பழையாறை (கீழப்பழையாறை)

Pazhayarai (Keezha Pazhayarai)

 
இறைவர் திருப்பெயர்		: சோமநாதசுவாமி. 
இறைவியார் திருப்பெயர்		: சோமகலாம்பிகை. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: சந்திரன். 
வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - ஆறை வடமா கறலம்பர் (2-39-5) 
				  அப்பர் - கொடிமாட நீடெருவு (6-13-1). 

தல வரலாறு

  • இஃது பழையாறை, வடதளி என்று இரு தலங்களாக உள்ளன. வடதளி (பழையாறை வடதளி) என்பது பாடல் பெற்ற தலம். "பழையாறை" - வைப்புத் தலமாகும்.

  • மக்கள் வழக்கில் 'கீழப் பழையாறை - கீழப் பழையார்' என்று வழங்குகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் சம்பந்தர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • சந்திரன் வழிபட்ட தலம்.

  • அமர்நீதி நாயனார் வாழ்ந்த பதி.

  • கற்கோயில்.

  • சோழர்களின் பழைமையான தலைநகரம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் முழையூர் வந்து - பிரதான சாலையில் பட்டீச்சரம் - மருதநல்லூர் சாலையில் சென்று, கோயிலை அடையலாம்.

< PREV <
பரப்பள்ளி
Table of Contents > NEXT >
பன்னூர்