|
Home > Temples of India > vaippu sthalam
திண்டீச்சரம் - (திண்டிவனம்)
இறைவர் திருப்பெயர் : திந்திரிணீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : மரகதவல்லி, மரகதாம்பாள்.
தல மரம் : புளியமரம்.
தீர்த்தம் :
வழிபட்டோர் : வால்மீகி, வியாசர், டிண்டி, முண்டி, கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்கள்.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - தெள்ளும் புனற்கெடில (6-7-8), திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6-70-9).
தல வரலாறு
- தற்போது திண்டிவனம் என வழங்கும் ஊராகும்.
- கோயில் உள்ள தெருவுக்கு ஈசுவரன் கோயில் தெரு என்றே பெயர்.
- மக்கள் 'ஈசுவரன் கோயில்' என்றும் 'திந்திரிணீஸ்வரர் கோயில்' என்றும் வழங்குகின்றனர்.
- திந்திருணி, புளிதிந்திருண்வனம் - புளியமரக்காடு, இச்சொல் மருவி வழக்கில் திண்டிவனம் என்றாயிற்று. புளியமரக் காடுகளால் சூழப்பட்ட பகுதி என்று பெயர்.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- மூலவர் சுயம்பு மூர்த்தி; சிவலிங்கத் திருமேனி.
- பெரிய கோயில்; கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம் செங்கல்லாலும் கட்டப்பட்ட கட்டுமானமுடையது.
- இத்தலம் வால்மீகி, வியாசர், டிண்டி, முண்டி, கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்களால் பூசிக்கப்பட்டது.
- இக்கோயிலின் விமானம் வியாச முனிவரால் தாபிக்கப்பட்டது.
- இச்சிவாலயக் கல்வெட்டில் இவ்வூர் "ஓய்மாநாட்டு..... திருத்தீண்டீஸ்வரம்" என்று குறிக்கப்பட்டுள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் செல்லும் எல்லா பேருந்துகளும் திண்டிவனம் வழியாகச் செல்கின்றன.
|