|
Home > Temples of India > vaippu sthalam
உருத்திரகோடி (ருத்ராங்கோயில்)
இறைவர் திருப்பெயர் : ருத்ரகோடீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - உஞ்சேனை மாகாளம் (6-70-8).
தல வரலாறு
- உருத்திரன் கோயில் - ருத்திரன் கோயில் என்பது மருவி, மக்கள் வழக்கில் ருத்திரான் கோயில் (ருத்ராங்கோயில்) என்று
வழங்குகிறது.
- சிவபெருமானிடத்துத் தோன்றிய கோடி உருத்திரர்கள், காசிப முனிவரிடத்துத் தோன்றிய கோடி அசுரர்களை அழித்து, அப்பழி
நீங்க இறைவனை வழிபட்ட தலம்.
- ருத்திரர் கோடி வழிபட்டதால் ருத்ரகோடி என்று பெயர் பெற்றது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- நீண்ட, பெரிய கற்கோயில்.
- 'ருத்ராங் கோயில்' இவ்வூரின் பூர்விகத் தலம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
ருத்ராங்கோயில் திருக்கழுக்குன்றத்தில் உள்ளது. செங்கற்பட்டிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன; இங்கிருந்து 14 கி. மீ. தொலைவில் உள்ள இத்தலம். செங்கற்பட்டிலிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் செல்லும் பேருந்துகளும் இவ்வழியே செல்கின்றன.
|