தென் பெண்ணை ஆற்றின் கரை சிவத் தலங்கள்

South Pennai riverside Lord shiva temples

River Tenpennai starts in Nandi hills (Nandishwaram) near Bangalore. It enters Taminadu near Bagalur and runs a long distance in Tamilnadu to join the ocean at Cuddalore. There are numerous temples of Lord shiva on its banks including many devara thalangal.

 • தருமபுரி மாவட்டம் (Dharmapuri District)
  • பாகலூர் - பிரசன்ன சூடநாதர் (pAkalUr - pirasanna sUdanAthar)
  • மணவாரணபள்ளி - சோமேஸ்வரர் (maNavAraNapaLLi - sOmESvarar)
  • மண்வாரணபள்ளி - மண்ணீஸ்வரர் (maNvAraNapaLLi - maNNISvarar)
  • காவேரிப்பட்டிணம் - நாகேஸ்வரர் (kAvErippattiNam - nAkESvarar)
  • காவேரிப்பட்டிணம் - மார்க்கசஹாயர் (kAvErippattiNam - mArkkasahAyar)
  • காவேரிப்பட்டணம் - மத்ய பரமேஸ்வரர் (kAvErippattaNam - mathya paramESvarar)
  • பெண்ணேசுவரமடம் - பெண்ணேசுவரர் (peNNEsuvaramadam - peNNEsuvarar)
  • வலங்காமுடி - பைரவேசர் (valangkAmudi - pairavEsar)
  • பரூர் - சோமேஸ்வரர் (parUr - sOmESvarar)
  • கம்பைநல்லூர் - தேசநாதர் (kampainallUr - thEsanAthar)
  • கம்பைநல்லூர் - உமாமகேசுவரர் (kampainallUr - umAmakEsuvarar)
  • அரூர் - வன்னீஸ்வரர் (arUr - vannISvarar)
  • குன்னத்தூர் - விரூபாட்சிநாதர் (kunnaththUr - virUpAtchinAthar)
  • கலவை - ஐராவதேஸ்வரர் (kalavai - airAvathESvarar)
  • காட்டேரி - அனுமந்தீஸ்வரர் (kAttEri - anumanthISvarar)

 • விழுப்புரம் மாவட்டம் (Vizhupuram District)
 • கடலூர் மாவட்டம் (Kadalur District)

References to then pennai in thevaram

உளங்கொள் போகமுய்த்திடார் உடம்பிழந்த போதின்கண்
துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமே
வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே	2.100.5

உரையும்பாட்டுந் தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண்
நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர்நமர்கள் ஆதலால்
வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே. 2.100.7 

வழித்தலைப் படவு மாட்டேன் வைகலுந் தூய்மை செய்து
பழித்திலேன் பாச மற்றுப் பரமநான் பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை என்னினைந் திருக்க மாட்டேன்
கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க் கோவல்வீ ரட்ட னீரே. 4.69.3 

பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 		 7.1.01 

நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 		7.1.02 

மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
அன்னேஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 	7.1.03 

முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீÿ
கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீÿ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
அடிகேளுனக் காளாயினி அல்லேன்என லாமே. 	7.1.04 

பாதம்பணி வார்கள்பெறும் பண்டமது பணியாய்ÿ
ஆதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளாÿ
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
ஆதீஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 		7.1.05 

தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீÿ
எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்ÿ
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 	7.1.06 

ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய்ÿ
வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய்ÿ
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
ஆனாயுனக் காளாயினி அல்லேன்என லாமே. 		7.1.07 

ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய்ÿ
தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர்ÿ
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்என லாமே. 	7.1.08 

மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்காÿ
தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலேÿ
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
அழகாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. 	7.1.09 

காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற்ÿ
பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச்ÿ
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
ஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே. 	7.1.10 

மலையார் அருவித் திரள்மா மணியுந்திக்
குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்
கலையார் அல்குற்கன் னியராடுந் துறையூர்த்
தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.	7.13.1 

மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி
முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்
பத்தர் பயின்றேத்திப் பரவுந் துறையூர்
அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 	7.13.2 

கந்தங் கமழ்கா ரகில்சந் தனமுந்திச்
செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால்
மந்தி பலமா நடமாடுந் துறையூர்
எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 	7.13.3 

அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச்
சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கரும்பார் மொழிக்கன் னியராடுந் துறையூர்
விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.	7.13.4 

பாடார்ந் தனமாவும் பலாக்க ளுஞ்சாடி
நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர்
வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 	7.13.5 

மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி
மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கொட்டாட் டொடுபாட் டொலியோவாத் துறையூர்ச்
சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 	 7.13.6 

மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரையுந்தித்
தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
போதார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்
நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 	 7.13.7 

கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச்
செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மையார் தடங்கண் ணியராடுந் துறையூர்
ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே. 	7.13.8 

விண்ணார்ந் தனமேகங் கள்நின்று பொழிய
மண்ணாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
பண்ணார் மொழிப்பா வையராடுந் துறையூர்
அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.	 7.13.9