கோபாலகிருஷ்ணபாரதியார் பாடல்கள்
gOpAlakrishNa bhArathiyAr compositions

In Unicode Tamil font

You could also read the transliterated version in English (Roman) alphabets PDF Format

This page needs to be proof read as well as completed for the whole compositions of gOpAlakrishNa bharathi. Please send additions, corrections to scripture@shaivam.org

வ.எண் பாடல் தலைப்பு இராகம் தாளம்
01 உத்தாரந் தாரும் தோடி ஆதி
02 எல்லோரும் வாருங்கள் கேதாரம் ரூபகம்
03 ஐயே மெத்தகடினம் புன்னாகவராளி ஆதி
04 கண்டாமணியாடுது கரகரப்ரியா ரூபகம்
05 காணாத கண்ணென்ன நாதநாமக்ரியை சாபு
06 கோபுர தரிசனமே தன்யாசி ஆதி
07 சற்றே விலகியிரும் பூரிகல்யாணி ரூபகம்
08 தில்லை வெளியிலே யமுனா கல்யாணி ஆதி
09 தில்லையம்பலத் தல உசேனி ரூபகம்
10 நந்தா நீசிவ நாதநாமக்ரியை சாபு
11 பித்தந்தெளிய மருந் செஞ்சுருட்டி ரூபகம்
12 மார்கழிமாதத் திருவாதிரை நவரோசு ஆதி
13 அரகர சங்கர தண்டகம் *
14 ஆடிய பாதத்தைத் அசாவேரி திச்ரம்
15 ஆடுஞ்சி தம்பரமோ பேஹாக் ரூபகம்
16 ஆடியபாதா இருவர் சங்கராபரணம் ரூபகம்
17 ஆனந்தக் கூத்தாடினார் கல்யாணி ரூபகம்
18 இன்னமும் சந்தேகப் கீரவாணி மிச்ர ஏலம்
19 உனது திருவடி சரசாங்கி / வதாங்கி ஆதி
20 எந்நேரமும் உந்தன் தேவகாந்தாரி ஆதி
21 எப்போ வருவாரோ செஞ்சுருட்டி ஆதி
22 கனகசபாபதி தரிசனம் தன்யாசி ஆதி
23 சங்கரனைத் துதித்தாடு தோடி ஆதி
24 தரிசிக்கவேணும் சிதம்பரத்தைத் நாதநாமக்ரியை ஆதி
25 தாண்டவ தரிசனந்தாரும் ரீதிகௌன சம்பை
26 திருவாதிரை தரிசனதிற்கு தன்யாசி திரிபுட
27 தில்லையைக் கண்டபோதே விருத்தம் *
28 பக்தி பண்ணிக் தண்டகம் *
29 பாடுவாய் மனமே செஞ்சுருட்டி ஆதி
30 பார்க்கப் பார்க்கத் அபிகாம்போதி ரூபகம்
31 பிறவாத வரந்தாரு ஆரபி ஆதி
32 வேதம் படித்ததும் தண்டகம் *
33 தில்லையக்கண்ட போதே விருத்தங்கள் *
34 ஆடிய பாத தரிசனம் யதுகுல காம்போஜி ஆதி - 2 களை
35 ஆடிய பாதமே அசாவேரி மிச்ர சாபு
36 கண்டேன் கலி கல்யாணி ரூபகம்
37 கண நாதா சரணம் மோகனம் ஆதி
38 கைவிட லாகாது மலஹரி ரூபகம்
39 குஞ்சித பாதத்தை பந்துவராளி ரூபகம்
40 தில்லை தில்லை காபி ஆதி
41 தேவா ஜெகன் கல்யாணவசந்தம் ஆதி
42 நடனம் ஆடினார் மாயமாளவ கௌளை மிச்ர சாபு
43 நந்தா உனக்கிந்த மோகனம் ஆதி
44 பாதமே துணை பூர்ணசந்த்ரிக ஆதி
45 மாதவமே ஓ சாமா ரூபகம்
46 இந்தப் பிரதாபமும் சுத்தசாவேரி ஆதி
47 இது நல்ல தன்யாசி ஆதி
48 சிதம்பரம் போகாமல் செஞ்சுருட்டி ஆதி
59 தொண்டரைக் காண்கிலமே சஹானா ஆதி
50 பேயாண்டி தனைக் சாரங்கா கண்டசாபு
51 போதும் போது கமலாமனோஹரி ஆதி
52 மனது அடங்குவதால் கௌளி பந்து ஆதி
53 மோசம் வந்ததே ஆபோகி ஆதி
54 திருநாளைப் போவான் கமாசு ஆதி
55 பழனம ருங்கணையும் செஞ்சுருட்டி ஆதி
56 சிவனே தெய்வம் சுத்தசாவேரி *
57 செந்தாமரை மலர் யதுகுல காம்போதி திச்ரலகு
58 சிங்கார மான பூரிகல்யாணி திச்ரலகு
59 தலம்வந்து கேதாரம் கண்டலகு
60 சிவலோக நாதன் கேதாரம் கண்டலகு
61 ஒரு நாளும் சங்கராபரணம் கண்டலகு
62 குதித்தார் எக்கலித்தார் மாயமாளவகௌளை ஆதி
63 தடாகம் ஒன்று மோகனம் ஆதி
64 நாளைப் போகாமல் * *
65 காணாமல் இருக்க சக்ரவாகம் மிச்ரம்
66 தில்லையம்பல சங்கராபரணம் மிச்ரம்
67 வாருங்கள் வாருங்கள் நீலாம்பரி ஜம்பை
68 சிதம்பர தரிசனம் யமுனாகல்யாணி ஆதி
69 மீசை நரைத்துப் நாதநாமகிரியை ஏகம்
70 எல்லைப் பிடாரியே நீலாம்பரி *
71 திருநாளைப் போவாரிந்த நாதநாமக்ரியை ஆதி
72 தத்திப் புலிபோலே மோகனம் திச்ரலகு
73 அரகர சிவசிவ நாதநாமக்ரியை / மோகனம் ஏகம் / திச்ரலகு
74 சேதிசொல்ல வந்தோம் சங்கராபரணம் ஏகம்
75 நந்த னாரும் வந்தார் சங்கராபரணம் ஆதி
76 ஆடிய பாதத்தைக் சுருட்டி ஆதி
77 தில்லைச் சிதம்பரத்தை ஆரபி ஆதி
78 ஆசை நேசராகும் மாஞ்சி சாபு
79 மாங்குயில் கூவிய சங்கராபரணம் ஏகம்
80 நந்தனாரே உன்றன் பேகடா சாபு
81 ஏழைப் பார்ப்பான் யதுகுலகாம்போதி ஆதி
82 சிதம்பரம் போய்நீ சாமா ஆதி
83 சிதம்பர தரிசனம் மோகனம் *
84 முக்தி அளிக்கும் நவரோசு சாபு
85 கனக சபேசன் கமாசு ரூபகம்
86 வாராமல் இருப்பாரோ சுருட்டி ஆதி
87 இன்னும் வரக்காணேனே பரசு ஆதி
88 விருதா சன்மமாச்சே தர்பார் ஆதி
89 சந்நிதி வரலாமோ சங்கராபரணம் ஏகம்
90 கனவோ நினைவோ கமாசு சாபு
91 அம்பல வாணனை ஆகிரி மிச்ரசாபு
92 களை யெடாமல் நடபைரவி ரூபகம்
93 திருநாளைப் போவாருக்கு அசாவேரி ஆதி
94 அறிவுடையோர் பணிந்தேத்தும் சக்ரவாகம் ஜம்பை
95 ஆண்டிக் கடிமைகாரன் செஞ்ருட்டி ரூபகம்
96 ஆருக்குப் பொன்னம்பலவன் பைரவி ஆதி
97 இரக்கம் வராமல்போனதென்ன பெஹாக் ரூபகம்
98 எப்போ தொலையுமிந்தத் கௌரிமனோகரி சாபு
99 எந்நேரமும் உந்தன் தேவகாந்தாரி ஆதி
100 ஏதோ தெரியாமல் அமீர்கல்யாணி ரூபகம்
101 கட்டை கடைத்தேற கரகரப்ரியா சாபு
102 கனகசபாபதிக்கு நமஸ்காரம் அடாணா ஆதி
103 காரணம் கேட்டுவாடி பூர்விகல்யாணி *
104 சபாபதிக்கு வேறு தெய்வம் ஆபோகி ஆதி
105 சம்போ கங்காதரா அபுரூபம் ஆதி
106 சிதம்பரம் அரஹரா பியாகடை ஆதி
107 சிதம்பரம் போவேன் நாளை பெஹாக் ஆதி
108 சிந்தனை செய்து செஞ்சுருட்டி ஆதி
109 சிவலோகநாதனைக் கண்டு செஞ்சுருட்டி / மாயமாளவகௌளை ரூபகம்
110 தரிசனம் செய்தாரே கல்யாணி அட
111 திருவடி சரணம் காம்போஜி ஆதி
112 தில்லை சிதம்பரம் யமுனாகல்யாணி ஓர் சாரங்கா சாபு
113 தில்லைத் தலமென்று பூரிகல்யாணி / சாமா ஆதி
114 நடனம் ஆடினார் வசந்தா அட
115 நந்தன் சரித்திரம் சங்கராபரணம் ஆதி
116 நமக்கினி பயமேது கௌளிபந்து ஆதி
117 நீசனாய் பிறந்தாலும் யதுகுலகாம்போதி சாபு
118 பத்தி செய்குவீரே தோடி ஆதி
119 பத்திகள் செய்தாரே யதுகுலகாம்போதி ஆதி
120 பார்த்துப் பிழையுங்கள் யதுகுலகாம்போதி ரூபகம்
121 பெரிய கிழவன் வருகிறான் சங்கராபரணம் ரூபகம்
122 மற்றதெல்லம் பொறுப்பேன் சாவேரி ரூபகம்
123 வருகலாமோவையா உந்தன் மாஞ்சி ரூபகம் / சாபு
124 வருவாரோ வரம் தருவாரோ ஷ்யாமா ஆதி


  1. உத்தாரந்தாரும்...

    ராகம் : தோடி தாளம் : ஆதி
    பல்லவி
    உத்தாரந்தாரும் ஐயே எனக்கு ஒருவருமில்லை நான் பரகதியடையா [உத்தார]
    சரணம்
    வித்தைகள் கற்றதுமில்லை யானொரு பத்தியிற் சென்று பரகதியடைய [உத்தார] குற்றங்க ளெத்தனை கொடியே செய்தேன் அத்தனை யும்பொறுத் தாதரவாக [உத்தார] பெண்டு பிள்ளையென்று பேயனைப் போலவே கண்டு களித்துக் காலங்கழித்தாவனுக்கு [உத்தார] தில்லைச்சி தம்பரத்தைத் தரிசித்துவந் துங்கள் எல்லையைக் காத்துக் கொண்டிருக்கிறேனையே [உத்தார] பாடல் தலைப்பு
  2. எல்லோரும் வாருங்கள்...

    ராகம் : கேதாரம் தாளம் : ரூபகம்
    பல்லவி
    எல்லோரும் வாருங்கள் சுகமிருக்குது பாருங்கள் நீங்கள் [எல்லோரும்]
    சரணம்
    நல்லோர்பணிந்திடும் தில்லையம்பல நாதன்பாதம் பணிந்துகொள்வோம் [எல்லோரும்] பாடல் தலைப்பு
  3. ஐயே மெத்தகடினம்...

    ராகம் : புன்னாகவராளி தாளம் : ஆதி
    பல்லவி
    ஐயே மெத்தகடினம் உமக்கடிமை ஐயே மெத்தகடினம்
    அநுபல்லவி
    பொய்யாத பொண்ணம்பலத் தையாஇருக்குமிடம் நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் [ஐயே] வாசியாலே மூலக்கனல் வீசியே கழன்றுவர்ப் பூசைபண்ணிப் பணிந்திடு மாசறக் குண்டலியைவிட்(டு) ஆட்டுமே மனமூட்டுமே மேலோட்டுமே வழிகாட்டுமே இந்த மானாபி மானம்விட்டுத்தானாகி நின்றவர்க்குச் சேனாதி பதிபோலேஞானாதி பதியுண்டு பாருமே கட்டிக்காருமே உள்ளேசேருமே அதுபோருமேஅங்கே
    சரணம்
    பாலகிருஷ்ணன் பணிந்திடும் சீலகுரு சிதம்பரம் மேலேவைத்த வாசையாலே காலனற்றுப் போவதென்று சாத்திரம் நல்ல க்ஷேத்திரம் சற்பாத்திரம் ஞானநேத்திரங்கொண்டு சங்கையறவே நின்று பொங்கிவரும் பாலுண்டு அங்கமிளைப் பாறிக்கொண்டு தங்கப்பொம்மைப் போலவே நில்லுமேஏதுஞ்செல்லுமே ஞானஞ்சொல்லுமே யாதும்வெல்லுமே இந்த அட்டாங்கம் பண்ணினாலும் நெட்டாங்கு பண்ணியது கிட்டாது கிட்டிவர வொட்டாது முட்டியது பாயுமேமுனைதேயுமே அதுவோயுமே உள்ளே தோயுமேவேத மந்திரத்தி லேபோட்டு யெந்திரத்திலே பார்க்குநீ தந்திரத்தி லேயுமில்லை அந்தரத்திலே அவ தானமேஅது தானமே பலவீனமே பேசாமோனமே அந்த முப்பாழுந் தாண்டிவந்து அப்பாலே நின்றவர்க்கு இப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம் ஆடுவார் தாளம்போடுவார் அன்பர்கூடுவார் இசைபாடுவார் இதைக் கண்டாருத கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை அண்டாண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்கும் அல்லவோபறையன் சொல்லவோ அங்கேசெல்லவோ நேரமாகுதல்லவோ [ஐயே] பாடல் தலைப்பு
  4. கண்டாமணியாடுது...

    ராகம் : கரகரப்ரியா தாளம் : ரூபகம்
    பல்லவி
    கண்டாமணியாடுது கண்டு பிணிவாடுது
    சரணம்
    முத்தி மணிதேடுது நாடுது கூடுது [கண்டா] பரவச மாகுது பாவங்கள் போகுது [கண்டா] சனன மரணாதிகள் மோகமுந் தீர்ந்தது [கண்டா] பாடல் தலைப்பு
  5. காணாத கண்ணென்ன...

    ராகம் : நாதநாமக்ரியை தாளம் : சாபு காணாத கண்ணென்ன கண்ணோ வீணானகண்மயில் கண்ணது புண்ணோ [காணாத] சொல்லும் பொருளிறந்த துரியவடிவமாகி அல்லும்பகலுமற்ற ஆனந்தப்பேரொளி [காணாத] பசியாமருந்தளிக்கும் பரமரகசியத்தில் அசையாமலேயாடு மம்பலநாதனைக் [காணாத] ஊராருமறியாம லொளிகண்டு பிசகாமல் ஈராறுகாற்கொண்டு எழும்பிய மண்டபம் [காணாத] அண்டத்துளங்கடாத வாசைவலையைப் பூட்டிப் பிண்டத்துளடங்கிய பேரின்பத்தெப்பத்தைக் [காணாத] நாசிநடுவிருந்து நாதனே தானென்று பேசாமற்பேசிய பெருமையை ஒருநாளும் [காணாத] என்னையானறியேனென் றிகழ்ந்திடும் பேயனைத் தன்னந்தனிய னாக்கித் தகுவனென்றழைத்தாரைக் [காணாத] சோற்றுத் துருத்தியிதைச் சுமந்ததனாலென்ன ஆத்திமதியஞ்சடை யழகனமருங்கோயில் [காணாத] சீலக்கமல முகச்சிவகாமி மனமகிழ் கோலக்கனகன் தில்லைக் குழகனாடியகூத்தைக் [காணாத] பாலகிருஷ்ணன்தொழும் பாதத்தைப் பணிந்தொரு நாளிலும் பிறவாத நவமிக்கவழிதேடி [காணாத] பாடல் தலைப்பு
  6. கோபுர தரிசனமே...

    ராகம் : தன்யாசி தாளம் : ஆதி
    பல்லவி
    கோபுர தரிசனமே எந்தன் பாபவிமோசனமே
    சரணம்
    தாபங்கள் மூன்றுந் தணிந்துவிடும் நல்ல சோபனமுண்டாஞ் சோதிவிளங்கிய [கோபுர] விண்ணணைத்துமே லோங்கியே கண்டுநற் கண்ணுளார்க் கெல்லாங் காட்சியளித்திடும் [கோபுர] அல்லும்பகலும் அமரர் துதித்திடும் தில்லைக்கிறையோன் தினமும் மகிழ்ந்திடும் [கோபுர] பாடல் தலைப்பு
  7. சற்றே விலகியிரும்...

    ராகம் : பூரிகல்யாணி தாளம் : ரூபகம்
    பல்லவி
    சற்றே விலகியிரும் பிள்ளாய் சந்நிதான மறைக்குதாம் நீ
    அநுபல்லவி
    நற்றவம்புரிய நம்மிடம்திரு நாளைப்போவார் வந்திருக்கிறார்
    சரணம்
    சாதி முறைமை பேசுறான் தன்னையிகழ்ந்தும் ஏசுறான் கோதிலா குணமுடையோன் கோபங்கொண்டால் தாளமாட்டோம் [சற்றே] வேதகுலத்தைப் போற்றுறான் விரும்பிவிரும்பி யேற்றுறான் பூதலத்தி லிவனைப் போலே புண்யபுருட னொருவனில்லை [சற்றே] பத்தியில்கரை கண்டவன் பார்த்துப்பாத்து உண்டவன் சித்தங்குறையில் நமது செல்வம் முற்றுங்குறையும் [சற்றே] பாடல் தலைப்பு
  8. தில்லை வெளியிலே...

    ராகம் : யமுனா கல்யாணி தாளம் : ஆதி தில்லைவெளியிலே கலந்து கொண்டாலாவணிவர் திரும்பியும் வருவாரோ எல்லைக்கண்ட பேரினிப்பிறவாரென்று இயம்புவதறியாரோ பெண்டுபிள்ளைகள் வெறுங்கூட்டம் அது பேய்ச்சுரைக்காய்த்தோட்டம் கண்டுகொள்ளுவார் பெரியோரறிவில் கனகசபையினாட்டம் திருவாதிரையில் தரிசனங்காணத் தேடித் திரியாரோ அரிதாகிய இந்த மானிடங்கிடைத்தால் ஆனந்தமடையாரோ குஞ்சிதபாதத்தைக் கண்டாலொழிய குறையது நீங்காதே சஞ்சிதரவினையாதிகளுடாடிய சடமுந் தாங்காதே சேரியிடையிலே குடியிருந்தாலிந்தச் சென்மமுந் தொலையாதே சிதம்பரம்போவேன் பதம்பெறுவேன் தடைசெய்வது மறியாதே இரவும்பகலும் ஒழியாக் கவலை இருப்பது சுகமோடா இன்பம் பெருகும் பரமானந்த வெள்ளம் அமிழ்ந்துநீ போடா பாடல் தலைப்பு
  9. தில்லையம்பலத் தல...

    ராகம் : உசேனி தாளம் : ரூபகம் தில்லையம்பலத் தலமொன்று இருக்குதாம் அதைக்கண்டபேர்க்கு சனனமரணப் பிணியைக் கருக்குதாம் உயர்ந்தசிகரக் கும்பம் தெரியுதாம் அதைப்பார்த்தவர்க்கு உள்ளங்குளிரக் கருணை புரியுதாம் பண்ணவர் அயன்மாலுந் தேடுமாம்அந்தத் தில்லைக்காட்டில் பாம்புபுலிக்கு நிர்த்த மாடுமாம் அரியபிரமனெழுத்தைத் தள்ளுமாம்தனை அடைந்தவர்களை ஆனந்தமுழுக் காட்டிக் கொள்ளுமாம் போய்தரிசித்தோர் புண்ணிய சாலியாம் அதுதருமராஜன் புரம்புகாமல் தடுத்த வேலியாம் உருவில்லாத குருவொன் றிருக்குதாம்அது மூலக்கனலை ஊதியெழுப்பிக் காண உருக்குதாம் உருவமாகியவெளியே வருகுதாம் அதுநான் மறைகட்கும் உணர்வில்லாத காட்சி தருகுதாம் போய்வருக வுத்தாரம் தாருமேதங்கள் பொன்னடித்தூள் போற்றுவேன் திருக்கண்ணால் பாருமே [தில்லை] பாடல் தலைப்பு
  10. நந்தா நீசிவ...

    ராகம் : நாதநாமக்ரியை தாளம் : சாபு நந்தா நீசிவ பக்தன் உன்னை நம்பாமலே மோசமானேன்நான் பித்தன் [நந்தா] பூமிக்குள் நீயொரு சித்தன் இந்தப் பூமிக்குநானொரு சாத்திரப்ர சித்தன் காமிக்குள்ளே வெகு மத்தன் உன்னைக் கண்டு தரிசித்தோ ரனைவரு முத்தன் [நந்தா] படித்துமென்ன வெங்கள் வேதம் அதில் பார்த்ததில்லையிந்த பகவன்நற் கீதம் எடுத்துசொன்னாய் சில போதம் அது ஏற்காமற் போச்சுது என்பிடி வாதம் [நந்தா] தெவிட்டாத சோகமப் பாநீ உந்தன் தேகமுழுதிலுஞ் சிவன்றிரு மேனி பகையாகிய வொரு கூனி போல பழுத்தேனானாலு நீயே ஆத்ம ஞானி [நந்தா] பவசாகரந் தாண்டிச் சென்றாய் உள்ளே பார்த்து ணர்ந்துப்பர மானந்தங் கொண்டாய் தவமாமுனி போலே நின்றாய்தில்லைத் தாண்டவராயனைக் கண்ணால் நீ கண்டாய் [நந்தா] பாடல் தலைப்பு
  11. பித்தந்தெளிய மருந்...

    ராகம் : செஞ்சுருட்டி தாளம் : ரூபகம்
    பல்லவி
    பித்தந்தெளிய மருந்தொன்றி ருக்குது பேரின்பமன் றுள்ளே
    அநுபல்லவி
    மற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு வல்லே வல்லோஐயே அடிமை [பித்தந்]
    சரணம்
    பாம்பும்புலியு மெய்ப்பாடுபட்டுத் தேடிப்பார்த்துப் பயிரிட்டது பாரளந்த திருமாயனும் வேதனும் பார்த்துக் களித்துண்டு பார்வதி யென்றொருசீமாட்டி யதில்பாதியைத் தின்றதுண்டு இன்னும் பாதியிருக்கு பறையாநீயும் போய்ப்பாரென்றுத் தாரந்தாருந்தீரும் [பித்தந்] பத்துத்திசையும் பரவிடப்படர்ந்தாலும் பார்த்துப் பிடியாரே தத்திக்குதிக்குந் தாளங்கள் போடுந்தண்டை சிலம்பு கொஞ்சும் தித்திக்குந் தேனோ செங்கரும்போநல்ல சித்தமுடையார்க்கே என் சித்தத்தைக் கட்டியிழுக்குது அங்கேசென்றால்போதுங் கண்டால் தீரும் [பித்தந்] ஊரைச்சொன்னாலும் இப்பாவந் தொலையும் ஊழ்வினை யூடறுக்கும் பேரைக் கொண்டாடிப் புலம்புகிறார்வெகு பேர்களுக்குப் பிழைப்பு சாருநரை திரைதீர்க்கு மருந்து சாதியைப் பாராதுஇன்னம் தீராதநோய்கள் படைத்த எனக்குத்தீரும் தீருஐயே அடிமை [பித்தந்] பாடல் தலைப்பு
  12. மார்கழிமாதத் திருவாதிரை...

    ராகம் : நவரோசு தாளம் : ஆதி நிஸரிகமபதநி - நிதபமகரிஸநி மார்கழிமாதத் திருவாதிரை நாள்வரப் போகுதையே மனதைப்புண்ணாகப் பண்ணாமலொருதரம் போய்வாவென்று சொல்லையே கட்டையிருக்கையில் சிதம்பரம் போய்நான் காணவேணுமையே கசடனாகிலும் ஆசைவிளையுதுன் காலுக்குக் கும்பிடையே காலில் நகமுளைத்த நாள்முதலாயுமக் கடுமைக்காரனையே கால பாசத்தில் காட்டிக்கொடாமல் காப்பாற்றிடுமையே உள்ளங் காலில் வெள்ளெலும்பாட ஓடியுழைத்தேனையே உண்டது முறங்கினது மன்றிவேறே ஒன்றும் காணிலேனையே எட்டுமிரண்டும் மறியாதபேதைதான் எளியேனா னெனையே இன்னந் தாய்வயிற்றி னுள்ளணுகாமல் இடங்காட்டிடுமையே வெள்ளை வெளுத்திடுந் தண்ணீர்குடித்திடும் வெறியோன்நானையே மேதினியில்நான் நாயினுங் கடையேன் வழிவிடவேணுமையே தானந்தவங்க ளொன்றுங் காணாத அடியேனானையே தளரவிடவும் வேண்டா மொருகோடி தருமமுண்டுஐயே அல்லும் பகலுமுங்களா தரவாலே ஆளாகினேனையே அன்புடனே நல்ல் கதிபெறுவாயென்று அனுப்பவேணும பாடல் தலைப்பு
  13. அரகர சங்கர...

    தண்டகம்

    அரகர சங்கர அண்ணலே அம்பலத்தரனே நானுந்த னடைக்கலமென்று உருகித் துதியாரோ ஆனந்தம் பெருகிப் பதியாரோ முத்தியளிக்குந்திரு மூலத்தானரைக்கண்டு பத்திபண்ணாதவன் பாமரனல்லவோ பாருக்குச் சுமையாச்சு அவனிருந்தும் ஆருக்குச் சுகமாச்சு மங்கையர் மோகமாய் மயங்கித் தினந்தோறும் அங்கம்புளகிதமாய் அவரிடுமேவல்கொண்டு தோளைக்குழைத்தாரே அநியாயமாய் நாளையுங் கழித்தாரே வீசிநடைநடந்த மெய்யும் பொய்யாகவே ஓசையடங்கும்போ தொருவுமங்கில்லை தூசியும் போகாதேகாதறுந்த ஊசியும் வாராதே சிவசிதம்பரமென்று தில்லைவெளியில் நின்று பவசாகரம்வென்று பரமபதமடையுந் தவநெறி பொருந்தாரே பொருந்தின அவரையும் வருந்தாரே சாத்திரங்கற்றாலுஞ் சதுர்மறையு ணர்ந்தாலும் சூத்திரம்பெற்றாலும் சொன்னேனகங்காரம் மாத்திரம் போகாதே கருணைக்குப் பாத்திரம் ஆகாதே சரணாகதமென்று சார்ந்தடி பணியாமல் வரனாச்சிரமவிதி வழிவாதிருக்கினும் சனனாதிகள் விடுமோசிரவண மனனாதிகள் படுமோ அட்டசித்திகள் பெற்ற ஆண்டாயிரங்கால மட்டிருந்தாலுமென் மரணபயமெய்திடும் நட்டசன்மமாச்சே மனித சென்மம் எட்டி வீணாய்ப் போச்சே முப்பாழுந்தாண்டி மூலத்தீமூட்டிக் கொண்டு அப்பாலேநின்றால் ஆனந்தங் காணலாம் ஒப்பா ரில்லையடா ஊடுருவி நிற்பா ரில்லையடா ஆலமிடறடக்கி யம்பலக்கூத்தன்கோ பாலகிருஷ்ணந் தொழும் பரமசிவனேயென்று பாடிப்பாடி யாரோ பருவத்தில் தேடிப் பிடியாரோ. பாடல் தலைப்பு
  14. ஆடிய பாதத்தைத்...

    ராகம் : அசாவேரி தாளம் : திச்ரம்
    பல்லவி
    ஆடியபாதத்தைத் தாரும் உம்மைத் தேடிவந்தேன் இதோபாரும் பாரும் [ஆடிய]
    அநுபல்லவி
    நாடுபுகழ்ந்து தொழும் சிவகாமி மனோகரனே தில்லை நடராசரே உமது கையைவிடமாட்டேன் காணும் பாரும் [ஆடிய]
    சரணம்
    பாத்திரமல்லவோ பாலகிருஷ்ணன் பணிஹரனே சிதம்பர க்ஷேத்திர தரிசனமே வீடுசேர்க்குமென் றறியேனோ மாத்திரைப் பொழுதும்மை மறக்க என் மனது வராது என்றறிவீர், தோத்திரம் பண்ன மாட்டேன் அதிலென்னசுகம் அம்பலந்தனில் காணும். [ஆடிய] பாடல் தலைப்பு
  15. ஆடுஞ்சி தம்பரமோ...

    ராகம் : பேஹாக் தாளம் : ரூபகம்
    பல்லவி
    ஆடுஞ்சி தம்பரமோஐயன் கூத் தாடுஞ்சி தம்பரமோ
    சரணம்
    ஆடுஞ்சிதம்பர மன்பர் களிக்கவே நாடுஞ்சிதம்பரம் நமச்சிவாயப் பொருள் [ஆடுஞ்] ஆருமறியாமல் அம்பலவாணனார் சீரடியார் பார்க்கச் சேவடி தூக்கியே [ஆடுஞ்] பாலகிருஷ்ணன் போற்று பணிமதிச் சடையினார் தாளமத்தளம்போட தத்தித்தத் தெய்யென்று [ஆடுஞ்] பாடல் தலைப்பு
  16. ஆடியபாதா இருவர்...

    ராகம் : சங்கராபரணம் தாளம் : ரூபகம்
    பல்லவி
    ஆடியபாதா இருவர்கள்நாடும் வினோதா [ஆடிய]
    அநுபல்லவி
    ஆடியபாதா அயனுமாலுந் தினம் தேடியுங்காணாமற் றிரைமறைவாகத் தித்தித் தித்தித் தித்தித் தியென்று [ஆடிய]
    சரணம்
    வீரவெண்டை யஞ்சிலம் பசைந்திட மேவுஞ்சடையும் புலியசைந்திடச் சாருந்தொண்டர்கள் மனங்குவிந்திடச் தாலோகாதி பதவியுந் தந்தோந் தந்தோந் தந்தோந் தந்தோமென நடனம் [ஆடிய] வேதமுனிவர்கள் பாடவுஞ் சனகாதியோகிகள் கூடவும்வெகு நாதமெங்கினு மூடவுஞ் திரலு நந்திமத்தளம் போடவுந் தகுந் தகுந் தகுந் தகுமென்று நடனம் [ஆடிய] பாலகிருஷ்ணன் துதிகள்செய்திடப் பண்ணவர் பூமாரிபெய்திடச் சீலமுளசிவகாமி மகிழ்ந்திடந் திருச்சிற்றம்பலத் தரசனுந் தாந் தாந் தாந் தாந் தாந் தாமென்று நடனம் [ஆடிய] பாடல் தலைப்பு
  17. ஆனந்தக் கூத்தாடினார்...

    ராகம் : கல்யாணி தாளம் : ரூபகம்
    பல்லவி
    ஆனந்தக் கூத்தாடினார் அம்பலந்தனிலே பொன்னம் பலந்தனிலே
    அநுபல்வி
    ஆனந்தக் கூத்தாடினார் அயனும் மாலும் பாடினார் அந்தரங்கமாகச் சிந்தித்த பேர்க்கருள் நந்தோந் நந்தோம் என்று தொந்தோம் தொந்தோமென்று [ஆன]
    சரணம்
    பதஞ்சலிமா முனியை நோக்கிப் பார்த்த பேர்கள் குறையைப் போக்கி இதமகித மென்றறிவை நீக்கி ஏகமாகக் காலைத் தூக்கி [ஆன] மத்தளதாள மதிரமுழங்க வளரும்ப்ரமத கணங்க னிலங்கத் தத்திமிதக் கிடதோமன்றி லங்கச் சபையுந் துலங்கச் சதங்கை குலுங்க [ஆன] பாலகிருஷ்ணன் பணியும் பாதன் பார்த்தபேர்கள் வரப்பிர சாதன் ஞாலம்புகழுஞ் சீல போதன் நம்பி தூதன் அம்பிகை நாதன் [ஆன] பாடல் தலைப்பு
  18. இன்னமும் சந்தேகப்....

    ராகம் : கீரவாணி தாளம் : மிச்ர ஏலம்
    பல்லவி
    இன்னமும் சந்தேகப்படலாமோ
    அநுபல்லவி
    பொன்னம்பலந்தனில் தாண்டவமாடிய பொன்கழலை நினைவில் வைக்கத் தெரிந்தநீதான் [இன்னமு]
    சரணம்
    அன்னமயமெனும் கோசம் தானே அந்தணர் முதல் புலையர்வரைக்கும் பின்னமறவேதோணுதே இந்தப் பேதமது காணேன் தன்னையறி கிறதவமே பெரிதென்று தரணியில் கோபாலகிருஷ்ணன் சொன்னதெல்லாம் மறந்துஇந்த மாயச்சுழலில் வீழ்ந்தலைந்தாய் சிவ சிவநீ [இன்னமு] பாடல் தலைப்பு
  19. உனது திருவடி...

    ராகம் : சரசாங்கி / லதாங்கி தாளம் : ஆதி
    பல்லவி
    உனது திருவடி நம்பிவந்தேன் எனக் கொருவருமில்லைநா னேழை [உனது]
    அநுபல்லவி
    அனுதினமும் பொன்னம்பலந்தனிலே ஆடிபாதரே என்சுவாமி [உனது]
    சரணம்
    இரவும்பகலும் விஷயாதிகளென்னை யிழுக்கும் நானதை மரிததுமிபபடிபரி தரித்திடலானேன் பார்க்கலாமோ பாலகிருஷ்ணன்போற்றும் பரனே பரமதயாநிதியே நின்பக்தியைத்தந்து சித்தமகிழ்திடக் கரையேற்றிடுவதுன் பாரஞ் சொன்னேன் கைவிடவேண்டாம் சரணம் சரணம் [உனது] பாடல் தலைப்பு
  20. எந்நேரமும் உந்தன்...

    ராகம் : தேவகாந்தாரி தாளம் : ஆதி
    பல்லவி
    எந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா
    அநுபல்லவி
    தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர் பொன்னம்பலத்தரசே யென்னரசே [எந்நேர]
    சரணம்
    திசையெங்கினும் புக ழஞ்சிவ கங்கையும் தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும் பசியெடா துபார்த்த பேர்க்குக் கலக்கங்கல் பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர] பஞ்சாட்சரப்படி யுங்கொடிக் கம்பமும் கோவிலழகும் அரி தானரகசியமும் அஞ்சல்கூறும் வீர மணிகளோசையும் அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர] சீலமருவுந்தெரு வுந்திருக்கூட்டமும் தேரருலகில்கிடை யாதவசியமும் பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும் பயங்கள் தீர்ந்துமலர்கள் தூவித்தொழுதுகொண்டு [எந்நேர] பாடல் தலைப்பு
  21. எப்போ வருவாரோ...

    ராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி
    பல்லவி
    எப்போவருவாரோ எந்தன் கலிதீர எப்போவருவாரோ
    அநுபல்லவி
    செப்பியதில்லைச் சிதம்பரதேவன் [எப்போ]
    சரணம்
    நற்பவரும்வந்து நாதனைத் தேடும் கற்பனைகள் முற்றக் காட்சிதந்தான் [எப்போ] அற்பசுகவாழ்வி லானந்தம் கொண்டேன் பொற்பதத்தைக் காணேன் பொன்னம்பலவாணன் [எப்போ] பாலகிருஷ்ணன் போற்றிப் பணிந்திடுமீசன் மேலேகாதல் கொண்டேன் வெளிப்படக்காணேன் [எப்போ] பாடல் தலைப்பு
  22. கனகசபாபதி தரிசனம்...

    ராகம் : தன்யாசி தாளம் : ஆதி
    பல்லவி
    கனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலிதீரும்
    அநுபல்லவி
    சனகமகாமுனி கைதொழுதேத்திய தினகரகோடி தேசோமயமாகிய [கனக]
    சரணம்
    மனதிலொடுங் கியகல்மஷம் போக்கும் மாயப்பிணியதனை மறுவடி வாக்கும் சனனமரண சமுசாரத்தை நீக்கும் திருவடி நிழலிலேகூடிய யார்க்கும் [கனக] சுருதிமுடிகளிலுஞ் சொல்லிக் கொண்டாடும் தூயவொளியை யொளியாகவே கூடும் தருமநெறியுந் தவறாதுள நாடும் ததிங்கணதோ மென்றுதாண்டவ மாடும் [கனக] பற்பலயோசனை செய்வதுந் தொல்லை பரகதியடையவு பாயமுமில்லை அற்புதமாகவே தானொரு சொல்லை அணியுங் கோபாலகிருஷ்ணன் பணியுந்தில்லை [கனக] பாடல் தலைப்பு
  23. சங்கரனைத் துதித்தாடு...

    ராகம் : தோடி தாளம் : ஆதி
    பல்லவி
    சங்கரனைத் துதித்தாடு இனி சனனமில்லை என்று
    அநுபல்லவி
    பொங்கர வணிந்திடும் பொன்னம் பலவனை புந்தியில் நினைவாய்ப் போற்றிசிவனை [சங்கர] பாரினிற் பெண்கள்மேற் கருத்து போய் பற்றவொட் டாமலே திருத்து பேரின்ப ஞானத்தை வருத்து சுக பெருவெளி நெஞ்சினி லிருத்து [சங்கர] நீர்மேற் குமிழியிக் காயம் என்றும் நிலையில்லா வாழ்விது மாயம் பெரிய மாலயன் நேயம் பெறப் பேசுவரீதேயு பாயம் சிவ [சங்கர] மனிதச் செனனத்தில் தேடு நல்ல மாதவத் தோர்களைக் கூடு தனிவெளி யாமொரு வீடு தன்னைத் தத்துவத்தால் கண்டு நாடுசிவ [சங்கர] பாடல் தலைப்பு
  24. தரிசிக்கவேணும் சிதம்பரத்தைத்...

    ராகம் : நாதநாமக்ரியை தாளம் : ஆதி
    பல்லவி
    தரிசிக்கவேணும் சிதம்பரத்தைத் தரிசிக்கவேணும்
    அநுபல்லவி
    தரிசித்தவுடனுடல் கரிசைப்பிணிகளறும் பரிசுத்தமாகுமுன் மறுசுத்தமாறவே [தரிசிக்க]
    சரணம்
    பக்தர் பணியுந்திருக் கூத்தன்சந்நிதி தொழு(து) ஏத்திப் பிறவித்துய ராத்தியெப்போதும் [தரிசிக்க] வேதனை யடியவர் போதனை முனிவர்கள் நாதனைக் கரங்குவித் தாதரவாகவே [தரிசிக்க] ஈசனே புலியூரில் வாசனே கனகச பேசனே யென்றுநட ராசனைப்போற்றி [தரிசிக்க] காமத்தை யகல்பவர் வாமத்தி னின்றுசிவ நாமத்தைச் சொல்லியர்த்த சாமத்தில்வந்து [தரிசிக்க] ஞாலம் புகழுமவன் மாலய ணியுங்கோ பாலகிருஷ்ணன் தொழுஞ் சீலபொற்பாதத்தை [தரிசிக்க] பாடல் தலைப்பு
  25. தாண்டவ தரிசனந்தாரும்...

    ராகம் : ரீதிகௌன தாளம் : சம்பை
    பல்லவி
    தாண்டவ தரிசனந்தாரும் தாமதம் பண்ண வேண்டாம் இது சமயம் [தாண்ட]
    அநுபல்லவி
    ஆண்டவனே உன்பெருமையை யாரறிந்துரை செய்வார் நம்பியிருக்கிறேன் பேதை யெந்தனுக்கொருதரம் [தாண்ட]
    சரணம்
    ஆசைவலைக்குள் தங்கிப்பொங்கி மயங்கித் தடுமாறிமும்மதங்கல்மீறி யானெனதென் றுரைக்கும் பாசமகல நெறிநிறுத்திட மாயவன் கோபாலகிருஷ்ணன் பணிந்திடும் உந்திருவடி தாரிதகுகுஜெம்தரிதக ணந்தரிதிரிகுதிரிகுதீம்தீம் தக்கிடத்தகதோ மொன்றாடிய [தாண்ட] பாடல் தலைப்பு
  26. திருவாதிரை தரிசனதிற்கு...

    ராகம் : தன்யாசி தாளம் : திரிபுட
    பல்லவி
    திருவாதிரை தரிசனதிற்கு வந்தேன் உந்தன் திருவாதிரை தரிசனத்திற்கு வந்தேன்
    அநுபல்லவி
    திருவாய்திறந் துறவாயினி பிறவாவரந் தருவாயென்று [திருவா]
    சரணம்
    கங்குகரையேது பவக் கரைதண்டவே யுனதுசிவ கங்கைதனில் மூழ்கி பவக்கடலுங்குளப் படியாகவே [திருவா] அல்லும்பகலுனது சபை அருகில்நின்று கூத்தாடினால் கல்லாம முருகும்பர கதியுங்கை வசமாகுமே [திருவா] ஆலந்தனைக் கண்டோடி யவமரர்துயர் கெடக்காத்தவன் பாலகிருஷ்ணன் பணியுந் திருப்பாதங் கனகசபாபதியே [திருவா] பாடல் தலைப்பு
  27. தில்லையைக் கண்டபோதே...

    விருத்தம்

    தில்லையைக் கண்டபோதே தெளிந்த தென்னுள்ள மெல்லாம் பல்லூழி காலஞ்செய்த பாழ்வினை தொலைந்து போச்சு நல்லருள் நடனங் காட்டும் நாயனார் சிற்சபைக்குள் செல்லுரார் மகிமை செப்பச் சேடனா லாகாதன்றே. பாடல் தலைப்பு
  28. பக்தி பண்ணிக்...

    தண்டகம்

    பக்திபண்ணிக் கொண்டிருந்தால் முக்தி பெறலாமே
    அநுபல்லவி
    எத்திசையு மெவ்வுயிக்கு மவ்வுயிராய் நிறைந்திருக்கும் வத்துமென்று அம்பலவன் மலரடியே தினந்தோறும் [பக்தி]
    சரணம்
    கட்டழகி சாரனிடங் காதலது போலே கடுகி வருங்கன்றருகில் கபிலையது போலே கட்ட அரைத்துணிகிடையா கசடனொரு காலே காவலனார் பதம்வருகில் களிப்பதனைப் போலே கண்டுமுறை கீழகலக் கண்டறியார் மதுமயக்கங் கற்பனையாமிப் பிரபஞ்சஞ் சொற்பணம் போலொப்பிமிகும் [பக்தி] தாயடிக்கில் பால்குடிக்கத் தழுவுதல் திருட்டாந்தம் சடலம் பொறுக்காமல் துயர்தருகிலு மேகாந்தம் ஆயிருந்துவழுத் திலிந்த மாயையுப சாந்தம் ஆகுமென்று சாதனங்கள் வழங்குது வேதாந்தம் காயஞ்சனிக்கா திருக்கக் கண்டுகொள்ள வேணுமென்றால் நேசமுடன் காசுபணம் பாசமது மாசறவே [பக்தி] பச்சைமரத் தாணிபோலே பதிந்து மனம்நாடி பாலகிருஷ்ணன் பணியும் பொன்னம்பலனைக் கொண்டாடி இச்சை யொழிந்தைம் புலன்களையும் பொறிகள்வாடி ஏகானந்த மானபரி பூர்ணத்தைத் தேடி அச்சமறந் திருவிழியி லானந்தநீர்கரை புரள அரனே திரிபுரனே கங்காதரனே பராபரனேயென்று [பக்தி] பாடல் தலைப்பு
  29. பாடுவாய் மனமே...

    ராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி
    பல்லவி
    பாடுவாய் மனமேசிவனைக் கொண்டாடுவாய் தினமே
    சரணம்
    இந்திரன் முதலிய இமையவர்க் கதிகாரி நந்தியின் மீதேறும் நம்பன் பதம்போற்றி [பாடுவா] ஆல முண்டே அமரரைக் காத்ததிரு நீலகண்டன் கழல் நெறியுடன் போற்றி [பாடுவா] சீல மாதவர் சித்தம் நின்றாடுஞ் சூலபாணி யெனுஞ் சுயம்புதாள் போற்றி [பாடுவா] மோகமாம் துன்பம் மூழ்கிக் கெடாமல் ஆக முறையாய் அந்தி வண்ணனைப் [பாடுவா] பஞ்சாட் சரந்தனைப் பக்தியாயுரு வேற்றி மெய்ஞ்ஞானம் பெற்றுய்ய மேலோனைநீ போற்றி [பாடுவா] பாடல் தலைப்பு
  30. பார்க்கப் பார்க்கத்...

    ராகம் : அபிகாம்போதி தாளம் : ரூபகம்
    பல்லவி
    பார்க்கப் பார்க்கத் திகட்டுமோஉன்பாத தரிசனம் பார்க்கப் பார்க்கத் திகட்டுமோ
    அநுபல்லவி
    ஆர்க்குமானந்தம் பொழியுந் தில்லைத் தாண்டவராயா [பார்க்க]
    சரணம்
    தில்லைமூவாயிர முனிவர்கள் தினமும் பூசித்திடும்பாதம் சிற்சபையில் திந்திமிதிமி தோமென்றாடிய பாதம் எல்லையில் லாதவின்பம் எந்தனுக்கருள் செய்திடும்பாதம் இரவும்பகலு மாயன்கோ பாலகிருஷ்ண னேத்தும்பாதம் [பார்க்க] பாடல் தலைப்பு
  31. பிறவாத வரந்தாரு...

    ராகம் : ஆரபி தாளம் : ஆதி
    பல்லவி
    பிறவாத வரந்தாரு என்னையா பிறவாத வரந்தாரும்
    அநுபல்லவி
    அறிவுடையோர் தொழுதேத்திய தில்லைப்பொன் னம்பலவா இன்னம்பல யோனியில் [பிறவா]
    சரணம்
    எண்பத்து நாலு லட்சம் ராசிகளில் எடுத்தெ டுத்துப் பிறந் திறந்ததோ புண்பட்டதுபோதும் போதும்இனிமேல் புத்தி வந்ததையா நண்பற்றிடு மனைவி மக்கள் வாழிவினில் நாள்க டோறும் மனவி லாசங்களில் இன்பத்துடன் கோபால கிருஷ்ணன் தொழு தேத்திய சக தீசனே நடராசனே. [பிறவா] பாடல் தலைப்பு
  32. வேதம் படித்ததும்...

    தண்டகம்

    வேதம்படித்ததும் சாத்திரங்கற்றுதும் மெய்யினில்நீறு பூசுவதும் ஆதிசிதம்பர தேசிகன் திருவடிக் காளானாலன் றானந்தம் உடனே தொலையும் பலபந்தம் ஊணுறக்கமுத லாகியநான்கு முண்டேயுலகில் யாவருக்கும் ஆணவமலத்தை நீத்தார்கள்றிவா ரகத்தைச்சுக்கிக் கொள்ளுவரே சகத்தைப் பொய்யாத் தள்ளுவரே சொன்னேன் சொன்னேன் சொன்னேன் அருந்தவமாமுனி யாகிலும் நல்லா ராசை பொல்லாதார றிவாரோ வருத்தப்படுத்தி மனத்தை மயக்கி வைத்திடு மன்ன மயகோசம உற்றுப் பார்த்தாலது நேசம் சொன்னேன் சொன்னேன் சொன்னேன் அரவணைகோ பாலகிருஷ்ண னல்லும்பகலும் திருவடிசரணா கதமென் றேண்ணித் தெளிந்தார்க் கன்றோ பரபக்தி ஒழிந்தார்க் கன்றோ வரமுக்தி சொன்னேன் சொன்னேன் சொன்னேன் பாடல் தலைப்பு
  33. தில்லையக்கண்ட போதே...

    விருத்தங்கள்

    தில்லையக்கண்ட போதே தெளியததென் உள்ளமெல்லாம் பல்லூழி காலம்செய்த பாழிவினை தெரிந்துபோச்சு நல்லருள் நடனம்காட்டு நாயருள் சற்சபைக்குள் சொல்லுவார் மகிமை செப்பச் சேடகாலாகாதன்றே அன்றுவேளக யங்கியில் வேள்விகள் தொடர்ந்தும் குன்றலாத் தவப்புண்ணிய மாமலை குவித்தும் என்று மேற்பவர்த் தெரியும் வருவர்க்கனஅகி மன்றுளாடியின் பாதத்தில் மனங்கொள வருமோ?! பாடல் தலைப்பு
  34. ஆடிய பாத தரிசனம்...

    இராகம் : யதுகுல காம்போஜி தாளம் : ஆதி - 2களை ஸரிமபதஸ் - ஸ்தபமகஸரீஸ
    பல்லவி
    ஆடிய பாத தரிசனம் கண்டால் - ஆனந்தம் பெண்ணே
    அநுபல்லவி
    தேடிய பொருளும் கூட வராது - தெரிந்து பாரடி பெண்ணே
    சரணம்
    மந்திர தந்திரம் மழலையும் சேரும் - வாரும் சில காலம் தங்கள் அந்தக்கரணத் திருகலடங்கி ஆற்றலொழிந்தால் இந்திரஜாலம் பாடல் தலைப்பு
  35. ஆடிய பாதமே...

    இராகம் : அசாவேரி தாளம் : மிச்ர சாபு ஸரிமபதஸ் - ஸ்நிஸ் பதமப ரிகரிஸ
    பல்லவி
    ஆடிய பாதமே கதியென் றெங்கும் தேடியும் காண்கிலேன் பதி அவன்
    அநுபல்லவி
    நாடு புகழ்ந்திடும் தில்லைச் சிதம்பர நாதன் சபை துலங்க வேதகீதம் முழங்க
    சரணம்
    பக்தியே அருளென்று வரும் தாசன் - கோ பால கிருஷ்ணன் தொழும் நட ராசன் சக்தி சிவகாமி மகிழ்நேசன் - சர்வ சாட்சியாய் நிறைந்திடும் ஜகதீசன் வெற்றி பெருகிய மதனை வென்றவன் வேட னெச்சிலை வாரி யுண்டவன் அத்திமா லையை மார் பிற் கொண்டவன் அஞ்செழுத்துருவாகி நின்றவன். பாடல் தலைப்பு
  36. கண்டேன் கலி...

    இராகம் : கல்யாணி தாளம் : ரூபகம்
    பல்லவி
    கண்டேன் கலி தீர்ந்தேன் கருனைக் கடலை நான் [கண்டேன்]
    அநுபல்லவி
    நின்றேன் சந்நிதியருகில் நிர்மலா மிருதம் கண்டேன் வென்றேன் பொறிபுலன்களை விண்ணவர் போற்றும் பிரானைக் [கண்டேன்]
    சரணம்
    அனாதி கற்பிதமாகிய மாயைகள் யாவையும் வென்றேன் அதிச யானந்தம் கொண்டேன் ஆணவமலம் விண்டேன் மனாதிகளுக் கெட்டாமல் மகிமை பொருந்திய தில்லையில் மாயன் கோ பாலகிருஷ்ணன் தொழும் மாதேவன் திருமேனியைக் [கண்டேன்] பாடல் தலைப்பு
  37. கண நாதா சரணம்...

    இராகம் : மோகனம் தாளம் : ஆதி ஸரிகபதஸ் - ஸ்தபகரிஸ
    பல்லவி
    கண நாதா சரணம் காத்தருள் கண நாதா சரணம் [கணநாதா]
    அநுபல்லவி
    பணமார் சேடன் தாங்கிய பார் மீதினிலே குணமார் நந்தன் சரித்திரம் கூரக்கிருபைக் கண் பாரும்
    சரணம்
    சொல்லும் பிரணவ மூலா தூய வேதாந்த நாதா துலங்கு முனிவர் மனத்துகள் அறுத்தருள் போதா நல்ல மோதக முதல் நாடி நுகர் வினோதா நாயேன் சொலுந்தமிழை நாடி ரக்ஷ¢க்குந் தாதா [கணநாதா] பாடல் தலைப்பு
  38. கைவிட லாகாது...

    இராகம் : மலஹரி தாளம் : ரூபகம் ஸரிமபதஸ் - ஸ்தபமகரிஸ
    பல்லவி
    கைவிடலாகாது காம தேனு அல்லவோ [கைவிட]
    அநுபல்லவி
    மெய்விடும் பொழுது நேரே வந்துதில்லை வெளியைக்காட்டி நல்லவழியில் சேரும் என்னை [கைவிட]
    சரணம்
    ஆதியந்தமில்லாத உன் பெருமை ஆரறிந்து துதி செய்ய வல்லவர் சோதி மாமறையும் கண்டதில்லையென்று சொல்லக் கேட்டதும் இல்லையா நாதனே உன் பாத கமலங்களை நம்பி வந்தவர் பந்தந் தீரவே காதலோடும் கோபாலகிருஷ்ணன் கவிக்கருள் புரிந்த நடராஜனே என்னை [கைவிட] பாடல் தலைப்பு
  39. குஞ்சித பாதத்தை...

    இராகம் : பந்துவராளி தாளம் : ரூபகம்
    பல்லவி
    குஞ்சித பாதத்தை தாரும் சஞ்சல பாவத்தை தீரும் [குஞ்சித]
    அநுபல்லவி
    செஞ்சிலம் பசையக் கனக சபைதனில் ஜெணுதத்தக ஜெணு தத்திமி திமிதத்தோ மென்றாடிய [குஞ்சித]
    சரணம்
    பாலகிருஷ்ணன் தொழும் பாதா முக்தி நால்வர்க்குதவிய நாதா எந்தன் மேலே கிருபை செய்து வெற்றியளித்திடும் அத்தனே கர்தனே சுத்தனே யித்தனை நிர்தனம் செய்திடும் [குஞ்சித] பாடல் தலைப்பு
  40. தில்லை தில்லை...

    இராகம் : காபி தாளம் : ஆதி ஸரிமபநிஸ் - ஸ்நி பமகரிஸ
    பல்லவி
    தில்லை தில்லை என்றால் பிறவி இல்லை இல்லை என மறை மொழியும் [தில்லை]
    அநுபல்லவி
    தொல்லை தொல்லை என்ற கொடுவினை வல்லை வல்லை என்ற கலுந்திருத் [தில்லை]
    சரணம்
    வாடி வாடி மாலையன் இருவரும் கூடிக்கூடிக் கொண்டல்லும் பகலுந்தாம் தேடித் தேடொணாத் திருவடி முடிகளைப் பாடிப் பாடிக் கோபாலகிருஷ்ணன் தொழும் [தில்லை] பாடல் தலைப்பு
  41. தேவா ஜெகன்...

    இராகம் : கல்யாணவசந்தம் தாளம் : ஆதி ஸகமதநிஸ் - ஸ்நிதபமகரிஸ
    பல்லவி
    தேவாஜெகன் நாதா சரணம் மஹா [தேவாஜெக]
    அநுபல்லவி
    தேவா சன காதியர்கள் மகிழும் [தேவாசன] மூவாயிர வர்கள் நாவால் துதி செய்யும்
    சரணம்
    தில்லை மாநகர் சிவபெருமானே எல்லையில்லா இன்பம் தரும் தேனே தொல்லை வினை சஞ்சலமுந் தானே இல்லை என்றருள் செய் சீமானே [தேவாஜெக] பாடல் தலைப்பு
  42. நடனம் ஆடினார்...

    இராகம் : மாயமாளவ கௌளை தாளம் : மிச்ரசாபு
    பல்லவி
    நடனம் ஆடினார் ஐயன் - நடனம் ஆடினார் [நடனம்]
    அநுபல்லவி
    நடனம் ஆடினார் தில்லை - நாயகம் பொன்னம்பலம் தனிலே [நடனம்]
    சரணம்
    முந்தி மடந்தை சிந்திக்க சிந்திக்க மோக வலைகள் பத்திக்க பத்திக்க பக்தர்கள் மனது தித்திக்க தித்திக்க பாதச் சிலம்புகள் சப்திக்க சப்திக்க [நடனம்]
    மத்யமகாலம்
    பணிமதி சடையாட பதஞ்சலி மாமுனி மறையாட பண்ணவர்கள் கொண்டாட பாலகிருஷ்ணன் மத்தளம்போட [நடனம்]
    சொற்கட்டு ஸாஹித்யம்
    தத்தீம் ததீம் ஜெணுதக திமித சபையில் தக தோம் தரி கனகச பையில் தரிஜேகுட ஜெம்ஜெம் தோம்என கனகச பையில் ததித்தோம் என கனக சபையில் [நடனம்] பாடல் தலைப்பு
  43. நந்தா உனக்கிந்த...

    இராகம் : மோகனம் தாளம் : ஆதி ஸரிகபதஸ் - ஸ்தபகரிஸ

    பல்லவி

    நந்தா உனக்கிந்த மதி தந்த தா ரடா
    அநுபல்லவி - மத்யமகாலம்
    அந்தரங்கம் சொந்தமாயிருந்தது மறந்து போய் விந்தையாய் நினைந்த தின்னோ அந்த வேளை புத்த இல்லை.
    சரணம்
    கொல்லை காட்டு கரிபோலே பல்லை காட்டி பேசுவாய் கல்லை காட்டி கோபம் கொண்டு செல்லை காட்டி ஏசுவேன் தில்லை என்று சொன்னதெல்லாம் இல்லையென்று போச்சுதா கல்லையென்று ஐயர்சொன்ன சொல்லே நிசமாச்சுதா சித்தமும் தெளிந்ததா கத்தலும் பறிந்ததா சட்டம் சட்டம் நல்லது நல்லது மெத்த மெத்த சந்தோஷம் பாடல் தலைப்பு
  44. பாதமே துணை...

    இராகம் : பூர்ணசந்த்ரிகா தாளம் : ஆதி ஸரிகமபதபஸ் - ஸ்நிதபமரிகமரிஸ
    பல்லவி
    பாதமே துணை ஐயனே நின் பாதமே துணை ஐயனே
    அநுபல்லவி
    பாதமே துணை யல்லால் [3] - வேறொரு சேதிகளும் நானறிந்திலேன்
    சரணம்
    பாலனுக்கருள் செய்த பராபரன் பாலகிருஷ்ணன் கவிக்கு தயாபரன் சீலமுள்ள சிவகாமி மனோகரன் கோலநடம்புரி ரஞ்சித குஞ்சித [பாதமே] பாடல் தலைப்பு
  45. மாதவமே ஓ...

    இராகம் : சாமா தாளம் : ரூபகம் ஸரிமபதஸ் - ஸ்தபமகரிஸ
    பல்லவி
    மாதவமே ஓ குருவாய் வந்தது காண் வழி வசமாய் [மாதவமே]
    அநுபல்லவி
    ஆதவனை கண்ட பனிபோல் [2] அச்சுது என்றன் குறைகள் தீர
    சரணம்
    நீலகண்டம் என்று ரைத்து என் நேரமும் சிவ கதை படிக்கும் சீல குணத் தொண்டர் திருச் சேவடி கண்டேன் அடியான் [மாதவமே] பாடல் தலைப்பு
  46. இந்தப் பிரதாபமும்...

    இராகம் : சுத்தசாவேரி தாளம் : ஆதி ஸரிமபதஸ் - ஸ்தபமரிஸ
    பல்லவி
    இந்தப் பிரதாபமும் இந்த வைபோகமும் [இந்தப்] எங்கெங்கும் காணேன் ஐயா
    அநுபல்லவி
    எந்தெந்த வேளையும் உன்றன் சந்நிதி [எந்தெந்த] எவர்களுக்கு முண்டோ சிவ காமி நேசரே
    சரணம்
    சந்திர சூரியர் சகல பூதகணங்கள் சண்டே சுரர் தண்டி முந்து வித்யாதரர் வந்து போற்றும் அர்த்த சாம வேளை தனிலே மகிழும் கோபாலகிருஷ் ணனது திக்கும் நடேசரே. [இந்தப்] பாடல் தலைப்பு
  47. இது நல்ல...

    இராகம் : தன்யாசி தாளம் : ஆதி ஸகமபநிஸ் - ஸ்நிதபமகரிஸ
    பல்லவி
    இது நல்ல சமயமையா ரக்ஷ¢க்க - இது நல்ல சமயமையா
    அநுபல்லவி
    இது நல்ல சமயமையா ரக்ஷ¢த்தாளும் ஈசா மகேசா நடேசா சபேசா
    சரணம்
    பாலகிருஷ்ணன் போற்றும் பாதங்களைக் காட்டிச் சீலமுள்ள முக்தி சேர்வதற்காக [இது நல்ல] பாடல் தலைப்பு
  48. சிதம்பரம் போகாமல்...

    இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி
    பல்லவி
    சிதம்பரம் போகாமல் இருப்பேனோ நான் ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான்
    சரணம்
    பக்தியும் மனமும் பொருந்தின தங்கே சத்தியம் சொன்னேன் சடலமும் இங்கே ஆசையும் நேசமும் ஆனந்தம் அங்கே பேசலும் பாசமும் பிதற்றலும் இங்கே. பாடல் தலைப்பு
  49. தொண்டரைக் காண்கிலமே...

    இராகம் : சஹானா தாளம் : ஆதி ஸரிகமபமதாநிஸ் - ஸ்நிஸதபம காமரிகரிஸ
    பல்லவி
    தொண்டரைக் காண்கிலமே தில்லையில் வந்த
    அநுபல்லவி
    அண்ட சராசர மெங்கும் படிய ளந்து மன்று ளாடிய மன்னவர்க் கடிமைத்
    சரணம் 4
    பாலகிருஷ்ணன் பணிந்தேத்திய பாதன் கோலச் சிலம்பணியுங் குண்டலநாதன் [தொண்டரை] பாடல் தலைப்பு
  50. பேயாண்டி தனைக்...

    இராகம் : சாரங்கா தாளம் : கண்டசாபு ஸரிஸபமபதநிஸ் - ஸ்நிதபமரிகமரிஸ - (ம=சுத்தமத்யமம்)
    பல்லவி
    பேயாண்டி தனைக் கண்டு நீ யேண்டி மையல் கொண்டாய் பெண்களுக்க ழகா மோடி
    அநுபல்லவி
    மாயாண்டி சுட லையில் வாழ்வாண்டி காளியுடன் வாதாடிச் சூதாடி வழக்காடித் திரிவாண்டி
    சரணம்
    சுந்தரர்க்குத் தூது நடந்தவன் இவன் தாண்டி தும்புரு நாரதர் பாட்டைக் கேட்டாண்டி சந்தோஷம் வந்தால் உன்னைத் தழுவ வருவாண்டி சமயம் வந்தால் ஒரு காலைத்தூக்கு வாண்டி. பாடல் தலைப்பு
  51. போதும் போது...

    இராகம் : கமலாமனோஹரி தாளம் : ஆதி ஸகமபநிஸ் - ஸ்நிதபமகஸ
    சரணம்
    போதும் போது மய்யா எடுத்த ஜன்மம்
    அநுபல்லவி
    மாதவ முனிவர்கள் வந்திருக்கும் தில்லை வனத்திலனு தினமும் வளரு மம்பலவா
    சரணம் 5
    அண்ணல் கோபா லகிருஷ்ணன் பணியுந்திரு அம்பல மேவும் பொன் னம்பல வாணா [போது] பாடல் தலைப்பு
  52. மனது அடங்குவதால்...

    இராகம் : கௌளி பந்து தாளம் : ஆதி ஸரிமா பநீஸ் - ஸ்நிதபமபதமாகரிஸ - (ம=ப்ரதிமத்யமம்)
    பல்லவி
    மனது அடங்குவதால் முத்தி மார்க்கம் பெறலாகும்
    அநுபல்லவி
    அன நடை யாழுமை பாகன் திருச்சிற் றம்பல வாணன் பாதார விந்தங்களில்
    சரணம்
    எங்கள் கோபா லகிருஷ்ணன் பதம் பாடி இயம நியம வாசனை களிற் கூடிப் பொங்கும் சமாதி பொருந்திடத் தேடிப் போவதுமில்லை இருந்தது வாடி பாடல் தலைப்பு
  53. மோசம் வந்ததே...

    இராகம் : ஆபோகி தாளம் : ஆதி ஸரிகமதஸ் - ஸ்தமகரிஸ
    பல்லவி
    மோசம் வந்ததே சாமி இந்த
    அநுபல்லவி
    தேசம் புகழ் தில்லைச் சிற்சபையைக் கண்டு சிந்தனையல்லல் தீரச் சிவனே யென்றிராமல்
    சரணம்
    தாசன் பாலகிருஷ்ணன் தாழ்ந்து போற்றும் நட ராஜமூர்த்தி யென்று நம்பினேனே பாவி தேசம் எங்கும் பொருள் தேடிய லைந்தேனே ஆசைவலை யாலே அழிந்து நொந்தேனே. பாடல் தலைப்பு
  54. திருநாளைப் போவான்...

    இராகம் : கமாசு தாளம் : ஆதி
    பல்லவி
    திருநாளைப் போவான் சரித்திரம் தேனினும் பாலினும் இனியது கண்டீர்
    அநுபல்லவி
    சித்தமு ருகிய சிவயோகிகளுக்கு அர்த்தமிது வென்றே அனுதினம் பணிந்திடும் [திருநாளை]
    சரணம்
    மேதினி புகழும் ஆதனூர் விளங்கும் மாதவம் புரிந்தே சாதனை பெருகிய [திருநாளை]
    அநுபல்லவி போல்
    பேதம் இலாதவன் வேதப் பொருளை விரைந்(து) ஓதும் கருணைகுரு நாதனைப் பணிந்திடும் [திருநாளை] . . . . . . . . . . . . பாடல் தலைப்பு
  55. பழனம ருங்கணையும்...

    இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி

    நொண்டிச்சிந்து

    (உபமன்யு முனிவர் சொல்வது) பழனம ருங்கணையும் புலைப் பாடியது கூரை வீடுதனில் சுரையோ படர்ந்திருக்கும் அதைச் சுற்றிலும் நாய்கள் குரைத்திருக்கும் . . . . . . . . . பாடல் தலைப்பு
  56. சிவனே தெய்வம்...

    (நந்தனார் பெரியோர்களுடைய ஒழுக்கத்தைச் சொல்வதும் அதற்கு அவர் சாதியினரின் விடையும்) இராகம் : சுத்தசாவேரி தாளம் : -
    இருசொல் அலங்காரம்
    (உத்தரப் பிரதியுத்தர தரு) சிவனே தெய்வம் சிதம்பரமே கைலாசம் தவமே பெருமை தான்சம்பிர தாயம் சேரியே சொர்க்கம் ஏரியே கைலாசம் மாரியே தெய்வம் மதசம்பிர தாயம் பாடல் தலைப்பு
  57. செந்தாமரை மலர்...

    இராகம் : யதுகுல காம்போதி தாளம் : திச்ரலகு செந்தாமரை மலர் சூமோடை மேடை செறிந்த மாதர்களாட்டம் செறிந்த வேளூர் எந்தை பிரான் பிடேககோ ரோசனை சந்தொழிந் தார்மன வாட்டம் . . . . . . . . . . . . . . பாடல் தலைப்பு
  58. சிங்கார மான...

    இராகம் : பூரிகல்யாணி தாளம் : திச்ரலகு சிங்கார மானபள்ளு பாடினார் அங்கங் குளிர்ந்து கொண்டாடினார் பாடல் தலைப்பு
  59. தலம்வந்து...

    இராகம் : கேதாரம் தாளம் : கண்டலகு

    சவாயி

    தலம்வந்து வீதிவலம் வந்து கண்கள் சலம்வந்து சோரும் பலம்வந்த தெங்கள் குலம்சுத்த மாச்சு மனம்வெந்து போச்சு தலம்கண்டோம் என்று நிலம்கொண்டு நின்றார். பாடல் தலைப்பு
  60. சிவலோக நாதன்...

    இராகம் : கேதாரம் தாளம் : கண்டலகு

    சவாயி

    சிவலோக நாதன் திருச் சந்நிதானம் மலையாகி நந்தி மறைத்திடு திங்கே பலகாலம் செய்த பாழ்வினை குவிந்து மலையாகி இப்படி மறைத்ததோ வென்றார். பாடல் தலைப்பு
  61. ஒரு நாளும்...

    (திருப்புன்கூர் ஈசன் நந்தியைப் பார்த்துச் சொல்வது) இராகம் : சங்கராபரணம் தாளம் : கண்டலகு

    துக்கடா

    ஒரு நாளும் வாராத பக்தன் திருநாளைப் போவார் என்னும் சித்தன் உலகெங்கும் பிரசித்தம் கண்டு நீ ஒதுங்காமல் இருந்தது உன்பேரில் குற்றம். பாடல் தலைப்பு
  62. குதித்தார் எக்கலித்தார்...

    (திருப்புன்கூர் ஈசனை தரிசித்த நந்தனாரின் நிலை) இராகம் : மாயாமாளவகௌளை தாளம் இல்லாமல் பாடுவது

    கடுக்கா

    குதித்தார் எக்கலித்தார் உள்ளம் களித்தார்