மாறன்பாடி (இறையூர் / எறையூர்)

Maranpadi (Iraiyur / Eraiyur)

 
இறைவர் திருப்பெயர்		: தாகம்தீர்த்தபுரீசுவரர். 
இறைவியார் திருப்பெயர்		: அன்னபூரணி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - அட்டா னமென் றோதியநா (2-39-3). 

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் இறையூர் - எறையூர் என்று வழங்குகிறது.

  • திருமுதுகுன்றம், பெண்ணாகடம் தொழுத திருஞானசம்பந்தர் நெல்வாயில் அரத்துறையைத் தரிசிக்கச் செல்லும் வழியில், மாலை பொழுது ஆனமையின் மாறன்பாடியை அடைந்து அவ்விரவு தங்கினார். அவருடைய நடைக்களைப்பையுணர்ந்த இறைவன் அன்றிரவு அவ்வூரில் உள்ளவர்களின் கனவில் தோன்றி, "நம்மைத் தொழ வருகின்ற ஞானசம்பந்தனுக்குத் தருவதற்காக முத்துச்சிவிகை, குடை, சின்னம் முதலியவற்றை அளித்துள்ளோம். அவற்றை எடுத்துச் சென்று அவரை எம்மிடம் அழைத்து வருக" என்றருளினார். விழித்த அவர்கள் காலையில் சென்று, கோயிலில் அவைகள் இருக்கக் கண்டு அதிசயித்து, அவ்வாறே அவற்றை எடுத்துச் சென்று ஞானசம்பந்தரை வரவேற்றனர். திருவருட் கருணையை வியந்த திருஞானசம்பந்தர், ஐந்தெழுத்து ஓதி அச்சிவிகையில் ஏறி அரத்துறை சென்றார் என்பது வரலாறு.

சிறப்புக்கள்

  • இத்தலம் சம்பந்தர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • திருஞானசம்பந்தருக்கு, அரத்துறை நாதர் முத்துச் சிவிகை தந்த தலம்.

  • திருஞானசம்பந்தரும் அரத்துறைநாதரும் தனித்தனி விமானங்களில் எழுந்தருளியுள்ளனர்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
விருத்தாசலம் - பெண்ணாகடம் - திட்டக்குடி பேருந்துச் சாலையில், பெண்ணாகடத்தை அடுத்துள்ளது. (பெண்ணாகடம் - திருநெல்வாயில் அரத்துறை இவற்றிற்கு இடையில் உள்ளது.) அருணா சர்க்கரை ஆலை மேனிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் செல்லலாம்.

< PREV <
மாட்டூர் - (மாத்தூர்)

(OR)
மாட்டூர் - (சேவூர்)
Table of Contents > NEXT >
மிழலை நாட்டு மிழலை