|
Home > Temples of India > vaippu sthalam
தண்டந்தோட்டம்
இறைவர் திருப்பெயர் : நடனபுரீசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : சிவகாமசுந்தரி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : அகத்தியர்.
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - அண்டத் தண்டத்தின் (7-12-2).
தல வரலாறு
- அகத்தியருக்கு இறைவன் திருமண கோலத்தைக் காட்டி அருள்புரிந்த தலம்.
- இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
சிறப்புக்கள்
- நர்த்தனபுரம், தாண்டவபுரி என்ற வேறு பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.
- முன் மண்டபத்தின் நேரே அம்பாள் சந்நிதி. இடப்புறம் சுவாமி சந்நிதி உள்ளது.
- இக்கோயிலுக்குப் பக்கத்தில் பழைமையான சிவலிங்கம் ஒன்று உள்ளது, இவர் பெயர்
அருள்மிகு அகத்தீசுவரர் என்று சொல்கிறார்கள்.
- இத்தலத்திற்கு வந்து வழிபடுவோருக்கு தடைபட்டு வந்த திருமணம் கைக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரம் தாண்டி, தண்டந்தோட்டம் 4 கி.மீ. என்று கைகாட்டி உள்ள இடத்தில் திரும்பி சென்றால் நடுவக்கரை - புண்டரீகபுரம் - முருக்கங்குடி - ஆகிய ஊர்களைக் கடந்து சற்றுத் தொலைவு சென்றால் "தண்டந்தோட்டம்" ஊரை அடையலாம்.
|