மிழலை நாட்டு மிழலை
(தேவமலை)

 
இறைவர் திருப்பெயர்		: தேவநாதர். 
இறைவியார் திருப்பெயர்		: தேவநாயகி. 
தல மரம்			: 
தீர்த்தம்				: தேவ தீர்த்தம் 
வழிபட்டோர்			: குறும்ப நாயனார். 
வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - குழலை வென்ற மொழிமட (7-12-5). 

தல வரலாறு

 • இது 'பெருமாநல்லூர்' என்று வழங்கியது; இப்பெயரும் இன்று மாறி, வழக்கில் "தேவமலை" என்று வழங்குகிறது. (இங்குள்ள மலையின் பெயரே தேவமலையாகும்.)

சிறப்புக்கள்

 • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 • குன்றைக் குடைந்து கோயில் எடுத்துள்ளனர்.

 • ஊரயமான மலைப் பகுதியில் கோயில் தனிமையாகவுள்ளது.

 • இது பெருமிழலைக் குறும்ப நாயனாரின் அவதார தலம். நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் தேவர்மலையில் கொண்டாடப்படுகின்றது.
  	அவதாரத் தலம்	: மிழலைநாட்டு மிழலை (அல்லது மிழலைநத்தம் எனும் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள தலம்) - ஆய்வுக்குரியது.
  	வழிபாடு		: குரு வழிபாடு.
  	முத்தித் தலம் 	: தேவமலை என வழங்கும் மிழலைநாட்டு மிழலை (பெருமிழலை).
  	குருபூசை நாள் 	: ஆடி - சித்திரை.
  

 • தேவமலையின் அடிவாரத்தில் ஓர் குகை கோயில் உள்ளது; இங்கு குறும்ப நாயனார் உருவம் சிற்பமாக (குடைந்து) செதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஓர் சமாதியுமுள்ளது, இது குறும்ப நாயனாரின் சமாதி எனக் கூறப்படுகிறது.

 • பெரிய குடவரைப் பிள்ளையார் உள்ளார்.

 • சில படிகள் கீழிறங்கிப் பார்த்தால் சில முனிவர்களின் திருவுருவச் சிலைகள் உள்ளன.

 • மண்டபத்தில் அம்பாள் திருமேனி தனியேயுள்ளது; தேவ தீர்த்த முள்ளது.

 • ("தேவமலை"க்கு அருகில் உள்ளது பேறையூர். இங்குள்ள நாகநாத சுவாமி கோயில் மிகப் பிரசித்தி பெற்றப் பிரார்த்தனைத் தலமாகும். எண்ணற்ற நாகப் பிரதிஷ்டைகள் உள்ளன. இஃது ராகு தோஷ நிவர்த்தி தலம். இங்குச் செல்வோர் இப்பேறையூர்ச் சிவாலயத்தை அவசியம் தரிசித்து வரலாம்.)

 • குறிப்பு :- 'மிழலை நாட்டு மிழலை' என்னும் இத்தலம் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள தலமென்று கூறுவாரும் உள்ளார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
புதுக்கோட்டை - காரைக்குடிச் சாலையில், நடன சமுத்திரம் ரயில்வே லெவல் கிராசிங்கைக் கடந்து - வலமாகப் பிரியும் பொன்னமராவதிச் சாலையில் வந்து - பேறையூர் சாலையில் பிரிந்து பேறையூரை அடைந்து - நற்சாந்துப்பட்டி போகும் சாலையில் 2 கி.மீ. சென்று - குமரமலைக்குப் போகும் சாலையில் 1 கி.மீ. சென்றால் - "தேவமலை"க்குப் போகும் வண்டிப்பாதை வரும், அதிலிருந்து 1 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். (கடினமான பயணம், ஆங்காங்கே விசாரித்துச் செல்வது நலம்.)


 • பெருமிழலைக் குறும்ப நாயனார் வரலாறு (மூலம்)

  < PREV <
  மாறன்பாடி
  Table of Contents > NEXT >
  முழையூர்