பொன்னூர் நாட்டுப் பொன்னூர் (பொன்னூர்)

Ponnur Nattu Ponnur (Ponnur)

 
இறைவர் திருப்பெயர்		: பராசரேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: சாந்தநாயகி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: பிரமன். 
வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - தென்னூர் கைம்மைத் (7-12-6). 

தல வரலாறு

  • சுவாமி - "பராசரேஸ்வரர், காமேஸ்வரம் உடையார்" என்று வழங்கப்பெறுகிறார்.

  • இன்று மக்கள் வழக்கில் திருக்காமேஸ்வரர் என்ற பெயரே வழங்குகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • பிரமன் வழிபட்டதால் இத்தலத்திற்கு பிரமபுரி, சுவர்ணபுரி என்னும் பெயர்களுண்டு.

  • சம்புவராயர்கள் காலத்தில் வருவாய் மையமாக - பெரிய ஊராக இஃது இருந்துள்ளது.

  • இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 1300 ஆண்டுப் பழமையுடைய கற்கோயில். இது பெரிய ஊராக இருந்தமையால் சுந்தரர் இதனை 'பொன்னூர் நாட்டுப் பொன்னூர்' என்று பாடுகிறார்.

  • சுவாமிக்கு பரமீசுரம் உடைய நாயனார், பராசர ஈஸ்வரமுடைய நாயனார் என்ற பெயர்கள் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

  • இக்கோயிலுக்குக் குலோத்துங்க சோழன், விஜயநகர மன்னர்கள், சுந்தரபாண்டியன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
வந்தவாசியிலிருந்து தேசூர், கீழ்ப்புத்தூர் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். அல்லது வந்தவாசி - திண்டிவனம் சாலையில் சென்று; பொன்னூர் 4 கி. மீ. என்று பெயர்ப் பலகையுள்ள இடத்தில் திரும்பி பொன்னூர் சாலையில் செல்லவேண்டும்.

< PREV <
பொய்கைநல்லூர்
Table of Contents > NEXT >
மகனூர்