|
Home > Temples of India >
vaippu sthalam
மாகாளம் (உஞ்சை மாகாளம் / உஜ்ஜயினி)
Makalam (Unjai Makalam / Ujjayini)
இறைவர் திருப்பெயர் : மகா காளேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - தேனார் புனற்கெடில (6-7-11).
தல வரலாறு
சிறப்புக்கள்
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- கோயிலும் பெரியது - மூர்த்தியும் பெரிய மூர்த்தி.
மாகாளர் பாதாளத்தில் கம்பீரமாக, கவசத்தில் காட்சித் தருகிறார். பூமிக்குள் பல படிகள் இறங்கிப் பாதாளத்தில் தான்
மாகாளேசுவரரைத் தரிசிக்க வேண்டும்.
- கும்பமேளா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இத்தலம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று.
முத்தி தரும் தலங்கள் ஏழனுள் இதுவும் ஒன்று - அவந்தி என்று போற்றப்படுவது. (1. அயோத்தி, 2. மதுரா, 3. மாயா (ஹரித்வார்),
4. துவாரகை, 5. காசி, 6. அவந்தி (உஜ்ஜயினி), 7. காஞ்சி என்பவை முத்தி தரும் ஏழு தலங்கள்.)
- உஞ்சை, உஞ்சேனை, அமராவதி, சிதபுரி, விசாலா என்பன இதன் வேறு பெயர்கள்.
- விக்ரமாதித்தன், பர்த்ருஹரி முதலியோர் அரசாண்ட பதி.
- சகாப்தத்தைத் தோற்றுவித்த சாலிவாகனன், மகாகவி காளிதாசர், தண்டி முதலிய மேதைகள் வாழ்ந்த தலம்.
- கோயிலுக்கு அருகில் 'க்ஷீப்ரா' நதி ஓடுகிறது.
- க்ஷீப்ரா நதியின் கரையில் வரிசையாகப் பல சிவலிங்கங்கள் உள்ளன.
- இந்நதிக் கரையில் விக்கிரமாதித்தனின் குல தெய்வமாகிய வரசித்தி மாதா கோயில் உள்ளது.
- கண்ணபிரானின் குருவாகிய சாந்தீப முனிவரின் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : மத்தியப் பிரதேசம்
சென்னை - புதுடில்லி பாதையில் இந்தூர் அல்லது போபால் ரயில் நிலையத்தை அடைந்து, அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்.
|