|
Home > Temples of India >
vaippu sthalam
மந்தாரம் - (ஆத்தூர் / ஆற்றூர்)
Mandharam - (Athur / Artrur)
இறைவர் திருப்பெயர் : மந்தாரவனேஸ்வரர், சொர்ணபுரீசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : அஞ்சனாட்சி, அங்கயற்கண்ணி.
தல மரம் : மந்தாரை.
தீர்த்தம் : மண்டூக தீர்த்தம்.
வழிபட்டோர் : நந்தி, தவளை.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - மண்ணிப் படிக்கரை (6-70-6).
தல வரலாறு
- மக்கள் வழக்கில் ஆத்தூர் என்று வழங்குகிறது.
- மந்தார வனம் என்ற பெயர் மந்தாரம் ஆயிற்று.
சிறப்புக்கள்
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
ஊரின் பெயர், இறைவனின் பெயர்களை நோக்குங்கால், முன்பொரு காலத்தில் இவ்வூர் மந்தார வனமாக இருந்தமை புலனாகிறது.
நந்நி பூசித்த; தவளை முத்தி பெற்ற தலம். இச்சிற்பங்கள் கோயில் மதிற் சுவரில் உள்ளன. பழமையான கோயில்.
- இத்தலத்திற்கு தலபுராணம் பாடியுவர், மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் ஆவார்.
- மார்கழி திருவாதிரை உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- இத்தலத்தில் சோழர்கால கல்வெட்டுக்கள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
வைத்தீஸ்வரன்கோயில் - திருப்பனந்தாள் சாலையில் மணல்மேடு வந்து பந்தநல்லூர் சாலையில் திரும்பிச் சென்று - விசாரித்துச் சென்று ஆத்தூரை
(ஆற்றூரை) அடையலாம். மண்ணியாற்றின் கரையில் கோயில் அமைந்துள்ளது.
|