|
Home > Temples of India > vaippu sthalam
கூந்தலூர்
இறைவர் திருப்பெயர் : ஜம்புகாரண்யேசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : ஆனந்தவல்லி.
தல மரம் :
தீர்த்தம் : குமார தீர்த்தம், சீதா தீர்த்தம்.
வழிபட்டோர் : நரி - (ஜம்பு), முருகன், உரோம மகரிஷி, சீதை.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6-70-9).
தல வரலாறு
- கூந்தப்பனை பனை மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இப்பகுதி கூந்தலூர்
என்று பெயர் பெற்றது.
- உரோம மகரிஷி வழிபட்டதாலும் இவ்வூர் கூந்தலூர் என்று பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. (ரோமம் - கூந்தல்).
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- நரி (ஜம்பு - நரி) வழிபட்ட தலம்; ஆதலின் இது ஜம்புகாரண்யம் எனப்பட்டது.
- இத்தலம் திருப்புகழ் பெற்ற தலமுமாகும்.
- கோபுர வாயிலில் உட்பக்கம் இடப்பால் உரோம மகரிஷி உருவம் உள்ளது.
- சீதையும் இங்கு வழிபட்டதாக சொல்லப்படுகிறது.
- தெற்கில் குமார தீர்த்தமும், ஈசாண்யத்தில் சீதா தீர்த்தம் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - பூந்தோட்டம் சாலையில் புதுக்குடியை அடுத்து எரவாஞ்சேரிக்கு முன்னால் சாலையோரத்தில் கூந்தலூர் உள்ளது.
|