|
Home > Renovation and Services
உ
சிவமயம்
ஸ்ரீ மருதீஸ்வரர் துணை
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூர் வட்டம்
திருஇடையாறு, ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ மருதீஸ்வர சுவாமி ஆலய
ஜீரணோத்தாரண அஷ்டபந்தன
மகா கும்பாபிஷேகம்
திருச்சிற்றம்பலம்
பாலாமிருத விநாயகர் துதி
கரும்பொடு சூலம் அமிர்தம் அபயம் கரம் மருவி
பெரும்பெயர்க் கூர்மம் பிறந்துபா லாமிரு தப்பெயர்கொள்
இரும்பொழில் ஆழிடை யாற்றில் இனிதே அமர்ந் தருளும்
பெருங்களி யானை முகத்தண்ணல் சேவடி பேண நன்றே.
சுப்பிரமணியர் துதி
மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணைபோற்றி
யேவருந் துதிக்க நின்றவீராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் சேவ்வேண் மலரடி போற்றி யன்னான்
சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.
சுந்தரர் தேவாரம் பண் : கொல்லி
முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம்
சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர்
பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி
எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே
ஊறிவா யினநாடிய வென்றொன் டன்ஊரன்
தேறுவார் சிந்தை தேறுமடஞ் சிந்தைவெள்ளே
றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக்
கூறுவார் வினைஎவ் விடமெய் குளிர்வாரே.
ஸ்ரீ ஞானாம்பிகை துதி
ஆன நற்கலை ஆய்ந்து அறியினும்
ஞான மெய்ந்நிலை நண்ணிட வேண்டினோர்
ஞானநாயகி நல்லடி போற்றிடின்
ஊன மில்புகம் எய்துவர் உண்மையே.
திரு அருட்பா
தாவாக் - கடையாற்றினன் பரதமைக் கல்லாற்றி னீக்கும்
இடையாற்றின் வாழ்நல் இயல்பே. - இராமலிங்க அடிகள்.
|