நல்லக்குடி - நல்லத்துக்குடி

Nallakkudi - Nallathukkudi

 
இறைவர் திருப்பெயர்		: ஆலந்துறையப்பர். 
இறைவியார் திருப்பெயர்		: குயிலாடு நாயகி, குயிலாண்ட நாயகி. 
தல மரம்			: வில்வம். 
தீர்த்தம்				: சூரிய புஷ்கரணி. 
வழிபட்டோர்			: சூரியன். 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நற்கொடிமேல் விடையுயர்த்த (6-71-3). 

தல வரலாறு

  • தற்போது நல்லத்துக்குடி என்று வழங்குகிறது.

  • இவ்வூர் குயிலாடுதுறை - குயிலாலந்துறை என வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • சூரியன் பூசித்தத் தலம்.

  • சூரிய புஷ்கரணியில் நீராடி இவ்விறைவனை வழிபடுவோர் தொழு நோய் முதலிய சரும நோய்கள் நீங்கப்பெற்று குணமடைவர் என்று சொல்லப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - நெடுமருதூர் சாலையில் இவ்வூர் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து 2 கி. மீ. தொலைவு. நகரப் பேருந்து செல்கிறது. மயிலாடுதுறையிலிருந்து கோடங்குடி செல்லும் பேருந்தில் சென்றால் கோயிலருகே இறங்கலாம்.

< PREV <
நந்திகேச்சுரம் - நந்திவரம்
(சென்னை அருகில்)


(அல்லது)
நந்திகேச்சுரம் (மைசூர் அருகில்)
Table of Contents > NEXT >
நல்லாத்தூர்