குண்டையூர்

(Kundaiyur)

 
இறைவர் திருப்பெயர்		: சுந்தரேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: மீனாட்சி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: குண்டையூர் கிழார். 
வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - நீள நினைந்தடி யேனுமை (7-20-1). 

தல வரலாறு

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

சிறப்புக்கள்

  • சுந்தரருடைய திருமாளிகைக்கு செந்நெல், அரிசி, பருப்பு முதலியவற்றை அனுப்பும் திருத்தொண்டைச் செய்து வந்த குண்டையூர் கிழார் வாழ்ந்த திருத்தலம்.

  • ஒரு சமயம் சுந்தரர் திருக்கோளிலிக்கு வந்து பெருமானிடம், குண்டையூர் கிழார் மூலமாகத் தாம் பெற்ற நெல்லைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல ஆள்வேண்டப் பெருமான் பூதகணங்களை அனுப்பி அந்நெல்லை திருவாரூரில் சேர்ப்பித்தருளினார்.

  • சுந்தரேஸ்வரரை மக்கள் சொக்கநாத சுவாமி என்றழைக்கின்றனர். சொக்கநாத சுவாமி தேவஸ்தானம் என்பதே வழக்கில் உள்ளது; வெளியில் இருப்பது இச்சந்நிதி. உள்ளேஇருப்பது ரிஷபபுரீசுவரர், மங்களாம்பிகை சந்நிதியாகும்.

  • இக்கோயிலுக்கு முன்னால் மாறிமாறிக் காய்க்கும் இரு ஆத்தி மரங்கள் உள்ளன.

  • சுந்தரர் நெல் பெற்ற விழா மாசி மக நாளில் நடைபெறுகிறது.

  • கோயிலில் குண்டையூர் கிழாரின் மூல / உற்சவத் திருமேனிகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருக்குவளை என்று வழங்கும் திருக்கோளிலிக்குப் பக்கத்தில் 1 கி.மீ.ல் (திருக்குவளை - சாட்டியக்குடி சாலையில்) குண்டையூர் உள்ளது.

< PREV <
குகையூர்
Table of Contents > NEXT >
குணவாயில்