|
Home > Temples of India > vaippu sthalam
திருமலை (திருமலைராயன்பட்டினம்)
இறைவர் திருப்பெயர் : ராஜசோளீச்வரர்.
இறைவியார் திருப்பெயர் : அபிராமி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - ஈழ நாட்டுமா (7-12-7).
தல வரலாறு
- மக்கள் வழக்கில் 'திருமலைராயன் பட்டினம்' என்று பிரசித்தி பெற்று வழங்குகிறது. இருந்தபோதிம், மக்கள் பேச்சு வழக்கில்
சுருக்கமாக "திரு. பட்டினம்" என்று சொல்கின்றனர்.
சிறப்புக்கள்
- இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- கி.பி. 15ஆம் நூற்றாண்டில் விஜய நகர அரசின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தவன் சாளுவத் திருமலை ராயன். திருமலைராயன் பட்டினம் தான் இவனுடைய தலைநகரமாக இருந்தது. இம்மன்னன் வெட்டிய ஆறு திருமலைராயன் ஆறு
எனப்படுடுகிறது. திருமலைராயனின் அவைப் புலவராக இருந்தவரே காளமேகப் புலவர்.
- பிராகாரத்தில் அறுபத்து மூவரின் மூலத் திருமேனிகள் அழகுடன் விளங்குகின்றன. இதில் ஒரு செய்தி :- வரிசையில்
ஐந்தாவதாக மாணிக்கவாசகரைப் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
- நாயன்மார்கள் அனைவருடைய குரு பூசைகளும் செம்மையாக நடைபெறுகின்றன.
- சண்டேசுவரர் பச்சைக்கல் மூர்த்தம்.
- கோயிலுக்குப் பக்கத்தில் நாகலிங்க புட்ப மரங்கள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : புதுவை
புதுவை மாநிலத்தில் காரைக்காலை அடுத்துள்ளது.
|