|
Home > Temples of India > vaippu sthalam
சிவப்பள்ளி
இறைவர் திருப்பெயர் : கைலாசநாதர்.
இறைவியார் திருப்பெயர் : பார்வதி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - பொருப்பள்ளி வரைவில்லாப் (6-71-1).
தல வரலாறு
- தற்போது திருச்செம்பள்ளி என்று இப்பகுதி வழங்குகிறது. செம்பொன்னார் கோயிலின் ஒருபகுதி.
- திருச்சிவன்பள்ளி - திருச்சிவம்பள்ளி என்று மாறி இன்று திருச்செம்பள்ளி என்றாகியுள்ளது.
- தக்கன் யாகத்திற்கு உமையம்மை வந்தபோது முருகனும் உடன் வந்ததாகவும், அம்மை சென்ற பின் குமரன் இங்குத்
தங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- வீரபத்தரரின் சிரசில் சிவலிங்கமும் திருவடிக் கீழ் தக்கன் உருவமும் காட்சி தர கையில் வாளேந்தி (வீரபத்திரர்)
காட்சியளிக்கின்றார். இங்கிருந்து சற்று தொலைவில் திருப்பறியலூர் உள்ளது; தக்கனைச் சம்ஹரித்த வீரட்டத் தலம்.
- வீரபத்திரர் இவ்வழியாகச் சென்றதாகக் கூறுகின்றனர்.
- சிவப்பள்ளி தரிசனம், இக்குமரன் கோயிலுக்கு வந்து அருள்மிகு கைலாசநாதர், பார்வதியைத் தரிசிக்கும் அளவில்
பூர்த்தியாகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
செம்பொனார் கோயில் - அஞ்சல் - 609309, மயிலாடுதுறை வழி, நாகை மாவட்டம்.
|