பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
|
558 |
கன்றினார் புரங்கள் மூன்றுங்
கனலெரி யாகச் சீறி
நின்றதோ ருருவந் தன்னால்
நீர்மையும் நிறையுங் கொண்டு
ஒன்றியாங் குமையுந் தாமும்
ஊர்பலி தேர்ந்து பின்னும்
பன்றிப்பின் வேட ராகிப்
பருப்பத நோக்கி னாரே. 4.58.1 | |
559 | கற்றமா மறைகள் பாடிக்
கடைதொறும் பலியுந் தேர்வார்
வற்றலோர் தலைகை யேந்தி
வானவர் வணங்கி வாழ்த்த
முற்றவோர் சடையில் நீரை
ஏற்றமுக் கண்ணர் தம்மைப்
பற்றினார்க் கருள்கள் செய்து
பருப்பத நோக்கி னாரே. 4.58.2
|
560 | கரவிலா மனத்த ராகிக்
கைதொழு வார்கட் கென்றும்
இரவினின் றெரிய தாடி
இன்னருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்று
மாட்டிய நகைய ராகிப்
பரவுவார்க் கருள்கள் செய்து
பருப்பத நோக்கி னாரே. 4.58.3
|
561 | கட்டிட்ட தலைகை யேந்திக்
கனலெரி யாடிச் சீறிச்
சுட்டிட்ட நீறு பூசிச்
சுடுபிணக் காட ராகி
விட்டிட்ட வேட்கை யார்க்கு
வேறிருந் தருள்கள் செய்து
பட்டிட்ட வுடைய ராகிப்
பருப்பத நோக்கி னாரே. 4.58.4
|
562 | கையராய்க் கபால மேந்திக்
காமனைக் கண்ணாற் காய்ந்து
மெய்யராய் மேனி தன்மேல்
விளங்குவெண் ணீறு பூசி
உய்யரா யுள்கு வார்கட்
குவகைகள் பலவுஞ் செய்து
பையரா அரையி லார்த்துப்
பருப்பத நோக்கி னாரே. 4.58.5
|
563 | வேடராய் வெய்ய ராகி
வேழத்தி னுரிவை போர்த்து
ஓடரா யுலக மெல்லா
முழிதர்வர் உமையுந் தாமுங்
காடராய்க் கனல்கை யேந்திக்
கடியதோர் விடைமேற் கொண்டு
பாடராய்ப் பூதஞ் சூழப்
பருப்பத நோக்கி னாரே. 4.58.6
|
564 | மேகம்போல் மிடற்ற ராகி
வேழத்தி னுரிவை போர்த்து
ஏகம்பம் மேவி னார்தாம்
இமையவர் பரவி யேத்தக்
காகம்பர் கழற ராகிக்
கடியதோர் விடையொன் றேறிப்
பாகம்பெண் ணுருவ மானார்
பருப்பத நோக்கி னாரே. 4.58.7
|
565 | பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும்
பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக்
கபாலமோர் கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே
றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப்
பருப்பத நோக்கி னாரே. 4.58.8
|
566 | அங்கண்மா லுடைய ராய
ஐவரா லாட்டு ணாதே
உங்கள்மால் தீர வேண்டில்
உள்ளத்தா லுள்கி யேத்துஞ்
செங்கண்மால் பரவி யேத்திச்
சிவனென நின்ற செல்வர்
பைங்கண்வெள் ளேற தேறிப்
பருப்பத நோக்கி னாரே. 4.58.9
|
567 | அடல்விடை யூர்தி யாகி
அரக்கன்றோள் அடர வூன்றிக்
கடலிடை நஞ்ச முண்ட
கறையணி கண்ட னார்தாஞ்
சுடர்விடு மேனி தன்மேற்
சுண்ணவெண் ணீறு பூசிப்
படர்சடை மதியஞ் சேர்த்திப்
பருப்பத நோக்கி னாரே. 4.58.10
| | | | | | | | | |
இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பருப்பதேசுவரர், தேவியார் - மனோன்மணியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.59 திருஅவளிவணல்லூர் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
|
568 |
தோற்றினான் எயிறு கவ்வித்
தொழிலுடை யரக்கன் றன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச்
சிக்கெனத் தவிரு மென்று
வீற்றினை யுடைய னாகி
வெடுவெடுத் தெழுந்த வன்றன்
ஆற்றலை அழிக்க வல்லார்
அவளிவ ணல்லூ ராரே. 4.59.1 | |
569 | வெம்பினா ரரக்க ரெல்லாம்
மிகச்சழக் காயிற் றென்று
செம்பினா லெடுத்த கோயில்
சிக்கெனச் சிதையு மென்ன
நம்பினா ரென்று சொல்லி
நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினால் அழிய வெய்தார்
அவளிவ ணல்லூ ராரே. 4.59.2
|
570 | கீழ்ப்படக் கருத லாமோ
கீர்த்திமை யுள்ள தாகிற்
தோட்பெரு வலியி னாலே
தொலைப்பன்யான் மலையை யென்று
வேட்பட வைத்த வாறே
விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து
ஆட்படக் கருதிப் புக்கார்
அவளிவ ணல்லூ ராரே. 4.59.3
|
571 | நிலைவலம் வல்ல னல்லன்
நேர்மையை நினைய மாட்டான்
சிலைவலங் கொண்ட செல்வன்
சீரிய கயிலை தன்னைத்
தலைவலங் கருதிப் புக்குத்
தாக்கினான் தன்னை யன்று
அலைகுலை யாக்கு வித்தார்
அவளிவ ணல்லூ ராரே. 4.59.4
|
572 | தவ்வலி யொன்ற னாகித்
தனதொரு பெருமை யாலே
மெய்வ்வலி யுடைய னென்று
மிகப்பெருந் தேரை யூர்ந்து
செவ்வலி கூர்வி ழியாற்
சிரமத்தான் எடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லார்
அவளிவ ணல்லூ ராரே. 4.59.5
|
573 | நன்மைதான் அறிய மாட்டான்
நடுவிலா அரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று
வலிதனைச் செலுத்த லுற்றுக்
கன்மையான் மலையை யோடிக்
கருதித்தான் எடுத்து வாயால்
அம்மையோ வென்ன வைத்தார்
அவளிவ ணல்லூ ராரே. 4.59.6
|
574 | கதம்படப் போது வார்கள்
போதுமக் கருத்தி னாலே
சிதம்பட நின்ற நீர்கள்
சிக்கெனத் தவிரு மென்று
மதம்படு மனத்த னாகி
வன்மையான் மிக்கு நோக்க
அதம்பழத் துருவு செய்தார்
அவளிவ ணல்லூ ராரே. 4.59.7
|
575 | நாடுமிக் குழிதர் கின்ற
நடுவிலா அரக்கர் கோனை
ஓடுமிக் கென்று சொல்லி
ஊன்றினான் உகிரி னாலே
பாடுமிக் குய்வ னென்று
பணியநற் றிறங்கள் காட்டி
ஆடுமிக் கரவம் பூண்டார்
அவளிவ ணல்லூ ராரே. 4.59.8
|
576 | ஏனமா யிடந்த மாலும்
எழில்தரு முளரி யானும்
ஞானந்தா னுடைய ராகி
நன்மையை அறிய மாட்டார்
சேனந்தான் இலாவ ரக்கன்
செழுவரை எடுக்க வூன்றி
ஆனந்த அருள்கள் செய்தார்
அவளிவ ணல்லூ ராரே. 4.59.9
|
577 | ஊக்கினான் மலையை யோடி
உணர்விலா அரக்கன் றன்னைத்
தாக்கினான் விரலி னாலே
தலைபத்துந் தகர வூன்றி
நோக்கினான் அஞ்சத் தன்னை
நோன்பிற வூன்று சொல்லி
ஆக்கினார் அமுத மாக
அவளிவ ணல்லூ ராரே. 4.59.10
| | | | | | | | | |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிநாயகேசுவரர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.60 திருப்பெருவேளூர் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
|
578 |
மறையணி நாவி னானை
மறப்பிலார் மனத்து ளானைக்
கறையணி கண்டன் றன்னைக்
கனலெரி யாடி னானைப்
பிறையணி சடையி னானைப்
பெருவேளூர் பேணி னானை
நறையணி மலர்கள் தூவி
நாடொறும் வணங்கு வேனே. 4.60.1 | |
579 | நாதனாய் உலக மெல்லாம்
நம்பிரான் எனவும் நின்ற
பாதனாம் பரம யோகி
பலபல திறத்தி னாலும்
பேதனாய்த் தோன்றி னானைப்
பெருவேளூர் பேணி னானை
ஓதநா வுடைய னாகி
உரைக்குமா றுரைக்கின் றேனே. 4.60.2
|
580 | குறவிதோள் மணந்த செல்வக்
குமரவேள் தாதை யென்று
நறவிள நறுமென் கூந்தல்
நங்கையோர் பாகத் தானைப்
பிறவியை மாற்று வானைப்
பெருவேளூர் பேணி னானை
உறவினால் வல்ல னாகி
உணருமா றுணர்த்து வேனே. 4.60.3
|
581 | மைஞ்ஞவில் கண்டன் றன்னை
வலங்கையின் மழுவொன் றேந்திக்
கைஞ்ஞவில் மானி னோடுங்
கனலெரி யாடி னானைப்
பிஞ்ஞகன் றன்னை அந்தண்
பெருவேளூர் பேணி னானைப்
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப்
பொறியிலா அறிவி லேனே. 4.60.4
|
582 | ஓடைசேர் நெற்றி யானை
உரிவையை மூடி னானை
வீடதே காட்டு வானை
வேதநான் காயி னானைப்
பேடைசேர் புறவ நீங்காப்
பெருவேளூர் பேணி னானைக்
கூடநான் வல்ல மாற்றங்
குறுகுமா றறிகி லேனே. 4.60.5
|
583 | கச்சைசேர் நாகத் தானைக்
கடல்விடங் கண்டத் தானைக்
கச்சியே கம்பன் றன்னைக்
கனலெரி யாடு வானைப்
பிச்சைசேர்ந் துழல்வி னானைப்
பெருவேளூர் பேணி னானை
இச்சைசேர்ந் தமர நானும்
இறைஞ்சுமா றிறைஞ்சு வேனே. 4.60.6
|
584 | சித்தராய் வந்து தன்னைத்
திருவடி வணங்கு வார்கள்
முத்தனை மூர்த்தி யாய
முதல்வனை முழுது மாய
பித்தனைப் பிறரு மேத்தப்
பெருவேளூர் பேணி னானை
மெத்தனே யவனை நாளும்
விரும்புமா றறிகி லேனே. 4.60.7
|
585 | முண்டமே தாங்கி னானை
முற்றிய ஞானத் தானை
வண்டுலாங் கொன்றை மாலை
வளர்மதிக் கண்ணி யானைப்
பிண்டமே ஆயி னானைப்
பெருவேளூர் பேணி னானை
அண்டமாம் ஆதி யானை
அறியுமா றறிகி லேனே. 4.60.8
|
586 | விரிவிலா அறிவி னார்கள்
வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும்
எம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும்
பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி உய்யும்
வகையது நினைக்கின் றேனே. 4.60.9
|
587 | பொருகடல் இலங்கை மன்னன்
உடல்கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத் தானைக்
கதிரிளங் கொழுந்து சூடும்
பெருகிய சடையி னானைப்
பெருவேளூர் பேணி னானை
உருகிய அடிய ரேத்தும்
உள்ளத்தால் உள்கு வேனே. 4.60.10
| | | | | | | | | |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரியாதநாதர், தேவியார் - மின்னனையாளம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.61 திருஇராமேச்சுரம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
|
588 |
பாசமுங் கழிக்க கில்லா
அரக்கரைப் படுத்துத் தக்க
வாசமிக் கலர்கள் கொண்டு
மதியினால் மால்செய் கோயில்
நேசமிக் கன்பி னாலே
நினைமின்நீர் நின்று நாளுந்
தேசமிக் கான் இருந்த
திருஇரா மேச்சு ரமே. 4.61.1 | |
589 | முற்றின நாள்கள் என்று
முடிப்பதே கார ணமாய்
உற்றவன் போர்க ளாலே
உணர்விலா அரக்கர் தம்மைச்
செற்றமால் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தைப்
பற்றிநீ பரவு நெஞ்சே
படர்சடை ஈசன் பாலே. 4.61.2
|
590 | கடலிடை மலைகள் தம்மால்
அடைத்துமால் கருமம் முற்றித்
திடலிடைச் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற்
சுழல்கின்றேன் தூய்மை யின்றி
உடலிடை நின்றும் பேரா
ஐவர்ஆட் டுண்டு நானே. 4.61.3
|
591 | குன்றுபோல் தோளு டைய
குணமிலா அரக்கர் தம்மைக்
கொன்றுபோ ராழி யம்மால்
வேட்கையாற் செய்த கோயில்
நன்றுபோல் நெஞ்ச மேநீ
நன்மையை அறிதி யாயிற்
சென்றுநீ தொழுதுய் கண்டாய்
திருஇரா மேச்சு ரமே. 4.61.4
|
592 | வீரமிக் கெயிறு காட்டி
விண்ணுற நீண்ட ரக்கன்
கூரமிக் கவனைச் சென்று
கொன்றுடன் கடற் படுத்துத்
தீரமிக் கானி ருந்த
திருஇரா மேச்சு ரத்தைக்
கோரமிக் கார்த வத்தாற்
கூடுவார் குறிப்பு ளாரே. 4.61.5
|
593 | ஆர்வலம் நம்மின் மிக்கார்
என்றஅவ் வரக்கர் கூடிப்
போர்வலஞ் செய்து மிக்குப்
பொருதவர் தம்மை வீட்டித்
தேர்வலஞ் செற்ற மால்செய்
திருஇரா மேச்சு ரத்தைச்
சேர்மட நெஞ்ச மேநீ
செஞ்சடை எந்தை பாலே. 4.61.6
|
594 | வாக்கினால் இன்பு ரைத்து
வாழ்கிலார் தம்மை யெல்லாம்
போக்கினாற் புடைத்த வர்கள்
உயிர்தனை யுண்டு மால்தான்
தேக்குநீர் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தை
நோக்கினால் வணங்கு வார்க்கு
நோய்வினை நுணுகு மன்றே. 4.61.7
|
595 | பலவுநாள் தீமை செய்து
பார்தன்மேற் குழுமி வந்து
கொலைவிலார் கொடிய ராய
அரக்கரைக் கொன்று வீழ்த்தச்
சிலையினான் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தைத்
தலையினால் வணங்கு வார்கள்
தாழ்வராந் தவம தாமே. 4.618
|
596 | கோடிமா தவங்கள் செய்து
குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்க ரத்தால்
எறிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ
நன்னெறி யாகு மன்றே. 4.61.9
|
597 | வன்கண்ணர் வாள ரக்கர்
வாழ்வினை யொன்ற றியார்
புன்கண்ண ராகி நின்று
போர்கள்செய் தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில்
திருஇரா மேச்சு ரத்தைத்
தங்கணால் எய்த வல்லார்
தாழ்வராந் தலைவன் பாலே. 4.61.10
|
598 | வரைகளொத் தேயு யர்ந்த
மணிமுடி அரக்கர் கோனை
விரையமுற் றறவொ டுக்கி
மீண்டுமால் செய்த கோயில்
திரைகள்முத் தால்வ ணங்குந்
திருஇரா மேச்சு ரத்தை
உரைகள்பத் தாலு ரைப்பார்
உள்குவார் அன்பி னாலே. 4.61.11
| | | | | | | | | | |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இராமலிங்கேசுவரர்; தேவியார் - பருவதவர்த்தனியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.62 திருவாலவாய் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
|
599 |
வேதியா வேத கீதா
விண்ணவர் அண்ணா என்றென்
றோதியே மலர்கள் தூவி
ஒடுங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய்
படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே. 4.62.1 | |
600 | நம்பனே நான்மு கத்தாய்
நாதனே ஞான மூர்த்தி
என்பொனே ஈசா என்றென்
றேத்திநான் ஏசற் றென்றும்
பின்பினே திரிந்து நாயேன்
பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே. 4.62.2
|
601 | ஒருமருந் தாகி யுள்ளாய்
உம்பரோ டுலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய்
பேரமு தின்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளாய்
ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமருந் தால வாயில்
அப்பனே அருள்செ யாயே. 4.62.3
|
602 | செய்யநின் கமல பாதஞ்
சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே
மான்மறி மழுவொன் றேந்துஞ்
சைவனே சால ஞானங்
கற்றறி விலாத நாயேன்
ஐயனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே. 4.62.4
|
603 | வெண்டலை கையி லேந்தி
மிகவுமூர் பலிகொண் டென்றும்
உண்டது மில்லை சொல்லில்
உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப்
பளகனேன் உளம தார
அண்டனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே. 4.62.5
|
604 | எஞ்சலில் புகலி தென்றென்
றேத்திநான் ஏசற் றென்றும்
வஞ்சக மொன்று மின்றி
மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த
நற்பொருட் பதமே நாயேற்
கஞ்சலென் றால வாயில்
அப்பனே அருள்செ யாயே. 4.62.6
|
605 | வழுவிலா துன்னை வாழ்த்தி
வழிபடுந் தொண்ட னேன்உன்
செழுமலர்ப் பாதங் காணத்
தெண்டிரை நஞ்ச முண்ட
குழகனே கோல வில்லீ
கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே. 4.62.7
|
606 | நறுமலர் நீருங் கொண்டு
நாடொறு மேத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத்
திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா
மாமறை யங்க மாறும்
அறிவனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே. 4.62.8
|
607 | நலந்திகழ் வாயின் நூலாற்
சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரச தாள
அருளினாய் என்று திண்ணங்
கலந்துடன் வந்து நின்றாள்
கருதிநான் காண்ப தாக
அலந்தனன் ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே. 4.62.9
|
608 | பொடிக்கொடு பூசிப் பொல்லாக்
குரம்பையிற் புந்தி யொன்றிப்
பிடித்துநின் றாள்க ளென்றும்
பிதற்றிநா னிருக்க மாட்டேன்
எடுப்பனென் றிலங்கைக் கோன்வந்
தெடுத்தலும் இருப துதோள்
அடர்த்தனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே. 4.62.10
| | | | | | | | | |
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொக்கநாதேசுவரர், தேவியார் - மீனாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.63 திருவண்ணாமலை - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
|
609 |
ஓதிமா மலர்கள் தூவி
உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்டோ ள்
சுடர்மழுப் படையி னானே
ஆதியே அமரர் கோவே
அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால்
நினையுமா நினைவி லேனே. 4.63.1 | |
610 | பண்டனை வென்ற இன்சொற்
பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக்
கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே
அணியணா மலையு ளானே
தொண்டனேன் உன்னை அல்லாற்
சொல்லுமா சொல்லி லேனே. 4.63.2
|
611 | உருவமும் உயிரு மாகி
ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான்
மற்றொரு மாடி லேனே. 4.63.3
|
612 | பைம்பொனே பவளக் குன்றே
பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால்
யாதும்நான் நினைவி லேனே. 4.63.4
|
613 | பிறையணி முடியி னானே
பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார்
கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமர ரேத்தும்
அணியணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லா
லியாதுநான் நினைவி லேனே. 4.63.5
|
614 | புரிசடை முடியின் மேலோர்
பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக்
கருதிய கால காலா
அரிகுலம் மலிந்த அண்ணா
மலையுளாய் அலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய்
பாதநான் மறப்பி லேனே. 4.63.6
|
615 | இரவியும் மதியும் விண்ணும்
இருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவனம் எட்டுந்
திசையொளி உருவ மானாய்
அரவுமிழ் மணிகொள் சோதி
அணியணா மலையு ளானே
பரவுநின் பாத மல்லாற்
பரமநான் பற்றி லேனே. 4.63.7
|
616 | பார்த்தனுக் கன்று நல்கிப்
பாசுப தத்தை ஈந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை
நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந் தீண்டு கொண்டல்
அணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத்
திறமலாற் றிறமி லேனே. 4.63.8
|
617 | பாலுநெய் முதலா மிக்க
பசுவில்ஐந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக்
காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூகம்
அணியணா மலையு ளானே
வாலுடை விடையாய் உன்றன்
மலரடி மறப்பி லேனே. 4.63.9
|
618 | இரக்கமொன் றியாது மில்லாக்
காலனைக் கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை ஊக்க
ஒருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த அண்ணா
மலையுளாய் அமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித்
திருவடி மறப்பி லேனே. 4.63.10
| | | | | | | | | |
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர், தேவியார் - உண்ணாமுலையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.64 திருவீழிமிழலை - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
|
619 |
பூதத்தின் படையர் பாம்பின்
பூணினர் பூண நூலர்
சீதத்திற் பொலிந்த திங்கட்
கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்
கீதத்திற் பொலிந்த ஓசைக்
கேள்வியர் வேள்வி யாளர்
வேதத்தின் பொருளர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.1 | |
620 | காலையிற் கதிர்செய் மேனி
கங்குலிற் கறுத்த கண்டர்
மாலையின் மதியஞ் சேர்ந்த
மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையிற் பாகும் போல
அண்ணித்திட் டடியார்க் கென்றும்
வேலையின் அமுதர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.2
|
621 | வருந்தின நெருநல் இன்றாய்
வழங்கின நாளர் ஆற்கீழ்
இருந்துநன் பொருள்கள் நால்வர்க்
கியம்பினர் இருவ ரோடும்
பொருந்தினர் பிரிந்து தம்பால்
பொய்யரா மவர்கட் கென்றும்
விருந்தினர் திருந்து வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.3
|
622 | நிலையிலா வூர்மூன் றொன்ற
நெருப்பரி காற்றம் பாகச்
சிலையுநா ணதுவு நாகங்
கொண்டவர் தேவர் தங்கள்
தலையினாற் றரித்த என்பும்
தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.4
|
623 | மறையிடைப் பொருளர் மொட்டின்
மலர்வழி வாசத் தேனர்
கறவிடைப் பாலின் நெய்யர்
கரும்பினிற் கட்டி யாளர்
பிறையிடைப் பாம்பு கொன்றைப்
பிணையல்சேர் சடையுள் நீரர்
விறகிடைத் தீயர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.5
|
624 | எண்ணகத் தில்லை அல்லர்
உளரல்லர் இமவான் பெற்ற
பெண்ணகத் தரையர் காற்றிற்
பெருவலி யிருவ ராகி
மண்ணகத் தைவர் நீரில்
நால்வர்தீ யதனில் மூவர்
விண்ணகத் தொருவர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.6
|
625 | சந்தணி கொங்கை யாளோர்
பங்கினர் சாம வேதர்
எந்தையும் எந்தை தந்தை
தந்தையு மாய ஈசர்
அந்தியோ டுதயம் அந்த
ணாளர்ஆன் நெய்யால் வேட்கும்
வெந்தழ லுருவர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.7
|
626 | நீற்றினை நிறையப் பூசி
நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி ஒருநா ளொன்று
குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி
யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.8
|
627 | சித்திசெய் பவர்கட் கெல்லாஞ்
சேர்விடஞ் சென்று கூடப்
பத்திசெய் பவர்கள் பாவம்
பறைப்பவர் இறப்பி லாளர்
முத்திசை பவள மேனி
முதிரொளி நீல கண்டர்
வித்தினில் முளையர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.9
|
628 | தருக்கின அரக்கன் தேரூர்
சாரதி தடைநி லாது
பொருப்பினை யெடுத்த தோளும்
பொன்முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டங் கலறி மீண்டு
நினைந்தடி பரவத் தம்வாள்
விருப்பொடுங் கொடுப்பர் வீழி
மிழலையுள் விகிர்த னாரே. 4.64.10
| | | | | | | | | |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகீசுவரர், தேவியார் - சுந்தராம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.65 திருச்சாய்க்காடு - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
|
629 |
தோடுலா மலர்கள் தூவித்
தொழுதெழு மார்க்கண் டேயன்
வீடுநாள் அணுகிற் றென்று
மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செல்லு மஞ்சிப்
பாதமே சரண மென்னச்
சாடினார் காலன் மாளச்
சாய்க்காடு மேவி னாரே. 4.65.1 | |
630 | வடங்கெழு மலைமத் தாக
வானவர் அசுர ரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங்
கண்டுபல் தேவ ரஞ்சி
அடைந்துநும் சரண மென்ன
அருள்பெரி துடைய ராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார்
சாய்க்காடு மேவி னாரே. 4.65.2
|
631 | அரணிலா வெளிய நாவல்
அருள்நிழ லாக ஈசன்
வரணிய லாகித் தன்வாய்
நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை
முடியுடை மன்ன னாக்கித்
தரணிதான் ஆள வைத்தார்
சாய்க்காடு மேவி னாரே. 4.65.3
|
632 | அரும்பெருஞ் சிலைக்கை வேட
னாய்விறற் பார்த்தற் கன்று
உரம்பெரி துடைமை காட்டி
ஒள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரி துடைய னாக்கி
வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி ஈந்தார்
சாய்க்காடு மேவி னாரே. 4.65.4
|
633 | இந்திரன் பிரமன் அங்கி
எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி
வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திர மறியாத் தக்கன்
வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ்
சாய்க்காடு மேவி னாரே. 4.65.5
|
634 | ஆமலி பாலும் நெய்யும்
ஆட்டிஅர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப்
பொறாததன் தாதை தாளைக்
கூர்மழு வொன்றால் ஓச்சக்
குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார்
சாய்க்காடு மேவி னாரே. 4.65.6
|
635 | மையறு மனத்த னாய
பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் லமர ரேத்த
ஆயிர முகம தாகி
வையகம் நெளியப் பாய்வான்
வந்திழி கங்கை யென்னுந்
தையலைச் சடையில் ஏற்றார்
சாய்க்காடு மேவி னாரே. 4.65.7
|
636 | குவப்பெருந் தடக்கை வேடன்
கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந்
துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித்
தூயவாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர
ஒருகணை யிடந்தங் கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார்
சாய்க்காடு மேவி னாரே. 4.65.8
|
637 | நக்குலா மலர்பன் னூறு
கொண்டுநன் ஞானத் தோடு
மிக்கபூ சனைகள் செய்வான்
மென்மல ரொன்று காணா
தொக்குமென் மலர்க்கண் ணென்றங்
கொருகணை யிடந்து மப்பச்
சக்கரங் கொடுப்பர் போலுஞ்
சாய்க்காடு மேவி னாரே. 4.65.9
|
638 | புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து
மாயகொண் டரக்க னோடிச்
சிவன்திரு மலையைப் பேர்க்கத்
திருமலர்க் குழலி யஞ்ச
வியன்பெற எய்தி வீழ
விரல்சிறி தூன்றி மீண்டே
சயம்பெற நாம மீந்தார்
சாய்க்காடு மேவி னாரே. 4.65.10
| | | | | | | | | |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாயவனேசுவரர்,
தேவியார் - குயிலின்நன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.66 திருநாகேச்சரம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
|
639 |
கச்சைசேர் அரவர் போலுங்
கறையணி மிடற்றர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும்
பேரரு ளாலர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி
இரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க் கினியர் போலும்
நாகஈச் சரவ னாரே. 4.66.1 | |
640 | வேடுறு வேட ராகி
விசயனோ டெய்தார் போலுங்
காடுறு பதியர் போலுங்
கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந்
தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும்
நாகஈச் சரவ னாரே. 4.66.2
|
641 | கற்றுணை வில்ல தாகக்
கடியரண் செற்றார் போலும்
பொற்றுணைப் பாதர் போலும்
புலியத ளுடையார் போலுஞ்
சொற்றுணை மாலை கொண்டு
தொழுதெழு வார்கட் கெல்லாம்
நற்றுணை யாவர் போலும்
நாகஈச் சரவ னாரே. 4.66.3
|
642 | கொம்பனாள் பாகர் போலுங்
கொடியுடை விடையர் போலுஞ்
செம்பொனா ருருவர் போலுந்
திகழ்திரு நீற்றர் போலும்
எம்பிரான் எம்மை யாளும்
இறைவனே என்று தம்மை
நம்புவார்க் கன்பர் போலும்
நாகஈச் சரவ னாரே. 4.66.4
|
643 | கடகரி யுரியர் போலுங்
கனல்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும்
பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவம் ஆர்ப்பக்
கூளிகள் பாட நாளும்
நடநவில் அடிகள் போலும்
நாகஈச் சரவ னாரே. 4.66.5
|
644 | பிறையுறு சடையர் போலும்
பெண்ணொரு பாகர் போலும்
மறையுறு மொழியர் போலும்
மால்மறை யவன்ற னோடு
முறைமுறை அமரர் கூடி
முடிகளால் வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும்
நாகஈச் சரவ னாரே. 4.66.6
|
645 | வஞ்சகர்க் கரியர் போலும்
மருவினோர்க் கெளியர் போலுங்
குஞ்சரத் துரியர் போலுங்
கூற்றினைக் குமைப்பர் போலும்
விஞ்சையர் இரிய அன்று
வேலைவாய் வந்தெ ழுந்த
நஞ்சணி மிடற்றர் போலும்
நாகஈச் சரவ னாரே. 4.66.7
|
646 | போகமார் மோடி கொங்கை
புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும்
வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும்
பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும்
நாகஈச் சரவ னாரே. 4.66.8
|
647 | கொக்கரை தாளம் வீணை
பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும்
ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும்
மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும்
நாகஈச் சரவ னாரே. 4.66.9
|
648 | வின்மையாற் புரங்கள் மூன்றும்
வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையால் அமரர் தங்கள்
தலைவர்க்குந் தலைவர் போலும்
வன்மையான் மலையெ டுத்தான்
வலியினைத் தொலைவித் தாங்கே
நன்மையால் அளிப்பர் போலும்
நாகஈச் சரவ னாரே. 4.66.10
| | | | | | | | | |
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சண்பகாரண்ணியேசுவரர்,
தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.67 திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
|
649 |
வரைகிலேன் புலன்க ளைந்தும்
வரைகிலாப் பிறவி மாயப்
புரையிலே அடங்கி நின்று
புறப்படும் வழியுங் காணேன்
அரையிலே மிளிரு நாகத்
தண்ணலே அஞ்ச லென்னாய்
திரையுலாம் பழன வேலித்
திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.1 | |
650 | தொண்டனேன் பிறந்து வாளா
தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து
பேர்வதோர் வழியுங் காணேன்
அண்டனே அண்ட வாணா
அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த
திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.2
|
651 | கால்கொடுத் தெலும்பு மூட்டிக்
கதிர்நரம் பாக்கை யார்த்துத்
தோலுடுத் துதிர மட்டித்
தொகுமயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத் துழைஞர் கூடி
ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்
சேலுடைப் பழனஞ் சூழ்ந்த
திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.3
|
652 | கூட்டமாய் ஐவர் வந்து
கொடுந்தொழிற் குணத்த ராகி
ஆட்டுவார்க் காற்ற கில்லேன்
ஆடர வசைத்த கோவே
காட்டிடை யரங்க மாக
ஆடிய கடவு ளேயோ
சேட்டிரும் பழன வேலித்
திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.4
|
653 | பொக்கமாய் நின்ற பொல்லாப்
புழுமிடை முடைகொள் ஆக்கை
தொக்குநின் றைவர் தொண்ணூற்
றறுவருந் துயக்க மெய்த
மிக்குநின் றிவர்கள் செய்யும்
வேதனைக் கலந்து போனேன்
செக்கரே திகழும் மேனித்
திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.5
|
654 | ஊனுலா முடைகொள் ஆக்கை
உடைகல மாவ தென்றும்
மானுலா மழைக்க ணார்தம்
வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
நானெலா மினைய கால
நண்ணிலேன் எண்ண மில்லேன்
தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த
திருக்கொண்டீச் சரத்து ளானே. 4.67.6
|
655 | சாணிரு மடங்கு நீண்ட
சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்
றறுவரும் மயக்கஞ் செய்து
பேணிய பதியின் நி | | | | | |