|
Home > Temples of India > vaippu sthalam
தவத்துறை - (லால்குடி)
இறைவர் திருப்பெயர் : சப்தரிஷீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : மஹாசம்பத் கௌரி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : மகாலட்சுமி, சப்த ரிஷிகள் (வசிட்டர், அத்ரி, பிருகு, புலத்தியர், கௌதமர், ஆங்கீரசர், மரீசி) முதலியோர்.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - கயிலாயமலை யெடுத்தான் (6-71-11).
தல வரலாறு
- தற்போது மக்கள் வழக்கில் "லால்குடி" என்று வழங்குகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- இது திருப்புகழ் பெற்ற தலமும் ஆகும்.
- வசிட்டர் முதலிய ஏழு (வசிட்டர், அத்ரி, பிருகு, புலத்தியர், கௌதமர், ஆங்கீரசர், மரீசி) முனிவர்கள் வழிபட்ட தலம்.
- வழிபட்ட முனிவர்களின் திருவுருவங்கள் கோயிலில் உள்ளன.
- மகாலட்சுமி வழிபட்டதலம்.
- தாண்டகத்தில் இத்தலம் எழுவர் தவத்துறை என்று குறிக்கப்படுகிறது.
- கோயிலில் தலப்பதிகக் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளன.
- நால்வர்களையொட்டி, நாயன்மார்களின் மூலத் திருமேனிகள் வரிசையாக உள்ளன.
- கருவறையின் வெளிப்புறத்தில் மேலும் கீழும் நிரம்ப கல்வெட்டுக்கள் உள்ளன. இடையில் யானை - யாளி சிற்பங்கள் சுற்றிலும் வரிசையாக
உள்ளன.
- சக்தி விநாயகரின் பக்கத்தில் தலத்துத் திருப்புகழ்க் கல்வெட்டுள்ளது.
- தியாகப் பிரம்மம் இங்கு வந்துத் தங்கிப் பாடியுள்ள ஐந்து கீர்த்தனைகளும் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளன.
- தலத்துக்குரிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் அம்பாள் சந்நிதியில் உட்புறச் சுவரில் பதிக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
லால்குடி பேருந்து நிலையத்திலிருந்து ஊருள் செல்லும் சாலையில் நேரே சென்று ரயில்வே லைனைக் கடந்து - சுமார் 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். திருச்சிக்கு அருகாமையில் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.
|