திருவாமூர்

 
இறைவர் திருப்பெயர்		: பசுபதீசுவரர் 
இறைவியார் திருப்பெயர்		: திரிபுரசுந்தரி 
தல மரம்			: கொன்றை 
தீர்த்தம்				: கெடில நதி 
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - ......... 

தல வரலாறு

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

சிறப்புக்கள்

  • மூலவர் சுயம்பு மூர்த்தி; சிவலிங்கத் திருமேனி.
  • திருநாவுக்கரசு சுவாமிகள் அவதரித்தருளிய புண்ணிய பூமி.
  • சுவாமி சந்நிதிக்கு எதிர்புறத்தில் திருநாவுக்கரசு பெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சித் தந்து அருள்பாலிக்கின்றார்.
  • இத்தலத்திற்கு தனித் தேவாரத் திருப்பதிகம் இல்லையாயினும், அப்பர் சுவாமிகள் பாடியருளிய "பசுபதி திருவிருத்தம்" இத்தல இறைவனைக் குறித்தே அருளிச் செய்யப்பெற்றது எனலாம்.
  • இப்பதியின் பெருமையினை பெரிய புராணத்தில் சேக்கிழார் மிகவும் சிறப்பித்துப் பாடுகிறார்.
  • திருநாவுக்கரசு சுவாமிகள் திருவவதாரம் செய்தருளிய இடம் இக்கோயிலின் தென்மேற்கே உள்ளது.
  • பங்குனி - ரோகிணி, சித்திரை - சதயத் திருநாட்களில் அப்பர் பெருமானுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
  • அருணகிரி நாதரின் திருப்புகழும் இத்தலத்திற்கு உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கடலூர் மாவட்டம் - பண்ருட்டியிலிருந்து மேற்றிசையில் 8 கி. மீ.ல் கெடில நதியில் வடகரையில் இக்கோயில் உள்ளது.

< PREV <
திருத்தலையூர்
Table of Contents > NEXT >
திருவேகம்பத்து