திருவெற்றியூர் கோயில் தலபுராணம்
Sthala Puranam of Thiruvetriyur Temple

 
இறைவர் திருப்பெயர்		: வன்மீகநாதர், பழம்புற்றுநாதர். 
இறைவியார் திருப்பெயர்		: பாகம்பிரியாள். 
தல மரம்			: வில்வம்.  
தீர்த்தம்				: வாசுகி. 
வழிபட்டோர்			: மகாவிஷ்ணு, வாசுகி.  
வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - மனவஞ்சர் மற்றோட (2-39-6) 
				  அப்பர் - உஞ்சேனை மாகாளம் (6-70-8). 
				  சுந்தரர் -  மூல னூர்முத லாயமுக் (7-12-3). 

தல வரலாறு

  • 'கல்லல்' என்ற ஊருக்குப் பக்கத்தில் 'வெற்றியூர்' என்றொரு ஊர் இருப்பதால், இத்தலத்தை "திருவெற்றியூர்" என்றே அழைக்கின்றனர்.

  • இத்தலத்திற்கு 'ஜயபுரி' என்றும் பெயருண்டு.

  • மகாவிஷ்ணு தனக்கு ஏற்பட்ட புற்று நோயைத் இத்தல இறைவனை வழிபட்டு, சிவபுஷ்கரணியான வாசுகி தீர்த்தத்தில் நீராடி நீங்கப் பெற்ற தலம்.

சிறப்புக்கள்

  • இத்தலம் சம்பந்தர், அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • "பாகம் பிரியாள் கோயில்" என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும்; அவ்வளவு பிரசித்தியான கோயில்.

  • சிறந்த பிரார்த்தனைத் தலமாதலின் எப்போதும் மக்கள் வெள்ளம் வந்து சென்ற வண்ணமுள்ளது.

  • கோயிலின் பிரதான (கிழக்கு) வாயிலின் முன்பு பெரிய தீர்த்தக் குளமுள்ளது.

  • தட்சிணாமூர்த்தியிடத்தில் உபதேசம் பெறும் நான்கு முனிவர்களின் திருவுருவங்களும் தனித்தனி மூர்த்தங்களாகப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.

  • மாவிளக்கு பிரார்த்தனை செய்பவர்கள் கோயிலிலேயே மாவை இடித்துக்கொள்ளும் பொருட்டு, பிராகாரத்திலேயே நிறைய கல் உரல்கள் ஆங்காங்கே உள்ளன.

  • இக்கோயிலில் யாரேனும் திருடினால், கட்டாயம் இறைவனால் உடனேயே ஏதேனும் தண்டனை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து 'தொண்டி' செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்றதும், "திருவெற்றியூர் 10 கி. மீ." என்று கைகாட்டி உள்ள இடத்தில், வலப்புறமாகப் பிரியும் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். நல்ல தார்ச்சாலை. தொண்டியிலிருந்து 9 கி. மீ. தொலைவு.


< PREV <
விளத்தொட்டி
Table of Contents > NEXT >
அக்கீச்சுரம்