திருப்புலிவனம்

(Thirupulivanam)

 
இறைவர் திருப்பெயர்		: திருப்புலிவனநாதர், வியாக்ரபுரீசுவரர். 
இறைவியார் திருப்பெயர்		: அபிதகுசாம்பாள். 
தீர்த்தம்				: வியாக்ர தீர்த்தம். 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - 1. புன்கூரார் புறம்பயத்தார் (6-51-11), 
					   2. புலிவலம் புத்தூர் (6-70-11).  

தல வரலாறு

  • சாபத்தால் ஒரு முனிவர் புலியாகப் பிறந்தும், இறைவனை வழிபடும் வழக்கம் விடாமல் தொடர்ந்து, இத்தலத்து இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதனால் இத்தல இறைவன் வியாக்ரபுரீசுவரர் என்னும் திருநாமம் கொண்டு விளங்குகிறார். ஊர் (திருப்புலிவலமாக இருந்து மருவி இருக்கலாம்) திருப்புலிவனம் என்று வழங்குகிறது. (வியாக்ர = புலி)

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • கோயிலமைப்பு தூங்கானை மாட திருக்கோயில் அமைப்பிலானது.

  • மூலவர் சுயம்பு மூர்த்தி; சிவலிங்கத் திருமேனி.

  • சிவலிங்கத் திருமேனியில் புலியின் பாதச் சுவடுகள் உள்ளது.

  • இத்தல கல்வெட்டுக்களில், இவ்வூரை புலிவலம் என்றும், இறைவன் திருப்புலிவல முடையார், ஆளுடையார் திருப்புலிவல முடையார், திருப்புலிவலமுடைய நாயனார் என்றும் குறிக்கப்படுகிறார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்க்கு வடதிசையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

< PREV <
புரிசைநாட்டுப்புரிசை
Table of Contents > NEXT >
திருபுவனம்