சடைமுடி (கோவிலடி)

Sadaimudi (Koviladi)

இறைவர் திருப்பெயர்		: திவ்யஞானேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: அகிலாண்டேஸ்வரி.
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - இடைமரு தீங்கோ (6-70-3).

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் 'கோவிலடி' என்று வழங்குகிறது.

  • இவ்வூருக்குத் 'திருப்பேர் நகர்' என்றொரு பழைய பெயர் இருந்ததாகத் தெரிகிறது.

  • 'சடைமுடி' என்னுர் ஊர், 'கோயிலடி' என்னும் ஊருக்கு வடபாலிருந்து மறைந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • இவ்வூர்ச் சிவாலயக் கல்வெட்டுக்களில் 1. "பாண்டி குலாசினி வளநாட்டு, வல்ல நாட்டு மேலைமுரி திருச்சடைமுடித் திருச்சடைமுடியுடைய மகாதேவர் கோயிலில்......" என்றும், 2. "திருப்பேர் பெருங்குறி மகாசபையோம் இவ்வூர் வடபிடாகை திருச்சடைமுடித் திருச்சடைமுடியுடைய மகாதேவர் கோயிலில்....." என்றும் வருந்தொடர்களிலிருந்து சுவாமி, ஊர்ப்பெயர்களை அறியலாம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
(1) திருக்காட்டுப்பள்ளியிலிருந்து காவிரிப் பாலம் தாண்டி, கல்லணை சாலையில் 8 கி.மீ. சென்றால் 'கோவிலடி'யை அடையலாம். (2) கும்பகோணம் - திருவையாறு - கல்லணை சாலையில், கல்லணைக்கு முன்னால் 8 கி.மீ-ல் 'கோவிலடி'யை அடையலாம்.

< PREV <
கோவந்தபுத்தூர்
Table of Contents > NEXT >
சித்தவடமடம்