நெடுவாயில் (நெடுவாசல்)

Neduvayil - (Neduvasal)

 
இறைவர் திருப்பெயர்		: சௌந்தரேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: அகிலாண்டேஸ்வரி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - நெற்குன்றம் ஓத்தூர் (2-39-9) 
				  அப்பர் - கடுவாயர் தமைநீக்கி (6-71-7). 

தல வரலாறு

  • இத்தலம் தற்போது நெடுவாசல் என்று வழங்குகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • இங்குள்ள விநாயகர், குளத்தில் கண்டெடுக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது.

  • இத்தலம் இடம் பெறும் இரு பாடல்களும் கல்வெட்டில் பதிக்கப்பெற்றுள்ளது.

குறிப்பு :-

  • அறந்தாங்கி வட்டத்தில் நெடுவாசல் என்றொரு ஊர் உள்ளது; எனினும் அங்குக் கோயிலில்லை. எனவே இந்த நெடுவாசல் ஊரே வைப்புத் தலமாகக் கொள்ளப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறையிலிருந்து சங்கரன்பந்தல் செல்லும் (வழி - செம்பனார்கோயில் - மேமாத்தூர்) சாலையில் நெடுவாயிலுக்கு பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் நெடுவாசலை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து 25 கி.மீ. தொலைவு. நகரப் பேருந்து செல்கிறது.

< PREV <
நியமம்
Table of Contents > NEXT >
நெய்தல்வாயில்