| 239 |
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. | 1.23.1 | 240 |
பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி கொண்டான் கோலக் காவு கோயிலாக் கண்டான் பாதங் கையாற் கூப்பவே உண்டான் நஞ்சை உலக முய்யவே. | 1.23.2 | 241 |
பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக் கோணற் பிறையன் குழகன் கோலக்கா மாணப் பாடி மறைவல் லானையே பேணப் பறையும் பிணிக ளானவே. | 1.23.3 | 242 |
தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர் மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான் குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே. | 1.23.4 | 243 |
மயிலார் சாயல் மாதோர் பாகமா எயிலார் சாய எரித்த எந்தைதன் குயிலார் சோலைக் கோலக் காவையே பயிலா நிற்கப் பறையும் பாவமே. | 1.23.5 | 244 |
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் கடிகொள் கொன்றை கலந்த சென்னியான் கொடிகொள் விழவார் கோலக் காவுளெம் அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே. | 1.23.6 | 245 |
நிழலார் சோலை நீல வண்டினங் குழலார் பண்செய் கோலக் காவுளான் கழலால் மொய்த்த பாதங் கைகளாற் தொழலார் பக்கல் துயர மில்லையே. | 1.23.7 | 246 |
எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன் குறியார் பண்செய் கோலக் காவையே நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே. | 1.23.8 | 247 |
நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில் ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக் கூற்ற முதைத்த குழகன் கோலக்கா ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே. | 1.23.9 | 248 |
பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும் உற்ற துவர்தோ யுருவி லாளருங் குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப் பற்றிப் பரவப் பறையும் பாவமே. | 1.23.10 | 249 |
நலங்கொள் காழி ஞான சம்பந்தன் குலங்கொள் கோலக் காவு ளானையே வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார் உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே. | 1.23.11 |
| 250 |
பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா காவா யெனநின் றேத்துங் காழியார் மேவார் புரம்மூன் றட்டா ரவர்போலாம் பாவா ரின்சொற் பயிலும் பரமரே. | 1.24.1 | 251 |
எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக் கந்த மாலை கொடுசேர் காழியார் வெந்த நீற்றர் விமல ரவர்போலாம் அந்தி நட்டம் ஆடும் அடிகளே. | 1.24.2 | 252 |
தேனை வென்ற மொழியா ளொருபாகங் கான மான்கைக் கொண்ட காழியார் வான மோங்கு கோயி லவர்போலாம் ஆன இன்பம் ஆடும் அடிகளே. | 1.24.3 | 253 |
மாணா வென்றிக் காலன் மடியவே காணா மாணிக் களித்த காழியார் நாணார் வாளி தொட்டா ரவர்போலாம் பேணார் புரங்கள் அட்ட பெருமானே. | 1.24.4 | 254 |
மாடே ஓதம் எறிய வயற்செந்நெல் காடே றிச்சங் கீனுங் காழியார் வாடா மலராள் பங்க ரவர்போலாம் ஏடார் புரமூன் றெரித்த இறைவரே. | 1.24.5 | 255 |
கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக் கங்கை புனைந்த சடையார் காழியார் அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாஞ் செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே. | 1.24.6 | 256 |
கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங் கல்ல வடத்தை யுகப்பார் காழியார் அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம் பல்ல விடத்தும் பயிலும் பரமரே. | 1.24.7 | 257 |
எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக் கடுத்து முரிய அடர்த்தார் காழியார் எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம் பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே. | 1.24.8 | 258 |
ஆற்ற லுடைய அரியும் பிரமனுந் தோற்றங் காணா வென்றிக் காழியார் ஏற்ற மேறங் கேறு மவர்போலாங் கூற்ற மறுகக் குமைத்த குழகரே. | 1.24.9 | 259 |
பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர் கரக்கும் உரையை விட்டார் காழியார் இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம் அருப்பின் முலையாள் பங்கத் தையரே. | 1.24.10 | 260 |
காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச் சீரார் ஞான சம்பந் தன்சொன்ன பாரார் புகழப் பரவ வல்லவர் ஏரார் வானத் தினிதா இருப்பரே. | 1.24.11 |
| 261 |
மருவார் குழலி மாதோர் பாகமாய்த் திருவார் செம்பொன் பள்ளி மேவிய கருவார் கண்டத் தீசன் கழல்களை மருவா தவர்மேல் மன்னும் பாவமே. | 1.25.1 | 262 |
வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச் சீரார் செம்பொன் பள்ளி மேவிய ஏரார் புரிபுன் சடையெம் ஈசனைச் சேரா தவர்மேற் சேரும் வினைகளே. | 1.25.2 | 263 |
வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித் திரையார் செம்பொன் பள்ளி மேவிய நரையார் விடையொன் றூரும் நம்பனை உரையா தவர்மே லொழியா வூனமே. | 1.25.3 | 264 |
மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச் செழுவார் செம்பொன் பள்ளி மேவிய எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனைத் தொழுவார் தம்மேல் துயர மில்லையே. | 1.25.4 | 265 |
மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த சிலையார் செம்பொன் பள்ளி யானையே இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல் நிலையா வணங்க நில்லா வினைகளே. | 1.25.5 | 266 |
அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச் சிறையார் செம்பொன் பள்ளி மேவிய கறையார் கண்டத் தீசன் கழல்களை நிறையால் வணங்க நில்லா வினைகளே. | 1.25.6 | 267 |
பையார் அரவே ரல்கு லாளொடுஞ் செய்யார் செம்பொன் பள்ளி மேவிய கையார் சூல மேந்து கடவுளை மெய்யால் வணங்க மேவா வினைகளே. | 1.25.7 | 268 |
வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத் தேனார் செம்பொன் பள்ளி மேவிய ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை ஆனான் கழலே அடைந்து வாழ்மினே. | 1.25.8 | 269 |
காரார் வண்ணன் கனகம் அனையானுந் தேரார் செம்பொன் பள்ளி மேவிய நீரார் நிமிர்புன் சடையெந் நிமலனை ஓரா தவர்மே லொழியா வூனமே. | 1.25.9 | 270 |
மாசா ருடம்பர் மண்டைத் தேரரும் பேசா வண்ணம் பேசித் திரியவே தேசார் செம்பொன் பள்ளி மேவிய ஈசா என்ன நில்லா இடர்களே. | 1.25.10 | 271 |
நறவார் புகலி ஞான சம்பந்தன் செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப் பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும் உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே. | 1.25.11 |
| 272 |
வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத் திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க் கங்கை தங்கு முடியா ரவர்போலும் எங்கள் உச்சி உறையும் இறையாரே. | 1.26.1 | 273 |
வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத் தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர் ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும் ஏன முள்ளும் எயிறும் புனைவாரே. | 1.26.2 | 274 |
பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத் தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர் ஓங்கு கோயில் உறைவா ரவர்போலுந் தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே. | 1.26.3 | 275 |
நாற விண்ட நறுமா மலர்கவ்வித் தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர் ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும் ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. | 1.26.4 | 276 |
இசை விளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத் திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர் பசை விளங்கப் படித்தா ரவர்போலும் வசை விளங்கும் வடிசேர் நுதலாரே. | 1.26.5 | 277 |
வெண்ணி றத்த விரையோ டலருந்தித் தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர் ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும் வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே. | 1.26.6 | 278 |
நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ் செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த் தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும் மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே. | 1.26.7 | 279 |
கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத் திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர் இருக்க வல்ல இறைவ ரவர்போலும் அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே. | 1.26.8 | 280 |
மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப் பெருகி வாழும் பெருமா னவன்போலும் பிரமன் மாலும் அறியாப் பெரியோனே. | 1.26.9 | 281 |
கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல் தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர் ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும் ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. | 1.26.10 | 282 |
நல்ல கேள்வி ஞான சம்பந்தன் செல்வர் சேடர் உறையுந் திருப்புத்தூர்ச் சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும் அல்லல் தீரும் அவலம் அடையாவே. | 1.26.11 |
| 283 |
முந்தி நின்ற வினைக ளவைபோகச் சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர் அந்தம் இல்லா அடிக ளவர்போலுங் கந்த மல்கு கமழ்புன் சடையாரே. | 1.27.1 | 284 |
மூவ ராய முதல்வர் முறையாலே தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர் ஆவ ரென்னும் அடிக ளவர்போலும் ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே. | 1.27.2 | 285 |
பங்க யங்கள் மலரும் பழனத்துச் செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க் கங்கை தங்கு சடையா ரவர்போலும் எங்கள் உச்சி உறையும் மிறையாரே. | 1.27.3 | 286 |
கரையு லாவு கதிர்மா மணிமுத்தம் திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர் உரையின் நல்ல பெருமா னவர்போலும் விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே. | 1.27.4 | 287 |
பவழ வண்ணப் பரிசார் திருமேனி திகழும் வண்ணம் உறையுந் திருப்புன்கூர் அழக ரென்னும் அடிக ளவர்போலும் புகழ நின்ற புரிபுன் சடையாரே. | 1.27.5 | 288 |
தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல் திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப் பொருந்தி நின்ற அடிக ளவர்போலும் விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே. | 1.27.6 | 289 |
பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும் தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர் ஆர நின்ற அடிக ளவர்போலுங் கூர நின்ற எயில்மூன் றெரித்தாரே. | 1.27.7 | 290 |
மலையத னாருடை யமதில் மூன்றுஞ் சிலையத னாலெரித் தார்திருப் புன்கூர்த் தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை மலையத னாலடர்த் துமகிழ்ந் தாரே. | 1.27.8 | 291 |
நாட வல்ல மலரான் மாலுமாய்த் தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர் ஆட வல்ல அடிக ளவர்போலும் பாட லாடல் பயிலும் பரமரே. | 1.27.9 | 292 |
குண்டு முற்றிக் கூறை யின்றியே பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல் வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க் கண்டு தொழுமின் கபாலி வேடமே. | 1.27.10 | 293 |
மாட மல்கு மதில்சூழ் காழிமன் சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர் நாட வல்ல ஞான சம்பந்தன் பாடல் பத்தும் பரவி வாழ்மினே. | 1.27.11 |
| 294 |
செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் துப்ப னென்னா தருளே துணையாக ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற் றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.1 | 295 |
பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித் தோலும் நூலுந் துதைந்த வரைமார்பர் மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.2 | 296 |
செய்யர் செய்ய சடையர் விடையூர்வர் கைகொள் வேலர் கழலர் கரிகாடர் தைய லாளொர் பாக மாயஎம் ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.3 | 297 |
பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர் துணிகொள் போரார் துளங்கு மழுவாளர் மணிகொள் கண்டர் மேய வார்பொழில் அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.4 | 298 |
பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து மறையும் ஓதி மயானம் இடமாக உறையுஞ் செல்வம் உடையார் காவிரி அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.5 | 299 |
துடிக ளோடு முழவம் விம்மவே பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப் படிகொள் பாணி பாடல் பயின்றாடும் அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.6 | 300 |
சாடிக் காலன் மாளத் தலைமாலை சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம் பாடி ஆடிப் பரவு வாருள்ளத் தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.7 | 301 |
பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக் கண்ணோர் பாகங் கலந்த நுதலினார் எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.8 | 302 |
தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே அழலா யோங்கி அருள்கள் செய்தவன் விழவார் மறுகில் விதியால் மிக்கஎம் எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே. | 1.28.9 | 303 |
(*)கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர் ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே நீதி நின்று நினைவார் வேடமாம் ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே. (*) போதுசாற்றி என்றும் பாடம். | 1.28.10 | 304 |
அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச் சிந்தை செய்ம்மின் அடியீ ராயினீர் சந்தம் பரவு ஞான சம்பந்தன் வந்த வாறே புனைதல் வழிபாடே. | 1.28.11 |
| 305 |
ஊரு லாவு பலிகொண் டுலகேத்த நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல் சீரு லாவு மறையோர் நறையூரிற் சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. | 1.29.1 | 306 |
காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ வீடு மாக மறையோர் நறையூரில் நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே. | 1.29.2 | 307 |
கல்வி யாளர் கனக மழல்மேனி புல்கு கங்கை புரிபுன் சடையானூர் மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரிற் செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. | 1.29.3 | 308 |
நீட வல்ல நிமிர்புன் சடைதாழ ஆட வல்ல அடிக ளிடமாகும் பாடல் வண்டு பயிலும் நறையூரிற் சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. | 1.29.4 | 309 |
உம்ப ராலும் உலகின் னவராலும் தம்பெ ருமைய ளத்தற் கரியானூர் நண்பு லாவு மறையோர் நறையூரிற் செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. | 1.29.5 | 310 |
கூரு லாவு படையான் விடையேறிப் போரு லாவு மழுவான் அனலாடி பேரு லாவு பெருமான் நறையூரிற் சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே. | 1.29.6 | 311 |
*அன்றி நின்ற அவுணர் புரமெய்த வென்றி வில்லி விமலன் விரும்புமூர் மன்றில் வாச மணமார் நறையூரிற் சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே. (*) அன்றி நின்ற - பகைத்து நின்ற | 1.29.7 | 312 |
அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால் நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர் பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரிற் திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. | 1.29.8 | 313 |
ஆழி யானும் அலரின் உறைவானும் ஊழி நாடி உணரார் திரிந்துமேல் சூழு நேட எரியாம் ஒருவன்சீர் நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே. | 1.29.9 | 314 |
மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார் கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல் உய்ய வேண்டில் இறைவன் நறையூரிற் செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே. | 1.29.10 | 315 |
மெய்த்து லாவு மறையோர் நறையூரிற் சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன் பத்தும் பாடப் பறையும் பாவமே. | 1.29.11 |
| 316 |
விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக் கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும் பதியா வதுபங் கயநின் றலரத்தேன் பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே. | 1.30.1 | 317 |
ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன் மின்னாரிடை யாளொடுங் கூடிய வேடந் தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்த பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே. | 1.30.2 | 318 |
வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன் புலியின்னதள் கொண்டரை யார்த்த புனிதன் மலியும்பதி மாமறை யோர்நிறைந் தீண்டிப் பொலியும்புனற் பூம்புக லிந்நகர் தானே. | 1.30.3 | 319 |
கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி அயலார்கடை யிற்பலி கொண்ட அழகன் இயலாலுறை யும்மிடம் எண்டிசை யோர்க்கும் புயலார்கடற் பூம்புக லிந்நகர் தானே. | 1.30.4 | 320 |
காதார்கன பொற்குழை தோட திலங்கத் தாதார்மலர் தண்சடை யேற முடித்து (*)நாதான்உறை யும்மிட மாவது நாளும் போதார்பொழிற் பூம்புக லிந்நகர் தானே. (*) நாதன் - நாதான் என நீண்டது. | 1.30.5 | 321 |
வலமார்படை மான்மழு ஏந்திய மைந்தன் கலமார்கடல் நஞ்சமு துண்ட கருத்தன் குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன் புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே. | 1.30.6 | 322 |
கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவச் செறுத்தான்திக ழுங்கடல் நஞ்சமு தாக அறுத்தான்அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றைப் பொறுத்தானிடம் பூம்புக லிந்நகர் தானே. | 1.30.7 | 323 |
தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல எழிலார்வரை யாலன் றரக்கனைச் செற்ற கழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டி பொழிலால்மலி பூம்புக லிந்நகர் தானே. | 1.30.8 | 324 |
மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத் தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம் பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே. | 1.30.9 | 325 |
உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர் அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக் கிடையாதவன் றன்னகர் நன்மலி பூகம் புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே. | 1.30.10 | 326 |
இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம் மான்றன் புரைக்கும்பொழில் பூம்புக லிந்நகர் தன்மேல் உரைக்குந்தமிழ் ஞானசம் பந்தனொண் மாலை வரைக்குந்தொழில் வல்லவர் நல்லவர் தாமே. | 1.30.11 |
| 327 |
விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங் கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயுங் கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணின் முட்டந் தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே. | 1.31.1 | 328 |
விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாடக் கடைசேர்கரு மென்குளத் தோங்கிய காட்டில் குடையார்புனல் மல்கு குரங்கணின் முட்டம் உடையானெனை யாளுடை யெந்தை பிரானே. | 1.31.2 | 329 |
சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான் காலன்றனை ஆருயிர் வவ்விய காலன் கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டத் தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே. | 1.31.3 | 330 |
வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில் தோடார்குழை யான்நல பாலன நோக்கிக் கூடாதன செய்த குரங்கணின் முட்டம் ஆடாவரு வாரவ ரன்புடை யாரே. | 1.31.4 | 331 |
இறையார்வளை யாளையொர் பாகத் தடக்கிக் கறையார்மிடற் றான்கரி கீறிய கையான் குறையார்மதி சூடி குரங்கணின் முட்டத் துறைவானெமை யாளுடை யொண்சுட ரானே. | 1.31.5 | 332 |
பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங் கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக் குலவும்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டம் நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே. | 1.31.6 | 333 |
மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத் தோடார்குழை தானொரு காதில் இலங்கக் கூடார்மதி லெய்து குரங்கணின் முட்டத் தாடாரர வம்மரை யார்த்தமர் வானே. | 1.31.7 | 334 |
மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங் கையால்தொழு வார்வினை காண்ட லரிதே. | 1.31.8 | 335 |
வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும் அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங் குறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணின் முட்டம் நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே. | 1.31.9 | 336 |
கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும் வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல் குழுமின்சடை யண்ணல் குரங்கணின் முட்டத் தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே. | 1.31.10 | 337 |
கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன் கொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டஞ் சொல்லார்தமிழ் மாலை செவிக்கினி தாக வல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே. | 1.31.11 |
| 338 |
ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ் வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந் தீடாவுறை கின்ற இடைமரு தீதோ. | 1.32.1 | 339 |
தடம்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல் குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப் படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன் இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ. | 1.32.2 | 340 |
வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து பொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல் எங்கோ னுறைகின்ற இடைமரு தீதோ. | 1.32.3 | 341 |
அந்தம்மறி யாத அருங்கல முந்திக் கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல் வெந்தபொடிப் பூசிய வேத முதல்வன் எந்தையுறை கின்ற இடைமரு தீதோ. | 1.32.4 | 342 |
வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய் பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய ஈசனுறை கின்ற இடைமரு தீதோ. | 1.32.5 | 343 |
வன்புற்றிள நாகம் அசைத் தழகாக என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி அன்பிற்பிரி யாதவ ளோடு முடனாய் இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ. | 1.32.6 | 344 |
தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப் போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால் ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல் ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ. | 1.32.7 | 345 |
பூவார்குழ லாரகில் கொண்டு புகைப்ப ஓவாதடி யாரடி யுள்குளிர்ந் தேத்த ஆவாஅரக் கன்றனை ஆற்ற லழித்த ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ. | 1.32.8 | 346 |
முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன் நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப் பொற்றோளியுந் தானும் பொலிந்தழ காக எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ. | 1.32.9 | 347 |
சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல் எறியார்மழு வாளன் இடைமரு தீதோ. | 1.32.10 | 348 |
கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன் எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல் பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள் விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே. | 1.32.11 |
| 349 |
கணைநீடெரி மாலர வம்வரை வில்லா இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர் பிணைமாமயி லுங்குயில் சேர்மட அன்னம் அணையும்பொழி லன்பி லாலந் துறையாரே. | 1.33.1 | 350 |
சடையார்சது ரன்முதி ராமதி சூடி விடையார்கொடி யொன்றுடை யெந்தை விமலன் கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை அடையார்பொழில் அன்பி லாலந்துறை யாரே. | 1.33.2 | 352 |
ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப் பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர் நீருண்கய லும்வயல் வாளை வராலோ டாரும்புனல் அன்பி லாலந்துறை யாரே. | 1.33.3 | 353 |
பிறையும்மர வும்முற வைத்த முடிமேல் நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார் மறையும்பல வேதிய ரோத ஒலிசென் றறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே. | 1.33.4 | 354 |
நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல் கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார் மாடும்முழ வம்மதி ரம்மட மாதர் ஆடும்பதி அன்பி லாலந்துறை யாரே. | 1.33.5 | 355 |
நீறார்திரு மேனிய ரூனமி லார்பால் ஊறார்சுவை யாகிய உம்பர் பெருமான் வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி ஆறார்வயல் அன்பி லாலந்துறை யாரே. | 1.33.6 | 356 |
செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட படியார்பர மன்பர மேட்டிதன் சீரைக் கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும் அடியார்தொழும் அன்பி லாலந்துறை யாரே. | 1.33.7 | 357 |
விடத்தார் திகழும்மிட றன்நட மாடி படத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி கொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார அடர்த்தாரருள் அன்பி லாலந்துறை யாரே. | 1.33.8 | 358 |
வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும் பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை சுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம் அணங்குந்திக ழன்பி லாலந்துறை யாரே. | 1.33.9 | 359 |
தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர் நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல் வெறியார்மலர் கொண்டடி வீழு மவரை அறிவாரவர் அன்பி லாலந்துறை யாரே. | 1.33.10 | 360 |
அரவார்புனல் அன்பி லாலந்துறை தன்மேல் கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன் பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய் விரவாகுவர் வானிடை வீடெளி தாமே. | 1.33.11 |
| 360 |
அடலே றமருங் கொடியண்ணல் மடலார் குழலா ளொடுமன்னுங் கடலார் புடைசூழ் தருகாழி தொடர்வா ரவர்தூ நெறியாரே. | 1.34.1 | 361 |
திரையார் புனல்சூ டியசெல்வன் வரையார் மகளோ டுமகிழ்ந்தான் கரையார் புனல்சூழ் தருகாழி நிரையார் மலர்தூ வுமினின்றே. | 1.34.2 | 362 |
இடியார் குரலே றுடையெந்தை துடியா ரிடையா ளொடுதுன்னுங் கடியார் பொழில்சூழ் தருகாழி அடியார் அறியார் அவலம்மே. | 1.34.3 | 363 |
ஒளியார் விடமுண் டவொருவன் அளியார் குழல்மங் கையொடன்பாய் களியார் பொழில்சூழ் தருகாழி எளிதாம் அதுகண் டவரின்பே. | 1.34.4 | 364 |
பனியார் மலரார் தருபாதன் முனிதா னுமையோ டுமுயங்கி கனியார் பொழில்சூழ் தருகாழி இனிதாம் அதுகண் டவரீடே. | 1.34.5 | 365 |
கொலையார் தருகூற் றமுதைத்து மலையான் மகளோ டுமகிழ்ந்தான் கலையார் தொழுதேத் தியகாழி தலையால் தொழுவார் தலையாரே. | 1.34.6 | 366 |
திருவார் சிலையால் எயிலெய்து உருவார் உமையோ டுடனானான் கருவார் பொழில்சூழ் தருகாழி மருவா தவர்வான் மருவாரே. | 1.34.7 | 367 |
அரக்கன் வலியொல் கஅடர்த்து வரைக்கு மகளோ டுமகிழ்ந்தான் சுரக்கும் புனல்சூழ் தருகாழி நிரக்கும் மலர்தூ வுநினைந்தே. | 1.34.8 | 368 |
இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான் உருவிற் பெரியா ளொடுசேருங் கருநற் பரவை கமழ்காழி மருவப் பிரியும் வினைமாய்ந்தே. | 1.34.9 | 369 |
சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற அமைந்தான் உமையோ டுடனன்பாய்க் கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே. | 1.34.10 | 370 |
நலமா கியஞான சம்பந்தன் கலமார் கடல்சூழ் தருகாழி நிலையா கநினைந் தவர்பாடல் வலரா னவர்வான் அடைவாரே. | 1.34.11 |
| 371 |
அரையார் விரிகோ வணஆடை நரையார் விடையூர் திநயந்தான் விரையார் பொழில்வீ ழிம்மிழலை உரையால் உணர்வார் உயர்வாரே. | 1.35.1 | 372 |
புனைதல் புரிபுன் சடைதன்மேல் கனைதல் லொருகங் கைகரந்தான் வினையில் லவர்வீ ழிம்மிழலை நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே. | 1.35.2 | 373 |
அழவல் லவரா டியும்பாடி எழவல் லவரெந் தையடிமேல் விழவல் லவர்வீ ழிம்மிழலை தொழவல் லவர்நல் லவர்தொண்டே. | 1.35.3 | 374 |
உரவம் புரிபுன் சடைதன்மேல் அரவம் மரையார்த் தஅழகன் விரவும் பொழில்வீ ழிம்மிழலை பரவும் மடியார் அடியாரே. | 1.35.4 | 375 |
கரிதா கியநஞ் சணிகண்டன் வரிதா கியவண் டறைகொன்றை விரிதார் பொழில்வீ ழிம்மிழலை உரிதா நினைவார் உயர்வாரே. | 1.35.5 | 376 |
சடையார் பிறையான் சரிபூதப் படையான் கொடிமே லதொர்பைங்கண் விடையான் உறைவீ ழிம்மிழலை அடைவார் அடியார் அவர்தாமே. | 1.35.6 | 377 |
செறியார் கழலுஞ் சிலம்பார்க்க நெறியார் குழலா ளொடுநின்றான் வெறியார் பொழில்வீ ழிம்மிழலை அறிவார் அவலம் அறியாரே. | 1.35.7 | 378 |
உளையா வலியொல் கஅரக்கன் வளையா விரலூன் றியமைந்தன் விளையார் வயல்வீ ழிம்மிழலை அளையா வருவா ரடியாரே. | 1.35.8 | 379 |
மருள்செய் திருவர் மயலாக அருள்செய் தவனார் அழலாகி வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை தெருள்செய் தவர்தீ வினைதேய்வே. | 1.35.9 | 380 |
துளங்குந் நெறியா ரவர்தொன்மை வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை உளங்கொள் பவர்தம் வினையோய்வே. | 1.35.10 | 381 |
நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன் குளிரார் சடையான் அடிகூற மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே. | 1.35.11 |
| 382 |
கலையார் மதியோ டுரநீரும் நிலையார் சடையா ரிடமாகும் மலையா ரமுமா மணிசந்தோ டலையார் புனல்சே ருமையாறே. | 1.36.1 | 383 |
மதியொன் றியகொன் றைவடத்தன் மதியொன் றவுதைத் தவர்வாழ்வும் மதியின் னொடுசேர் கொடிமாடம் மதியம் பயில்கின் றவையாறே. | 1.36.2 | 384 |
கொக்கின் னிறகின் னொடுவன்னி புக்க சடையார்க் கிடமாகுந் திக்கின் னிசைதே வர்வணங்கும் அக்கின் னரையா ரதையாறே. | 1.36.3 | 385 |
சிறைகொண் டபுரம் மவைசிந்தக் கறைகொண் டவர்கா தல்செய்கோயில் மறைகொண் டநல்வா னவர்தம்மில் அறையும் மொலிசே ருமையாறே. | 1.36.4 | 386 |
உமையா ளொருபா கமதாகச் சமைவார் அவர்சார் விடமாகும் அமையா ருடல்சோர் தரமுத்தம் அமையா வருமந் தணையாறே. | 1.36.5 | 387 |
தலையின் தொடைமா லையணிந்து கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம் நிலைகொண் டமனத் தவர்நித்தம் மலர்கொண் டுவணங் குமையாறே. | 1.36.6 | 388 |
வரமொன் றியமா மலரோன்றன் சிரமொன் றையறுத் தவர்சேர்வாம் வரைநின் றிழிவார் தருபொன்னி அரவங் கொடுசே ருமையாறே. | 1.36.7 | 389 |
வரையொன் றதெடுத் தஅரக்கன் சிரமங் கநெரித் தவர்சேர்வாம் விரையின் மலர்மே தகுபொன்னித் திரைதன் னொடுசே ருமையாறே. | 1.36.8 | 390 |
(*)சங்கக் கயனும் மறியாமைப் பொங்குஞ் சுடரா னவர்கோயில் கொங்கிற் பொலியும் புனல்கொண்டு அங்கிக் கெதிர்காட் டுமையாறே. (*) சங்கத்தயனும் என்றும் பாடம். | 1.36.9 | 391 |
துவரா டையர்தோ லுடையார்கள் கவர்வாய் மொழிகா தல்செய்யாதே தவரா சர்கள்தா மரையானோ டவர்தா மணையந் தணையாறே. | 1.36.10 | 392 |
கலையார் கலிக்கா ழியர்மன்னன் நலமார் தருஞான சம்பந்தன் அலையார் புனல்சூ ழுமையாற்றைச் சொலுமா லைவல்லார் துயர்வீடே. | 1.36.11 |
| 393 |
அரவச் சடைமேல் மதிமத்தம் விரவிப் பொலிகின் றவனூராம் நிரவிப் பலதொண் டர்கள்நாளும் பரவிப் பொலியும் பனையூரே. | 1.37.1 | 394 |
எண்ணொன் றிநினைந் தவர்தம்பால் உண்ணின் றுமகிழ்ந் தவனூராம் கண்ணின் றெழுசோ லையில்வண்டு பண்ணின் றொலிசெய் பனையூரே. | 1.37.2 | 395 |
அலரும் மெறிசெஞ் சடைதன்மேல் மலரும் பிறையொன் றுடையானூர் சிலரென் றுமிருந் தடிபேணப் பலரும் பரவும் பனையூரே. | 1.37.3 | 396 |
இடியார் கடல்நஞ் சமுதுண்டு பொடியா டியமே னியினானூர் அடியார் தொழமன் னவரேத்தப் படியார் பணியும் பனையூரே. | 1.37.4 | 397 |
அறையார் கழல்மே லரவாட இறையார் பலிதேர்ந் தவனூராம் பொறையார் மிகுசீர் விழமல்கப் பறையா ரொலிசெய் பனையூரே. | 1.37.5 | 398 |
அணியார் தொழவல் லவரேத்த மணியார் மிடறொன் றுடையானூர் தணியார் மலர்கொண் டிருபோதும் பணிவார் பயிலும் பனையூரே. | 1.37.6 | 399 |
அடையா தவர்மூ வெயில்சீறும் விடையான் விறலார் கரியின்தோல் (*)உடையா னவனெண் பலபூதப் படையா னவனூர் பனையூரே. (*) உடையா னவனொண் பலபூத என்றும் பாடம். | 1.37.7 | 400 |
இலகும் முடிபத் துடையானை அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல் உலகில் லுயிர்நீர் நிலமற்றும் பலகண் டவனூர் பனையூரே. | 1.37.8 | 401 |
வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள் சிரமுன் னடிதா ழவணங்கும் பிரமன் னொடுமா லறியாத பரமன் னுறையும் பனையூரே. | 1.37.9 | 402 |
*அழிவல் லமண ரொடுதேரர் மொழிவல் லனசொல் லியபோதும் இழிவில் லதொர்செம் மையினானூர் பழியில் லவர்சேர் பனையூரே. (*) அழிவில் லமணஃ தொடுதேரர் என்றும் பாடம். | 1.37.10 | 403 |
பாரார் *விடையான் பனையூர்மேல் சீரார் தமிழ்ஞா னசம்பந்தன் ஆரா தசொன்மா லைகள்பத்தும் ஊரூர் நினைவா ருயர்வாரே. (*) விடையார் என்றும் பாடம். | 1.37.11 |
| 404 |
கரவின் றிநன்மா மலர்கொண்டே இரவும் பகலுந் தொழுவார்கள் சிரமொன் றியசெஞ் சடையான்வாழ் வரமா மயிலா டுதுறையே. | 1.38.1 | 405 |
உரவெங் கரியின் னுரிபோர்த்த பரமன் னுறையும் பதியென்பர் குரவஞ் சுரபுன் னையும்வன்னி மருவும் மயிலா டுதுறையே. | 1.38.2 | 406 |
ஊனத் திருள்நீங் கிடவேண்டில் ஞானப் பொருள்கொண் டடிபேணுந் தேனொத் தினியா னமருஞ்சேர் வானம் மயிலா டுதுறையே. | 1.38.3 | 407 |
அஞ்சொண் புலனும் மவைசெற்ற மஞ்சன் மயிலா டுதுறையை நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல் துஞ்சும் பிணியா யினதானே. | 1.38.4 | 408 |
(*)தணியார் மதிசெஞ் சடையான்றன் அணியார்ந் தவருக் கருளென்றும் பிணியா யினதீர்த் தருள்செய்யும் மணியான் மயிலா டுதுறையே. (*) கணியார் என்றும் பாடம். | 1.38.5 | 409 |
தொண்ட ரிசைபா டியுங்கூடிக் கண்டு துதிசெய் பவனூராம் பண்டும் பலவே தியரோத வண்டார் மயிலா டுதுறையே. | 1.38.6 | 410 |
அணங்கோ டொருபா கமமர்ந்து இணங்கி யருள்செய் தவனூராம் நுணங்கும் புரிநூ லர்கள்கூடி வணங்கும் மயிலா டுதுறையே. | 1.38.7 | 411 |
சிரங்கை யினிலேந் தியிரந்த பரங்கொள் பரமேட் டிவரையால் அரங்கவ் வரக்கன் வலிசெற்ற வரங்கொள் மயிலா டுதுறையே. | 1.38.8 | 412 |
ஞாலத் தைநுகர்ந் தவன்றானுங் கோலத் தயனும் மறியாத சீலத் தவனூர் சிலர்கூடி மாலைத் தீர்மயிலா டுதுறையே. | 1.38.9 | 413 |
நின்றுண் சமணும் நெடுந்தேரர் ஒன்றும் மறியா மையுயர்ந்த வென்றி யருளா னவனூராம் மன்றன் மயிலா டுதுறையே. | 1.38.10 | 414 |
நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன் மயல்தீர் மயிலா டுதுறைமேல் செயலா லுரைசெய் தனபத்தும் உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே. | 1.38.11 |
| 415 |
அந்தமும் ஆதியு மாகிய வண்ணல் மந்த முழவம் இயம்ப சந்த மிலங்கு நகுதலை கங்கை வெந்தவெண் ணீறு மெய்பூசும் 1.39.1 | | 415 |
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச் புடைதனிற் பாரிடஞ் சூழப் உடைதனில் நால்விரற் கோவண ஆடை விடைதனை ஊர்தி நயந்தார் 1.39.2
| 416 |
பூதமும் பல்கண மும்புடை சூழப் | சீதமும் வெம்மையு மாகிச் ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை வேதமும் வேள்வியும் ஓவா 1.39.3
| 418 |
அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம் | வரைபுல்கு மார்பி லோராமை திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந் விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த 1.39.4
| 419 |
பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல் | பெண்ணுறு மார்பினர் பேணார் கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கட் வெண்ணிற மால்விடை அண்ணல் 1.39.5
| 420 |
கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற் | பொறிவளர் ஆரழ லுண்ணப் மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர் வெறிவளர் கொன்றையந் தாரார் 1.39.6
| 421 |
மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை | நுண்பொடிச் சேர நின்றாடி கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக் வெண்பொடிச் சேர்திரு மார்பர் 1.39.7
| 422 |
ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார் | சூழ்தரு பாம்பரை யார்த்துச் தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித் வீழ்தரு கங்கை கரந்தார் 1.39.8
| 423 |
திருவொளி காணிய பேதுறு கின்ற | கருவரை யேந்திய மாலுங் அருவரை யொல்க எடுத்த வரக்கன் வெருவுற வூன்றிய பெம்மான் 1.39.9
| 424 |
அத்தமண் டோ ய்துவ ராரமண் குண்டர் | பொய்த்தவம் பேசுவ தல்லால் முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச வித்தகர் வேத முதல்வர் 1.39.10
| 425 |
விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி | நண்ணிய சீர்வளர் காழி பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து பண்ணியல் பாடல் வல்லார்கள் 1.39.11
| |
(*) திருவாளொளிபுற்றூர் என்றும் பாடம்.
| 426 |
பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப் கொடியுடை யூர்திரிந் தையங் வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம் கடிகமழ் மாமல ரிட்டுக் 1.40.1 | | 427 |
அரைகெழு கோவண ஆடையின் மேலோர் புரைகெழு வெண்டலை யேந்திப் வரைகெழு மங்கைய தாகமொர் பாகம் விரைகெழு மாமலர் தூவி 1.40.2
| 428 |
பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப் | ஊணிடு பிச்சையூ ரையம் வாணெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம் தாணெடு மாமல ரிட்டுத் 1.40.3
| 429 |
தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை | ஊரிடு பிச்சை கொள்செல்வம் வாரிடு மென்முலை மாதொரு பாகம் காரிடு மாமலர் தூவி 1.40.4
| 430 |
கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக் | புனமலர் மாலை புனைந்தூர் வனமுலை மாமலை மங்கையொர் பாகம் இனமல ரேய்ந்தன தூவி 1.40.5
| 431 |
431 | அளைவளர் நாகம் அசைத்தன லாடி களைதலை யிற்பலி கொள்ளுங் (*)வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம் தளையவிழ் மாமலர் தூவித் (*) வளையொலி என்றும் பாடம். 1.40.6
| 432 |
அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து | உடலிடு பிச்சை யோடைய மடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம் தடமல ராயின தூவி 1.40.7
| 433 |
உயர்வரை யொல்க எடுத்த அரக்கன் | அயலிடு பிச்சை யோடையம் வயல்விரி நீல நெடுங்கணி பாகம் சயவிரி மாமலர் தூவி 1.40.8
| 434 |
கரியவன் நான்முகன் கைதொழு தேத்த | எரியுரு வாகி யூரையம் வரியர வல்குல் மடந்தையொர் பாகம் விரிமல ராயின தூவி 1.40.9
| 435 |
குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யில் | வெண்டலை யிற்பலி கொண்டல் வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம் தொண்டர்கள் மாமலர் தூவத் 1.40.10
| 436 |
கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங் | நல்லுயர் நான்மறை நாவின் வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும் சொல்லிய பாடல்கள் வல்லார் 1.40.11
| |
| 437 |
சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர் வாரணி வனமுலை மங்கையோர் பங்கர் காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல் பாரணி திகழ்தரு நான்மறை யாளர் 1.41.1 | | 438 |
கொக்கிற கோடு கூவிள மத்தங் அக்கினொ டாமை பூண்டழ காக மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும் பக்கம்பல் பூதம் பாடிட வருவார் 1.41.2
| 439 |
துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர் | பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப் மன்னுமா மலர்கள் தூவிட நாளும் பன்னுநான் மறைகள் பாடிட வருவார் 1.41.3
| 440 |
துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச் | நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர் மஞ்சுதோய் சோலை மாமயி லாட பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் 1.41.4
| 441 |
நதியத னயலே நகுதலை மாலை | கதியது வாகக் காளிமுன் காணக் விதியது வழுவா வேதியர் வேள்வி பதியது வாகப் பாவையுந் தாமும் 1.41.5
| 442 |
ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர் | மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல் ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர் 1.41.6
| 443 |
மாலினுக் கன்று சக்கர மீந்து | ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி காலனைக் காய்ந்து தங்கழ லடியாற் பாலனுக் கருள்கள் செய்தவெம் மடிகள் 1.41.7
| 444 |
விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க | அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள் மடக்கொடி யவர்கள் வருபுன லாட படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும் 1.41.8
| 445 |
கடிபடு கமலத் தயனொடு மாலுங் | செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந் முடியுடையமரர் முனிகணத் தவர்கள் படியது வாகப் பாவையுந் தாமும் 1.41.9
| 446 |
குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங் | கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங் வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் 1.41.10
| 447 |
பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த | கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக் நார்மலிந் தோங்கும் நால்மறை ஞான சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச் 1.41.11
| |
| 448 |
பைம்மா நாகம் பன்மலர்க் கொன்றை செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச் அம்மா னோக்கிய அந்தளிர் மேனி பெம்மான் நல்கிய தொல்புக ழாளர் 1.42.1 | | 449 |
மூவரு மாகி இருவரு மாகி பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி சாவம தாகிய மால்வரை கொண்டு தேவர்கள் தேவர் எம்பெரு மானார் 1.42.2
| 450 |
செய்பூங் கொன்றை கூவிள மாலை | கொய்பூங் கோதை மாதுமை பாகங் கைபோ னான்ற கனிகுலை வாழை பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல் 1.42.3
| 451 |
நிலனொடு வானும் நீரொடு தீயும் | புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த நலனொடு தீங்குந் தானல தின்றி மலனொடு மாசும் இல்லவர் வாழும் 1.42.4
| 452 |
பணிவா யுள்ள நன்கெழு நாவின் | துணியார் தங்கள் உள்ள மிலாத அணியார் நீல மாகிய கண்டர் மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல் 1.42.5
| 453 |
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ | விண்ணோர் சாரத் தன்னருள் செய்த பண்ணார் பாடல் ஆடல றாத பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல் 1.42.6
| 454 |
விழையா ருள்ளம் நன்கெழு நாவில் | பிழையா வண்ணம் பண்ணிய வாற்றல் தழையார் மாவின் தாழ்கனி யுந்தித் குழையார் சோலை மென்னடை யன்னங் (*) அரிசில் என்பது ஒரு நதி. அது அரிசொல்ல வந்ததினால் அரிசொல் நதியென்று கும்பகோணப் புராணத்திற் சொல்லப்படுகின்றது. 1.42.7
| 455 |
பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த | மன்ன னொல்க மால்வரை யூன்றி முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த அன்னங் கன்னிப் பேடையொ டாடி 1.42.8
| 456 |
புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட | உள்வா யல்லி மேலுறை வானும் முள்வாய் தாளில் தாமரை மொட்டின் கள்வாய் நீலம் கண்மல ரேய்க்குங் 1.42.9
| 457 |
குண்டுந் தேருங் கூறை களைந்துங் | மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு தண்டும் பாம்பும் வெண்டலை சூலந் வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை 1.42.10
| 458 |
கடையார் மாடம் நன்கெழு வீதிக் | நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் படையார் சூலம் வல்லவன் பாதம் உடையா ராகி உள்ளமு மொன்றி 1.42.11
| |
| 459 |
வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத் தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர் இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாங் கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே. | 1.43.1 | 460 |
அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும் பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர் சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவிக் கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே. | 1.43.2 | 461 |
நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத் தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர் போரக லந்தரு வேடர் புனத்திடை யிட்ட விறகில் காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே. | 1.43.3 | 462 |
ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்கள் ஓல மிடக்கண் டிருங்கள மார விடத்தை இன்னமு துன்னிய ஈசர் மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரிக் கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே. | 1.43.4 | 463 |
போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழப் பார்மலி வேடுரு வாகிப் பண்டொரு வர்க்கருள் செய்தார் ஏர்மலி கேழல் கிளைத்த இன்னொளி மாமணி யெங்குங் கார்மலி வேடர் குவிக்குங் கற்குடி மாமலை யாரே. | 1.43.5 | 464 |
உலந்தவ ரென்ப தணிந்தே ஊரிடு பிச்சைய ராகி விலங்கல்வில் வெங்கன லாலே மூவெயில் வேவ முனிந்தார் நலந்தரு சிந்தைய ராகி நாமலி மாலையி னாலே கலந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே. | 1.43.6 | 465 |
மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலத்தார் ஊனிடை யார்தலை யோட்டில் உண்கல னாக வுகந்தார் தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யால்தினை வித்திக் கானிடை வேடர் விளைக்குங் கற்குடி மாமலை யாரே. | 1.43.7 | 466 |
வாளமர் வீரம் நினைந்த இராவணன் மாமலை யின்கீழ்த் தோளமர் வன்றலை குன்றத் தொல்விர லூன்று துணைவர் தாளமர் வேய்தலைப் பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க் காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே. | 1.43.8 | 467 |
தண்டமர் தாமரை யானுந் தாவியிம் மண்ணை அளந்து கொண்டவ னும்மறி வொண்ணாக் கொள்கையர் வெள்விடை யூர்வர் வண்டிசை யாயின பாட நீடிய வார்பொழில் நீழல் கண்டமர் மாமயி லாடுங் கற்குடி மாமலை யாரே. | 1.43.9 | 468 |
மூத்துவ ராடையி னாரும் (*)மூசு கருப்பொடி யாரும் நாத்துவர் பொய்ம்மொழி யார்கள் நயமி லராமதி வைத்தார் ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவரிட ரெல்லாங் காத்தவர் காமரு சோலைக் கற்குடி மாமலை யாரே. (*) மூசு கடுப்பொடி என்றும் பாடம். | 1.43.10 | 469 |
காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை நாமரு வண்புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம் பந்தன் பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள் பூமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே. | 1.43.11 |
| 470 |
துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ அணிவளர் கோல மெலாஞ்செய்து பாச்சி மணிவளர் கண்டரோ மங்கையை வாட 1.44.1 | | 471 |
கலைபுனை மானுரி தோலுடை யாடை தலையணி சென்னியர் தாரணி மார்பர் அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி இலைபுனை வேலரோ ஏழையை வாட 1.44.2
| 472 |
வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை | நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச் 1.44.3
| 473 |
கனமலர்க் கொன்றை யலங்க லிலங்கக் | புனமலர் மாலை யணிந் தழகாய வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி மனமலி மைந்தரோ மங்கையை வாட 1.44.4
| 474 |
மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி | மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி சாந்தணி மார்பரோ தையலை வாடச் 1.44.5
| 475 |
நீறுமெய்பூசி நிறைசடை தாழ | ஆறது சூடி ஆடர வாட்டி பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி ஏறது ஏறியர் ஏழையை வாட 1.44.6
| 476 |
பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ | கொங்கிள மாலை புனைந் தழகாய அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச் 1.44.7
| 477 |
ஏவலத் தால்விச யற்கருள் செய்து | மூவரி லும்முத லாய்நடு வாய யாவர் களும்பர வும்மெழிற் பாச்சி தேவர்கள் தேவரோ சேயிழை வாடச் 1.44.8
| 478 |
மேலது நான்முக னெய்திய தில்லை | நீலது வண்ணனு மெய்திய தில்லை ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி பாலது வண்ணரோ பைந்தொடி வாடப் 1.44.9
| 479 |
நாணொடு கூடிய சாயின ரேனும் | ஊணொடு கூடிய உட்குந் தகையார் ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி பூணெடு மார்பரோ பூங்கொடி வாடப் 1.44.10
| 480 |
அகமலி அன்பொடு தொண்டர் வணங்க | புகைமலி மாலை புனைந் தழகாய நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச் 1.44.11
| |
| 481 |
துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய் நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய் வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகேட் டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. | 1.45.1 | 482 |
கேடும் பிறவியும் ஆக்கினாருங் கேடிலா வீடு மாநெறி விளம்பினாரெம் விகிர்தனார் காடுஞ் சுடலையும் கைக்கொண்டெல்லிக் கணப்பேயோ டாடும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. | 1.45.2 | 483 |
கந்தங் கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி வெந்த பொடிநீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார் கொந்தண் பொழிற்சோலை யரவின்தோன்றிக் கோடல்பூத் தந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. | 1.45.3 | 484 |
பால மதிசென்னி படரச்சூடி பழியோராக் கால னுயிர்செற்ற காலனாய கருத்தனார் கோலம் பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை ஆலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. | 1.45.4 | 485 |
ஈர்க்கும் புனல்சூடி இளவெண்டிங்கள் முதிரவே பார்க்கு மரவம்பூண் டாடிவேடம் பயின்றாருங் கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த் தார்க்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. | 1.45.5 | 486 |
பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார் பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண் டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. | 1.45.6 | 487 |
நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும் இணங்கு மலைமகளோ டிருகூறொன்றாய் இசைந்தாரும் வணங்குஞ் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கேட் டணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. | 1.45.7 | 488 |
கணையும் வரிசிலையும் எரியுங்கூடிக் கவர்ந்துண்ண இணையில் எயின்மூன்றும் எரித்திட்டாரெம் இறைவனார் பிணையுஞ் சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர்ந் தணையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. | 1.45.8 | 489 |
489 கவிழ மலைதரளக் கடகக்கையால் எடுத்தான்றோள் பவழ நுனைவிரலாற் பையவூன்றிப் பரிந்தாரும் தவழுங் கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூத் தவிழும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. | 1.45.9 | 490 |
பகலும் இரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா திகலும் இருவர்க்கும் எரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும் புகலும் வழிபாடு வல்லார்க்கென்றுந் தீயபோய் அகலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. | 1.45.10 | 491 |
போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும் வேழம் வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும் கேழல் வினைபோகக் கேட்பிப்பாரும் கேடிலா ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. | 1.45.11 | 492 |
சாந்தங் கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன் ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளை வேந்த னருளாலே விரித்தபாடல் இவைவல்லார் சேர்ந்த விடமெல்லாந் தீர்த்தமாகச் சேர்வாரே. | 1.45.12 |
| 493 |
குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக் கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம் வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே. | 1.46.1 | 493 |
அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக் கரும்பின் மொழியாளோ டுடன்கை அனல்வீசிச் சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ விரும்பு மதிகையு ளாடும்வீரட் டானத்தே. | 1.46.2 | 494 |
ஆடல் அழல்நாக மரைக்கிட் டசைத்தாடப் பாடல் மறைவல்லான் படுதம்பலி பெயர்வான் மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள் வேடம் பலவல்லா னாடும்வீரட் டானத்தே. | 1.46.3 | 496 |
எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப் பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள் விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே. | 1.46.4 | 497 |
கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில் திருநின் றொருகையால் திருவாம் அதிகையுள் எரியேந் தியபெருமான் எரிபுன் சடைதாழ விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே. | 1.46.5 | 498 |
துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி இளங்கொம் பனசாயல் உமையோ டிசைபாடி வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள் விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே. | 1.46.6 | 499 |
பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி பூதம் புடைசூழப் புலித்தோ லுடையாகக் கீதம் உமைபாடக் கெடில வடபக்கம் வேத முதல்வன்நின் றாடும்வீரட் டானத்தே. | 1.46.7 | 500 |
கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள் பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி வில்லால் எயிலெய்தான் ஆடும்வீரட் டானத்தே. | 1.46.8 | 501 |
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார் பொடியாடு மார்பானைப் புரிநூ லுடையானைக் கடியார் கழுநீலம் மலரு மதிகையுள் வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே. | 1.46.9 | 511 |
அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை சுரையோ டுடனேந்தி உடைவிட் டுழல்வார்கள் உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி விரைதோ யலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே. | 1.46.10 | 512 |
ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன் வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச் சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை வாழுந் துணையாக நினைவார் வினையிலாரே. | 1.46.11 |
| 504 |
பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய் வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே சொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ் செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே. | 1.47.1 | 505 |
கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய் அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ் சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார் செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே. | 1.47.2 | 506 |
நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய் ஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னே காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச் சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே. | 1.47.3 | 507 |
கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய் மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள் செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே. | 1.47.4 | 508 |
புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை தன்னைக் கரமெடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னே மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ் சிரமெடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே. | 1.47.5 | 509 |
கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும் பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த் திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே. | 1.47.6 | 510 |
குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற் பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து சிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே. | 1.47.7 | 511 |
மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால் நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார் துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ் சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே. | 1.47.8 | 512 |
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச் சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே. | 1.47.9 | 513 |
புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும் பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம் மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுரம் மேயவனே. | 1.47.10 | 514 |
தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை அங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தனுரை பங்கம்நீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற் சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே. | 1.47.11 |
| 515 |
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. | 1.48.1 | 516 |
நீறடைந்த மேனியின்கண் நேரிழையா ளொருபால் கூறடைந்த கொள்கையன்றிக் கோலவளர் சடைமேல் ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. | 1.48.2 | 517 |
ஊனடைந்த வெண்டலையி னோடுபலி திரிந்து கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே. | 1.48.3 | 518 |
வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின் நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார் சேணடைந்த மாடம்மல்கு சேய்ஞலூர் மேயவனே. | 1.48.4 | 519 |
பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய் வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித் தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே. | 1.48.5 | 520 |
காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய் சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே. | 1.48.6 | 521 |
பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத் தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே. | 1.48.7 | 522 |
மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன் நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யுஞ் சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே. | 1.48.8 | 523 |
காரடைந்த வண்ணனோடு கனக மனையானும் பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார் சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே. | 1.48.9 | 524 |
மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி நேசடைந்த ஊணினாரும் நேசமி லாததென்னே வீசடைந்த தோகையாட விரைகமழும் பொழில்வாய்த் தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே. | 1.48.10 | 525 |
சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித் தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன் சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள் வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே. | 1.48.11 |
| 526 |
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல் நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே. | 1.49.1 | 527 |
தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப் பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன் ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே. | 1.49.2 | 528 |
ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர் பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே. | 1.49.3 | 529 |
புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப் பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே. | 1.49.4 | 530 |
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம் ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே. | 1.49.5 | 531 |
திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள் எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத் தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம் நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே. | 1.49.6 | 532 |
வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச் செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. | 1.49.7 | 533 |
சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால் சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப் பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே. | 1.49.8 | 534 |
உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம் எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர் நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே. | 1.49.9 | 535 |
மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள் பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின் மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே. | 1.49.10 | 536 |
தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன் நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார் உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே. | 1.49.11 |
| 537 |
ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே. | 1.50.1 | 538 |
இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற் றேவரெல்லாம் பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர் தயங்குசோதி சாமவேதா காமனைக்காய்ந் தவனே மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவல மேயவனே. | 1.50.2 | 539 |
பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப் பெருங்கடலை விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனை நோய்நலியக் கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலிக் கின்றதுள்ளம் வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவல மேயவனே. | 1.50.3 | 540 |
மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே நைவன்நாயேன் உன்றன்நாமம் நாளும் நவிற்றுகின்றேன் வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே. | 1.50.4 | 541 |
துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன்றிறமே தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக் கீழ்ப்பணிய நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும் நினைந்தடியேன் வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே. | 1.50.5 | 542 |
புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும் எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமை யோர்பரவும் கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று வரியரவா வந்துநல்காய் வலிவல மேயவனே. | 1.50.6 | 543 |
தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன் ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக் கின்றதுள்ளம் ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார் மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே. | 1.50.7 | 544 |
நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனி ராவணனைத் தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிர லால்அடர்த்த வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனே. | 1.50.8 | 545 |
ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய சோதியானே நீதியில்லேன் சொல்லுவன் நின்றிறமே ஓதிநாளும் உன்னையேத்தும் என்னை வினைஅவலம் வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே. | 1.50.9 | 546 |
*பொதியிலானே பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலைப் பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள் மதியிலாதார் என்செய்வாரோ வலிவல மேயவனே. (*)பொதியில் என்பது பொதிகைமலை. அது வைப்புத்தலங்களிலொன்று. | 1.50.10 | 547 |
வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனைப் பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத் தோர்விரும்பும் மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே. | 1.50.11 |
| 548 |
வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி மங்கைபாகம் வைத்துகந்த மாண்பது வென்னைகொலாங் கங்கையோடு திங்கள்சூடிக் கடிகம ழுங்கொன்றைத் தொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே. | 1.51.1 | 549 |
விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி ரிந்திலங்கு சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கிய தென்னைகொலாங் கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந்தத் தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுர மேயவனே. | 1.51.2 | 550 |
தீயராய வல்லரக்கர் செந்தழ லுள்ளழுந்தச் சாயவெய்து வானவரைத் தாங்கிய தென்னைகாலாம் பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித் தோலுடுத்த தூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே. | 1.513 | 551 |
பல்லிலோடு கையிலேந்திப் பல்கடை யும்பலிதேர்ந் தல்லல்வாழ்க்கை மேலதான ஆதர வென்னைகொலாம் வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடுந் தொல்லையூழி யாகிநின்றாய் சோபுர மேயவனே. | 1.51.4 | 552 |
நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம் ஏற்றமாக வைத்துகந்த காரண மென்னைகொலாம் ஊற்றமிக்க காலன்றன்னை ஒல்க வுதைத்தருளித் தோற்றமீறு மாகிநின்றாய் சோபுர மேயவனே. | 1.51.5 | 553 |
கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன் பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற் பென்னைகொலாம் அன்னமன்ன மென்னடையாள் பாக மமர்ந்தரைசேர் துன்னவண்ண ஆடையினாய் சோபுர மேயவனே. | 1.51.6 | 554 |
குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி யார்பணிவார் கற்றல்கேள்வி ஞானமான காரண மென்னைகொலாம் வற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்டலையில் துற்றலான கொள்கையானே சோபுர மேயவனே. | 1.51.7 | 555 |
விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறலரக்கர் குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையி தென்னைகொலாம் இலங்கைமன்னு வாளவுணர் கோனை யெழில்விரலால் துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே. | 1.51.8 | 556 |
விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றி விரிதிரைநீர் கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரண மென்னைகொலாம் இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர் மேலயனுந் தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுர மேயவனே. | 1.51.9 | 557 |
புத்தரோடு புன்சமணர் பொய்யுரை யேரைத்துப் பித்தராகக் கண்டுகந்த பெற்றிமை யென்னைகொலாம் மத்தயானை யீருரிவை போர்த்து வளர்சடைமேல் துத்திநாகஞ் சூடினானே சோபுர மேயவனே. | 1.51.10 | 558 |
சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனைச் சீலமிக்க தொல்புகழார் சிரபுரக் கோன்நலத்தான் ஞாலம்மிக்க தண்டமிழான் ஞானசம் பந்தன்சொன்ன கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர் வானுலகே. | 1.51.11 |
| 559 |
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால் குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. | 1.52.1 | 560 |
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத் தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும் நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. | 1.52.2 | 561 |
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும் நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. | 1.52.3 | 562 |
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய் அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ் நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. | 1.52.4 | 563 |
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர் தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித் தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ் நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. | 1.52.5 | 564 |
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய் அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும் நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. | 1.52.6 | 565 |
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால் மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல் ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. | 1.52.7 | 566 |
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய் என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும் நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே. | 1.52.8 | 567 |
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ் சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய் கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின் நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே. | 1.52.9 | 568 |
வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந் தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார் துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. | 1.52.10 | 569 |
நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச் சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால் நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே. | 1.52.11 |
| 570 |
தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர் நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும் மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும் மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே. | 1.53.1 | 571 |
பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார் எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணிய மானனொடு மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள் முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே. | 1.53.2 | 572 |
வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில் சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர் மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே. | 1.53.3 | 573 |
பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர் நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும் நாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும் ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே. | 1.53.4 | 574 |
வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச் செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத் தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே. | 1.53.5 | 575 |
சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி சழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும் அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே. | 1.53.5 | *இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.53.6 | 576 |
மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும் இயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள் முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே. | 1.53.8 | 577 |
ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக் கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால் ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும் மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே. | 1.53.9 | 578 |
உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின் மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே. | 1.53.10 | 579 |
மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன் .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... | 1.53.11 |
| 580 |
பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால் ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக் கூத்தீ ரும்ம குணங்களே. | 1.54.1 | 581 |
இடையீர் போகா இளமுலை யாளையோர் புடையீ ரேபுள்ளி மானுரி உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச் சடையீ ரேயும தாளே. | 1.54.2 | 582 |
உள்வேர் போல நொடிமையி னார்திறம் கொள்வீ ரல்குலோர் கோவணம் ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க் கள்வீ ரேயும காதலே. | 1.54.3 | 583 |
தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை ஆட்டீ ரேயடி யார்வினை ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர் நாட்டீ ரேயருள் நல்குமே. | 1.54.4 | 584 |
குழையார் காதீர் கொடுமழு வாட்படை உழையாள் வீர்திரு வோத்தூர் பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார் அழையா மேயருள் நல்குமே. | 1.54.5 | 585 |
மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத் தக்கார் தம்மக்க ளீரென் றுட்கா தாருள ரோதிரு வோத்தூர் நக்கீ ரேயருள் நல்குமே. | 1.54.6 | 586 |
தாதார் கொன்றை தயங்கு முடியுடை நாதா என்று நலம்புகழ்ந் தோதா தாருள ரோதிரு வோத்தூர் ஆதீ ரேயருள் நல்குமே. | 1.54.7 | 587 |
என்றா னிம்மலை யென்ற அரக்கனை வென்றார் போலும் விரலினால் ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர் என்றார் மேல்வினை யேகுமே. | 1.54.8 | 588 |
நன்றா நால்மறை யானொடு மாலுமாய்ச் சென்றார் போலுந் திசையெலாம் ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர் நின்றீ ரேயுமை நேடியே. | 1.54.9 | 589 |
கார மண்கலிங் கத்துவ ராடையர் தேரர் சொல்லவை தேறன்மின் ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச் சீர வன்கழல் சேர்மினே. | 1.54.10 | 590 |
குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர் அரும்பு கொன்றை யடிகளைப் பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல் விரும்பு வார்வினை வீடே. | 1.54.11 |
| 591 |
ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை நீறு சேர்திரு மேனியர் சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின் மாறி லாமணி கண்டரே. | 1.55.1 | 592 |
தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை அடைவா ராமடி கள்ளென மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே றுடையீ ரேயுமை யுள்கியே. | 1.55.2 | 593 |
பையா ரும்மர வங்கொடு வாட்டிய கையா னென்று வணங்குவர் மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற ஐயா நின்னடி யார்களே. | 1.55.3 | 594 |
சால மாமலர் கொண்டு சரணென்று மேலை யார்கள் விரும்புவர் மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று நீல மார்கண்ட நின்னையே. | 1.55.4 | 595 |
மாறி லாமணி யேயென்று வானவர் ஏற வேமிக ஏத்துவர் கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின் நீற னேயென்று நின்னையே. | 1.55.5 | 596 |
உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப் பரவா தாரில்லை நாள்களும் திரையார் பாலியின் தென்கரை மாற்பேற் றரையா னேயருள் நல்கிடே. | 1.55.6 | (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. | 1.55.7 | 597 |
அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை உரைகெ டுத்தவன் ஒல்கிட வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப் பரவி டக்கெடும் பாவமே. | 1.55.8 | 598 |
இருவர் தேவருந் தேடித் திரிந்தினி ஒருவ ராலறி வொண்ணிலன் மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப் பரவு வார்வினை பாறுமே. | 1.55.9 | 599 |
தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும் நீசர் தம்முரை கொள்ளெலுந் தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின் ஈச னென்றெடுத் தேத்துமே. | 1.55.10 | 600 |
மன்னி மாலொடு சோமன் பணிசெயும் மன்னும் மாற்பேற் றடிகளை மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல் பன்ன வேவினை பாறுமே. | 1.55.11 |
| 601 |
காரார் கொன்றை கலந்த முடியினர் சீரார் சிந்தை செலச்செய்தார் பாரார் நாளும் பரவிய பாற்றுறை ஆரா ராதி முதல்வரே. | 1.56.1 | 602 |
நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ் சொல்லார் நன்மலர் சூடினார் பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை எல்லா ருந்தொழும் ஈசரே. | 1.56.2 | 603 |
விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர் எண்ணார் வந்தென் எழில் கொண்டார் பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை யுண்ணா ணாளும் உறைவரே. | 1.56.3 | 604 |
பூவுந் திங்கள் புனைந்த முடியினர் ஏவின் அல்லா ரெயிலெய்தார் பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை ஓவென் சிந்தை யொருவரே. | 1.56.4 | 605 |
மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தென தாகம் பொன்னிற மாக்கினார் பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை நாகம் பூண்ட நயவரே. | 1.56.5 | 606 |
போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி நாதர் வந்தென் நலங்கொண்டார் பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை வேத மோதும் விகிர்தரே. | 1.56.6 | 607 |
வாடல் வெண்டலை சூடினர் மால்விடை கோடல் செய்த குறிப்பினார் பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை ஆடல் நாகம் அசைத்தாரே. | 1.56.7 | 608 |
வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர் எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார் பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை மவ்வல் சூடிய மைந்தரே. | 1.56.8 | 608 |
ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி ஆன வண்ணத்தெம் அண்ணலார் பான லம்மலர் விம்மிய பாற்றுறை வான வெண்பிறை மைந்தரே. | 1.56.9 | 610 |
வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் வந்தென் நன்னலம் வௌவினார் பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை மைந்தர் தாமோர் மணாளரே. | 1.56.10 | 611 |
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய பத்து நூறு பெயரானைப் பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ் பத்தும் பாடிப் பரவுமே. | 1.56.11 |
| 612 |
ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி வெள்ளி யானுறை வேற்காடு உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில் தெள்ளி யாரவர் தேவரே. | 1.57.1 | 613 |
ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர் வேடங் கொண்டவன் வேற்காடு பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில் சேட ராகிய செல்வரே. | 1.57.2 | 614 |
பூதம் பாடப் புறங்காட் டிடையாடி வேத வித்தகன் வேற்காடு போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க் கேதம் எய்துத லில்லையே. | 1.57.3 | 615 |
ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன் வீழ்ச டையினன் வேற்காடு தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திட பாழ்ப டும்மவர் பாவமே. | 1.57.4 | 616 |
காட்டி னாலும் அயர்த்திடக் காலனை வீட்டி னானுறை வேற்காடு பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர் ஓட்டி னார்வினை ஒல்லையே. | 1.57.5 | 617 |
தோலி னாலுடை மேவவல் லான்சுடர் வேலி னானுறை வேற்காடு நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர் மாலி னார்வினை மாயுமே. | 1.57.6 | 618 |
மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர் வில்லி னானுறை வேற்காடு சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர் செல்ல வல்லவர் தீர்க்கமே. | 1.57.8 | 619 |
மூரல் வெண்மதி சூடு முடியுடை வீரன் மேவிய வேற்காடு வார மாய்வழி பாடு நினைந்தவர் சேர்வர் செய்கழல் திண்ணமே. | 1.57.8 | 620 |
பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி விரக்கி னானுறை வேற்காட்டூர் அரக்கன் ஆண்மை யடரப் பட்டானிறை நெருக்கி னானை நினைமினே. | 1.57.9 | 621 |
மாறி லாமல ரானொடு மாலவன் வேற லானுறை வேற்காடு ஈறி லாமொழி யேமொழி யாயெழில் கூறி னார்க்கில்லை குற்றமே. | 1.57.10 | 622 |
விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு கண்டு நம்பன் கழல்பேணிச் சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டு பாடக் குணமாமே. | 1.57.11 |
| 623 |
அரியும் நம்வினை யுள்ளன ஆசற வரிகொள் மாமணி போற்கண்டங் கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம் பெரிய வன்கழல் பேணவே. | 1.58.1 | 624 |
தங்கு மோவினை தாழ்சடை மேலவன் திங்க ளோடுடன் சூடிய கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம் சங்க ரன்கழல் சாரவே. | 1.58.2 | 625 |
ஏதம் வந்தடை யாவினி நல்லன பூதம் பல்படை யாக்கிய காத லான்திக ழுங்கர வீரத்தெம் நாதன் பாதம் நணுகவே. | 1.58.3 | 626 |
பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட மறையும் மாமணி போற்கண்டங் கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம் இறைய வன்கழல் ஏத்தவே. | 1.58.4 | 627 |
பண்ணி னார்மறை பாடலன் ஆடலன் விண்ணி னார்மதி லெய்தமுக் கண்ணி னானுறை யுங்கர வீரத்தை நண்ணு வார்வினை நாசமே. | 1.58.5 | 628 |
நிழலி னார்மதி சூடிய நீள்சடை அழலி னாரன லேந்திய கழலி னாருறை யுங்கர வீரத்தைத் தொழவல் லார்க்கில்லை துக்கமே. | 1.58.6 | 629 |
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன் அண்டன் ஆரழல் போலொளிர் கண்ட னாருறை யுங்கர வீரத்துத் தொண்டர் மேற்றுயர் தூரமே. | 1.58.7 | 630 |
புனலி லங்கையர் கோன்முடி பத்திறச் சினவ லாண்மை செகுத்தவன் கனல வனுறை கின்ற கரவீரம் எனவல் லார்க்கிட ரில்லையே. | 1.58.8 | 631 |
வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த் தெள்ளத் தீத்திர ளாகிய கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை உள்ளத் தான்வினை ஓயுமே. | 1.58.9 | 632 |
செடிய மண்ணொடு சீவரத் தாரவர் கொடிய வெவ்வுரை கொள்ளன்மின் கடிய வன்னுறை கின்ற கரவீரத் தடிய வர்க்கில்லை யல்லலே. | 1.58.10 | 633 |
வீடி லான்விளங் குங்கர வீரத்தெம் சேடன் மேற்கசி வாற்றமிழ் நாடு ஞானசம் பந்தன சொல்லிவை பாடு வார்க்கில்லை பாவமே. | 1.58.11 |
| 634 |
ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை அடங்கு மிடங்கருதி நின்றீரெல்லாம் கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங் தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் 1.59.1 | | 635 |
பிணிநீர சாதல் பிறத்தலிவை டணிநீர மேலுலகம் எய்தலுறில் மணிநீல கண்ட முடையபிரான் துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் 1.59.2
| 636 |
சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை | ஆமா றறியா தலமந்துநீர் பூமாண் அலங்கல் இலங்குகொன்றை தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர் 1.59.3
| 637 |
ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை | மான்று மனங்கருதி நின்றீரெல்லாம் மூன்று மதிலெய்த மூவாச்சிலை தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர் 1.59.4
| 638 |
மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை | வியல்தீர மேலுக மெய்தலுறின் உயர்தீர வோங்கிய நாமங்களா துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் 1.59.5
| 639 |
பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா | நன்னீர்மை குன்றித் திரைதோலொடு பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற் தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் 1.59.6
| 640 |
இறையூண் துகளோ டிடுக்கணெய்தி | நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம் பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றைப் துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர் 1.59.7
| 641 |
பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப் | இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம் கல்சூ ழரக்கன் கதறச்செய்தான் தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் 1.59.8
| 642 |
நோயும் பிணியும் அருந்துயரமும் | வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம் தாய அடியளந்தான் காணமாட்டாத் டோ யும் கடந்தைத் தடங்கோயில்சேர் 1.59.9
| 643 |
பகடூர் பசிநலிய நோய்வருதலாற் | முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும் திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா துகள்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் 1.59.10
| 644 |
மண்ணார் முழவதிரும் மாடவீதி | பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர் கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங் விண்ணோ ருலகத்து மேவிவாழும் 1.59.11
| |
| 645 |
வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும் ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத் துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும் பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே. | 1.60.1 | 646 |
எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை அறிவுறா தொழிவதுவும் அருவினையேன் பயனன்றே செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும் வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே. | 1.60.2 | 647 |
பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக் கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும் பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே. | 1.60.3 | 648 |
காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற் பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர் சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும் ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே. | 1.60.4 | 649 |
பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த காராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள் தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும் நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே. | 1.60.5 | 650 |
சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள் தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே. | 1.60.6 | 651 |
முன்றில்வாய் மடல்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை அன்றில்காள் பிரிவுறும்நோய் அறியாதீர் மிகவல்லீர் தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங் கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே. | 1.60.7 | 652 |
பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி ஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர் கோனாரை என்னிடத்தே வரவொருகாற் கூவாயே. | 1.60.8 | 653 |
நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன் பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன் சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும் விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே. | 1.60.9 | 654 |
சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந் துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே. | 1.60.10 | 655 |
போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங் கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத் தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே. | 1.60.11 |
| 656 |
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ றும் முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச் சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள் கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே. | 1.61.1 | 657 |
வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவாச் சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள் காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே. | 1.61.2 | 658 |
வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான் கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர் சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங் கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே. | 1.61.3 | 659 |
தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையுந் தொண்டர்கொண் டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான் செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள் கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே. | 1.61.4 | 660 |
பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச் சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள் காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே. | 1.61.5 | 661 |
நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான் தண்ணியான் வெய்யான்நந் தலைமேலான் மனத்துளான் திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக் கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே. | 1.61.6 | 662 |
மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம் மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழச் செய்யினார் தண்கழனிச் செங்காட்டங் குடியதனுள் கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே. | 1.61.7 | 663 |
தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான் சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடுங் காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே. | 1.61.8 | 664 |
ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான் தேனூரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான் கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே. | 1.61.9 | 665 |
செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும் படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான் பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக் கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே. | 1.61.10 | 666 |
கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின் நறையிலங்கு வயல்காழித் தமிழ்ஞான சம்பந்தன் சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும் மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே. | 1.61.11 |
| 667 |
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமங் கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக் கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே. | 1.62.1 | 668 |
ஆடரவத் தழகாமை அணிகேழற் கொம்பார்த்த தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில் கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே. | 1.62.2 | 669 |
நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண் டொன்றிவழி பாடுசெய லுற்றவன்றன் ஓங்குயிர்மேல் கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான் கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே. | 1.62.3 | 670 |
வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ் சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத் தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக் கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே. | 1.62.4 | 671 |
வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும்நற் பூசனையால் நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும் பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துகந்தான் கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே. | 1.62.5 | 672 |
தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும் நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன் கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே. | 1.62.6 | 673 |
கன்னவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான் சொன்னவிலும் மாமறையான் தோத்திரஞ்செய் வாயினுளான் மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினிற் கொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே. | 1.62.7 | 674 |
அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை அன்றெடுப்பச் சுந்தரத்தன் திருவிரலால் ஊன்றஅவன் உடல்நெரிந்து மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானுங் கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. | 1.62.8 | 675 |
நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத் தாணுவெனை ஆளுடையான் தன்னடியார்க் கன்புடைமை பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. | 1.62.9 | 676 |
தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல் இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே ஏத்துமின்கள் நடுக்கமிலா அமருலகம் நண்ணலுமாம் அண்ணல்கழல் கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே. | 1.62.10 | 677 |
நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்குங் கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண் டின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே. | 1.62.11 |
| 678 |
எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன் பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே. | 1.63.1 | 679 |
பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே இயலால்நடாவி இன்பமெய்தி இந்திரனாள்மண்மேல் வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே. | 1.63.2 | 680 |
நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே அகலாதுறையும் மாநிலத்தில் அயலின்மையாலமரர் புகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே. | 1.63.3 | 681 |
சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலோர்தாழ்குழையன் அங்கோல்வளையார் ஐயம்வவ்வா யால்நலம்வவ்வுதியே செங்கோல்நடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினைமெய்தெரிய வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே. | 1.63.4 | 682 |
தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன் பிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய் பெய்கலைவவ்வுதியே அணிநீருலக மாகியெங்கும் ஆழ்கடலாலழுங்கத் துணிநீர்பணியத் தான்மிதந்த தோணிபுரத்தானே. | 1.63.5 | 683 |
கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே அவர்பூணரையர்க் காதியாயவள்தன் மன்னனாள்மண்மேற் தவர்பூம்பதிகள் எங்குமெங்குந் தங்குதராயவனே. | 1.63.6 | 684 |
முலையாழ்கெழும மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணைநடாய்ச் சிலையால்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே. | 1.63.7 | 685 |
எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனாக் கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே ஒருதேர்கடாவி ஆரமரு ளொருபதுதோள்தொலையப் பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர்புண்ணியனே. | 1.63.8 | 686 |
துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சமணுங் கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகைவார்குழலார் அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பையமர்ந்தவனே. | 1.63.9 | 687 |
நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளைவவ்வுதியே அழலாயுலகங் கவ்வைதீர ஐந்தலைநீண்முடிய கழல்நாகரையன் காவலாகக் காழியமர்ந்தவனே. | 1.63.10 | 688 |
கட்டார்துழாயன் தாமரையான் என்றிவர்காண்பரிய சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே. | 1.63.11 | 689 |
கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க்கவுணி நடையார்பனுவல் மாலையாக ஞானசம்பந்தன்நல்ல படையார்மழுவன் றன்மேல்மொழிந்த பல்பெயர்ப்பத்தும்வல்லார்க் கடையாவினைகள் உலகில்நாளும் அமருலகாள்பவரே. | 1.63.12 |
| 690 |
அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல் குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறுடையானிடமாம் முறையால்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்குந் திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்திருப்பூவணமே. | 1.64.1 | 691 |
மருவார்மதில்மூன் றொன்றவெய்து மாமலையான்மடந்தை ஒருபால்பாக மாகச்செய்த உம்பர்பிரானவனூர் கருவார்சாலி ஆலைமல்கிக் கழல்மன்னர்காத்தளித்த திருவால்மலிந்த சேடர்வாழுந் தென்திருப்பூவணமே. | 1.64.2 | 692 |
போரார்மதமா உரிவைபோர்த்துப் பொடியணிமேனியனாய்க் காரார்கடலில் நஞ்சமுண்ட கண்ணுதல்விண்ணவனூர் பாரார்வைகைப் புனல்வாய்பரப்பிப் பன்மணிபொன்கொழித்துச் சீரார்வாரி சேரநின்ற தென்திருப்பூவணமே. | 1.64.3 | 693 |
கடியாரலங்கல் கொன்றைசூடிக் காதிலோர்வார்குழையன் கொடியார்வெள்ளை ஏறுகந்த கோவணவன்னிடமாம் படியார்கூடி நீடியோங்கும் பல்புகழாற்பரவச் செடியார்வைகை சூழநின்ற தென்திருப்பூவணமே. | 1.64.4 | 694 |
கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதிற்கூட்டழித்த போரார்வில்லி மெல்லியலாளோர் பால்மகிழ்ந்தானிடமாம் ஆராவன்பில் தென்னர்சேரர் சோழர்கள்போற்றிசைப்பத் தேரார்வீதி மாடம்நீடுந் தென்திருப்பூவணமே. | 1.64.5 | 695 |
நன்றுதீதென் றொன்றிலாத நான்மறையோன்கழலே சென்றுபேணி யேத்தநின்ற தேவர்பிரானிடமாங் குன்றிலொன்றி ஓங்கமல்கு குளிர்பொழில்சூழ்மலர்மேல் தென்றலொன்றி முன்றிலாருந் தென்திருப்பூவணமே. | 1.64.6 | 696 |
பைவாயரவம் அரையிற்சாத்திப் பாரிடம்போற்றிசைப்ப மெய்வாய்மேனி நீறுபூசி ஏறுகந்தானிடமாம் கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியினால்நெருங்கிச் செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்திருப்பூவணமே. | 1.64.7 | 697 |
மாடவீதி மன்னிலங்கை மன்னனைமாண்பழித்துக் கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையினார்க்கிடமாம் பாடலோடும் ஆடலோங்கிப் பன்மணிபொன்கொழித்து ஓடநீரால் வைகைசூழும் உயர்திருப்பூவணமே. | 1.64.8 | 698 |
பொய்யாவேத நாவினானும் பூமகள்காதலனுங் கையாற்றொழுது கழல்கள்போற்றக் கனலெரியானவனூர் மையார்பொழிலின் வண்டுபாட வைகைமணிகொழித்துச் செய்யார்கமலந் தேனரும்புந் தென்திருப்பூவணமே. | 1.64.9 | 699 |
அலையார்புனலை நீத்தவருந் தேரருமன்புசெய்யா நிலையாவண்ணம் மாயம்வைத்த நின்மலன்றன்னிடமாம் மலைபோல்துன்னி வென்றியோங்கும் மாளிகைசூழ்ந்தயலே சிலையார்புரிசை பரிசுபண்ணுந் தென்திருப்பூவணமே. | 1.64.10 | 700 |
திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்திருப்பூவணத்துப் பெண்ணார்மேனி எம்மிறையைப் பேரியல்இன்றமிழால் நண்ணார்உட்கக் காழிமல்கும் ஞானசம்பந்தன்சொன்ன பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வதுவானிடையே. | 1.64.11 |
| 701 |
அடையார்தம் புரங்கள்மூன்றும் ஆரழலில்லழுந்த விடையார்மேனிய ராய்ச்சீறும் வித்தகர்மேயவிடம் கடையார்மாடம் நீடியெங்குங் கங்குல்புறந்தடவப் படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சரமே. | 1.65.1 | 702 |
எண்ணாரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரானிமையோர் கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல்நண்ணுமிடம் மண்ணார்சோலைக் கோலவண்டு வைகலுந்தேனருந்திப் பண்ணார்செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே. | 1.65.2 | 703 |
மங்கையங்கோர் பாகமாக வாள்நிலவார்சடைமேல் கங்கையங்கே வாழவைத்த கள்வனிருந்தவிடம் பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர்பொய்கையின்மேற் பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே. | 1.65.3 | 704 |
தாரார்கொன்றை பொன்றயங்கச் சாத்தியமார்பகலம் நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன்மன்னுமிடம் போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசைபாடலினாற் பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே. | 1.65.4 | 705 |
மைசேர்கண்டர் அண்டவாணர் வானவருந்துதிப்ப மெய்சேர்பொடியர் அடியாரேத்த மேவியிருந்தவிடங் கைசேர்வளையார் விழைவினோடு காதன்மையாற்கழலே பைசேரரவார் அல்குலார்சேர் பல்லவனீச்சரமே. | 1.65.5 | 706 |
குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக் கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ் சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப் பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. | 1.65.6 | 707 |
வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடிவிண்ணோர் வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன்மகிழ்ந்தவிடம் மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின் பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே. | 1.65.7 | 708 |
தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்கஅவன் தாரரக்குந் திண்முடிகள் ஊன்றியசங்கரனூர் காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலாமுணரப் பாரரக்கம் பயில்புகாரில் பல்லவனீச்சரமே. | 1.65.8 | 709 |
அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன்நெடுமால் தங்கணாலும் நேடநின்ற சங்கரன்தங்குமிடம் வங்கமாரும் முத்தம்இப்பி வார்கடலூடலைப்பப் பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. | 1.65.9 | 710 |
உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார் கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந் தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார் பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே. | 1.65.10 | 711 |
பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம் அத்தன்தன்னை அணிகொள்காழி ஞானசம்பந்தன்சொல் சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினைநோயிலராய் ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடோ ங்குவரே. | 1.65.11 |
| 712 |
பங்மேறு மதிசேர்சடையார் விடையார்பலவேதம் அங்கமாறும் மறைநான்கவையு மானார்மீனாரும் வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கேநுனைமூக்கின் சங்கமேறி முத்தமீனுஞ் சண்பைநகராரே. | 1.66.1 | 713 |
சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர்சுடர்க்கமலப் போதகஞ்சேர் புண்ணியனார் பூதகணநாதர் மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில்விண்ணார்ந்த சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பைநகராரே. | 1.66.2 | 714 |
மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய்தவனுடைய நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார் பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம்பணிந்தேத்தத் தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே. | 1.66.3 | 715 |
மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ்சதுவுண்ட தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக் கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர்காதலாற் சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பைநகராரே. | 1.66.4 | 716 |
கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம்அருள்செய்த குலமார்கயிலைக் குன்றதுடைய கொல்லையெருதேறி நலமார்வெள்ளை நாளிகேரம் விரியார்நறும்பாளை சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பைநகராரே. | 1.66.5 | 717 |
மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்துமெய்ம்மாலான் சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன்மேதக்க ஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண்வயலுக்கே சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பைநகராரே. | 1.66.6 | (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.66.7 | 718 |
இருளைப்புரையும் நிறத்திலரக்கன்ன்றனையீடழிவித்து அருளைச்செய்யும் அம்மானேரா ரந்தண்கந்தத்தின் மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார்திரைக்கையால் தரளத்தோடு பவளமீனுஞ் சண்பைநகராரே. | 1.66.8 | 719 |
மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசைமேலயனும் எண்டானறியா வண்ணம்நின்ற இறைவன்மறையோதி தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத்தாதின்மேற் பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பைநகராரே. | 1.66.9 | 720 |
போதியாரும் பிண்டியாரும் புகழலசொன்னாலும் நீதியாகக் கொண்டங்கருளும் நிமலனிருநான்கின் மாதிசித்தர் மாமறையின் மன்னியதொன்னூலர் சாதிகீத வர்த்தமானர் சண்பைநகராரே. | 1.66.10 | 721 |
வந்தியோடு பூசையல்லாப் போழ்தில்மறைபேசிச் சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பைநகர்மேய அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம்பந்தன்சொல் சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதிசேர்வாரே. | 1.66.11 |
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page