சூலமங்கை - (சூலமங்கலம்)

 
இறைவர் திருப்பெயர்		: கிருத்திவாகேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: அலங்காரவல்லி. 
தல மரம்			: வில்வம்
தீர்த்தம்				: சூலதீர்த்தம்
வழிபட்டோர்			: அஸ்திரதேவர், 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நறையூரிற் சித்தீச் (6-70-10). 

full view of temple

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் 'சூலமங்கலம்' என்று வழங்குகிறது.

  • அஸ்திரதேவர் வழிபட்டு, திருவிழாக் காலங்களிலும், தீர்த்த வாரியிலும் தான் முதன்மையாக விளங்கத்தக்க வரத்தை இறைவனிடம் பெற்ற தலம்.

  • சப்தமங்கையரில் சூலமங்கை வழிபட்டதனால் சூலமங்கை என்றாயிற்று என்றும் சொல்லப்படுகின்றது.

  • தேவர்களுக்கு கஜ சம்ஹாரமூர்த்தியாக காட்சியளித்த தலம்.

chUla thEvar

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • பெரிய சிவாலயம்; கல் திருப்பணி.

  • ஊரின் பெயருக்கேற்றவாறு, வெளி வாயிலின் புறத்தில் - சூலம் தலைமீது ஏந்திய மங்கையொருத்தியின் உருவம் கைகளைக் கட்டிக் கொண்டு உள்ளது. ஊர்ப் பெயரும் சூலம் ஏந்திய மங்கை - சூலமங்கை என்றாயிருக்க வேண்டும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - தஞ்சாவூர் பேருந்துப் பாதையில் ஐயம்பேட்டை மாற்றுப் பாதையில் வந்து ரயில்வே நிலையச் சாலையில் திரும்பிச் சென்றால் வெகு சமீபத்தில் சூலமங்கலம் உள்ளது.

< PREV <
சிவப்பள்ளி
Table of Contents > NEXT >
திருச்செங்குன்றூர்

சப்த மங்கைத் தலங்கள்:
< PREV <
அரியமங்கை
Table of Contents > NEXT >
பசுமங்கை