|
Home > Temples of India > vaippu sthalam
கீழையில் - கீழையூர்
இறைவர் திருப்பெயர் : செம்மலைநாதர்.
இறைவியார் திருப்பெயர் : வண்டமரும் பூங்குழலாள்.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : பஞ்ச பாண்டவர்கள்.
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - ஈழ நாட்டுமா தோட்டந்தென் (7-12-7).
தல வரலாறு
- மக்கள் தற்போது கீழையூர் என்று வழங்குகின்றனர்.
- வனவாசத்தின்போது பாண்டவர்கள் இங்கு வந்து ஐந்து சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. மூலத்தானத்தில் விளங்கும் லிங்கம் அருச்சுனனின் பிரதிஷ்டையாகச் சொல்லப்படுகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- கோயிலுள் இரு பலாமரங்கள் நன்கு காய்த்து வருமானத்திற்கு உதவுகின்றன.
- இவ்வூரை'அருமொழி தேவ வளநாட்டு அளநாட்டுக் கீழையூர்' என்று கல்வெட்டுக் குறிக்கின்றது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் சென்று - 'கருங்கண்ணி'யைத் கடந்தால் - கீழையூரை அடையலாம்.
|