திருச்சிற்றம்பலம் உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.3 திருவரத்துறை - திருக்குறுந்தொகை |
| 22 |
<ஸௗ நே௬ஸ ே ி௯்௱ உடலு ளானையொப் பாரியி லாதவெம் அடலு ளானை அரத்துறை மேவிய சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.1 | 23 | கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை விரும்பொப் பானைவிண் ணோரு மறிகிலா அரும்பொப் பானை அரத்துறை மேவிய சுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.2 | 24 | ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை வேறொப் பானைவிண் ணோரு மறிகிலா ஆறொப் பானை அரத்துறை மேவிய ஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.3 | 25 | பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா இரப்பொப் பானை இளமதி சூடிய அரப்பொப் பானை அரத்துறை மேவிய சுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.4 | 26 | நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர் மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார் ஐயொப் பானை அரத்துறை மேவிய கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.5 | 27 | நிதியொப் பானை நிதியிற் கிழவனை விதியொப் பானைவிண் ணோரு மறிகிலார் அதியொப் பானை அரத்துறை மேவிய கதியொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.6 | 28 | புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையே மினலொப் பானைவிண் ணோரு மறிகிலார் அனலொப் பானை அரத்துறை மேவிய கனலொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.7 | 29 | பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர் மின்னொப் பானைவிண் ணோரு மறிகிலார் அன்னொப் பானை அரத்துறை மேவிய தன்னொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.8 | 30 | காழி யானைக் கனவிடை யூருமெய் வாழி யானைவல் லோருமென் றின்னவர் ஆழி யான்பிர மற்கும் அரத்துறை ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.9 | 31 | கலையொப் பானைக்கற் றார்க்கோ ரமுதினை மலையொப் பானை மணிமுடி யூன்றிய அலையொப் பானை அரத்துறை மேவிய நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. | 5.3.10 |
| 32 |
வட்ட னைமதி சூடியை வானவர் சிட்ட னைத்திரு வண்ணா மலையனை இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும் அட்ட னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.1 | 33 | வான னைமதி சூடிய மைந்தனைத் தேன னைத்திரு வண்ணா மலையனை ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த ஆன னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.2 | 34 | மத்த னைமத யானை யுரித்தவெஞ் சித்த னைத்திரு வண்ணா மலையனை முத்த னைமுனிந் தார்புர மூன்றெய்த அத்த னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.3 | 35 | காற்ற னைக்கலக் கும்வினை போயறத் தேற்ற னைத்திரு வண்ணா மலையனைக் கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த ஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.4 | 36 | மின்ன னைவினை தீர்த்தெனை யாட்கொண்ட தென்ன னைத்திரு வண்ணா மலையனை என்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த அன்ன னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.5 | 37 | மன்ற னைமதி யாதவன் வேள்விமேற் சென்ற னைத்திரு வண்ணா மலையனை வென்ற னைவெகுண் டார்புர மூன்றையுங் கொன்ற னைக்கொடி யேன்மறந் துய்வனோ. | 5.4.6 | 38 | வீர னைவிட முண்டனை விண்ணவர் தீர னைத்திரு வண்ணா மலையனை ஊர னையுண ரார்புர மூன்றெய்த ஆர னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.7 | 39 | கருவி னைக்கடல் வாய்விட முண்டவெந் திருவி னைத்திரு வண்ணா மலையனை உருவி னையுண ரார்புர மூன்றெய்த அருவி னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.8 | 40 | அருத்த னையர வைந்தலை நாகத்தைத் திருத்த னைத்திரு வண்ணா மலையனைக் கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த அருத்த னையடி யேன்மறந் துய்வனோ. | 5.4.9 | 41 | அரக்க னையல றவ்விர லூன்றிய திருத்த னைத்திரு வண்ணா மலையனை இரக்க மாயென் உடலுறு நோய்களைத் துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ. | 5.4.10 |
| 42 |
பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம் இட்ட மாக இரந்துண் டுழிதரும் அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழக் கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே. | 5.5.1 | 43 | பெற்ற மேறுவர் பெய்பலிக் கென்றவர் சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும் அற்றந் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ நற்ற வத்தொடு ஞானத் திருப்பரே. | 5.5.2 | 44 | பல்லி லோடுகை யேந்திப் பலஇலம் ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர் அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ நல்ல வாயின நம்மை அடையுமே. | 5.5.3 | 45 | பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர் ஓடிப் போயினர் செய்வதொன் றென்கொலோ ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ ஓடிப் போகுநம் மேலை வினைகளே. | 5.5.4 | 46 | தேடிச் சென்று திருந்தடி யேத்துமின் நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர் ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ ஓடிப் போம்நம துள்ள வினைகளே. | 5.5.5 | 47 | கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார் அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவிய நட்ட மாடியை நண்ணநன் காகுமே. | 5.5.6 | 48 | கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர் பாணி நட்டங்க ளாடும் பரமனார் ஆணிப் பொன்னினண் ணாமலை கைதொழப் பேணி நின்ற பெருவினை போகுமே. | 5.5.7 | 49 | கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர் பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார் அண்டத் தோங்கும்அண் ணாமலை கைதொழ விண்டு போகுநம் மேலை வினைகளே. | 5.5.8 | 50 | முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின் அந்தி வாயொளி யான்றன்அண் ணாமலை சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடுங் கந்த மாமலர் சூடுங் கருத்தனே. | 5.5.9 | 51 | மறையி னானொடு மாலவன் காண்கிலா நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன் உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப் பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே. | 5.5.10 |
| 52 |
எப்போ தும்மிறை யும்மற வாதுநீர் முப்போ தும்பிர மன்றொழ நின்றவன் செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன் அப்போ தைக்கஞ்சல் என்னும்ஆ ரூரனே. | 5.6.1 | 53 | சடையின் மேலுமோர் தையலை வைத்தவர் அடைகி லாவர வைஅரை யார்த்தவர் படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா அடைவர் போல்இடு காடர்ஆ ரூரரே. | 5.6.2 | 54 | விண்ட வெண்டலை யேகல னாகவே கொண்ட கம்பலி தேருங் குழகனார் துண்ட வெண்பிறை வைத்த இறையவர் அண்ட வாணர்க் கருளும்ஆ ரூரரே. | 5.6.3 | 55 | விடையும் ஏறுவர் வெண்டலை யிற்பலி கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல் உடையுஞ் சீரை உறைவது காட்டிடை அடைவர் போல்அரங் காகஆ ரூரரே. | 5.6.4 | 56 | துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர் வளைக்கை யாளையோர் பாக மகிழ்வெய்தித் திளைக்குந் திங்கட் சடையிற் திசைமுழு தளக்கஞ் சிந்தையர் போலும்ஆ ரூரரே. | 5.6.5 | 57 | பண்ணின் இன்மொழி யாளையோர் பாகமா விண்ணி னார்விளங் கும்மதி சூடியே சுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின் அண்ணி யாடுவர் போலும்ஆ ரூரரே. | 5.6.6 | 58 | மட்டு வார்குழ லாளொடு மால்விடை இட்ட மாவுகந் தேறும் இறைவனார் கட்டு வாங்கங் கனல்மழு மான்றனோ டட்ட மாம்புய மாகும்ஆ ரூரரே. | 5.6.7 | 59 | தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல் ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார் காய்ந்து காமனை நோக்கின கண்ணினார் ஆய்ந்த நான்மறை யோதும்ஆ ரூரரே. | 5.6.8 | 60 | உண்டு நஞ்சுகண் டத்துள் அடக்கியங் கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான் கொண்ட கோவண ஆடையன் கூரெரி அண்ட வாணர் அடையும்ஆ ரூரரே. | 5.6.9 | 61 | மாலும் நான்முக னும்மறி கிற்கிலார் கால னாய அவனைக் கடந்திட்டுச் சூல மான்மழு வேந்திய கையினார் ஆலம் உண்டழ காயஆ ரூரரே. | 5.6.10 |
| 62 |
கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி பக்க மேபகு வாயன பூதங்கள் ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய் அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே. | 5.7.1 | 63 | எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே பந்தம் வீடவை யாய பராபரன் அந்த மில்புகழ் ஆரூர் அரனெறி சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே. | 5.7.2 | 64 | வண்டு லாமலர் கொண்டு வளர்சடைக் கிண்டை மாலை புனைந்தும் இராப்பகல் தொண்ட ராகித் தொடர்ந்து விடாதவர்க் கண்டம் ஆளவும் வைப்பர்ஆ ரூரரே. | 5.7.3 | 65 | துன்பெ லாமற நீங்கிச் சுபத்தராய் என்பெ லாம்நெக்கி ராப்பக லேத்திநின் றின்ப ராய்நினைந் தென்றும் இடையறா அன்ப ராமவர்க் கன்பர்ஆ ரூரரே. | 5.7.4 | 66 | முருட்டு மெத்தையில் முன்கிடத் தாமுனம் அரட்டர் ஐவரை ஆசறுத் திட்டுநீர் முரட்ட டித்தவத் தக்கன்றன் வேள்வியை அரட்ட டக்கிதன் ஆரூர் அடைமினே. | 5.7.5 | 67 | எம்மை யாரிலை யானுமு ளேனலேன் எம்மை யாரும் இதுசெய வல்லரே அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற் கம்மை யாரைத்தந் தார்ஆரூர் ஐயரே. | 5.7.6 | 68 | தண்ட ஆளியைத் தக்கன்றன் வேள்வியைச் செண்ட தாடிய தேவர கண்டனைக் கண்டு கண்டிவள் காதலித் தன்பதாய்க் கொண்டி யாயின வாறென்றன் கோதையே. | 5.7.7 | 69 | இவண மைப்பல பேசத் தொடங்கினாள் அவண மன்றெனில் ஆரூர் அரனெனும் பவணி வீதி விடங்கனைக் கண்டிவள் தவணி யாயின வாறென்றன் தையலே. | 5.7.8 | 70 | நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார் காரொத் தமிடற் றர்கனல் வாயரா ஆரத் தர்உறை யும்மணி ஆரூரைத் தூரத் தேதொழு வார்வினை தூளியே. | 5.7.9 | 71 | உள்ள மேயொன் றுறுதி யுரைப்பன்நான் வெள்ளந் தாங்கு விரிசடை வேதியன் அள்ளல் நீர்வயல் ஆரூர் அமர்ந்தவெம் வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே. | 5.7.10 | 72 | விண்ட மாமலர் மேலுறை வானொடுங் கொண்டல் வண்ணனுங் கூடி அறிகிலா அண்ட வாணன்றன் ஆரூர் அடிதொழப் பண்டை வல்வினை நில்லா பறையுமே. | 5.7.11 | 73 | மையு லாவிய கண்டத்தன் அண்டத்தன் கையு லாவிய சூலத்தன் கண்ணுதல் ஐயன் ஆரூர் அடிதொழு வார்க்கெலாம் உய்ய லாமல்லல் ஒன்றிலை காண்மினே. | 5.7.12 |
| 74 |
பாற லைத்த படுவெண் டலையினன் நீற லைத்தசெம் மேனியன் நேரிழை கூற லைத்தமெய் கோளர வாட்டிய ஆற லைத்த சடைஅன்னி யூரரே. | 5.8.1 | 75 | பண்டொத் தமொழி யாளையோர் பாகமாய் இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர் கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன் அண்டத் தப்புறத் தான்அன்னி யூரரே. | 5.8.2 | 76 | பரவி நாளும் பணிந்தவர் தம்வினை துரவை யாகத் துடைப்பவர் தம்மிடங் குரவம் நாறுங் குழலுமை கூறராய் அரவ மாட்டுவர் போல்அன்னி யூரரே. | 5.8.3 | 77 | வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர் சோதி வெண்பிறை துன்று சடைக்கணி நாதர் நீதியி னாலடி யார்தமக் காதி யாகிநின் றார்அன்னி யூரரே. | 5.8.4 | 78 | எம்பி ரான்இமை யோர்கள் தமக்கெலாம் இன்ப ராகி இருந்தவெம் மீசனார் துன்ப வல்வினை போகத் தொழுமவர்க் கன்ப ராகிநின் றார்அன்னி யூரரே. | 5.8.5 | 79 | வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர் கந்த மாமலர் சூடுங் கருத்தினர் சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர் அந்த ணாளர்கண் டீர்அன்னி யூரரே. | 5.8.6 | 80 | ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல் வானை வானவர் தாங்கள் வணங்கவே தேனை யார்குழ லாளையோர் பாகமா ஆனை யீருரி யார்அன்னி யூரரே. | 5.8.7 | 81 | காலை போய்ப்பலி தேர்வர் கண்ணார்நெற்றி மேலை வானவர் வந்து விரும்பிய சோலை சூழ்புறங் காடரங் காகவே ஆலின் கீழறத் தார்அன்னி யூரரே. | 5.8.8 | 82 | எரிகொள் மேனியர் என்பணிந் தின்பராய்த் திரியு மூவெயில் தீயெழச் செற்றவர் கரிய மாலொடு நான்முகன் காண்பதற் கரிய ராகிநின் றார்அன்னி யூரரே. | 5.8.9 | 83 | வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும் அஞ்சு மஞ்சுமோ ராறுநான் கும்மிறப் பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழை அஞ்ச லஞ்சலென் றார்அன்னி யூரரே. | 5.8.10 |
| 84 |
ஓத மால்கடல் பாவி உலகெலாம் மாத ரார்வலங் கொண்மறைக் காடரைக் காதல் செய்து கருதப் படுமவர் பாத மேத்தப் பறையுநம் பாவமே. | 5.9.1 | 85 | பூக்குந் தாழை புறணி அருகெலாம் ஆக்கந் தானுடை மாமறைக் காடரோ ஆர்க்குங் காண்பரி யீர்அடி யார்தமை நோக்கிக் காண்பது நும்பணி செய்யிலே. | 5.9.2 | 86 | புன்னை ஞாழல் புறணி அருகெலாம் மன்னி னார்வலங் கொண்மறைக் காடரோ அன்ன மென்னடை யாளையோர் பாகமாச் சின்ன வேடம் உகப்பது செல்வமே. | 5.9.3 | 87 | அட்ட மாமலர் சூடி அடம்பொடு வட்டப் புன்சடை மாமறைக் காடரோ நட்ட மாடியும் நான்மறை பாடியும் இட்ட மாக இருக்கும் இடமிதே. | 5.9.4 | 88 | நெய்த லாம்பல் நிறைவயல் சூழ்தரும் மெய்யி னார்வலங் கொண்மறைக் காடரோ தையல் பாகங்கொண் டீர்கவர் புன்சடைப் பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே. | 5.9.5 | 89 | துஞ்சும் போதுந் துயிலின்றி ஏத்துவார் வஞ்சின் றிவலங் கொண்மறைக் காடரோ பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந் தஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே | 5.9.6 | 90 | விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. | 5.9.7 | 91 | திருவி னார்செல்வ மல்கு விழாவணி மருவி னார்வலங் கொண்மறைக் காடரோ உருவி னாளுமை மங்கையோர் பாகமாய் மருவி னாய்கங்கை யைச்சென்னி தன்னிலே. | 5.9.8 | 92 | சங்கு வந்தலைக் குந்தடங் கானல்வாய் வங்க மார்வலங் கொண்மறைக் காடரோ கங்கை செஞ்சடை வைப்பது மன்றியே அங்கை யில்லனல் ஏந்தல் அழகிதே. | 5.9.9 | 93 | குறைக்காட் டான்விட்ட தேர்குத்த மாமலை இறைக்காட் டியெடுத் தான்றலை ஈரைந்தும் மறைக்காட் டானிறை ஊன்றலும் வாய்விட்டான் இறைக்காட் டாயெம் பிரானுனை ஏத்தவே. | 5.9.10 |
| 94 |
பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. | 5.10.1 | 95 | ஈண்டு செஞ்சடை யாகத்துள் ஈசரோ மூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோ ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும் நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே. | 5.10.2 | 96 | அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ சட்ட விக்கத வந்திறப் பிம்மினே. | 5.10.3 | 97 | அரிய நான்மறை யோதிய நாவரோ பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ விரிகொள் கோவண ஆடை விருத்தரோ பெரிய வான்கத வம்பிரி விக்கவே. | 5.10.4 | 98 | மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ விலையில் மாமணி வண்ண வுருவரோ தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே. | 5.10.5 | 99 | பூக்குந் தாழை புறணி அருகெலாம் ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோ ஆர்க்குங் காண்பரி யீர்அடி கேள்உமை நோக்கிக் காணக் கதவைத் திறவுமே. | 5.10.6 | 100 | வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ அந்த மில்லி அணிமறைக் காடரோ எந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட இந்த மாக்கத வம்பிணி நீக்குமே. | 5.10.7 | 101 | ஆறு சூடும் அணிமறைக் காடரோ கூறு மாதுமைக் கீந்த குழகரோ ஏற தேறிய எம்பெரு மானிந்த மாறி லாக்கத வம்வலி நீக்குமே. | 5.10.8 | 102 | சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோ பண்ணி யேறுகந் தேறும் பரமரோ அண்ண லாதி அணிமறைக் காடரோ திண்ண மாக்கத வந்திறப் பிம்மினே. | 5.10.9 | 103 | விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. | 5.10.10 | 104 | அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர் இரக்க மொன்றிலீர் எம்பெரு மானிரே சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ சரக்க விக்கத வந்திறப் பிம்மினே. | 5.10.11 |
| 105 |
தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும் வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க் கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற் கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே. | 5.11.1 | 106 | வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள் பந்த னைசெய்து பாவிக்க நின்றவன் சிந்த னைதிருத் துந்திரு மீயச்சூர் எந்த மையுடை யாரிளங் கோயிலே. | 5.11.2 | 107 | பஞ்ச மந்திர மோதும் பரமனார் அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார் நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர் எந்த மையுடை யாரிளங் கோயிலே. | 5.11.3 | 108 | நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம் வேறு வேறு விரித்த சடையிடை ஆறு கொண்டுகந் தான்றிரு மீயச்சூர் ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே. | 5.11.4 | 109 | வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே கவ்வ வண்ணக் கனல்விரித் தாடுவர் செவ்வ வண்ணந் திகழ்திரு மீயச்சூர் எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே. | 5.11.5 | 110 | பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும் பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று மின்னு மேகலை யாளொடு மீயச்சூர் இன்ன நாள்அக லாரிளங் கோயிலே. | 5.11.6 | 111 | படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன் சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் ணீற்றினன் விடைகொ ளூர்தியி னான்றிரு மீயச்சூர் இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே. | 5.11.7 | 112 | ஆறு கொண்ட சடையினர் தாமுமோர் வேறு கொண்டதோர் வேடத்த ராகிலுங் கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர் ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே. | 5.11.8 | 113 | வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர் பூதத் தானென்பர் புண்ணியன் றன்னையே கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர் ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே. | 5.11.9 | 114 | கடுக்கண் டன்கயி லாய மலைதனை எடுக்க லுற்ற இராவணன் ஈடற விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர் இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே. | 5.11.10 |
| 115 |
கரைந்து கைதொழு வாரையுங் காதலன் வரைந்து வைதெழு வாரையும் வாடலன் நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும் விரைந்து போவது வீழி மிழலைக்கே. | 5.12.1 | 116 | ஏற்று வெல்கொடி ஈசன்ற னாதிரை நாற்றஞ் சூடுவர் நன்னறுந் திங்களார் நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார் வேற்றுக் கோலங்கொள் வீழி மிழலையே. | 5.12.2 | 117 | புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான் வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான் நினைய நின்றவன் ஈசனை யேயெனா வினையி லார்தொழும் வீழி மிழலையே. | 5.12.3 | 118 | மாடத் தாடு மனத்துடன் வைத்தவர் கோடத் தார்குருக் கேத்திரத் தார்பலர் பாடத் தார்பழிப் பார்பழிப் பல்லதோர் வேடத் தார்தொழும் வீழி மிழலையே. | 5.12.4 | 119 | எடுத்த வெல்கொடி யேறுடை யான்றமர் உடுப்பர் கோவண முண்பது பிச்சையே கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை விடுத்துப் போவது வீழி மிழலைக்கே. | 5.12.5 | 120 | குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால் உழலை யாக்கையை யூணும் உணர்விலீர் தழலை நீர்மடிக் கொள்ளன்மின் சாற்றினோம் மிழலை யானடி சாரவிண் ணாள்வரே. | 5.12.6 | 121 | தீரன் தீத்திர ளன்சடைத் தங்கிய நீரன் ஆடிய நீற்றன்வண் டார்கொன்றைத் தாரன் மாலையன் றண்ணறுங் கண்ணியன் வீரன் வீழி மிழலை விகிர்தனே. | 5.12.7 | 122 | எரியி னாரிறை யாரிடு காட்டிடை நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர் பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை விரியி னார்தொழு வீழி மிழலையே. | 5.12.8 | 123 | நீண்ட சூழ்சடை மேலோர் நிலாமதி காண்டு சேவடி மேலோர் கனைகழல் வேண்டு வாரவர் வீதி புகுந்திலர் மீண்டும் போவது வீழி மிழலைக்கே. | 5.12.9 | 124 | பாலை யாழொடு செவ்வழி பண்கொள மாலை வானவர் வந்து வழிபடும் ஆலை யாரழல் அந்தண ராகுதி வேலை யார்தொழும் வீழி மிழலையே. | 5.12.10 | 125 | மழலை யேற்று மணாளன் திருமலை சுழல ஆர்த்தெடுத் தான்முடி தோளிறக் கழல்கொள் காலிற் றிருவிர லூன்றலும் மிழலை யானடி வாழ்கென விட்டதே. | 5.12.11 |
| 126 |
என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல் நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன் செம்பொ னேதிரு வீழி மிழலையுள் அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.1 | 127 | கண்ணி னாற்களி கூரக்கை யாற்றொழு தெண்ணு மாறறி யாதிளைப் பேன்றனை விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள் அண்ண லேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.2 | 128 | ஞால மேவிசும் பேநலந் தீமையே கால மேகருத் தேகருத் தாற்றொழுஞ் சீல மேதிரு வீழி மிழலையுள் கோல மேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.3 | 129 | முத்த னேமுதல் வாமுகி ழும்முளை ஒத்த னேயொரு வாவுரு வாகிய சித்த னேதிரு வீழி மிழலையுள் அத்த னேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.4 | 130 | கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம் ஒருவ னேஉயிர்ப் பாய்உணர் வாய்நின்ற திருவ னேதிரு வீழி மிழலையுள் குருவ னேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.5 | 131 | காத்த னேபொழி லேழையுங் காதலால் ஆத்த னேஅம ரர்க்கயன் றன்றலை சேர்த்த னேதிரு வீழி மிழலையுள் கூத்த னேயடி யேனைக் குறிகொளே. | 5.13.6 | 132 | நீதி வானவர் நித்தல் நியமஞ்செய் தோதி வானவ ரும்முண ராததோர் வேதி யாவிகிர் தாதிரு வீழியுள் ஆதி யேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.7 | 133 | பழகி நின்னடி சூடிய பாலனைக் கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய அழக னேயணி வீழி மிழலையுள் குழக னேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.8 | 134 | அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ் சுண்ட வானவ னேஉணர் வொன்றிலேன் விண்ட வான்பொழில் வீழி மிழலையுள் கொண்ட னேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.9 | 135 | ஒருத்தன் ஓங்கலைத் தாங்கலுற் றானுரம் வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய திருத்த னேதிரு வீழி மிழலையுள் அருத்த னேயடி யேனைக் குறிக்கொளே. | 5.13.10 |
| 136 |
பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள் வாச நாண்மலர் கொண்டடி வைகலும் ஈச னெம்பெரு மான்இடை மருதினிற் பூச நாம்புகு தும்புன லாடவே. | 5.14.1 | 137 | மறையின் நாண்மலர் கொண்டடி வானவர் முறையி னான்முனி கள்வழி பாடுசெய் இறைவன் எம்பெரு மான்இடை மருதினில் உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே. | 5.14.2 | 138 | கொன்றை மாலையுங் கூவிள மத்தமுஞ் சென்று சேரத் திகழ்சடை வைத்தவன் என்று மெந்தை பிரான்இடை மருதினை நன்று கைதொழு வார்வினை நாசமே. | 5.14.3 | 139 | இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும் எம்மை யாளும் இடைமரு தன்கழல் செம்மை யேதொழு வார்வினை சிந்துமே. | 5.14.4 | 140 | வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையுங் கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனார் எண்டி சைக்கும் இடைமரு தாவென விண்டு போயறும் மேலை வினைகளே. | 5.14.5 | 141 | ஏற தேறும் இடைமரு தீசனார் கூறு வார்வினை தீர்க்குங் குழகனார் ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க் கூறி யூறி உருகுமென் உள்ளமே. | 5.14.6 | 142 | விண்ணு ளாரும் விரும்பப் படுவர் மண்ணு ளாரும் மதிக்கப் படுபவர் எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை நண்ணி னாரைநண் ணாவினை நாசமே. | 5.14.7 | 143 | வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார் கந்த மாலைகள் சூடுங் கருத்தனார் எந்தை யென்னிடை மருதினில் ஈசனைச் சிந்தை யால்நினை வார்வினை தேயுமே. | 5.14.8 | 144 | வேத மோதும் விரிசடை அண்ணலார் பூதம் பாடநின் றாடும் புனிதனார் ஏதந் தீர்க்கும் இடைமரு தாவென்று பாத மேத்தப் பறையுநம் பாவமே. | 5.14.9 | 145 | கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும் பனிம லர்க்குழற் பாவைநல் லாரினுந் தனிமு டிகவித் தாளு மரசினும் இனியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே. | 5.14.10 | 146 | முற்றி லாமதி சூடும் முதல்வனார் ஒற்றி னார்மலை யாலரக் கன்முடி எற்றி னார்கொடி யாரிடை மருதினைப் பற்றி னாரைப்பற் றாவினை பாவமே. | 5.14.11 |
| 147 |
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின் ஓசையும் வைகும் அயலெலாம் இறைவன் எங்கள் பிரானிடை மருதினில் உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே. | 5.15.1 | 148 | மனத்துள் மாயனை மாசறு சோதியைப் புனிற்றுப் பிள்ளைவெள் ளைம்மதி சூடியை எனக்குத் தாயையெம் மானிடை மருதனை நினைத்திட் டூறி நிறைந்ததென் னுள்ளமே. | 5.15.2 | 149 | வண்ட ணைந்தன வன்னியும் மத்தமுங் கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனை எண்டி சைக்கும் இடைமரு தாவென விண்டு போயறும் மேலை வினைகளே. | 5.15.3 | 150 | துணையி லாமையிற் றூங்கிருட் பேய்களோ டணைய லாவதெ மக்கரி தேயெனா இணையி லாஇடை மாமரு தில்லெழு பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே. | 5.15.4 | 151 | மண்ணை யுண்டமால் காணான் மலரடி விண்ணை விண்டயன் காணான் வியன்முடி மொண்ணை மாமரு தாவென்றென் மொய்குழல் பண்ணை யாயமுந் தானும் பயிலுமே. | 5.15.5 | 152 | மங்கை காணக் கொடார்மண மாலையைக் கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை நங்கை மீர்இடை மருதரிந் நங்கைக்கே எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே. | 5.15.6 |
| 153 |
மறையு மோதுவர் மான்மறிக் கையினர் கறைகொள் கண்ட முடைய கபாலியார் துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர் பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே. | 5.16.1 | 154 | கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும் வணக்கி லாநெறி கண்டுகொண் டாரையுந் தணக்கு வார்தணிப் பாரெப் பொருளையும் பிணக்கு வாரவர் பேரெயி லாளரே. | 5.16.2 | 155 | சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை விரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளி எரிவிப் பார்தணிப் பாரெப் பொருளையும் பிரிவிப் பாரவர் பேரெயி லாளரே. | 5.16.3 | 156 | செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள் உறுவிப் பார்பல பத்தர்கள் ஊழ்வினை அறுவிப் பாரது வன்றியும் நல்வினை பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே. | 5.16.4 | 157 | மற்றை யாரறி யார்மழு வாளினார் பற்றி யாட்டியோர் ஐந்தலைப் பாம்பரைச் சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு பெற்றி யாரவர் பேரெயி லாளரே. | 5.16.5 | 158 | திருக்கு வார்குழற் செல்வன சேவடி இருக்கு வாய்மொழி யாற்றனை யேத்துவார் சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றறப் பெருக்கு வாரவர் பேரெயி லாளரே. | 5.16.6 | 159 | முன்னை யார்மயி லூர்தி முருகவேள் தன்னை யாரெனிற் றானோர் தலைமகன் என்னை யாளும் இறையவ னெம்பிரான் பின்னை யாரவர் பேரெயி லாளரே. | 5.16.7 | 160 | உழைத்துந் துள்ளியும் உள்ளத்து ளேயுரு இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல் அழைக்கும் அன்பின ராய அடியவர் பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே. | 5.16.8 | 161 | நீரு லாநிமிர் புன்சடை யாவெனா ஏரு லாவனங் கன்றிறல் வாட்டிய வாரு லாவன மென்முலை யாளொடும் பேரு ளாரவர் பேரெயி லாளரே. | 5.16.9 | 162 | பாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர் தூணி யார்விச யற்கருள் செய்தவர் மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன் பேணி யாரவர் பேரெயி லாளரே. | 5.16.10 | 163 | மதத்த வாளரக் கன்மணிப் புட்பகஞ் சிதைக்க வேதிரு மாமலைக் கீழ்ப்புக்குப் பதைத்தங் கார்த்தெடுத் தான்பத்து நீண்முடி பிதக்க வூன்றிய பேரெயி லாளரே. | 5.16.11 |
| 164 |
முத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெந் தொத்தி னைச்சுட ரைச்சுடர் போலொளிப் பித்த னைக்கொலும் நஞ்சினை வானவர் நித்த னைநெரு நற்கண்ட வெண்ணியே. | 5.17.1 | 165 | வெண்ணித் தொன்னகர் மேயவெண் டிங்களார் கண்ணித் தொத்த சடையர் கபாலியார் எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே. | 5.17.2 | 166 | காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி நீற்றி னைநினைப் பார்வினை நீக்கிடுங் கூற்றி னையுதைத் திட்ட குணமுடை வீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே. | 5.17.3 | 167 | நல்ல னைத்திகழ் நான்மறை யோதியைச் சொல்ல னைச்சுட ரைச்சுடர் போலொளிர் கல்ல னைக்கடி மாமதில் மூன்றெய்த வில்ல னைநெரு நற்கண்ட வெண்ணியே. | 5.17.4 | 168 | சுடரைப் போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை அடருஞ் சென்னியில் வைத்த அமுதினைப் படருஞ் செஞ்சடைப் பான்மதி சூடியை இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே. | 5.17.5 | 169 | பூத நாதனைப் பூம்புக லூரனைத் தாதெ னத்தவ ழும்மதி சூடியை நாத னைநல்ல நான்மறை யோதியை வேத னைநெரு நற்கண்ட வெண்ணியே. | 5.17.6 | 170 | ஒருத்தி யையொரு பாகத் தடக்கியும் பொருத்தி யபுனி தன்புரி புன்சடைக் கருத்த னைக்கறைக் கண்டனைக் கண்ணுதல் நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே. | 5.17.7 | 171 | சடைய னைச்சரி கோவண ஆடைகொண் டுடைய னையுணர் வார்வினை தீர்த்திடும் படைய னைமழு வாளொடு பாய்தரும் விடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே. | 5.17.8 | 172 | பொருப்ப னைப்புன லாளொடு புன்சடை அருப்ப னையிளந் திங்களங் கண்ணியான் பருப்ப தம்பர வித்தொழுந் தொண்டர்கள் விருப்ப னைநெரு நற்கண்ட வெண்ணியே. | 5.17.9 | 173 | சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன் கோல மாவருள் செய்ததோர் கொள்கையான் காலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம் வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே. | 5.17.10 | 174 | இலையி னார்கொன்றை சூடிய ஈசனார் மலையி னாலரக் கன்றிறல் வாட்டினார் சிலையி னான்மதி லெய்தவன் வெண்ணியைத் தலையி னாற்றொழு வார்வினை தாவுமே. | 5.17.11 |
| 175 |
முற்றி லாமுலை யாளிவ ளாகிலும் அற்றந் தீர்க்கும் அறிவில ளாகிலுங் கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப் பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே. | 5.18.1 | 176 | தனகி ருந்ததோர் தன்மைய ராகிலும் முனகு தீரத் தொழுதெழு மின்களோ கனகப் புன்சடை யான்கடம் பந்துறை நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே. | 5.18.2 | 177 | ஆரி யந்தமி ழோடிசை யானவன் கூரி யகுணத் தார்குறி நின்றவன் காரி கையுடை யான்கடம் பந்துறைச் சீரி யல்பத்தர் சென்றடை மின்களே. | 5.18.3 | 178 | பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை வண்ண நன்மல ரான்பல தேவருங் கண்ண னும்மறி யான்கடம் பந்துறை நண்ண நம்வினை யாயின நாசமே. | 5.18.4 | 179 | மறைகொண் டமனத் தானை மனத்துளே நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை சிறைகொண் டவினை தீரத் தொழுமினே. | 5.18.5 | 180 | நங்கை பாகம்வைத் தநறுஞ் சோதியைப் பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை அங்க மோதி அரனுறை கின்றதே. | 5.18.6 | 181 | அரிய நான்மறை ஆறங்க மாயைந்து புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன் கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை உரிய வாறு நினைமட நெஞ்சமே. | 5.18.7 | 182 | பூமென் கோதை உமையொரு பாகனை ஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற் காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை நாம மேத்தநந் தீவினை நாசமே. | 5.18.8 | 183 | பார ணங்கி வணங்கிப் பணிசெய நார ணன்பிர மன்னறி யாததோர் கார ணன்கடம் பந்துறை மேவிய ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே. | 5.18.9 | 184 | நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப் பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார் காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை மேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே. | 5.18.10 |
| 185 |
தளருங் கோளர வத்தொடு தண்மதி வளருங் கோல வளர்சடை யார்க்கிடங் கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக் களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.19.1 | 186 | வெலவ லான்புலன் ஐந்தொடு வேதமுஞ் சொலவ லான்சுழ லுந்தடு மாற்றமும் அலவ லான்மனை யார்ந்தமென் றோளியைக் கலவ லான்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.19.2 | 187 | பொய்தொ ழாது புலியுரி யோன்பணி செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா வைதெ ழாதெழு வாரவர் எள்கநீர் கைதொ ழாவெழு மின்கரக் கோயிலே. | 5.19.3 | 188 | துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமே பண்ணி னான்முனம் பாடல துசெய்தே எண்ணி லாரெயில் மூன்றும் எரித்தமுக் கண்ணி னான்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.19.4 | 189 | சுனையுள் நீல மலரன கண்டத்தன் புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக் கனையும் பைங்கழ லான்கரக் கோயிலை நினையும் உள்ளத் தவர்வினை நீங்குமே. | 5.19.5 | 190 | குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும் வணங்கி வாழ்த்துவர் அன்புடை யாரெலாம் வணங்கி வான்மலர் கொண்டடி வைகலுங் கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே. | 5.19.6 | 191 | பண்ணி னார்மறை பல்பல பூசனை மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும் விண்ணி னார்கள் வியக்கப் படுவன கண்ணி னார்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.19.7 | 192 | அங்கை ஆரழ லேந்திநின் றாடலன் மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக் கங்கை யானுறை யுங்கரக் கோயிலைத் தங்கை யாற்றொழு வார்வினை சாயுமே. | 5.19.8 | 193 | நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையுந் தாங்குதல் என்க டன்பணி செய்து கிடப்பதே. | 5.19.9 | 194 | பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும் மணங்க மழ்மலர்த் தாமரை யானவன் பிணங்கும் பேரழல் எம்பெரு மாற்கிடங் கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே. | 5.19.10 | 195 | வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்றலை அரைக்க வூன்றி அருள்செய்த ஈசனார் திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை உரைக்கும் உள்ளத் தவர்வினை ஓயுமே. | 5.19.11 |
| 196 |
ஒருவ ராயிரு மூவரு மாயவன் குருவ தாய குழகன் உறைவிடம் பருவ ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ் கருவ தாங்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.1 | 197 | வன்னி மத்தம் வளரிளந் திங்களோர் கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன் பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும் மன்னி னான்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.2 | 198 | இல்லக் கோலமும் இந்த இளமையும் அல்லற் கோலம் அறுத்துய வல்லிரே ஒல்லைச் சென்றடை யுங்கடம் பூர்நகர்ச் செல்வக் கோயில் திருக்கரக் கோயிலே. | 5.20.3 | 199 | வேறு சிந்தை யிலாதவர் தீவினை கூறு செய்த குழகன் உறைவிடம் ஏறு செல்வத் திமையவர் தாந்தொழும் ஆறு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.4 | 200 | திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர் மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம் பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலுந் தெங்கு சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.5 | 201 | மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம் எல்லை யான பிரானார் இருப்பிடங் கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை நல்ல சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.6 | 202 | தளரும் வாளர வத்தொடு தண்மதி வளரும் பொற்சடை யாற்கிட மாவது கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக் களரி யார்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.7 | 203 | உற்றா ராயுற வாகி உயிர்க்கெலாம் பெற்றா ராய பிரானார் உறைவிடம் முற்றார் மும்மதி லெய்த முதல்வனார் கற்றார் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.8 | 204 | வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம் உள்ள மாய பிரானார் உறைவிடம் பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான் கள்வன் சேர்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.9 | 205 | பரப்பு நீரிலங் கைக்கிறை வன்னவன் உரத்தி னாலடுக் கல்லெடுக் கல்லுற இரக்க மின்றி இறைவிர லாற்றலை அரக்கி னான்கடம் பூர்க்கரக் கோயிலே. | 5.20.10 |
| 206 |
என்னி லாரும் எனக்கினி யாரில்லை என்னி லும்மினி யானொரு வன்னுளன் என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே. | 5.21.1 | 207 | மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால் கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ தட்டி முட்டித்தள் ளாடித் தழுக்குழி எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே. | 5.21.2 | 208 | கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன் புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர் எனலும் என்மனத் தின்னம்பர் ஈசனே. | 5.21.3 | 209 | மழைக்கண் மாமயி லாலும் மகிழ்ச்சியான் அழைக்குந் தன்னடி யார்கள்தம் அன்பினைக் குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே இழைக்கு மென்மனத் தின்னம்பர் ஈசனே. | 5.21.4 | 210 | தென்ன வனென்னை யாளுஞ் சிவனவன் மன்ன வன்மதி யம்மறை யோதியான் முன்ன மன்னவன் சேரலன் பூழியான் இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே. | 5.21.5 | 211 | விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில் அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக் குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே இளக்கும் என்மனத் தின்னம்பர் ஈசனே. | 5.21.6 | 212 | சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர் கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள் படைக்க ணாற்பரு கப்படு வான்நமக் கிடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே. | 5.21.7 | 213 | தொழுது தூமலர் தூவித் துதித்துநின் றழுது காமுற் றரற்றுகின் றாரையும் பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் எழுதுங் கீழ்க்கணக் கின்னம்பர் ஈசனே. | 5.21.8 | 214 | விரியுந் தண்ணிள வேனலில் வெண்பிறை புரியுங் காமனை வேவப் புருவமுந் திரியும் எல்லையில் மும்மதில் தீயெழுந் தெரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே. | 5.21.9 | 215 | சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும் முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக் கனிய வூன்றிய காரண மென்கொலோ இனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே. | 5.21.10 |
| 216 |
பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங் காவ ணத்துடை யானடி யார்களை தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர் கோவ ணத்துடை யான்குட மூக்கிலே. | 5.22.1 | 217 | பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர் தீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ வேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று கூத்தா டியுறை யுங்குட மூக்கிலே. | 5.22.2 | 218 | நங்கை யாளுமை யாளுறை நாதனார் அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக் கங்கை யாளவள் கன்னி யெனப்படுங் கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே. | 5.22.3 | 219 | ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல் ஏதா னுமினி தாகும் மியமுனைச் சேதா ஏறுடை யானமர்ந் தவிடங் கோதா விரியுறை யுங்குட மூக்கிலே. | 5.22.4 | 220 | நக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே வக்க ரையுறை வானை வணங்குநீ அக்க ரையோ டரவரை யார்த்தவன் கொக்க ரையுடை யான்குட மூக்கிலே. | 5.22.5 | 221 | துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள் பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய் மறவ னாய்ப்பார்த்தன் மேற்கணை தொட்டவெங் குறவ னாருறை யுங்குட மூக்கிலே. | 5.22.6 | 222 | தொண்ட ராகித் தொழுது பணிமினோ பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர் விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக் கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே. | 5.22.7 | 223 | காமி யஞ்செய்து காலம் கழியாதே, ஓமி யஞ்செய்தங் குள்ளத் துணர்மினோ சாமி யோடு சரச்சுவ தியவள் கோமி யும்முறை யுங்குட மூக்கிலே. | 5.22.8 | 224 | சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப் பரம னைப்பல நாளும் பயிற்றுமின் பிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாங் குரவ னாருறை யுங்குட மூக்கிலே. | 5.22.9 | 225 | அன்று தானரக் கன்கயி லாயத்தைச் சென்று தானெடுக் கவுமை யஞ்சலும் நன்று தான்நக்கு நல்விர லூன்றிப்பின் கொன்று கீதங்கேட் டான்குட மூக்கிலே. | 5.22.10 |
| 226 |
கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலைப் படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர் நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க் கடுங்கைக் கூற்றுதைத |