|
Home > Temples of India > vaippu sthalam
திங்களூர்
இறைவர் திருப்பெயர் : கைலாசநாதர்.
இறைவியார் திருப்பெயர் : பெரிய நாயகி.
தல மரம் :
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்.
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - தேரூரார் மாவூரார் (6-25-3); சுந்தரர் - திங்களூர் திருவா (7-31-6).
தல வரலாறு
- இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
சிறப்புக்கள்
- அப்பூதியடிகள் அவதரித்த பதி.
- அப்பூதியடிகள் வைத்துத் தொண்டு செய்த "ஈறில் பெருந் தண்ணீர்ப் பந்தல்" - பிதான சாலையில் உள்ள முனியாண்டார்
கோயிலின் கீழ்ப்புறம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்போதும் சிறு மண்டபம் உள்ளது.
- உள் மண்டபத்தில் இடப்புறம் அப்பூதியடிகள், அவருடைய மனைவியார், மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு
ஆகியோர் மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து கோயிலின் முன்புள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, சந்திரனின் சந்நிதியில் பரிகாரம்
செய்து கொள்வது இன்றும் நடைமுறையில் உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவையாறு - கும்பகோணம் பேருந்துச் சாலையில் திருப்பழனத்திற்கு முன்பாகவே, சாலையில் "திங்களூர்" என்று கைகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் திங்களூர் பாதையில் சென்றால் திங்களூரை அடையலாம்.
|