|
Home > Temples of India > vaippu sthalam
ஊற்றத்தூர் - (ஊட்டத்தூர்)
இறைவர் திருப்பெயர் : சுத்தரத்னேஸ்வரர், தூயமாமணீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : அகிலாண்டேஸ்வரி.
தல மரம் :
தீர்த்தம் : பிரம தீர்த்தம்.
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நறையூரிற் சித்தீச் (6-70-10), பிறையூருஞ் சடைமுடியெம் (6-71-4).
தல வரலாறு
- இத்தலம் தற்போது மக்களால் "ஊட்டத்தூர்" என்று வழங்கப்படுகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- பழமையான பெரிய கோயில்; உயர்ந்த ராஜ கோபுரத்தைக் கொண்டது.
- நந்தியெம்பெருமான் சற்று பெரிய திருமேனி.
- கோயிலுள்ளே தீர்த்தக் கிணறு உள்ளது. இஃது பிரம தீர்த்தம் எனப்படுகிறது.
- இக்கோயிலுக்குரிய விசேஷ மூர்த்தியாக - நடராசப் பெருமான் மூலத் திருவுருவில் பேருருவில் அற்புதமாகக் காட்சியளிக்கின்றார்.
பக்கத்தில் சிவகாம சுந்தரி - இவர் சற்றுப் பார்வையைச் சாய்த்து சுவாமியைப் பார்ப்பது போன்ற அமைப்பு; காணக்கண் கோடி வேண்டும் அத்தனை அழகு.
- இதுவன்றித் தனிச் சபையில் நடராசரும், சிவகாமியும் எழுந்தருளியுள்ளனர்.
- வீரபத்திரர் சந்நிதி உள்ளது.
பழைய நூலில் சுவாமியின் பெயர் 'சுந்தரவனேஸ்வரர்' என்றுள்ளது.
- சுந்தரர் குருபூசை முதலிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
- கல்வெட்டில் இவ்வூர் "ராஜராஜ வளநாட்டு ஊற்றத்தூர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் வந்து - 'புள்ளம்பாடி' சாலையில் 5 கி.மீ. சென்றால் "ஊட்டத்தூரை" அடையலாம்.
|