வாதவூர் (திருவாதவூர்)

Vadhavur (Thiruvadhavur)

 
இறைவர் திருப்பெயர்		: திருமறைநாதர் 
இறைவியார் திருப்பெயர்		: ஆரணவல்லியம்மை 
தல மரம்			: மகிழ மரம் 
தீர்த்தம்				: கபில, பிரம்ம, புருஷாமிருகம், பைரவ தீர்த்தங்கள் 
வழிபட்டோர்			: மாணிக்கவாசகர் 
வைப்புத்தல பாடல்கள்		: சம்பந்தர் - மாட்டூர் மடப்பாச் (2-39-7). 

தல வரலாறு

  • திருமால் இத்தல இறைவனை பூசித்தபோது இறைவனிடத்திலிருந்து வேதாஹம் என்ற சுருதி தோன்றியதால் இறைவனுக்கு வேதநாதர் என்றும் பெயர்.

சிறப்புக்கள்

  • இத்தலம் சம்பந்தர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • வாதவூர் பாண்டி நாட்டுத் தலம்; இத்தலத்தை "தென் புறம்பு நாட்டுத் திருவாதவூர்" என்பர்.

  • மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்தருளிய புண்ணிய பூமி.

  • பாரியின் உயிர்த் தோழராகிய கபிலரும் இத்தலத்திலேயே பிறந்தருளியுள்ளார்.

  • மாணிக்கவாசகருக்கு இவ்விறைவன் திருச்சிலம்பொலியைக் காட்டியருளிய தலம்.

  • இக்கோயிலுக்கு சற்றுத் தொலைவில் மாணிக்கவாசகர் பிறந்து வளர்ந்த இல்லம் ஒரு கோயிலாக விளங்குகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மதுரை - மேலூருக்கு தென்திசையில் 9 கி. மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.

< PREV <
வளைக்குளம்
Table of Contents > NEXT >
வாரணாசி