திருச்சிற்றம்பலம் கோயில் தலபுராணம்
Sthala Puranam of Thiruchitrampalam Temple

 
இறைவர் திருப்பெயர்		: புராதனவனேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: பெரியநாயகி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - தேங்கூ ருந்திருச் (7-12-4). 

தல வரலாறு

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

சிறப்புக்கள்

  • இத்தல விநாயகரைப் பிரார்த்தனை செய்வோர் விநாயகரின் இரு காதுகளிலும் பூக்களைச் செருகிவைத்து வேண்டுகின்றனர்; பிரார்த்தனை நிறைவேறுமாயின் விநாயரின் செவித் தூவாரங்களில் செருகப் பெற்ற பூக்கள் உள்ளே இழுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் இத்தல விநாயகர் 'பூ விழுங்கி' விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
  • இங்குள்ள நடராஜர் 'அம்பலத்தாடுவார்' ஆவார்
  • கோயிலின் பக்கத்திலும், எதிரிலுமாக இரு தாமரைக் குளங்கள் நல்ல நிலையில் உள்ளன. மக்கள் பயன்படுத்துகின்றனர்.
  • இங்குள்ள கல்வெட்டுக்கள் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் காலத்தியவை.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
பட்டுக்கோட்டை - அறந்தாங்கிச் சாலையில் உள்ளது. பட்டுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ.; அறந்தாங்கியிலிருந்து 34 கி.மீ.ல் சாலையோரத்தில் கோயில் உள்ளது.

< PREV <
திரிபுராந்தகம் (திருநெல்வேலி அருகில்)

(OR)
திரிபுராந்தகம் (விசாகப்பட்டினம் அருகில்)
Table of Contents > NEXT >
திருத்தலையூர்