|
Home > Temples of India > vaippu sthalam
தகட்டூர்
இறைவர் திருப்பெயர் : பைரவநாதசுவாமி. (சிவலோக நாதர்)
இறைவியார் திருப்பெயர் : (சிவகாமசுந்தரி)
தல மரம் : நாவல்.
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - வீழக் காலனைக் (7-12-1).
தல வரலாறு
- கோயிலின் மகா மண்டபத்தில் அமைந்துள்ள பீடத்தில் பஞ்சாட்சர யந்த்ரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே 'யந்த்ரபுரி'
என்ற பெயருமுண்டு. இதுவே தமிழில் (தகடு + ஊர்=) தகட்டூர் என்றழைக்கப்படுகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- மூலவராக பைரவரே எழுந்தருளியுள்ளார். அவருக்கே உற்சவம் முதலிய அனைத்தும் நடைபெறுகின்றன.
- பிராகாரத்தில் பின்புறத்தில் சிவலோக நாதரும், சிவகாம சுந்தரியும் எழுந்தருளியுள்ளனர்.
- இங்கு பிரதான மூர்த்தி பைரவநாத சுவாமியே ஆவார்.
- கோயில் கருவறை கல் கட்டமைப்புடையது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் 'வாய்மேடு' வந்து விசாரித்து சிறிது தூரம் வந்தால் தகட்டூரை அடையலாம்.
|