | பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப்
- புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை
எழிலானை இடைமருதி னிடங்கொண் டானை
- ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் றன்னை
அழலாடு மேனியனை அன்று சென்றக்
- குன்றெடுத்த அரக்கன்றோள் நெரிய வூன்றுங்
கழலானைக் கற்குடியில் விழுமி யானைக்
- கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
| 6.60.10
| | | | | | | | | |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முத்தீசர்,
தேவியார் - அஞ்சனாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.61 திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
|
611 |
மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா
- மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம்
நாதனே யென்றென்று பரவி நாளும்
- நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு
- வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்
காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே
- கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
| 6.61.1 | |
612 | விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
- வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்
- செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
- சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
- கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
| 6.61.2
|
613 | எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
- திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே அவரவரைக் கண்ட போது
- உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி
- இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
- கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
| 6.61.3
|
614 | இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத்
- திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு
விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு
- மெய்யன்பு மிகப்பெய்து பொய்யை நீக்கித்
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்
- உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்
கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
- கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
| 6.61.4
|
615 | விருத்தனே வேலைவிட முண்ட கண்டா
- விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தி
- நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்
பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும்
- புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே
- கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
| 6.61.5
|
616 | பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்
- பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்
- பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்
- வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே
- கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
| 6.61.6
|
617 | ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு
- ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
- மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு
- அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே
- கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
| 6.61.7
|
618 | திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்
- திகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
- கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பருதிதனைப் பற்பறித்த பாவ நாசா
- பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
- கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
| 6.61.8
|
| இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 6.61.9
|
619 | குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தா யென்றுங்
- கூற்றுதைத்த குரைகழற்சே வடியா யென்றுந்
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தா யென்றுந்
- தசக்கிரிவன் மலையெடுக்க விரலா லூன்றி
முனிந்தவன்றன் சிரம்பத்துந் தாளுந் தோளும்
- முரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தி யென்றுங்
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
- கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
| 6.61.10
| | | | | | | | |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நடுதறிநன்னாயகர்,
தேவியார் - மாதுமைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.62 திருவானைக்கா - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
|
620 |
எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
- எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
- சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
- திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
- அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
| 6.62.1 | |
621 | ஊனாகி உயிராகி யதனுள் நின்ற
- உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்
நானேதும் அறியாமே யென்னுள் வந்து
- நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்
தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்
- திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்
ஆனாயுன் பொற்பாத மடையப் பெற்றால்
- அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
| 6.62.2
|
622 | ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்
- ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்று
துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன்
- திறமறந்து திரிவேனைக் காத்து நீவந்
தெப்பாலும் நுண்ணுணர்வே யாக்கி யென்னை
- ஆண்டவனே எழிலானைக் காவா வானோர்
அப்பாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
- அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
| 6.62.3
|
623 | நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா
- நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையா துன்பால்
முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய்
- முன்னானைத் தோல்போர்த்த முதல்வா வென்றுங்
கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா
- கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன்
அனைத்துலகும் ஆள்வானே ஆனைக் காவா
- அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
| 6.62.4
|
624 | இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத்
- திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங்
கைம்மான மனத்துதவிக் கருணை செய்து
- காதலரு ளவைவைத்தாய் காண நில்லாய்
வெம்மான மதகரியி னுரிவை போர்த்த
- வேதியனே தென்னானைக் காவுள் மேய
அம்மான்நின் பொற்பாத மடையப் பெற்றால்
- அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
| 6.62.5
|
625 | உரையாரும் புகழானே ஒற்றி யூராய்
- கச்சியே கம்பனே காரோ ணத்தாய்
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்
- மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்த மல்கு
- திருவானைக் காவிலுறை தேனே வானோர்
அரையாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
- அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
| 6.62.6
|
626 | மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்
- மான்மறியு மாமழுவும் அனலு மேந்துங்
கையானே காலனுடல் மாளச் செற்ற
- கங்காளா முன்கோளும் விளைவு மானாய்
செய்யானே திருமேனி யரியாய் தேவர்
- குலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேய
ஐயாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
- அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
| 6.62.7
|
627 | இலையாருஞ் சூலத்தாய் எண்தோ ளானே
- எவ்விடத்தும் நீயலா தில்லை யென்று
தலையாரக் கும்பிடுவார் தன்மை யானே
- தழல்மடுத்த மாமேரு கையில் வைத்த
சிலையானே திருவானைக் காவுள் மேய
- தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்
அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்
- அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
| 6.62.8
|
628 | விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத
- நெறியானே எறிகடலின் நஞ்ச முண்டாய்
எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்
- என்றென்றே நாவினிலெப் பொழுதும் உன்னிக்
கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங்
- கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய
அண்ணாநின் பொற்பாத மடையப் பெற்றால்
- அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
| 6.62.9
|
629 | கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்
- குறட்பூதங் கூத்தாட நீயு மாடி
வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா
- மதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய்
படியேயுங் கடலிலங்கைக் கோமான் றன்னைப்
- பருமுடியுந் திரள்தோளு மடர்த்து கந்த
அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால்
- அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
| 6.62.10
| | | | | | | | | |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.63 திருவானைக்கா - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
|
630 |
முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை
- மூவாத சிந்தையே மனமே வாக்கே
தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்
- சார்தற் கரியானைத் தாதை தன்னை
என்னானைக் கன்றினையென் ஈசன் றன்னை
- எறிநீர்த் திரையுகளுங் காவி ரிசூழ்
தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்
- செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
| 6.63.1 | |
631 | மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை
- வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் னுள்ளத்
திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை
- இமையவர்தம் பெருமானை உமையா ளஞ்சக்
கருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்
- கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்
திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்
- செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
| 6.63.2
|
632 | முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை
- முந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்
உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை
- ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்
பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் றன்னைப்
- பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றானைத் திருவானைக் காவு ளானைச்
- செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
| 6.63.3
|
633 | காராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக்
- காதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத்
தாரானைப் புலியதளி னாடை யானைத்
- தானன்றி வேறொன்று மில்லா ஞானப்
பேரானை மணியார மார்பி னானைப்
- பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட
தேரானைத் திருவானைக் காவு ளானைச்
- செழுநீர
| | | |