திருச்சிற்றம்பலம் உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6. 03 திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் |
| 22 |
வெறிவிரவு கூவிளநற் றொங்க லானை பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப் அறிதற் கரியசீ ரம்மான் றன்னை எறிகெடிலத் தானை இறைவன் றன்னை 6.3.1 | | 23 | வெள்ளிக்குன் றன்ன விடையான் றன்னை புள்ளி வரிநாகம் பூண்டான் றன்னைப் வள்ளி வளைத்தோள் முதல்வன் றன்னை எள்க இடுபிச்சை ஏற்பான் றன்னை 6.3.2
|
24 | முந்தி யுலகம் படைத்தான் றன்னை | சந்தவெண் டிங்கள் அணிந்தான் றன்னைத் சிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச் எந்தை பெருமானை ஈசன் றன்னை 6.3.3
|
25 | மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை | அந்தரமு மலைகடலு மானான் றன்னை கந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பிக் இந்திரனும் வானவருந் தொழச்செல் வானை 6.3.4
|
26 | ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார் | வருபிறப்பொன் றுணராது மாசு பூசி அருபிறப்பை அறுப்பிக்கும் அதிகை யூரன் திருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கேட் 6.3.5
|
27 | ஆறேற்க வல்ல சடையான் றன்னை | கூறேற்கக் கூறமர வல்லான் றன்னைக் நீறேற்கப் பூசும் அகலத் தானை ஏறேற்க ஏறுமா வல்லான் றன்னை 6.3.6
|
28 | குண்டாக்க னாயுழன்று கையி லுண்டு | உண்டி யுகந்தமணே நின்றார் சொற்கேட் வண்டுலவு கொன்றையங் கண்ணி யானை எண்டிசைக்கு மூர்த்தியாய் நின்றான் றன்னை 6.3.7
|
29 | உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி | கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு மறிதிரைநீர்ப் பவ்வநஞ் சுண்டான் றன்னை எறிகெடில நாடர் பெருமான் றன்னை 6.3.8
|
30 | நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் றன்னை | மறையானை மாசொன் றிலாதான் றன்னை கறையானைக் காதார் குழையான் றன்னைக் இறையானை எந்தை பெருமான் றன்னை 6.3.9
|
31 | தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து | வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட கொல்லைவாய்க் குருந்தொசித்துக் குழலு மூதுங் எல்லைகாண் பரியானை எம்மான் றன்னை 6.3.10
|
32 | முலைமறைக்கப் பட்டுநீ ராடப் பெண்கள் | தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று மலைமறிக்கச் சென்ற இலங்கைக் கோனை இலைமறித்த கொன்றையந் தாரான் றன்னை 6.3.11
| |
| 33 |
சந்திரனை மாகங்கைத் திரையால் மோதச் கந்தருவம் விரும்புமே கபால மேந்து பந்தணவு மெல்விரலாள் பாக னாமே ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே 6.4.1 | | 34 | ஏறேறி யேழுலகும் உழிதர் வானே பாறேறு படுதலையிற் பலிகொள் வானே நீறேறு செழும்பவளக் குன்றொப் பானே ஆறேறு சடைமுடிமேற் பிறைவைத் தானே 6.4.2
|
35 | முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே | கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே அண்டத்துக் கப்பாலாய் இப்பா லானே 6.4.3
|
36 | செய்யனே கரியனே கண்டம் பைங்கண் | வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச் கையனே காலங்கள் மூன்றா னானே ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே 6.4.4
|
37 | பாடுமே யொழியாமே நால்வே தமும் | சூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ் கூடுமே குடமுழவம் வீணை தாளங் தாடுமே அந்தடக்கை அனலேந் தும்மே 6.4.5
|
38 | ஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ள | விழித்திடுமே காமனையும் பொடியா வீழ இழித்திடுமே ஏழுலகுந் தானா கும்மே அழித்திடுமே ஆதிமா தவத்து ளானே 6.4.6
|
39 | குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை | கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே அழலாடு மேயட்ட மூர்த்தி யாமே 6.4.7
|
40 | மாலாகி மதமிக்க களிறு தன்னை | மேலாலுங் கீழாலுந் தோன்றா வண்ணம் கோலாலம் படவரைநட் டரவு சுற்றிக் ஆலால முண்டிருண்ட கண்டத் தானே 6.4.8
|
41 | செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ் | வம்பினார் மலர்க்கூந்த லுமையாள் காதல் நம்பனே நான்மறைகள் தொழநின் றானே அம்பனே அண்டகோ சரத்து ளானே 6.4.9
|
42 | எழுந்ததிரை நதித்துவலை நனைந்த திங்கள் | கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே அழுந்தியசெந் திருவுருவில் வெண்ணீற் றானே 6.4.10
|
43 | நெடியானும் நான்முகனும் நேடிக் காணா | கொடியேறு கோலமா மணிகண் டனே பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப் அடியாரை அமருலகம் ஆள்விக் கும்மே 6.4.11
| |
| 44 |
எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி கொல்லார் மழுவாட் படையாய் போற்றி கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி 6.5.1 | | 45 | பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி ஓட்டகத்தே யூணா உகந்தாய் போற்றி காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி 6.5.2
|
46 | முல்லையங் கண்ணி முடியாய் போற்றி | எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி தில்லைச்சிற் றம்பல மேயாய் போற்றி 6.5.3
|
47 | சாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி | கூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக் பாம்பும் மதியும் புனலுந் தம்மிற் ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி 6.5.4
|
48 | நீறேறு நீல மிடற்றாய் போற்றி | கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி ஆறேறு சென்னி யுடையாய் போற்றி ஏறேற என்றும் உகப்பாய் போற்றி 6.5.5
|
49 | பாடுவார் பாட லுகப்பாய் போற்றி | வீடுவார் வீடருள வல்லாய் போற்றி நாடுவார் நாடற் கரியாய் போற்றி ஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி 6.5.6
|
50 | மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி | விண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி பண்டுளங்கப் பாடல் பயின்றாய் போற்றி கண்டுளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி 6.5.7
|
51 | வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி | துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி 6.5.8
|
52 | சிந்தையாய் நின்ற சிவனே போற்றி | புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி சந்தியாய் நின்ற சதுரா போற்றி அந்தியாய் நின்ற அரனே போற்றி 6.5.9
|
53 | முக்கணா போற்றி முதல்வா போற்றி | தக்கணா போற்றி தருமா போற்றி தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத் எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி 6.5.10
| |
| 54 |
அரவணையான் சிந்தித் தரற்றும்மடி சரவணத்தான் கைதொழுது சாரும்மடி பரவுவார் பாவம் பறைக்கும்மடி திரைவிரவு தென்கெடில நாடன்னடி 6.6.1 | | 55 | கொடுவினையா ரென்றுங் குறுகாவடி படுமுழவம் பாணி பயிற்றும்மடி கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி நெடுமதியங் கண்ணி யணிந்தானடி 6.6.2
|
56 | வைதெழுவார் காமம்பொய் போகாவடி | கைதொழுது நாமேத்திக் காணும்மடி நெய்தொழுது நாமேத்தி யாட்டும்மடி தெய்வப் புனற்கெடில நாடன்னடி 6.6.3
|
57 | அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி | சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி 6.6.4
|
58 | ஒருகாலத் தொன்றாகி நின்றவடி | பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்மடி இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி திருவதிகைத் தென்கெடில நாடன்னடி 6.6.5
|
59 | திருமகட்குச் செந்தா மரையாமடி | பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி திருவதிகைத் தென்கெடில நாடன்னடி 6.6.6
|
60 | உரைமாலை யெல்லா முடையவடி | வரைமாதை வாடாமை வைக்கும்மடி அரைமாத் திரையில் லடங்கும்மடி கரைமாங் கலிக்கெடில நாடன்னடி 6.6.7
|
61 | நறுமலராய் நாறு மலர்ச்சேவடி | செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி மறுமதியை மாசு கழுவும்மடி செறிகெடில நாடர் பெருமானடி 6.6.8
|
62 | அணியனவுஞ் சேயனவு மல்லாவடி | பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி மணியடி பொன்னடி மாண்பாமடி தணிபாடு தண்கெடில நாடன்னடி 6.6.9
|
63 | அந்தாம ரைப்போ தலர்ந்தவடி | முந்தாகி முன்னே முளைத்தவடி பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி வெந்தார் சுடலைநீ றாடும்மடி 6.6.10
| |
| 64 |
செல்வப் புனற்கெடில வீரட்டமுஞ் தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலுந் நல்லூருந் தேவன் குடிமருகலும் கல்லலகு நெடும்புருவக் கபாலமேந்திக் 6.7.1 | | 65 | தீர்த்தப் புனற்கெடில வீரட்டமுந் ஆர்த்தருவி வீழ்சுனைநீர் அண்ணாமலை ஏத்துமின்கள் நீரேத்த நின்றஈசன் கார்த்தயங்கு சோலைக் கயிலாயமுங் 6.7.2
|
66 | சிறையார் புனற்கெடில வீரட்டமுந் | துறையார் வனமுனிக ளேத்தநின்ற அறையார் புனலொழுகு காவிரிசூழ் கறையார் பொழில்புடைசூழ் கானப்பேருங் 6.7.3
|
67 | திரையார் புனற்கெடில வீரட்டமுந் | உரையார் தொழநின்ற ஒற்றியூரும் வரையா ரருவிசூழ் மாநதியும் கரையார் புனலொழுகு காவிரிசூழ் 6.7.4
|
68 | செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமுந் | கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக்காவுங் பழிநீர்மை யில்லாப் பனங்காட்டூரும் கழுநீர் மதுவிரியுங் காளிங்கமுங் 6.7.5
|
69 | தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ் | பவ்வந் திரியும் பருப்பதமும் மவ்வந் திரையும் மணிமுத்தமும் கவ்வை வரிவண்டு பண்ணேபாடுங் 6.7.6
|
70 | தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ் | உண்ணீரார் ஏடகமும் ஊறல்அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர் விண்ணார் விடையான் விளமர்வெண்ணி மீயச்சூர் வீழி மிழலைமிக்க கண்ணார் நுதலார் கரபுரமுங் காபாலி யாரவர்தங் காப்புக்களே. 6.7.7
|
71 | தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந் | எள்ளும் படையான் இடைத்தானமும் கொள்ளு மிலயத்தார் கோடிகாவுங் கள்ளருந்தத் தெள்ளியா ருள்கியேத்துங் 6.7.8
|
72 | சீரார் புனற்கெடில வீரட்டமுந் | திருக்காட்டுப் பள்ளி திருவெண்காடும் பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும் பந்தணை நல்லூரும் பாசூர்நல்லம் நீரார் நிறைவயல்சூழ் நின்றியூரும் காரார் கமழ்கொன்றைத் தாரார்க்கென்றுங் 6.7.9
|
73 | சிந்தும் புனற்கெடில வீரட்டமுந் | அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும் எந்தம் பெருமாற் கிடமாவது கந்தங் கமழுங் கரவீரமுங் 6.7.10
|
74 | தேனார் புனற்கெடில வீரட்டமுந் | வானோர் வணங்கும் மணஞ்சேரியும் ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம் கானார் மயிலார் கருமாரியுங் 6.7.11
|
75 | திருநீர்ப் புனற்கெடில வீரட்டமுந் | வருநீர் வளம்பெருகு மானிருபமும் பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற கருநீல வண்டரற்றுங் காளத்தியுங் 6.7.12
| |
| 76 |
விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண் மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண் பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண் கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட 6.8.1 | | 77 | இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண் முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண் படித்தான் தலையறுத்த பாசு பதன்காண் கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண் 6.8.2
|
78 | நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண் | பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் றான்காண் சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் றான்காண் காரணன்காண் காளத்தி காணப் பட்ட 6.8.3
|
79 | செற்றான்காண் என்வினையைத் தீயா டிகாண் | குற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண் சொற்றான்காண் சோற்றுத் துறையு ளான்காண் கற்றான்காண் காளத்தி காணப் பட்ட 6.8.4
|
80 | மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான் | இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான் புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான் கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான் 6.8.5
|
81 | எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண் | பொல்லாப் புலனைந்தும் போக்கி னான்காண் நல்லவிடை மேற்கொண்டு நாகம் பூண்டு கல்லாடை மேற்கொண்ட காபா லிகாண் 6.8.6
|
82 | கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண் | எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண் திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண் கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண் 6.8.7
|
83 | இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண் | வில்லாடி வேடனா யோடி னான்காண் மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண் கல்லாலின் கீழிருந்த காபா லிகான் 6.8.8
|
84 | தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண் | ஞானப்பூங் கோதையாள் பாகத் தான்காண் வானப்பே ரூரு மறிய வோடி கானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண் 6.8.9
|
85 | இறையவன்காண் ஏழுலகு மாயி னான்காண் | குறையுடையார் குற்றேவல் கொள்வான் றான்காண் மறையுடைய வானோர் பெருமான் றான்காண் கறையுடைய கண்டத்தெங் காபா லிகாண் 6.8.10
|
86 | உண்ணா வருநஞ்ச முண்டான் றான்காண் | பண்ணாரப் பல்லியம் பாடி னான்காண் அண்ணா மலையான்காண் அடியா ரீட்டம் கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான்காண் 6.8.11
| |
| 87 |
வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக் சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித் அண்ணலார் போகின்றார் வந்து காணீர் 6.9.1 | | 88 | வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை கந்தாரந் தாமுரலாப் போகா நிற்கக் நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு அந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய் 6.9.2
|
89 | கட்டங்கந் தாமொன்று கையி லேந்திக் | இட்டங்கள் தாம்பேசி இல்லே புக்கு பட்டிமையும் படிறுமே பேசா நின்றார் அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார் 6.9.3
|
90 | பசைந்தபல பூதத்தர் பாட லாடல் | கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம் அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர் 6.9.4
|
91 | உருளுடைய தேர்புரவி யோடும் யானை | றிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர் பொருளுடைய ரல்லர் இலரு மல்லர் அருளுடைய அங்கோதை மாலை மார்பர் 6.9.5
|
92 | வீறுடைய ஏறேறி நீறு பூசி | கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு பாறுடைய படுதலையோர் கையி லேந்திப் ஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும் 6.9.6
|
93 | கையோர் கபாலத்தர் மானின் றோலர் | செய்ய திருமேனி வெண்ணீ றாடித் மெய்யொரு பாகத் துமையை வைத்து ஐயனார் போகின்றார் வந்து காணீர் 6.9.7
|
94 | ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே | நின்றுதான் என்செய்வீர் போவீ ராகில் என்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர் அன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோ 6.9.8
|
95 | கல்லலகு தாங்கொண்டு காளத் தியார் | இல்லமே தாம்புகுதா இடுமின் பிச்சை சொல்லாதே போகின்றீர் உம்மூ ரேது அல்லலே செய்தடிகள் போகின் றார்தாம் 6.9.9
|
96 | மழுங்கலா நீறாடும் மார்பர் போலும் | கொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலுங் செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலுந் அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் 6.9.10
| |
| 97 |
நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார் பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப் ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார் பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார் 6.10.1 | | 98 | காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார் ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார் பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை பாடலா ராடலார் பைங்க ணேற்றார் 6.10.2
|
99 | பூதப் படையுடையார் பொங்கு நூலார் | வேதத் தொழிலார் விரும்ப நின்றார் ஓதத் தொலிகடல்வாய் நஞ்ச முண்டார் பாதத் தொடுகழலார் பைங்க ணேற்றார் 6.10.3
|
100 | நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார் | ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார் வாருலா முலைமடவாள் பாக மேற்றார் பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார் 6.10.4
|
101 | தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார் | இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார் பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார் 6.10.5
|
102 | கடமன்னு களியானை யுரிவை போர்த்தார் | மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார் நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார் படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார் 6.10.6
|
103 | முற்றா மதிச்சடையார் மூவ ரானார் | கற்றார் பரவுங் கழலார் திங்கள் பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார் பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார் 6.10.7
|
104 | கண்ணமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் | பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார் மண்ணவரும் வானவரும் மற்றை யோரும் பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார் 6.10.8
|
105 | ஏறேறி யேழுலகு மேத்த நின்றார் | நீறேறு மேனியார் நீல முண்டார் ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார் 6.10.9
|
106 | கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார் | நல்லூரார் ஞானத்தார் ஞான மானார் மல்லூர் மணிமலையின் மேலி ருந்து பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார் 6.10.10
| |
| 107 |
பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப் துறவாதே கட்டறுத்த சோதி யானைத் திறமாய எத்திசையுந் தானே யாகித் நிறமா மொளியானை நீடூ ரானை 6.11.1 | | 108 | பின்றானும் முன்றானு மானான் றன்னைப் நன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத் நின்றாய நீடூர் நிலாவி னானை 6.11.2
|
109 | இல்லானை எவ்விடத்தும் உள்ளான் றன்னை | வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம் செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத் நெல்லால் விளைகழனி நீடூ ரானை 6.11.3
|
110 | கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக் | பலவாய வேடங்கள் தானே யாகிப் சிலையாற் புரமெரித்த தீயா டியைத் நிலையார் மணிமாட நீடூ ரானை 6.11.4
|
111 | நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை | ஆக்காதே யாதொன்று மாக்கி னானை தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் றன்னைத் நீக்காத பேரொளிசேர் நீடு ரானை 6.11.5
|
112 | பூணலாப் பூணானைப் பூசாச் சாந்த | ஊணலா வூணானை யொருவர் காணா சேணுலாஞ் செழும்பவளக் குன்றொப் பானைத் நீணுலா மலர்க்கழனி நீடூ ரானை 6.11.6
|
113 | உரையார் பொருளுக் குலப்பி லானை | புரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப் திரையார் புனல்சேர் மகுடத் தானைத் நிரையார் மணிமாட நீடூ ரானை 6.11.7
|
114 | கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை | ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர் சீரரவக் கழலானை நிழலார் சோலைத் நீரரவத் தண்கழனி நீடூ ரானை 6.11.8
|
115 | கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக் | பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப் செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித் நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை 6.11.9
|
116 | இகழுமா றெங்ஙனே ஏழை நெஞ்சே | நகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனை திகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத் நிகழுமா வல்லானை நீடூ ரானை 6.11.10
| |
| 117 |
ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து தாமெடுத்த கூரை தவிரப் போவார் கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக் வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும் 6.12.1 | | 118 | முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று பிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை கறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை 6.12.2
|
119 | நெளிவுண்டாக் கருதாதே நிமலன் றன்னை | ஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை களிவண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலிக் வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க 6.12.3
|
120 | பொடிநாறு மேனியர் பூதிப் பையர் | அடிநாறு கமலத்தர் ஆரூ ராதி கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங் மடிநாறு மேனியிம் மாயம் நீங்க 6.12.4
|
121 | விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து | எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய் கண்ணானாய் காரானாய் பாரு மானாய் மண்ணானாய் மாயக் குரம்பை நீங்க 6.12.5
|
122 | விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த | பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும் கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார் வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க 6.12.6
|
123 | பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப் | இணம்புல்கு சூலத்தர் நீல கண்டர் கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார் மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க 6.12.7
|
124 | இயல்பாய ஈசனை எந்தை தந்தை | முயல்வானை மூர்த்தியைத் தீர்த்த மான கயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலிக் மயலாய மாயக் குரம்பை நீங்க 6.12.8
|
125 | செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து | உற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங் கற்றதோர் நூலினன் களிறு செற்றான் மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க 6.12.9
|
126 | பொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன் | இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும் கரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு வருதலங்க மாயக் குரம்பை நீங்க 6.12.10
| |
| 127 |
கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர் நடமாடு நன்மருகல் வைகி நாளும் படுமாலை வண்டறையும் பழனம் பாசூர் பொடியேறு மேனியராய்ப் பூதஞ் சூழப் 6.13.1 | | 128 | முற்றொருவர் போல முழுநீ றாடி ஒற்றொருவர் போல வுறங்கு வேன்கை மற்றொருவ ரில்லைத் துணை யெனக்கு புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப் 6.13.2
|
129 | ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர் | ஏகாச மாவிட்டோ டொன்றேந் திவந் பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார் போகாத வேடத்தர் பூதஞ் சூழப் 6.13.3
|
130 | பன்மலிந்த வெண்டலை கையி லேந்திப் | நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறை கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங் பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம் 6.13.4
|
131 | செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச் | மத்தகத்த யானை யுரிவை மூடி அத்தவத்த தேவர் அறுப தின்மர் புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப் 6.13.5
|
132 | நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி | பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப் துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத் புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப் 6.13.6
|
133 | மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி | செறியிலங்கு திண்டோ ள்மேல் நீறு கொண்டு நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப் 6.13.7
|
134 | நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி | கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொட் டியுங் நல்லாலை நல்லூரே தவிரே னென்று பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப் 6.13.8
|
135 | விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு | திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத் அரையேறு மேகலையாள் பாக மாக புரையேறு தாமேறிப் பூதஞ் சூழப் 6.13.9
|
136 | கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக் | பூவாய பீடத்து மேல யனும் பாவாய இன்னிசைகள் பாடி யாடிப் பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப் 6.13.10
| |
| 137 |
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார் 6.14.1 | | 138 | பொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார் மன்னலத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார் மின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார் நன்னலத்த திருவடியென் றலைமேல் வைத்தார் 6.14.2
|
139 | தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார் | பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார் சேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார் நாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார் 6.14.3
|
140 | வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம் | கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக் சொல்லருளி யறநால்வர்க் கறிய வைத்தார் நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார் 6.14.4
|
141 | விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார் | கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார் திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார் நண்ணரிய திருவடியென் றலைமேல் வைத்தார் 6.14.5
|
142 | உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார் | மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா செற்றமலி யார்வமொடு காம லோபஞ் நற்றவர்சேர் திருவடியென் றலைமேல் வைத்தார் 6.14.6
|
143 | மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார் | நீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார் ஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார் நாறுமலர்த் திருவடியென் றலைமேல் வைத்தார் 6.14.7
|
144 | குலங்கள்மிகும் அலைகடல்கள் ஞாலம் வைத்தார் | உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார் நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார் 6.14.8
|
145 | சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார் | நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார் கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக் நன்றருளுந் திருவடியென் றலைமேல் வைத்தார் 6.14.9
|
146 | பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப் | ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார் ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார் நாம்பரவுந் திருவடியென் றலைமேல் வைத்தார் 6.14.10
|
147 | குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார் | உலங்கிளர எடுத்தவன்றோள் முடியும் நோவ புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார் நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார் 6.14.11
| |
| 148 |
குருகாம் வயிரமாங் கூறு நாளாங் பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் ஒருகா லுமையாளோர் பாக னுமாம் கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங் 6.15.1 | | 149 | வித்தாம் முளையாகும் வேரே தானாம் பத்தா மடியார்க்கோர் பாங்க னுமாம் தொத்தா மமரர்கணஞ் சூழ்ந்து போற்றத் கத்தாம் அடியேற்குக் காணா காட்டுங் 6.15.2
|
150 | பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம் | கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங் ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம் காத்தானாங் காலன் அடையா வண்ணங் 6.15.3
|
151 | இரவனாம் எல்லி நடமா டியாம் | அரவனாம் அல்லல் அறுப்பா னுமாம் குரவனாங் கூற்றை யுதைத்தான் றானாங் கரவனாங் காட்சிக் கெளியா னுமாங் 6.15.4
|
152 | படைத்தானாம் பாரை யிடந்தா னாகும் | உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாகம் கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற் 6.15.5
|
153 | மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம் | சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ் மாலனாம் மங்கையோர் பங்க னாகும் காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங் 6.15.6
|
154 | அரைசே ரரவனாம் ஆலத் தானாம் | திரைசேர் திருமுடித் திங்க ளானாந் உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம் கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங் 6.15.7
|
155 | துடியாந் துடியின் முழக்கந் தானாஞ் | படிதானாம் பாவ மறுப்பா னாகும் கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங் கடியானாங் காட்சிக் கரியா னாகுங் 6.15.8
|
156 | விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம் | பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம் எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம் கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங் 6.15.9
|
157 | பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளா னாகி | செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச் அறுத்திருந்த கையானாம் அந்தார் அல்லி கறுத்திருந்த கண்ட முடையான் போலுங் 6.15.10
|
158 | ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் | இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும் அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே கறுத்தானாங் காலனைக் காலால் வீழக் 6.15.11
| |
| 159 |
சூலப் படையுடையார் தாமே போலுஞ் மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும் வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும் ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும் 6.16.1 | | 160 | காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங் பாரார் பரவப் படுவார் போலும் சீரால் வணங்கப் படுவார் போலுந் ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும் 6.16.2
|
161 | வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் | பூதங்க ளாய புராணர் போலும் பாதம் பரவப் படுவார் போலும் ஏதங்க ளான கடிவார் போலும் 6.16.3
|
162 | திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித் | விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி பண்குணத்தார் பாடலோ டாட லோவாப் எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும் 6.16.4
|
163 | ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த | பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப் மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு ஏகம்ப மேயாரு மெல்லா மாவார் 6.16.5
|
164 | ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும் | செய்வினைகள் நல்வினைக ளானார் போலுந் கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங் எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும் 6.16.6
|
165 | பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப் | விரியாத குணமொருகால் நான்கே யென்பர் தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும் எரியாய தாமரைமே லியங்கி னாரும் 6.16.7
|
166 | தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ் | ஆல மமுதாக வுண்டார் போலும் காலனையுங் காய்ந்த கழலார் போலுங் ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும் 6.16.8
|
167 | பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும் | அந்திவாய் வண்ணத் தழகர் போலும் வந்த வரவுஞ் செலவு மாகி எந்த மிடர்தீர்க்க வல்லார் போலும் 6.16.9
|
168 | கொன்றையங் கூவிள மாலை தன்னைக் | நின்ற அனங்கனை நீறா நோக்கி அன்றவ் வரக்கன் அலறி வீழ என்று மிடுபிச்சை ஏற்றுண் பாரும் 6.16.10
| |
| 169 |
ஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர் நீறு தடவந் திடப மேறி கூறுங் குணமுடையர் கோவ ணத்தர் ஈறுந் நடுவு முதலு மாவார் 6.17.1 | | 170 | மங்குல் மதிவைப்பர் வான நாடர் பங்கில் மிகவைப்பர் பால்போல் நீற்றர் சங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர் எங்கும் பலிதிரிவர் என்னுள் நீங்கார் 6.17.2
|
171 | ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர் | காலம் பலகழித்தார் கறைசேர் கண்டர் கோலம் பலவுடையர் கொல்லை யேற்றர் ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார் 6.17.3
|
172 | தேசர் திறம்நினைவார் சிந்தை சேருஞ் | வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர் நேசர் அடைந்தார்க் கடையா தார்க்கு ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த 6.17.4
|
173 | கரப்பர் கரியமனக் கள்வர்க் குள்ளங் | துரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர் நிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர் இரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார் 6.17.5
|
174 | கொடியா ரிடபத்தர் கூத்து மாடிக் | பொடியாரு மேனியர் பூதிப் பையர் அடியார் குடியாவர் அந்த ணாளர் இடியார் களிற்றுரியார் எவரும் போற்ற 6.17.6
|
175 | பச்சை நிறமுடையர் பாலர் சாலப் | கச்சைக் கதநாகம் பூண்ட தோளர் பிச்சை கொளநுகர்வர் பெரியர் சாலப் இச்சை மிகஅறிவர் என்று முள்ளார் 6.17.7
|
176 | காவார் சடைமுடியர் காரோ ணத்தர் | பாவார் பொருளாளர் வாளார் கண்ணி பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர் ஏவார் சிலைமலையர் எங்குந் தாமே 6.17.8
|
177 | புரிந்தார் நடத்தின்கண் பூத நாதர் | பிரிந்தா ரகல்வாய பேயுந் தாமும் எரிந்தா ரனலுகப்பர் ஏழிலோசை இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும் 6.17.9
|
178 | விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர் | மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர் சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்று இட்டிரங்கி மற்றவனுக் கீந்தார் வென்றி 6.17.10
| |
| 179 |
வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் 6.18.1 | | 180 | ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும் ஊணாகி ஊர்திரிவா னாகித் தோன்றும் சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ் பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும் 6.18.2
|
181 | கல்லாலின் நீழலிற் கலந்து தோன்றுங் | சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றுஞ் அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும் பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும் 6.18.3
|
182 | படைமலிந்த மழுவாளு மானுந் தோன்றும் | நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும் உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்று புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் 6.18.4
|
183 | மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும் | இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும் கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும் 6.18.5
|
184 | பாராழி வட்டத்தார் பரவி யிட்ட | சீராழித் தாமரையின் மலர்க ளன்ன ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன் போராழி முன்னீந்த பொற்புத் தோன்றும் 6.18.6
|
185 | தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ் | மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும் துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந் பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும் 6.18.7
|
186 | செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றும் | நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும் மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும் பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும் 6.18.8
|
187 | அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும் | மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும் திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ் பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும் 6.18.9
|
188 | ஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று | பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று கோங்கணைந்த கூவிளமும் மதமத் தமுங் பூங்கணைவேள் உருவழித்த பொற்புத் தோன்றும் 6.18.10
|
189 | ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே | வாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை நீருருவக் கடலிலங்கை அரக்கர் கோனை போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும் 6.18.11
| |
| 190 |
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும் துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத் திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 6.19.1 | | 191 | விண்ணுலகின் மேலார்கள் மேலான் றன்னை பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத் தானைப் உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கை யாளைக் தெண்ணிலவு தென்கூடற் றிருவா லவாய்ச் 6.19.2
|
192 | நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை | பாற்றிரளைப் பயின்றாட வல்லான் றன்னைப் காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று தீத்திரளைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 6.19.3
|
193 | வானமிது வெல்லா முடையான் றன்னை | கானமதில் நடமாட வல்லான் றன்னைக் ஊனமது வெல்லா மொழித்தான் றன்னை தேனமுதைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 6.19.4
|
194 | ஊரானை உலகேழாய் நின்றான் றன்னை | பேரானைப் பிறர்க்கென்று மரியான் றன்னைப் ஆரானை அமரர்களுக் கமுதீந் தானை சீரானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 6.19.5
|
195 | மூவனை மூர்த்தியை மூவா மேனி | பாவனைப் பாவ மறுப்பான் றன்னைப் மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு தேவனைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 6.19.6
|
196 | துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைத் | இறந்தார்க ளென்பே அணிந்தான் றன்னை மறந்தார் மதின்மூன்று மாய்த்தான் றன்னை சிறந்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 6.19.7
|
197 | வாயானை மனத்தானை மனத்துள் நின்ற | தூயானைத் தூவெள்ளை ஏற்றான் றன்னைச் தாயானைத் தவமாய தன்மை யானைத் சேயானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 6.19.8
|
198 | பகைச்சுடராய்ப் பாவ மறுப்பான் றன்னைப் | வகைச்சுடராய் வல்லசுரர் புரமட் டானை மிகைச்சுடரை விண்ணவர்கண் மேலப் பாலை திகைச்சுடரைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 6.19.9
|
199 | மலையானை மாமேறு மன்னி னானை | தலையானை என்றலையின் உச்சி யென்றுந் துலையாக ஒருவரையு மில்லா தானைத் சிலையானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 6.19.10
|
200 | தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் றன்னைத் | பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் றன்னைப் ஆத்தனை அடியேனுக் கன்பன் றன்னை தீர்த்தனைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 6.19.11
| |
| 201 |
ஆதிக்கண் ணான்முகத்தி லொன்று சென்று சேதித்த திருவடியைச் செல்ல நல்ல மாதிமைய மாதோர்கூ றாயி னானை நாதியை நம்பியை நள்ளாற் றானை 6.20.1 | | 202 | படையானைப் பாசுபத வேடத் தானைப் அடையாமைக் காப்பானை அடியார் தங்கள் சடையானைச் சந்திரனைத் தரித்தான் றன்னைச் நடையானை நம்பியை நள்ளாற் றானை 6.20.2
|
203 | படவரவ மொன்றுகொண் டரையி லார்த்த | அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை நடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை 6.20.3
|
204 | கட்டங்க மொன்றுதங் கையி லேந்திக் | சுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச் பட்டங்க மாலை நிறையச் சூடிப் நட்டங்க மாடியை நள்ளாற் றானை 6.20.4
|
205 | உலர்ந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம் | சிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத் கலந்தார்தம் மனத்தென்றுங் காதலானைக் நலந்தாங்கு நம்பியை நள்ளாற் றானை 6.20.5
|
206 | குலங்கெடுத்துக் கோள்நீக்க வல்லான் றன்னைக் | மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந் நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை 6.20.6
|
207 | பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப் | மாவிரியக் களிறுரித்த மைந்தன் றன்னை தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ் நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை 6.20.7
|
208 | சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத் | வில்லானை எல்லார்க்கு மேலா னானை கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக் நல்லானை நம்பியை நள்ளாற் றானை 6.20.8
|
209 | குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக் | அன்றாக அவுணர்புர மூன்றும் வேவ சென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச் நன்றாகும் நம்பியை நள்ளாற் றானை 6.20.9
|
210 | இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க | உறவாகி இன்னிசைகேட் டிரங்கி மீண்டே மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை 6.20.10
| |
| 211 |
முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும் கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலுங் கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர் அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும் 6.21.1 | | 212 | ஓதிற் றொருநூலு மில்லை போலும் காதிற்குழை யிலங்கப் பெய்தார் போலுங் வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும் ஆதிக் களவாகி நின்றார் போலும் 6.21.2
|
213 | மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும் | நெய்யார் திரிசூலங் கையார் போலும் வையார் மழுவாட் படையார் போலும் ஐவா யரவமொன் றார்த்தார் போலும் 6.21.3
|
214 | வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும் | பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும் கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலுங் அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும் 6.21.4
|
215 | ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ | மேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை மாகாச மாயவெண் ணீருந் தீயும் ஆகாச மென்றிவையு மானார் போலும் 6.21.5
|
216 | மாதூரும் வாணெடுங்கண் செவ்வாய் மென்றோள் | மூதூர் முதுதிரைக ளானார் போலும் தீதூர நல்வினையாய் நின்றார் போலுந் ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும் 6.21.6
|
217 | மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும் | கோலானைக் கோளழலாற் காய்ந்தார் போலுங் காலனைக் காலாற் கடந்தார் போலுங் ஆலானைந் தாட லுகப்பார் போலும் 6.21.7
|
218 | கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங் | உண்ணா அருநஞ்ச முண்டார் போலும் எண்ணா யிரங்கோடி பேரார் போலும் அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும் 6.21.8
|
219 | கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை | நெடியானுஞ் சதுர்முகனுந் நேட நின்ற படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி அடியார் புகலிடம தானார் போலும் 6.21.9
|
220 | திரையானுஞ் செந்தா மரைமே லானுந் | புரையா னெனப்படுவார் தாமே போலும் கரையா வரைவில்லே நாகம் நாணாக் வரையார் மதிலெய்த வண்ணர் போலும் 6.21.10
| |
| 221 |
பாரார் பரவும் பழனத் தானைப் சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத் பேரா யிரமுடைய பெம்மான் றன்னைப் காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் 6.22.1 | | 222 | விண்ணோர் பெருமானை வீரட் டானை பெண்ணானை ஆணானைப் பேடி யானைப் அண்ணா மலையானை ஆனைந் தாடும் கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் 6.22.2
|
223 | சிறையார் வரிவண்டு தேனே பாடுந் | மறையான்றன் வாய்மூருங் கீழ்வே ளூரும் உறைவானை உத்தமனை ஒற்றி யூரிற் கறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் 6.22.3
|
224 | அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை | முன்னமே கோயிலாக் கொண்டான் றன்னை சின்னமாம் பன்மலர்க ளன்றே சூடிச் கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக் 6.22.4
|
225 | நடையுடைய நல்லெருதொன் றூர்வான் றன்னை | படையுடைய மழுவாளொன் றேந்தி னானைப் மடையிடையே வாளை யுகளும் பொய்கை கடையுடைய நெடுமாட மோங்கு நாகைக் 6.22.5
|
226 | புலங்கொள்பூந் தேறல்வாய்ப் புகலிக் கோனைப் | அலங்கலங் கழனிசூழ் அணிநீர்க் கங்கை இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் 6.22.6
|
227 | பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப் | சின்மணிய மூவிலைய சூலத் தானைத் மன்மணியை வான்சுடலை யூராப் பேணி கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகைக் 6.22.7
|
228 | வெண்டலையும் வெண்மழுவு மேந்தி னானை | புண்டலைய மால்யானை யுரிபோர்த் தானைப் எண்டிசையு மெரியாட வல்லான் றன்னை கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக் 6.22.8
|
229 | சொல்லார்ந்த சோற்றுத் துறையான் றன்னைத் | வில்லானை மீயச்சூர் மேவி னானை பொல்லாதார் தம்மரண மூன்றும் பொன்றப் கல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக் 6.22.9
|
230 | மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும் | சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும் பனையுரியைத் தன்னுடலிற் போர்த்த எந்தை கனைகடலின் றென்கழிசூழ் அந்தண் நாகைக் 6.22.10
|
231 | நெடியானும் மலரவனும் நேடி யாங்கே | படியானைப் பாம்புரமே காத லானைப் செடிநாறும் வெண்டலையிற் பிச்சைக் கென்று கடிநாறு பூஞ்சோலை அந்தண் நாகைக் 6.22.11
| |
| 232 |
தூண்டு சுடரனைய சோதி கண்டாய் காண்டற் கரிய கடவுள் கண்டாய் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் 6.23.1 | | 233 | கைகிளரும் வீணை வலவன் கண்டாய் மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய் பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய் வைகிளருங் கூர்வாட் படையான் கண்டாய் 6.23.2
|
234 | சிலந்திக் கருள்முன்னஞ் செய்தான் கண்டாய் | நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய் சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய் மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய் 6.23.3
|
235 | கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய் | புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய் வெள்ளி மிளிர்பிறைமேற் சூடி கண்டாய் வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய் 6.23.4
|
236 | மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய் | ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் வாரி மதகளிறே போல்வான் கண்டாய் 6.23.5
|
237 | ஆடல் மால்யானை யுரித்தான் கண்டாய் | கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய் வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய் 6.23.6
|
238 | வேலைசேர் நஞ்ச மிடற்றான் கண்டாய் | ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய் பால்நெய்சே ரானஞ்சு மாடி கண்டாய் மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய் 6.23.7
|
239 | அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் | டிம்மை பயக்கு மிறைவன் கண்டாய் மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய் மம்ம ரறுக்கு மருந்து கண்டாய் 6.23.8
|
240 | மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் | ஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய் பால விருத்தனு மானான் கண்டாய் மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய் 6.23.9
|
241 | அயனவனும் மாலவனு மறியா வண்ணம் | துயரிலங்கை வேந்தன் துளங்க வன்று பெயரவற்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய் மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய் 6.23.10
| |
| 242 |
கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண் அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண் எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண் செம்மானத் தொளியன்ன மேனி யான்காண் 6.24.1 | | 243 | ஊனேறு படுதலையில் உண்டி யான்காண் ஆனேறொன் றூர்ந்துழலும் ஐயா றன்காண் மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண் தேனேறு மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண் 6.24.2
|
244 | ஏவணத்த சிலையான்முப் புரமெய் தான்காண் | தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண் ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண் தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண் 6.24.3
|
245 | கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண் | எங்கள்பாற் றுயர்கெடுக்கு மெம்பி ரான்காண் பொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் றான்காண் செங்கண்வா ளராமதியோ டுடன்வைத் தான்காண் 6.24.4
|
246 | காரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண் | போரேறு நெடுங்கொடிமே லுயர்த்தி னான்காண் நீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண் சீரேறு திருமாலோர் பாகத் தான்காண் 6.24.5
|
247 | பிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண் | கறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண் இறையுருவக் கனவளையாள் இடப்பா கன்காண் சிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண் 6.24.6
|
248 | தலையுருவச் சிரமாலை சூடி னான்காண் | அலையுருவச் சுடராழி ஆக்கி னான்காண் கொலையுருவக் கூற்றுதைத்த கொள்கை யான்காண் சிலையுருவச் சரந்துரந்த திறத்தி னான்காண் 6.24.7
|
249 | ஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண் | கையன்காண் கடற்பூதப் படையி னான்காண் வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண் செய்யன்காண் கரியன்காண் வெளியோன் றான்காண் 6.24.8
|
250 | மலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண் | இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண் கொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண் சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண் 6.24.9
|
251 | பொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண் | மற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்காண் எற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண் செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றான்காண் 6.24.10
| |
| 252 |
உயிரா வணமிருந் துற்று நோக்கி உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால் அயிரா வணமேறா தானே றேறி அயிரா வணமேயென் னம்மா னேநின் 6.25.1 | | 253 | எழுது கொடியிடையார் ஏழை மென்றோள் பழுது படநினையேல் பாவி நெஞ்சே முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி அழுது திருவடிக்கே பூசை செய்ய 6.25.2
|
254 | தேரூரார் மாவூரார் திங்க ளூரார் | காரூரா நின்ற கழனிச் சாயற் ஓரூரா உலகெலா மொப்பக் கூடி ஆரூரா ஆரூரா என்கின் றார்கள் 6.25.3
|
255 | கோவணமோ தோலோ உடை யாவது | பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான் தீவணத்த செஞ்சடைமேற் றிங்கள் சூடித் ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம் 6.25.4
|
256 | ஏந்து மழுவாளர் இன்னம் பரார் | வாய்ந்த வளைக்கையாள் பாக மாக போந்தா ரடிகள் புறம்ப யத்தே ஆய்ந்தே யிருப்பார்போய் ஆரூர் புக்கார் 6.25.5
|
257 | கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை | உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால் மருவாகி நின்னடியே மறவே னம்மான் திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய் 6.25.6
|
258 | முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் | பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் 6.25.7
|
259 | ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா | பாடுவார் தும்புருவும் நார தாதி தேடுவார் திருமாலும் நான்மு கனுந் கூடுமே நாயடியேன் செய்குற் றேவல் 6.25.8
|
260 | நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய் | ஓரூரு மொழியாமே ஒற்றித் தெங்கும் தேரூரும் நெடுவீதி பற்றி நின்று தாரூரா ஆரூரா என்கின் றார்கள் 6.25.9
|
261 | நல்லூரே நன்றாக நட்ட மிட்டு | பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண 6.25.10
|
262 | கருத்துத்திக் கதநாகங் கையி லேந்திக் | உரித்தெடுத்துச் சிவந்ததன்றோல் பொருந்த மூடி திருத்துருத்தி திருப்பழனந் திருநெய்த்தானம் அரிப்பெருத்த வெள்ளேற்றை அடர ஏறி 6.25.11
| |
| 263 |
பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப் வாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானை சோதிச்சந் திரன்மேனி மறுச்செய்தானைச் ஆதித்தன் பற்கொண்ட அம்மான் றன்னை 6.26.1 | | 264 | வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் றன்னை அப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் றன்னை அப்புறுத்த நீரகத்தே அழலா னானை 6.26.2
|
265 | ஒருகாலத் தொருதேவர் கண்கொண் டானை | வருகாலஞ் செல்கால மாயி னானை பொருவேழக் களிற்றுரிவைப் போர்வை யானைப் அருவேள்வி தகர்த்தெச்சன் றலைகொண் டானை 6.26.3
|
266 | மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை | ஒப்பானை ஒப்பிலா ஒருவன் றன்னை வைப்பானைக் களைவானை வருவிப் பானை அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை 6.26.4
|
267 | பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றைப் | துண்டத்தின் துணிபொருளைச் சுடுதீ யாகிச் கண்டத்தில் தீதினஞ் சமுது செய்து அண்டத்துக் கப்புறத்தார் தமக்கு வித்தை 6.26.5
|
268 | நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய் | பாதியாய் ஒன்றாகி இரண்டாய் மூன்றாய் சோதியாய் இருளாகிச் சுவைக ளாகிச் ஆதியாய் அந்தமாய் நின்றான் றன்னை 6.26.6
|
| இப்பதிகத்தில் 7,8,9,10-ம் செய்யுட்கள் | 6.26.7-10
| |
| 269 |
பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க் தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த் எம்மான்ற னடித்தொடர்வான் உழிதர் கின்றேன் 6.27.1 | | 270 | ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற் உம்பரமே உம்வசமே ஆக்க வல்லீர்க் உம்பருமாய் ஊழியுமாய் உலகே ழாகி தம்பெருமா னார்நின்ற அரனைக் காண்பேன் 6.27.2
|
271 | சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச் | பல்லுருவிற் றொழில்பூண்ட பஞ்ச பூதப் சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த் நல்லுருவிற் சிவனடியே அடைவேன் நும்மால் 6.27.3
|
272 | உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத் | மன்னுருவத் தியற்கைளால் வைப்பீர்க் கையோ பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப் தன்னுருவைத் தந்தவனை எந்தை தன்னைத் 6.27.4
|
273 | துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க | ஒப்பினையைப் பாவித்திவ் வுலக மெல்லாம் வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல் அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும் 6.27.5
|
274 | பொங்குமத மானமே ஆர்வச் செற்றக் | உங்கள்பெரு மாநிலத்தின் எல்லை யெல்லாம் அங்கமலத் தயனொடுமா லாகி மற்றும் செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை ஆரூர்ச் 6.27.6
|
275 | இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை | குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள் அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால் 6.27.7
|
276 | விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா | நிரந்தோடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க் கரைந்தோட வருநஞ்சை அமுது செய்த பரஞ்சோதி தனைக்காண்பேன் படேனும் பண்பிற் 6.27.8
|
277 | மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச | நாள்வாயு நும்முடைய மம்ம ராணை நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால் 6.27.9
|
278 | சுருக்கமொடு பெருக்கநிலை நீத்தல் பற்றித் | செருக்கிமிகை செலுத்தியும் செய்கை வைகல் தருக்கிமிக வரையெடுத்த அரக்க னாகந் இரக்கமெழுந் தருளியவெம் பெருமான் பாதத் 6.27.10
| |
| 279 |
நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும் காற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங் கூற்றினையுங் குரைகழலா லுதைத்தார் போலுங் ஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும் 6.28.1 | | 280 | பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும் கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலுங் பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும் அரியதோர் அரணங்க ளட்டார் போலும் 6.28.2
|
281 | துணியுடையர் தோலுடைய ரென்பார் போலுந் | பிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும் மணியுடைய மாநாக மார்ப்பார் போலும் அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும் 6.28.3
|
282 | ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும் | நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும் காட்டகத்தே ஆட லுடையார் போலுங் ஆட்டகத்தில் ஆனைந் துகந்தார் போலும் 6.28.4
|
283 | ஏனத் திளமருப்புப் பூண்டார் போலும் | கானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங் வானத் திளமதிசேர் சடையார் போலும் ஆனத்து முன்னெழுந்தாய் நின்றார் போலும் 6.28.5
|
284 | காமனையுங் கரியாகக் காய்ந்தார் போலுங் | சோமனையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலுஞ் நாமனையும் வேதத்தார் தாமே போலும் ஆமனையுந் திருமுடியார் தாமே போலும் 6.28.6
|
285 | முடியார் மதியரவம் வைத்தார் போலும் | செடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலுஞ் கடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலுங் அடியார் அடிமை உகப்பார் போலும் 6.28.7
|
286 | இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும் | சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார் போலுந் மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் அந்திரத்தே அணியாநஞ் சுண்டார் போலும் 6.28.8
|
287 | பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும் | முண்டத்து முக்கண் ணுடையார் போலும் கண்டத் திறையே கறுத்தார் போலுங் அண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும் 6.28.9
|
288 | ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும் | பெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும் உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் அருகாக வந்தென்னை அஞ்ச லென்பார் 6.28.10
|
289 | நன்றாக நடைபலவும் நவின்றார் போலும் | கொன்றாகிக் கொன்றதொன் றுண்டார் போலுங் சென்றார் திரிபுரங்க ளெய்தார் போலுந் அன்றாகில் ஆயிரம் பேரார் போலும் 6.28.11
| |
| 290 |
திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத் குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப் அருமணியை ஆரூரி லம்மான் றன்னை 6.29.1 | | 291 | பொன்னேபோற் றிருமேனி உடையான் றன்னைப் மின்னானை மின்னிடையாள் பாகன் றன்னை தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத் அன்னானை ஆரூரி லம்மான் றன்னை 6.29.2
|
292 | ஏற்றானை ஏழுலகு மானான் றன்னை | கூற்றானைக் கூற்ற முதைத்தான் றன்னைக் காற்றானைத் தீயானை நீரு மாகிக் ஆற்றானை ஆரூரி லம்மான் றன்னை 6.29.3
|
293 | முந்திய வல்வினைகள் தீர்ப்பான் றன்னை | சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச் மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை அந்திரனை ஆரூரி லம்மான் றன்னை 6.29.4
|
294 | பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப் | உறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில் துறநெறியாய்த் தூபமாய்த் தோற்ற மாகி அறநெறியை ஆரூரி லம்மான் றன்னை 6.29.5
|
295 | பழகிய வல்வினைகள் பாற்று வானைப் | குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக் விழவனை வீரட்ட மேவி னானை அழகனை ஆரூரி லம்மான் றன்னை 6.29.6
|
296 | சூளா மணிசேர் முடியான் றன்னைச் | கோள்வா யரவ மசைத்தான் றன்னைக் நாள்வாயும் பத்தர் மனத்து ளானை ஆள்வானை ஆரூரி லம்மான் றன்னை 6.29.7
|
297 | முத்தினை மணிதன்னை மாணிக் கத்தை | கொத்தினை வயிரத்தைக் கொல்லே றூர்ந்து பத்தனைப் பத்தர் மனத்து ளானைப் அத்தனை ஆரூரி லம்மான் றன்னை 6.29.8
|
298 | பையா டரவங்கை யேந்தி னானைப் | நெய்யாடு திருமேனி நிமலன் றன்னை செய்யானைச் செழும்பவளத் திரளொப் பானைச் ஐயாறு மேயானை ஆரூ ரானை 6.29.9
|
299 | சீரார் முடிபத் துடையான் றன்னைத் | பேரார் பெருமை கொடுத்தான் றன்னைப் போரார் புரங்கள் புரள நூறும் ஆரானை ஆரூரி லம்மான் றன்னை 6.29.10
| |
| 300 |
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண் வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண் அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண் செம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரிற் 6.30.1 | | 301 | அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும் கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் சொல்லுந் திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரிற் 6.30.2
|
302 | நீரேறு சடைமுடியெந் நிமலன் றான்காண் | வாரேறு வனமுலையாள் பாகத் தான்காண் காரேறு முகிலனைய கண்டத் தான்காண் சீரேறு மணிமாடத் திருவா ரூரிற் 6.30.3
|
303 | கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண் | ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண் ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண் தேனேறு மலர்ச்சோலைத் திருவா ரூரிற் 6.30.4
|
304 | பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண் | மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண் நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல சிறப்போடு பூசிக்குந் திருவா ரூரிற் 6.30.5
|
305 | சங்கரன்காண் சக்கரமாற் கருள்செய் தான்காண் | அங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை எங்கள்பெரு மான்காணென் னிடர்கள் போக செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரிற் 6.30.6
|
306 | நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண் | மின்றிகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண் துன்றுபொழிற் கச்சியே கம்பன் றான்காண் தென்றலார் மணங்கமழுந் திருவா ரூரிற் 6.30.7
|
307 | பொன்னலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண் | மின்னலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண் கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண் செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரிற் 6.30.8
|
308 | விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண் | மண்டலத்தி லொளிவளர விளங்கி னான்காண் புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப் தெண்டிரைநீர் வயற்புடைசூழ் திருவா ரூரிற் 6.30.9
|
309 | செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண் | மருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண் அருவரையை எடுத்தவன்றன் சிரங்கள் பத்தும் திருவிரலா லடர்த்தவன்காண் திருவா ரூரிற் 6.30.10
| |
| 310 |
இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா சுடரொளியா யுள்விளங்கு சோதி யென்றுந் கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங் அடல்விடையாய் ஆரமுதே ஆதி யென்றும் 6.31.1 | | 311 | செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ் பொடியேறு திருமேனி யுடையா யென்றும் அடியேனை யாளாகக் கொண்டா யென்றும் கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங் 6.31.2
|
312 | நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா | புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும் 6.31.3
|
313 | புண்ணியமும் நன்னெறியு மாவ தெல்லாம் | நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா வென்றும் விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும் எண்ணரிய திருநாம முடையா யென்றும் 6.31.4
|
314 | இழைத்தநாள் எல்லை கடப்ப தென்றால் | பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோ யென்றும் அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய் குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே 6.31.5
|
315 | நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம் | சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றுஞ் பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப் தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந் 6.31.6
|
316 | பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டிற் | சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டிற் உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும் புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும் 6.31.7
|
317 | மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக | அதிபதியே ஆரமுதே ஆதி யென்றும் துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச் கதிர்மதிசேர் சென்னியனே கால காலா 6.31.8
|
318 | பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே | தேசத் தொளிவிளக்கே தேவ தேவே நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி ஏசற்று நின்றிமையோ ரேறே வென்றும் 6.31.9
|
319 | புலன்களைந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் | சலங்கொள்சடை முடியுடைய தலைவா வென்றுந் இலங்கையர்கோன் சிரநெரித்த இறைவா வென்றும் நலங்கொளடி என்றலைமேல் வைத்தா யென்றும் 6.31.10
| |
| 320 |
கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி 6.32.1 | | 321 | வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி 6.32.2
|
322 | மலையான் மடந்தை மணாளா போற்றி | நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி இலையார்ந்த மூவிலைவே லேந்தி போற்றி சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி 6.32.3
|
323 | பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி | மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி 6.32.4
|
324 | நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி | வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி 6.32.5
|
325 | சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி | பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி அங்கமலத் தயனோடு மாலுங் காணா செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி 6.32.6
|
326 | வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி | கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி செம்பொனே மரகதமே மணியே போற்றி 6.32.7
|
327 | உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி | வள்ளலே போற்றி மணாளா போற்றி வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி 6.32.8
|
328 | பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி | தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி 6.32.9
|
329 | பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி | கரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி அருமந்த தேவர்க் கரசே போற்றி சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி 6.32.10
| |
| 330 |
பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப் கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக் இருங்கனக மதிலாரூர் மூலத் தானத் அருந்தவனை அரநெறியி லப்பன் றன்னை 6.33.1 | | 331 | கற்பகமும் இருசுடரு மாயி னானைக் விற்பயிலும் மதனழிய விழித்தான் றன்னை பொற்பமரும் பொழிலாரூர் மூலத் தானம் அற்புதனை அரநெறியி லப்பன் றன்னை 6.33.2
|
332 | பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப் | வேதியனைத் தன்னடியார்க் கெளியான் றன்னை போதியலும் பொழிலாரூர் மூலத் தானம் ஆதியனை அரநெறியி லப்பன் றன்னை 6.33.3
|
333 | நந்திபணி கொண்டருளும் நம்பன் றன்னை | சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந் இந்துநுழை பொழிலாரூர் மூலத் தானம் அந்தணனை அரநெறியி லப்பன் றன்னை 6.33.4
|
334 | சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானைச் | விடக்கிடுகா டிடமாக உடையான் றன்னை மடற்குலவு பொழிலாரூர் மூலத் தானம் அடர்த்தவனை அரநெறியி லப்பன் றன்னை 6.33.5
|
335 | தாயவனை எவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத் | மாயவனும் மலரவனும் வானோ ரேத்த மேயவனைப் பொழிலாரூர் மூலத் தானம் ஆயவனை அரநெறியி லப்பன் றன்னை 6.33.6
|
336 | பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப் | மருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை இருளியல்நற் பொழிலாரூர் மூலத் தானத் அருளியனை அரநெறியி லப்பன் றன்னை 6.33.7
|
337 | காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக் | பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் றன்னைப் சேலுகளும் வயலாரூர் மூலத் தானஞ் ஆலவனை அரநெறியி லப்பன் றன்னை 6.33.8
|
338 | ஒப்பொருவ ரில்லாத ஒருவன் றன்னை | வைப்பவனை மாணிக்கச் சோதி யானை *மெய்ப்பொருளாய் அடியேன துள்ளே நின்ற அப்பொன்னை அரநெறியி லப்பன் றன்னை * இச்செய்யுளின் பின்னிரு அடிகள் பிற பதிப்புகளில் காணப்படவில்லை. 6.33.9
|
339 | பகலவன்றன் பல்லுகுத்த படிறன் றன்னைப் | இகலவனை இராவணனை இடர்செய் தானை புகழ்நிலவு பொழிலாரூர் மூலத் தானம் அகலவனை அரநெறியி லப்பன் றன்னை 6.33.10
| |
| 340 |
ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ மருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ 6.34.1 | | 341 | மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ சிலையால்முப் புரமெரித்த முன்னோ பின்னோ 6.34.2 |
342 | பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும் | வேடனாய் வில்வாங்கி யெய்த நாளோ மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ 6.34.3
|
343 | ஓங்கி யுயர்ந்தெழுந்து நின்ற நாளோ | தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ 6.34.4
|
344 | பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே | நீலமா மணிகண்டத் தெண்டோ ளானே சீலமே சிவலோக நெறியே யாகுஞ் கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ 6.34.5
|
345 | திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச் | மறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து பிறங்கியசீர்ப் பிரமன்றன் தலைகை யேந்திப் அறம்பலவு முரைப்பதற்கு முன்னோ பின்னோ 6.34.6
|
346 | நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ | கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ 6.34.7
|
347 | பாதத்தால் முயலகனைப் பாது காத்துப் | கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங் பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப் வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ 6.34.8
|
348 | புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும் | கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங் நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும் திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ 6.34.9
|
349 | ஈசனா யுலகேழும் மலையு மாகி | வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ 6.34.10
| |
| 350 |
தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச் பூண்டு பொறியரவங் காதிற் பெய்து நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி 6.35.1 | | 351 | பாதந் தனிப்பார்மேல் வைத்த பாதர் ஏதம் படாவண்ணம் நின்ற பாதர் ஓதத் தொலிமடங்கி யூருண் டேறி வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார் 6.35.2
|
352 | நென்னலையோர் ஓடேத்திப் பிச்சைக் கென்று | அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார் நுந்நிலைமை யேதோநும் மூர்தா னேதோ மென்முலையார் கூடி விரும்பி யாடும் 6.35.3
|
353 | ஆகத் துமையடக்கி ஆறு சூடி | போகம் பலவுடைத்தாய்ப் பூதஞ் சூழப் பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப் மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த 6.35.4
|
354 | கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங் | உள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல கள்ள விழிவிழிப்பார் காணாக் கண்ணாற் வெள்ளச் சடைமுடியர் வேத நாவர் 6.35.5
|
355 | தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச் | பட்டிவெள் ளேறேறிப் பலியுங் கொள்ளார் கட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக் விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர் 6.35.6
|
356 | பெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கைக் | உண்பா ருறங்குவார் ஒவ்வா நங்காய் பண்பா லவிர்சடையர் பற்றி நோக்கிப் விண்பால் மதிசூடி வேத மோதி வெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.35.7
|
357 | மருதங்க ளாமொழிவர் மங்கை யோடு | சுருதங்க ளாற்றுதித்துத் தூநீ ராட்டித் கருதுங்கொல் எம்பெருமான் செய்குற் றேவல் விகிர்தங்க ளாநடப்பர் வெள்ளே றேறி 6.35.8
|
358 | புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங் | உள்ளானை யொன்றலா உருவி னானை கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும் வெள்ளானை வேண்டும் வரங் கொடுப்பார் 6.35.9
|
359 | மாக்குன் றெடுத்தோன்றன் மைந்த னாகி | நோக்குந் துணைத்தேவ ரெல்லாம் நிற்க காக்குங் கடலிலங்கைக் கோமான் றன்னைக் வீக்கந் தவிர்த்த விரலார் போலும் 6.35.10
| |
| 360 |
அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே கொலையாய கூற்ற முதைத்தார் தாமே சிலையாற் புரமூன் றெரித்தார் தாமே பலிதேர்ந் தழகாய பண்பர் தாமே 6.36.1 | | 361 | வெள்ள மொருசடைமே லேற்றார் தாமே கள்ளங் கடிந்தென்னை யாண்டார் தாமே உள்ளத் துவகை தருவார் தாமே பள்ளப் பரவைநஞ் சுண்டார் தாமே 6.36.2
|
362 | இரவும் பகலுமாய் நின்றார் தாமே | அரவ மரையி லசைத்தார் தாமே குரவங் கமழுங்குற் றாலர் தாமே பரவு மடியார்க்குப் பாங்கர் தாமே 6.36.3
|
363 | மாறின் மதின்மூன்று மெய்தார் தாமே | நீறுசேர் திருமேனி நிமலர் தாமே ஏறு கொடுஞ்சூலக் கையார் தாமே பாறுண் தலையிற் பலியார் தாமே 6.364
|
364 | சீரால் வணங்கப் படுவார் தாமே | ஆரா வமுதமு மானார் தாமே நீரார் நியம முடையார் தாமே பாரார் பரவப் படுவார் தாமே 6.36.5
|
365 | கால னுயிர்வௌவ வல்லார் தாமே | கோலம் பலவு முகப்பார் தாமே நீலம் பொலிந்த மிடற்றார் தாமே பால விருத்தரு மானார் தாமே 6.36.6
|
366 | ஏய்ந்த வுமைநங்கை பங்கர் தாமே | ஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே தேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே பாய்ந்த படர்கங்கை யேற்றார் தாமே 6.36.7
|
367 | ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே | பேராதென் சிந்தை யிருந்தார் தாமே ஊராரு மூவுலகத் துள்ளார் தாமே பாரார் முழவத் திடையார் தாமே 6.36.8
|
368 | நீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே | பூண்டரவைப் புலித்தோல்மே லார்த்தார் தாமே ஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே பாண்டவரிற் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே 6.36.9
|
369 | விடையேறி வேண்டுலகத் திருப்பார் தாமே | புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே அடைவே புனல்சூழ்ஐ யாற்றார் தாமே படையாப் பல்பூத முடையார் தாமே 6.36.10
| |
| 370 |
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் கூரார் மழுவாட் படையொன் றேந்திக் பேரா யிரமுடையா யென்றேன் நானே ஆரா வமுதேயென் ஐயா றனே 6.37.1 | | 371 | தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந் மூவா மதிசூடி யென்றேன் நானே ஏவார் சிலையானே யென்றேன் நானே ஆவாவென் றருள்புரியும் ஐயா றனே 6.37.2
|
372 | அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே | நஞ்சணி கண்டனே யென்றேன் நானே நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது அஞ்சாதே ஆள்வானே ஐயா றனே 6.37.3
|
373 | தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே | எல்லை நிறைந்தானே யென்றேன் நானே அல்லற் கடல்புக் கழுந்து வேனை எல்லையாம் ஐயாறா வென்றேன் நானே 6.37.4
|
374 | இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே | தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே கண்டங் கறுத்தானே யென்றேன் நானே அண்டத்துக் கப்பாலாம் ஐயா றனே 6.37.5
|
375 | பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே | கற்றார்கள் நாவினா யென்றேன் நானே பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே அற்றார்க் கருள்செய்யும் ஐயா றனே 6.37.6
|
376 | விண்ணோர் தலைவனே யென்றேன் நானே | எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே பண்ணார் மறைபாடி யென்றேன் நானே அண்ணாஐ யாறனே யென்றேன் நானே 6.37.7
|
377 | அவனென்று நானுன்னை அஞ்சா தேனை | சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச் பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று அவனென்றே யாதியே ஐயா றனே 6.37.8
|
378 | கச்சியே கம்பனே யென்றேன் நானே | நிச்சன் மணாளனே யென்றேன் நானே உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றனே 6.37.9
|
379 | வில்லாடி வேடனே யென்றேன் நானே | சொல்லாய சூழலா யென்றேன் நானே எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே அல்லா வினைதீர்க்கும் ஐயா றனே 6.37.10
| |
| 380 |
ஓசை ஒலியெலா மானாய் நீயே வாச மலரெலா மானாய் நீயே பேசப் பெரிது மினியாய் நீயே தேச விளக்கெலா மானாய் நீயே 6.38.1 | | 381 | நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே 6.38.2
|
382 | கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே | தனத்தகத்துத் தலைகலனாக் கொண்டாய் நீயே மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே சினத்திருந்த திருநீல கண்டன் நீயே 6.38.3
|
383 | வானுற்ற மாமலைக ளானாய் நீயே | ஊனுற்ற ஒளிமழுவாட் படையாய் நீயே ஆனுற்ற ஐந்து மமர்ந்தாய் நீயே தேனுற்ற சொன்மடவாள் பங்கன் நீயே 6.38.4
|
384 | பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே | உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே திண்ணார் மழுவாட் படையாய் நீயே 6.38.5
|
385 | உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே | கற்றிருந்த கலைஞான மானாய் நீயே பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே செற்றிருந்த திருநீல கண்டன் நீயே 6.38.6
|
386 | எல்லா வுலகமு மானாய் நீயே | நல்லாரை நன்மை யறிவாய் நீயே பொல்லா வினைக ளறுப்பாய் நீயே செல்வாய செல்வந் தருவாய் நீயே 6.38.7
|
387 | ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே | பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே தேவ ரறியாத தேவன் நீயே 6.38.8
|
388 | எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே | வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே தொண்டிசைத்துன் னடிபரவ நின்றாய் நீயே திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே 6.38.9
|
389 | விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே | கண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயே தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே திண்டோ ள்விட் டெரியாட லுகந்தாய் நீயே 6.38.10
|
390 | ஆரு மறியா இடத்தாய் நீயே | பேரும் பெரிய இலங்கை வேந்தன் ஊரும் புரமூன்று மட்டாய் நீயே தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே 6.38.11
| |
| 391 |
நீறேறு திருமேனி யுடையான் கண்டாய் கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய் ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய் மாறானார் தம்மரண மட்டான் கண்டாய் 6.39.1 | | 392 | கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய் அக்கரைமே லாட லுடையான் கண்டாய் அக்கோ டரவ மணிந்தான் கண்டாய் மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய் 6.39.2
|
393 | நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய் | பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய் செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய் மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய் 6.39.3
|
394 | அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய் | கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய் சிலையாற் றிரிபுரங்கள் செற்றான் கண்டாய் மலையார் மடந்தை மணாளன் கண்டாய் 6.39.4
|
395 | உலந்தார்தம் அங்க மணிந்தான் கண்டாய் | நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய் உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய் மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த 6.39.5
|
396 | தாமரையான் தன்றலையைச் சாய்த்தான் கண்டாய் | பூமலரா னேத்தும் புனிதன் கண்டாய் ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய் மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய் 6.39.6
|
397 | நீராகி நெடுவரைக ளானான் கண்டாய் | பாராகிப் பௌவமே ழானான் கண்டாய் ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய் வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய் 6.39.7
|
398 | பொன்னியலுந் திருமேனி யுடையான் கண்டாய் | மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய் தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய் மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய் 6.39.8
|
399 | ஆலால முண்டுகந்த ஆதி கண்டாய் | காலாலக் காலனையுங் காய்ந்தான் கண்டாய் பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய் மாலாலு மறிவரிய மைந்தன் கண்டாய் 6.39.9
|
400 | ஒருசுடரா யுலகேழு மானான் கண்டாய் | விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய் இருசுடர் மீதோடா இலங்கைக் கோனை மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய் 6.39.10
| |
| 401 |
அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு சிலையெடுத்து மாநாக நெருப்புக் கோத்துத் நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட மலையடுத்த மழபாடி வயிரத் தூணே 6.40.1 | | 402 | அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும் மறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு கறைகலந்த பொழிற்கச்சிக் கம்ப மேயக் மறைகலந்த மழபாடி வயிரத் தூணே 6.40.2
|
403 | உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா | பரங்கெடுத்திங் கடியேனை ஆண்டு கொண்ட புரங்கெடுத்துப் பொல்லாத காம னாகம் வரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே 6.40.3
|
404 | ஊனிகந்தூ ணுறிகையர் குண்டர் பொல்லா | ஞானகஞ்சேர்ந் துள்ளவயி ரத்தை நண்ணா மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும் வானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே 6.40.4
|
405 | சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத் | உரமேற்ற இரவிபல் தகர்த்துச் சோமன் நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட வரமேற்கும் மழபாடி வயிரத் தூணே 6.40.5
|
406 | சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள் | புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும் தனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித் மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே 6.40.6
|
407 | சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ் | இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் பழிப்பரிய திருமாலும் அயனுங் காணாப் வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே 6.40.7
|
| இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் | சிதைந்து போயின. 6.40.8-10
| |
| 408 |
வகையெலா முடையாயும் நீயே யென்றும் மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும் பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும் திகையெலாந் தொழச்செல்வாய் நீயே யென்றும் 6.41.1 | | 409 | ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும் கூர்த்த நடமாடி நீயே யென்றுங் பார்த்தற் கருள்செய்தாய் நீயே யென்றும் தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும் 6.41.2
|
410 | அல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும் | கல்லா லமர்ந்தாயும் நீயே யென்றுங் சொல்லாய்ப் பொருளானாய் நீயே யென்றுந் செல்வாய்த் திருவானாய் நீயே யென்றும் 6.41.3
|
411 | மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும் | பொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும் என்னா விரதத்தாய் நீயெ யென்றும் தென்னூர்ப் பதியுளாய் நீயே யென்றும் 6.41.4
|
412 | முந்தி யிருந்தாயும் நீயே யென்றும் | நந்திக் கருள்செய்தாய் நீயே யென்றும் பந்திப் பரியாயும் நீயே யென்றும் சிந்திப் பரியாயும் நீயே யென்றூம் 6.41.5
|
413 | தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந் | அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும் புக்காய ஏழுலகும் நீயே யென்றும் தெக்காரு மாகோணத் தானே யென்றும் 6.41.6
|
414 | புகழும் பெருமையாய் நீயே யென்றும் | இகழுந் தலையெந்தி நீயே யென்றும் அகழும் மதிலுடையாய் நீயே யென்றும் திகழும் மதிசூடி நீயே யென்றும் 6.41.7
|
415 | வானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும் | கான் நடமாடி நீயே யென்றும் ஊனார் முடியாறுத்தாய் நீயே யென்றும் தேனாய் அமுதானாய் நீயே யென்றும் 6.41.8
|
416 | தந்தைதா யில்லாதாய் நீயே யென்றும் | எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும் முந்திய முக்கணாய் நீயே யென்றும் சிந்தையாய்த் தேனூராய் நீயே யென்றும் 6.41.9
|
417 | மறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும் | வெறுத்தார் புறப்பறுப்பாய் நீயே யென்றும் அறத்தாய் அமுதீந்தாய் நீயே யென்றும் பொறுத்தாய் புலனைந்தும் நீயே யென்றும் 6.41.10
| |
| 418 |
மெய்த்தானத் தகம்படியுள் ஜவர் நின்று இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும் மைத்தான நீள்நயனி பங்கன் வங்கம் நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று 6.42.1 | | 419 | ஈண்டா விரும்பிறவித் துறவா ஆக்கை வேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ ஆண்டானன் றருவரையாற் புரமுன் றெய்த் நீண்டா னுறைதுறைநெய்த் தான மென்று 6.42.2
|
420 | பரவிப் பலபலவுந் தேடி யோடிப் | குரவிக் குடிவாழ்கை வாழ வெண்ணிக் இரவிக் குலமுதலா வானோர் கூடி நிரவிக் கரியவன்நெய்த் தான மென்று 6.42.3
|
421 | அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே | தலையாய்க் கடையாகும் வாழ்வி லாழ்ந்து இலையார் புனக்கொன்றை யெறிநீர்த் திங்கள் நிலையா னுறைநிறைநெய்த் தான் மென்று 6.42.4
|
422 | தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப் | அனைத்துலகும் ஆளலா மென்று பேசும் முனைத்துவரு மதில்மூன்றும் பொன்ற அன்று நினைத்தபெருங் கருணையன்நெய்த் தான மென்று 6.42.5
|
423 | மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென்றெண்ணி | குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று 6.42.6
|
424 | பேசப் பொருளலாப் பிறவி தன்னைப் | வாசக் குழல்மடவார் போக மென்னும் தூசக் கரியுரித்தான் தூநீ றாடித் நீசர்க் கரியவன்நெய்த் தான மென்று 6.42.7
|
425 | அஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண் | தஞ்ச மெனக்கருதித் தாழேல் நெஞ்சே வஞ்ச மனத்தவர்கள் காண வொண்ணா நெஞ்சக் கினியவன்நெய்த் தான மென்று 6.42.8
|
426 | பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி | இருந்தாங் கிடர்ப்படநீ வேண்டா நெஞ்சே கருந்தாள் மதகரியை வெருவச் சீறுங் நிரந்தரமா இனிதுறைநெய்த் தான மென்று 6.42.9
|
427 | உரித்தன் றுனக்கிவ் வுடலின் தன்மை | தரித்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே எரித்தான் அனலுடையான் எண்டோ ளானே நெரித்தானை நெய்த்தானம் மேவி னானை 6.42.10
| |
| 428 |
நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக் சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத் பொல்லாவென் நோய்தீர்த்த புனிதன் தன்னைப் 6.43.1 | | 429 | குற்றாலங் கோகரணம் மேவி னானைக் உற்றால நஞ்சுண் டொடுக்கி னானை பற்றாலின் கீழ்ங் கிருந்தான் தன்னைப் புற்றா டரவார்த்த புனிதன் தன்னைப் 6.43.2
|
430 | எனக்கென்றும் இனியானை யெம்மான் தன்னை | மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் தனக்கென்றும் அடியானை யாளாக் கொண்ட பனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் தன்னைப் 6.43.3
|
431 | வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை | அறியா தடியே னகப்பட் டேனை நெறிதா னிதுவென்று காட்டி னானை பொறியா டரவார்த்த புனிதன் தன்னைப் 6.43.4
|
432 | மிக்கானை வெண்ணீறு சண்ணித் தானை | நக்கானை நான்மரைகள் பாடி னானை தக்கானைத் தண்டா மரைமே லண்ணல் புக்கானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் 6.43.5
|
433 | ஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா | பூத்தானத் தான்முடியைப் பொருந்தா வண்ணம் பார்த்தானைப் பரிந்தானைப் பனிநீர்க் கங்கை போர்த்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் 6.43.6
|
434 | எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் | உரித்தானை மதகரியை யுற்றுப் பற்றி சிரித்தானச் சீரார்ந்த பூதஞ் சூழத் புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் 6.43.7
|
435 | வைத்தானை வானோ ருலக மெல்லாம் | வித்தானை வேண்டிற்றொன் றீவான் தன்னை உய்த்தானை யொலிகங்கை சடைமேற் றாங்கி பொய்த்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் 6.43.8
|
436 | ஆண்டானை வானோ ருலக மெல்லாம் | மீண்டாணை விண்ணவர்க ளோடுங் கூடி நீண்டானை நெருப்புருவ மானான் தன்னை பூண்டானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் 6.43.9
|
437 | மறுத்தானை மலைகோத்தங் கெடுத்தான் தன்னை | இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை அறுத்தானை யமரர்களுக் கமுதீந் தானை பொறுத்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் 6.43.9
| |
| 438 |
மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே முறைமையால் எல்லாம் படைக்கின் றானே. ஏத்தவனாய் ஏழலகு மாயி னானே இன்பனாய்த் துன்பந் களைகி ன்றானே காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத் தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுள் னபயம் நானே. | 6.44.1 | 439 |
தலையவனாய் உலகுக்கோர் தன்மை யானே தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே நிலையனாய் நின்னொப்பா ரில்லா தானே நின்றுணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த கொலையவனே கொல்யானைத் தோல்மே லிட்ட கூற்றுவனே கொடிமதில்கள் மூன்று மெய்த சிலையவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுள் னபயம் நானே. | 6.44.2 | 440 | முற்றாத பான்மதியஞ் சூடி னானே முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்தொப் பானே உற்றாரென் றொருவரையு மில்லா தானே உலகோம்பும் ஒண்சுடரே யோதும் வேதங் கற்றானே யெல்லாக் கலைஞா னமுங் கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச் செற்றானே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. | 6.44.3 | 441 | கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே காலங்க ளூழிகண் டிருக்கின் றானே விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய் வானே வேதனாய் வேதம் விரித்திட் டானே எண்ணவனாய் யெண்ணார் புரங்கள் மூன்றும் இமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க திண்ணவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. | 6.44.4 | 442 | நம்பனே நான்மறைக் ளாயி னானே நடமாட வல்லானே ஞானக் கூத்தா கம்பனே கச்சிமா நகரு ளானே கடிமதில்கள் மூன்றினையும் பொடியா எய்த அம்பனே அளவிலாப் பெருமை யானே அடியார்கட் காரமுதே ஆனே றேறுஞ் செம்பொனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுள் னபயம் நானே. | 6.44.5 | 443 | ஆர்ந்தவனே யுலகெலாம் நீயே யாகி யமைந்தவனே யளவிலாப் பெருமை யானே கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடுமூ விலையதோர் சூல மேந்திப் பேர்ந்தவனே பிரளயங்க ளெல்லா மாய பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற் சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. | 6.44.6 | 444 | வானவனாய் வண்மை மனத்தி னானே மாமணிசேர் வானோர் பெருமான் நீயே கானவனாய் ஏனத்தின் பின்சென் றானே கடிய அரணங்கள் மூன்றட் டானே தானவனாய்த் தண்கயிலை மேவி னானே தன்னொப்பா ரில்லாத மங்கைக் கென்றுந் தேனவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. | 6.44.7 | 445 | தன்னவனாய் உலகெலாந் தானே யாகித் தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே என்னவனா யென்னிதயம் மேவி னானே யீசனே பாச வினைகள் தீர்க்கும் மன்னவனே மலைமங்கை பாக மாக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித் தென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. | 6.44.8 | 446 | எறிந்தானே எண்டிசைக்குங் கண்ணா னானே யேழுலக மெல்லாமுன் னாய்நின் றானே அறிந்தார்தாம் ஒரிருவ ரறியா வண்ணம் ஆதியும் அந்தமு மாகி யங்கே பிறிந்தானே பிறரொருவ ரறியா வண்ணம் பெம்மானென் றெஉபோதும் ஏத்து நெஞ்சிற் செறிந்தானே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. | 6.44.9 | 447 | மையனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ணச் சூலக் கையவனே கடியிலங்கைக் கோனை யன்று கால்விரலாற் கதிர்முடியுந் தோளுஞ் செற்ற மெய்யவனே யடியார்கள் வேண்டிற் றீயும் விண்ணவனே விண்ணப்பங் கேட்டு நல்குஞ் செய்யவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. | 6.44.10 |
| 448 |
வண்டோங்கு செங்கமலங் கழுநீர் மல்கும் மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித் திண்டோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசைசேர நடமாடிச் சிவலோகனார் உண்டார்னஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி ஒற்றியூர் மேய வொளிவண்ணனார் கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன் கடும்பிணியுஞ் சடுஞ்தொழிலுங் கைவிட்டவே. | 6.45.1 | 449 | ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி அணிகங்கை செஞ்சடையி லார்க்கச் சூடிப் பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவர் பசுவேறி யிழிதருமெம் பரம யோகி காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக் கனலா எரிவிழித்த கண்மூன்றினார் ஒமத்தால் நான்மறைகள் ஒதல் ஒவா ஒளிதிகழும் ஒற்றியூ ருறைகின் றாரே. | 6.45.2 | 450 | வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர் வெண்மதியும் பாம்பு முடனே வைத்தீர் கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லே கொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர் கோளரவுன்ங் குளிர்மதியுங் கொடியுங் காட்டி உள்ளத்தை நீர்கொண்டீர் ஒதல் ஒவா ஒளிதிகழும் ஒற்றியூர் ருடைய கோவே. | 6.45.3 | 451 | நரையார்ந்த விடையேறி நீறு பூசி நாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி உரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட எம்மடிக ளும்மூர்தான் ஏதோ என்ன விரையாதே கேட்டியேல் வேற்கண் நல்லாய் விடுங்கலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றுந் திரைமோதக் கரையேறிச் சங்க மூருந் திருவொற்றி யூரென்றார் தீய வாறே. | 6.45.4 | 452 | மத்தமா களியானை யுரிவை போர்த்து வானகத்தார் தானகத்தா ராகிநின்று பித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப் பேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு பத்தர்கள்தாம் பலருடனே கூடிப் பாடிப் பயின்றிருக்கு மூரேதோ பணீயீ ரென்ன ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே. | 6.45.5 | 453 | கடிய விடையேறிக்காள கண்டர் கலையோடு மழுவாளோர் கையி லேந்தி இடிய பலிகொள்ளார் போவா ரல்லர் எல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரே வடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம் வருவாரை யெதிர்கண்டோம் மயிலாப் புள்ளே செடிபடு வெண்டலையொள் றேந்தி வந்து திருவொற்றி யூர்புக்கார் தீய வாறே. | 6.45.6 | 454 | வல்லாராய் வானவர்க் ளெல்லாங் கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார் எல்லேயெம் பெருமானைக் காணோ மென்ன எவ்வாற்றால் எவ்வகையாற் காண மாட்டார் நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாமிருக்கு மூர்பணியீ ரடிகே ளென்ன ஒல்லைதான் திரையேறி யோதம் மீளும் ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே. | 6.45.7 | 455 | நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய் நெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக் கலந்து பலியிடுவே னேங்குங் காணேன் சலப்பாடே யினியொருநாட் காண்பே னாகில் தன்னாகத் தென்னாகம் ஒடுங்கும் வண்ண முலைப்பாடே படத்தழுவிப் போக லொல்டேன் ஒற்றியூ ருறைந்திங்கே திரிவானையே. | 6.45.8 | 456 | மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை மலையல்லை கடலல்லை வாயு வல்லை எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை யிரவல்லை பகலல்லை யாவு மைலை பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே. | 6.45.9 | 457 | மருவுற்ற மலர்க்குழலி மடவா ள்ஞ்ச மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச் செருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத் திருவடியின் விரலொன்றால் அலற வூன்றி உருவொற்றி யங்கிருவ ரோடிக் காண ஒங்கினவவ் வொள்ளழலா ரிங்கே வந்து திருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார் செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே. | 6.45.10 |
| 458 |
நம்பனை நால்வேதங் கரைகண் டானை ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக் கம்பனைக் கல்லா லிருந்தான் தன்னைக் கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச் செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத் திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை அம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. | 6.46.1 | 459 | மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை வெண்முகிலாய் எழுந்துமழை பொழிவான் தன்னைத் தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத் தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி என்னானை யெந்தை பெருமான் தன்னை இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே அன்னானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. | 6.46.2 | 460 | பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப் பவளக் கொழுந்தினை மாணிக் கத்தின் தொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச் சொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகி வித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் அத்தனை ஆவடுதண் டுறைYஉள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. | 6.46.3 | 461 | பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப் பித்தராம் அடியார்க்கு முத்தி காட்டும் ஏணியை யிடர்க்கடலுட் சுழிக்கப் பட்டிங் கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்குந் தோணியைத் தொண்டனேன் தூய சோதிச் சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின் ஆணியை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. | 6.46.4 | 462 | ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை உதயத்தி னுச்சியை உருமா னானைப் பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப் பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத் திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித் தீங்கரும்பி னின்சுவையைத் திகழுஞ் சோதி அருமணியை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. | 6.46.5 | 463 | ஏற்றானை யெண்டோ ளுடையான் தன்னை யெல்லி நடமாட வல்லான் தன்னைக் கூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக் குரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் தன்னை நீற்றானை நீளரவொன் றார்த்தான் தன்னை நீண்ட சடை முடிமேல் நீரார் கங்கை ஆற்றானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. | 6.46.6 | 464 | கைம்மான மதகளிற்றை உரித்தான் தன்னைக் கடல்வரைவா னாகாச மானான் தன்னைச் செம்மானப் பவளத்தைத் திகழும் முத்தைத் திங்களை ஞாயிற்றைத் தீயா னானை எம்மானை என்மனமே கோயி லாக இருந்தானை என்புருகும் அடியார் தங்கள் அம்மானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. | 6.46.7 | 465 | மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை வெள்ளிடையைத் தண்ணிழலை வெந்தீ யெந்துங் கையானைக் காபனுடல் வேவக் காய்ந்த கண்ணானைக் கண்மூ றுடையான் தன்னைப் பையா டரவமதி யுடனே வைத்த சடையானைப் பாய்புலித்தோ லுடையான் தன்னை ஜயானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. | 6.46.8 | 466 | வேண்டாமை வேண்டுவது மில்லான் தன்னை விசயனைமுன் னசைவித்த வேடன் தன்னைத் தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச் சூலப் படையானைக் காலன் வாழ்நாள் மாண்டோட வுதைசெய்த மைந்தன் தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி யேத்தும் ஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. | 6.46.9 | 467 | பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப் பாடலோ டாடல் பயின்றான் தன்னக் கொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக் கோலமா நீல மிடற்றான் தன்னைச் செந்தமிழோ டாரியனைச் சீரி யானைத் திருமார்பிற் புரிவெண்ணூல் திகழப் பூண்ட அந்தணனை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. | 6.46.10 | 468 | தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் தன்னைத் தக்கன்றன் பெருவேள்வி தகர்த்தான் தன்னைப் பிரித்தானைப் பிறைதவழ்செஞ் சடையி னானைப் பெருவலியால் மலையெடுத்த அரக்கன் தன்னை நெரித்தானை நேரிழையாள் பாகத் தானை நீசனேன் உடலுறு நோயான தீர அரித்தானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. | 6.46.11 |
| 469 |
திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய் காவாய் அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. | 6.47.1 | 470 | மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின் மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின் ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால் மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு வேதனைக்கே யிடங்கொடுத்து நாளு நாளும் ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. | 6.47.2 | 471 | வரையார் மடமங்கை பங்கா கங்கை மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம் உரையா உயிர்போகப் பெறுவே னாகில் உறுநோய்வந் தேத்தனையு முற்றா லென்னே கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக் காதலித்து நின்கழலே யேத்து மன்பர்க் கரையா அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. | 6.47.3 | 472 | சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் சிலைவளைவித் துமையவளை யஞ்ச நோக்கிச் கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங் களிறுரித்த கங்காளா எங்கள் கோவே நிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும் நில்லா வுயிரோம்பு நீத னேநான் அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. | 6.47.4 | 473 | நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித் துறவாத துன்பந் துறந்தேன் தன்னைத் சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னெ உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்ட அறவா அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. | 6.47.5 | 474 | கோன்நா ரணன் அங்கத் தோள்மேற் கொண்டு கொழுமலரான் தன்சிரத்தைக் கையி லேந்திக் கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக் கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர் நானார் உமக்கோர் வினைக்கே டனேன் நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னே ஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. | 6.47.6 | 475 | உழையுரித்த மானுரிதோ லாடை யானே உமையவள்தம் பெருமானே இமையோர் ஏறே கழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா கயிலாய மலையானே உன்பா லன்பர் பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன் கடனன்றே பேரருளுள் பால தன்றே அழையுறுத்து மாமயில்க ளாலுஞ் சோலை ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. | 6.47.7 | 476 | உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோ ருலகம் பலிதிரிவாய் உன்பா லன்பு கலந்தார் மனங்கவருங் காத லானே கனலாடுங் கையவனே ஜயா மெய்யே மலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய மயக்குளே விழுந்தழுந்தி நாளும் நாளும் அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. | 6.47.8 | 477 | பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப் பசுவேறி யூரூரன் பலிகொள் வானே கல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங் கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில் எல்லாரு மெந்தன்னை யிகழ்வர் போலும் ஏழையமண் குண்டர்சாக் கியர்க்ளொன்றுக் கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. | 6.47.9 | 478 | துறந்தார்ந் தூநெறிக்கண் சென்றே னல்லேன் துணைமாலை சூட்டநான் தூயே னல்லேன் பிறந்தேன்நின் திருவருளே பேசி னல்லாற் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே செறிந்தார் மதிலிலங்கைக் கோமான் தன்னைச் செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம் அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. | 6.47.10 |
| 479 |
நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண் நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த வில்லான்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண் மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச் சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண் தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய வல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே. | 6.48.1 | 480 | ஊனவன்காண் உடல்தனக்கோர் உயிரா னான்காண் உள்ளவன்காண் இல்லவன்காண் உமையாட் கென்றுந் தேனவன்காண் திருவவன்காண் திசையா னான்காண் தீர்த்தன்காண் பார்த்தன்றன் பணியைக் கண்ட கானவன்காண் கடலவன்காண் மலையா னான்காண் களியானை யீருரிவை கதறப் போர்த்தும் வானவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே. | 6.48.2 | 481 | யேவன்காண் எல்லார்க்கு மியல்பா னான்காண் இன்வன்காண் துன்பங்க ளில்லா தான்காண் தாயவன்காண் உலகுக்கோர் தன்னொப் பில்லாத் தத்துவன்காண் உத்தமன்காண் தானேயெங்கும் ஆயவன்காண் அண்டத்துக் கப்பா லான்காண் அகங்குழைந்து மெய்யரும்பி அழுவார் தங்கள் வாயவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே. | 6.48.3 | 482 | உய்த்தவன்காண் உடல்தனக்கோர் உயிரானான்காண் ஒங்காரத் தொருவன்காண் உலகுக் கெல்லாம் வித்தவன்காண் விண்பொழியும் மழையா னான்காண் விளைவவன்காண் விரும்பாதார் நெஞ்சத் தென்றும் பொய்த்தவன்காண் பொழிலேழுந் தாங்கி னான்காண் புனலோடு வளர்மதியும் பாம்புஞ் சென்னி வைத்தவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே. | 6.48.4 | 483 | கூற்றவன்காண் குணமவன்காண் குறியா னான்காண் குற்றங்க ளனைத்துங்காண் கோல மாய நீற்றவன்காண் நிழலவன்காண் நெருப்பா னான்காண் நிமிரிபுன் சடைமுடிமேல் நீரார் கங்கை எற்றவன்காண் ஏழலகு மாயி னானிகாண் இமைப்பளவிற் காமனைமுன் பொடியாய் வீழ மாற்றவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே. | 6.48.5 | 484 | நிலையவன்காண் தோற்றவன் காணிறையானான்காண் நீரவன்காண் பாரவன்காண் ஊர்முன் றெய்த சிலையவன்காண் செய்யவாய்க் கரிய கூந்தல் தேன்மொழியை ஒருபாகஞ் சேர்த்தி னான்காண் கலையவன்காண் காற்றவன்காண் காலன் வீழக் கறுத்தவன்காண் கயிலாய மென்னுந் தெய்வ மலையவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே. | 6.48.6 | 485 | பெண்ணவன்காண் ஆணவன்காண் பெரியோர்க் கென்றும் பெரியவன்காண் அரியவன்காண் அயனா னான்காண் எண்ணவன்காண் எழுத்தவன்காண் இன்பக் கேள்வி இசையவன்காண் இயலவன்காண் எல்லாங் காணுங் கண்ணவன்காண் கருத்தவன்காண் கழிந்தோர் செல்லுங் கதியவன்காண் கருத்தவன்காண் கழிந்தோர் செல்லுங் மண்ணவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானெ. | 6.48.7 | 486 | முன்னவன்காண் பின்னவன்காண் மூவா மேனி முதலவன்காண் முடியவன்காண் மூன்று சோதி அன்னவன்காண் அடியார்க்கும் அண்டத் தார்க்கும் அணியவன்காண் சேயவன்காண் அளவில்சோதி மின்னவன்காண் உருமவன்காண் திருமால் பாகம் வேண்டினன் காணீண்டு புனற்கங்கைக் கென்றும் மன்னவன்காண் வானவைகள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே. | 6.48.8 | 487 | நெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொண்ணா நீதியன்காண் வேதியன்காண் நினைவார்க் கென்றுங் கதியவன்காண் காரவன்காண் கனலா னான்காண் பதியவன்காண் பழமவன்காண் இரதந் தான்காண் பாம்போடு திங்கள் பயில வைத்த மதியவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே. | 6.48.9 | 488 | பங்கயத்தின் மேலானும் பால னாகி உலகளந்த படியானும் பரவிக் காணா தங்கைவைத்த சென்னியரா யளக்க மாட்டா அனலவன்காண் அலைகடல்சூழிலங்கை வேந்தன் கொங்கலர்த்த முடிநெரிய விரலா லூன்றுங் குழகன்காண் அழகன்காண் கோல மாய மங்கையர்கோர் கூறனகாண் வானோ ரேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே. | 6.48.10 |
| 489 |
சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண் தாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண் அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண் அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண் பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண் பலபலவும் பாணி பயில்கின் றான்காண் மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. | 6.49.1 | 490 | தந்தவத்தன் தந்தலையைத் தாங்கி னான்காண் சாரணன்காண் சார்ந்தார்க்கின் னமுதா னான்காண் கெந்தத்தன் காண்கெடில வீரட் டன்காண் கேடிலிகாண் கெடுப்பார்மற் றில்லா தான்காண் வெந்தொத்த நீறுமெய் பூசி னான்காண் வீரன்காண் வியன்கயிலை மேவி னான்காண் வந்தொத்த நெடுமாற்கும் அறிவொ னான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. | 6.49.2 | 491 | தன்னுருவம் யாவருக்குந் தாக்கா தான்காண் தாழ்சடையெம் பெருமான்காண் தக்கார்க் குள்ள பொன்னுருவச் சோதிபுன லாடி னான்காண் புராணன்காண் பூதங்க ளாயி னான்காண் மின்னுருவ நுண்ணிடையான் பாகத் தான்காண் வேழத்தி னுரிவெருவப் போர்த்தான் தான்காண் மன்னுருவாய் மாமறைக ளோதி னான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. | 6.49.3 | 492 | ஆறேறு செஞ்சடையெம் ஆரூ ரன்காண் அன்பன்காண் அணிபழனம் மேயான் றான்காண் நீறேறி நிழல்திகழும் மேனி யான்காண் நிருபன்காண் நிகரொன்று மில்லா தான்காண் கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண் கொக்கரையன் காண்குழுநற் பூதத் தான்காண் மாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. | 6.49.4 | 493 | சென்றச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண் தீயம்பன் காண்திரி புரங்கள் மூன்றும் பொன்றப் பொடியாக நோக்கி னான்காண் பூதன்காண் பூதப் படையாளிகாண் அன்றப் பொழுதே அருள்செய் தான்காண் அனலாடி காண்அடியார்க் கமுதா னான்காண் மன்றல் மணங்கமழும் வார்சடை யான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. | 6.49.5 | 494 | பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண் பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண் கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண் கட்டங்கள் காண்கையிற் கபால மேந்திப் பறையோடு பல்கீதம் பாடி னான்காண் ஆடினான் காண்பாணி யாக நின்று மறையோடு மாகீதங் கேட்டான் றான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. | 6.49.6 | 495 | மின்னளந்த மேல்முகட்டின் மேலுற் றான்காண் விண்ணவர்தம் பெருமான்காண் மேவி லெங்கும் முன்னள்ந்த மூவர்க்கும் முதலா ளான்காண் மூவிலைவேற் சூலத்தெங் கோலத் தான்காண் எண்ணளந்தென் சிந்தையே மேவி னான்காண் ஏவலன்காண் இமையோர்க் ளேத்த நின்று மண்ணளந்த மாலறியா மாயத் தான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. | 6.49.7 | 496 | பின்னு சடைமேற்பிறை சூடி னான்காண் பேரருளன் காண்பிறப்பொன் றில்லா தான்காண் முன்னி யுலகுக்கு முன்னா னான்காண் மூவெயிலுஞ் செற்றுகந்த முதல்வன் றான்காண் இன்னவுரு வென்றறிவொண் ணாதான் றான்காண் ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண் மன்னும் மடந்தையோர் பாகத் தான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. | 6.49.8 | 497 | வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண் வீரன்காண் வீரட்டம் மேவி னான்காண் பொட்ட அனங்கனையும் நோக்கி னான்காண் பூதன்காண் பூதப் படையி னான்காண் கட்டக் கடுவினைகள் காத்தாள் வான்காண் கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண் வட்ட மதிப்பாகஞ் சூடி னான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. | 6.49.9 | 498 | கையாற் கயிலை யெடுத்தான் தன்னைக் கால்விரலால் தோள்நெரிய வூன்றி னான்காண் மெய்யின் நரம்பிசையாற் கேட்பித் தாற்கு மீண்டே யவற்கருள்கள் நல்கி னான்காண் பொய்யர் மனத்துப் புறம்பா வான்காண் போர்ப்படையான் காண்பொருவா ரில்லா தான்காண் மைகொள் மணிமிடற்று வார்சடை யான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. | 6.49.10 |
| 499 |
போரானை ஈருரிவைப் போர்வை யானைப் புலியதளே யுடையாடை போற்றி னானைப் பாரானை மதியானைப் பகலா னானைப் பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற நீரானைக் காற்றானைத் தீயா னானை நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத் தேரானைத் திரிவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. | 6.50.1 | 500 | சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னைப் பவந்தாங்கு பாசுபத வேடத் தானைப் பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாங் கவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னைக் கழலடைந்தான் மேற்கறுத்த காலன் வீழச் சிவந்தானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. | 6.50.2 | 501 | அன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை அகத்தியனை யுகப்பானை அயன்மால் தேட நின்றானைக் கிடந்தால் நஞ்சுண் டானை நேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும் வென்றானை மீயச்சூர் மேவி னானை மெல்லியலாள் தவத்தினிறை யளக்க லுற்றுச் சென்றானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. | 6.50.3 | 502 | தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத் தோன்றிய எவ்வுயிர்க்குந் துனையாய் நின்ற தாயானைச் சக்கரமாற் கீந்தான் தன்னைச் சங்கரனைச் சந்தோக சாமம் ஒதும் வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச் சேயானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. | 6.50.4 | 503 | நற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த நஞ்சமுது செய்தானை அமுத முண்ட மற்றமரர் உலந்தாலும் உலவா தானை வருகாலஞ் செல்காலம் வந்த காலம் உற்றவத்தை யுணர்ந்தாரும் உணர லாகா ஒருசுடரை இருவிசும்பி னூர்மூன் றொன்றச் செற்றவனைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. | 6.50.5 | 504 | மைவான மிடற்றானை அவ்வான் மின்போல் வள்ர்சடைமேல் மதியானை மழையா யெங்கும் பெய்வானைப் பிச்சாட லாடு வானைப் பிலவாய பேய்க்கணங்க ளார்க்கச் சூலம் பொய்வானைப் பொய்யிலா மெய்யன் தன்னைப் பூதலமும் மண்டலமும் பொருந்து வாழ்கை செய்வானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. | 6.50.6 | 505 | மிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை வெவ்வேறாய் இருமூன்று சமய மாகிப் புக்கானை எப்பொருட்கும் பொதுவா னானைப் பொன்னுலகத் தவர்போற்றும் பொருளுக் கெல்லாந் தக்கானைத் தானன்றி வேறொன் றில்லாத தத்துவனைத் தடவரையை நடுவு செய்த திக்கனைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. | 6.50.7 | 506 | வானவர்கோன் தோளிறுத்த மைந்தன் தன்னை வளைகுளமும் மறைக்காடும் மன்னி னானை ஊனவனை உயிரவனை யொருநாட் பார்த்தன் உயர்தவத்தின் நிலையறிய லுற்றுச் சென்ற கானவனைக் கயிலாயம் மேவி னானைக் கங்கைசேர் சடையானைக் கலந்தார்க் கென்றுந் தேனவனைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. | 6.50.8 | 507 | பரத்தானை யிப்பக்கம் பலவா னானைப் பசுபதியைப் பத்தர்க்கு முத்தி காட்டும் வரத்தானை வணங்குவார் மனத்து ளானை மாருதமால் எரிமூன்றும் வாய்அம் பீர்க்காஞ் சரத்தானைச் சரத்தையுந்தன் தாட்கீழ் வைத்த தபோதனனைச் சடாமகுடத் தணிந்த பைங்கட் சிரத்தானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. | 6.50.9 | 508 | அறுத்தானை அயந்தலைகள் அஞ்சி லொன்றை அஞ்சாதே வரையடித்த அரக்கன் தோள்கள் இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை இந்துவினைத் தேய்த்தானை இரவி தன்பல் பறித்தானைப் பகீரதற்கா வானோர் வேண்டப் பரந்திழியும் புனற்கங்கை பனிபோ லாங்குச் செறித்தானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. | 6.50.10 |
Back to Thirumurai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page