|
Home > Temples of India > vaippu sthalam
கொண்டல்
இறைவர் திருப்பெயர் : தாரகபரமேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : மகாவிஷ்ணு.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - கொண்டலுள்ளார் கொண்டீச் (6-51-9), சுந்தரர் - அண்டத் தண்டத்தின் (7-12-2).
தல வரலாறு
- முருகனிடம் உபதேசம் கேட்ட இறைவனுடன் வந்த மகாவிஷ்ணு வழிபட்ட தலம் ஆதலின் 'கொண்டல் வண்ணன் குடி'
என்று இஃது பெயர் பெற்றது.
- 'கொண்டல் வண்ணன் குடி' என்பது மருவி, கொண்டல் வள்ளுவக்குடி என்றாகி; ஊர் இரண்டாகப் பிரிந்தபோது
கொண்டல் - வள்ளுவக்குடி என்றானது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர், சுந்தரர் ஆகியோர்களின் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- இத்தலம் "கீழப் பழனி என வழங்கும் கொண்டல் குமார சுப்பிரமணியர்" என்று வழக்கில் வழங்குகிறது.
- அருணகிரி நாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும்.
- முன்மண்டபம் தாண்டிச் சென்றால் நேரே மூலவராக குமார சுப்பிரமணியர் தரிசனம்; பக்கத்தில் தாரகபரமேஸ்வரர்
எழுந்தருளியுள்ளார்.
- கோயிலுக்குப் பின்புறம் நந்தவனம் இருக்கிறது.
- 1978ல் நடந்த மகாகும்பாபிஷேக விவரக் கல்வெட்டு, கோயிலில் பதிக்கப்பட்டுள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சீகாழியிலிருந்து பனங்காட்டங்குடி செல்லும் சாலையில், ரயில்வே லைனைத் தாண்டி அச்சாலையில் சென்றால், 6வது கி.மீல்
'கொண்டல்' உள்ளது. கொண்டல் முருகன் கோயில் என்று விசாரித்து சென்றால் எளிது.
|