|
Home > Temples of India > vaippu sthalam
திருவேட்டி
இறைவர் திருப்பெயர் : திருவேட்டீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : மரகதவல்லி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - தெண்ணீர்ப் புனற்கெடில (6-7-7).
தல வரலாறு
- சென்னையில் திருவல்லிக்கேணிப் பகுதியில் உள்ள திருவேட்டீசுவரன் பேட்டையிலுள்ள திருவேட்டீசுவரர் திருக்கோயிலே 'திருவேட்டி' என்று குறிக்கப்படும் வைப்புத்தலமாகும்.
- அம்பிகையின் திருநாமம் மரகதவல்லி என்று பண்டைய குறிப்பில் காணப்பட்டாலும் இன்று சண்பகாம்பிகை என்ற பெயரே வழங்குகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- இக்கோயிலிலுள்ள முருகவேள் சந்நிதிக்கு முன்னுள்ள மண்டபத்தில் கந்தர்அநுபூதி, சண்முக கவசம், கந்தர் சஷ்டி கவசம், அருட்பாவிலுள்ள தெய்வ மணிமாலை ஆகியவை கல்வெட்டுக்களாகப் பதிக்கப்பட்டுள்ளன.
- அறுபடை வீட்டுச் சுதை சிற்பங்கள் மேலே உள்ளன.
- மூலவர் நடுவிலும் பக்கத்தில் சோமாஸ்கந்தரும், மறுபுறம் அம்பிகையும் ஒரு சேரக் காட்சி தருகின்றனர்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சென்னையில் - திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பிள்ளையார் கோயில் தெருவிற்குள் சென்று, வலப்புறமாகத் திரும்பி, சற்றே செல்ல கோயிலை அடையலாம்.
|