சோமங்கலம்

(Somangalam)

 
இறைவர் திருப்பெயர்		: சோமநாதீசுவரர். 
இறைவியார் திருப்பெயர்		: காமாட்சியம்மன். 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: சந்திரன், தொண்டைமான் என்னும் மன்னன். 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.10). 

தல வரலாறு

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • இத்தலத்திற்கு வேதீச்சுரம், சதுர்வேதிமங்கலம் என்றும் பெயருண்டு.

சிறப்புக்கள்

  • இக்கோயிலில் நந்தியம்பெருமான் சுவாமியை பார்த்திராமல், கிழக்கு நோக்கியுள்ளார்.

  • இத்தலத்து நடராஜருக்கு சதுர தாண்டவ நடராஜர் என்று பெயர்; இவ்வூருக்கு சதுர்வேதிமங்கலம் என்றொரு பெயருண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

  • சோழர்கள் காலத்திய திருக்கோயில்.

  • கோயிலில் கல்வெட்டுக்கள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து 16 கி. மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.

< PREV <
செம்பங்குடி
Table of Contents > NEXT >
தக்களூர்