கஞ்சாறு - கஞ்சாறூர்
(ஆனந்ததாண்டவபுரம் - ஆனதாண்டவபுரம்)

 
இறைவர் திருப்பெயர்		: ஆனந்த தாண்டவரேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர், 
				 பஞ்சவடீஸ்வரர், பாரிஜாதவனேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: பிருகந்நாயகி, கல்யாண சுந்தரி. 
தல மரம்			: (பாரிஜாதமாக இருக்கலாம்)
தீர்த்தம்				: அமிர்த பிந்து தீர்த்தம். 
வழிபட்டோர்			: பரத்வாஜ மகரிஷி, ஆநந்த முனிவர், மானக்கஞ்சாற நாயனார். 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - உஞ்சேனை மாகாளம் (6-70-8). 

தல வரலாறு

 • கஞ்சாறு என்னும் இத்தலம் தற்போது ஆனதாண்டவபுரம் என்று வழங்குகிறது.

 • இங்கு வாழ்ந்திருந்த ஆநந்த முனிவர் என்பவர் காலையில் சேதுஸ்நானமும் அர்த்த சாமத்தில் சிதம்பர நடராச தரிசனமும் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் நீராடி முடித்துத் தரிசனத்திற்குச் செல்லுங்கால் மழையாலும் இரவாலும் தடையேற்பட, தாங்கிக் கொள்ள முடியாத முனிவர் தன்னுயிரைப் போக்கிக் கொள்ள ஒரு மரத்தில் சுருக்கிட்டுக் கொள்ள, நடராசப்பெருமான் அவருடைய முகத்திற்கு நேரே திருவடியைக் காட்டி, ஆனந்த தாண்டவம் செய்தருளினார். ஆதலின் இங்குள்ள நடராசர் "ஆனந்த தாண்டவ நடராசர்" என்றழைக்கப்படுகிறார்.

சிறப்புக்கள்

 • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 • மானக்கஞ்சாற நாயனாரின் அவதாரத்தலம்.
  	அவதாரத் தலம்	: கஞ்சாறு (ஆனதாண்டவபுரம் - ஆனந்ததாண்டவபுரம்)
  	வழிபாடு		: சங்கம வழிபாடு.
  	முத்தித் தலம் 	: கஞ்சாறு (ஆனதாண்டவபுரம் - ஆனந்ததாண்டவபுரம்)
  	குருபூசை நாள் 	: மார்கழி - சுவாதி.
  

 • மானக்கஞ்சாறரை ஆட்கொள்ள மாவிரதியார் கோலத்தில் வந்த இறைவனின் உருவம் வலப்பால் - ஜடாநாதர் சந்நிதி. தன் மகள் கூந்தலை அறுத்துத் தந்த மானக்கஞ்சாற நாயனார் திருமேனியும் அவர் மகள் திருமேனியும் இச்சந்நிதியில் உள்ளது.

 • மானக்கஞ்சாறரின் மனைவி பெயர் கல்யாணசுந்தரி என்றும், நாயனாருக்கு மானகாந்தன் என்று பெயருண்டு என்பது தல புராணத்தில் தெரிய வருகின்றது.

 • பாரிஜாதவனம், பரத்வாஜ ஆசிரமத்தலம் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு.

 • பரத்வாஜ மகரிஷி தவஞ்செய்து இறைவனின் கல்யாண திருக்கோலத்தைத் தரிசித்த தலம்.

அமைவிடம்

	அ/மி. பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், 
	ஆனதாண்டவபுரம் (அஞ்சல்) - 609 103.
	மயிலாடுதுறை (வழி), 
	நாகப்பட்டினம் (மாவட்டம்).

	தொலைபேசி : 04364 - 2422127 / +91-9442058137 / +91-9486032325.

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - சீர்காழி சாலையில் 1-கி.மீ. வந்து, அங்கிருந்து ஆனதாண்டவபுரம் செல்லும் சாலையில் 5-கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. நீடூரிலிருந்தும் செல்லலாம்; நீடூரிலிருந்து 11-கி.மீ தொலைவில் உள்ளது.

< PREV <
கச்சிமயானம்
Table of Contents > NEXT >
கடம்பை இளங்கோயில்

 • மானக்கஞ்சார நாயனார் வரலாறு (மூலம்)