வளைக்குளம் (வளைகுளம், வளர்புரம்)

Valaikkulam (Valaikulam, Valarpuram)

 
இறைவர் திருப்பெயர்		: நாகேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: சொர்ணவல்லி. 
தல மரம்			: 
தீர்த்தம்				: சங்கு தீர்த்தம். 
வழிபட்டோர்			: ஆதிசேஷன். 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - 1. வானவர்கோன் தோளிறுத்த (6-50-8), 
					  2. நெருப்பனைய மேனிமேல் (6-59-2), 
					  3. நள்ளாறும் பழையாறுங் (6-71-10). 

தல வரலாறு

 • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

சிறப்புக்கள்

 • 'குளம்' என்ற முடிபு கொண்டுள்ள தலங்களுள் இவ்'வளைக் குளமும்' ஒன்று. ஏனையவை 1. கடிக்குளம், 2. தளிக்குளம், 3. இடைக்குளம், 4. திருக்குளம், 5. பாற்குளம் என்பன.

 • 800 ஆண்டுப் பழைமையுடைய கற்கோயில்.

 • கோயிலின் எதிரில் "சங்கு தீர்த்தம்" வளை குளம் உள்ளது; தூய நன்னீர். குளத்தில் நத்தைகள் அதிகமுள்ளன.

 • சங்கு தீர்த்தம் (வளைகுளம்) - (பண்டை நாளில் இக்குளம் சங்கு வடிவிலேயே அமைந்திருந்தது என்றும், பிற்காலத்தில் படிகள் அமைத்துப் பணி செய்தபோது அந்த அமைப்பு மாறிவிட்டது என்றும் சொல்லப்படுகிறது.)

 • பங்குனி உத்திரம் முதலான உற்சவங்களும், விசேஷ வழிபாடுகளும், சிறப்பாக நடைபெறுகின்றன.

 • சுந்தர பாண்டியன் மன்னன் இக்கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளதைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவ்வூர்ச் சிவாலயக் கல்வெட்டில் "வளைகுளத்து நாகேஸ்வரமுடையார்" என்று வரும் தொடரில் தலப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
அரக்கோணத்திலிருந்து பேருந்துகள் செல்கின்றன; பேருந்து வசதி அடிக்கடி இல்லை.

< PREV <
வழுவூர்
Table of Contents > NEXT >
வாதவூர்