பரப்பள்ளி (பரஞ்சேர்வழி)

Parappalli (Paranjervazhi)

 
இறைவர் திருப்பெயர்		: மத்தியபுரீஸ்வரர், நட்டூர்நாதர். 
இறைவியார் திருப்பெயர்		: சுகந்த குந்தளாம்பிகை, நட்டுவார் குழலியம்மை. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - பொருப்பள்ளி வரைவில்லாப் (6-71-1). 

தல வரலாறு

  • இன்று மக்கள் வழக்கில் 'பரஞ்சேர்வழி' என்று வழங்குகிறது.

  • ஊர் - நட்டூர்; கோயில் - பரன்பள்ளி என்று வழங்கியது. பரன் = சிவன்; பள்ளி = கோயில்.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • இவ்வூருக்கு வழங்கும் பெயர்களுள் 'நட்டூர்' என்பது மிகப் பழைய பெயராகும். இது சம்ஸ்கிருதத்தில் 'நடுஊர்' என்ற பொருளில் 'மத்யபுரி' எனப்படும். இதனால் இவ்விறைவனுக்கு மத்யபுரீஸ்வரர் என்ற பெயருமுண்டு.

  • கோயில் கருங்கல் திருப்பணி.

  • மூலவர் - சிவலிங்கத் திருமேனி; சதுர ஆவுடையார்.

  • வெளியில் உள்ள நந்நி நீர் கட்டும் அமைப்பில் உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காங்கோயம் - சென்னிமலை / பெருந்துறை சாலையில் உள்ள 'நால்ரோடு' என்னுமிடத்திற்கு, "நத்தக்காடையூர்" வழி காட்டியுள்ள இடத்தில், அவ்வழிகாட்டி காட்டும் திசையில், செல்லும் சாலையில் 3 கி.மீ. சென்றால் 'பரஞ்சேர்வழி' ஊரையடையலாம்.

< PREV <
பஞ்சாக்கை
Table of Contents > NEXT >
பழையாறை